உதவுங்கள் pls

எனக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. மருத்துவரிடம் சென்றோம். எனக்கு hypothyroidsim இருக்றது.வயது வந்த நாள் முதல் ஒழுங்காக இருந்த மாதவிலக்கு,கடந்த மாதம்(march 10) வரை 34 நாள்களுக்குள் வந்துவிடும் இந்த மாதத்தில் இருந்து தீட்டில் பிரச்சனை வந்தது . நான் மிகவும் குழம்பி போய் இருக்கிறேன்.இந்தியாவில் இருந்து இங்கு வந்து 10 மாதம் ஆகிறது. வருவதற்கு முன் சோதனை செய்தேன், மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட . சொன்னார்கள். ஜனவரி மாதம் Qatarல் பரிசோதனை செய்தேன் மிகவும் அதிகமாக உள்ளதக கூறி 125 mcg euthyrox மாத்திரை தந்தார்கள் 2 மாதங்கள் சாப்பிட்டென் அதன் பின்னர் தீட்டில் பிரச்சனை வந்தது. . எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்னுடன் திருமணம் ஆன எல்லோருக்கும் குழந்தை இருக்கிறது. யாரை பார்த்தாலும் "என்ன விசேசமா" என்று தான் கேட்கிறார்கள். இதை பற்றி தெரிந்த தோழிகள் என்னுடன் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வீற்கள் என்ற நம்பிக்கையுடன்

உங்கள் அன்பு தோழி...
http://www.arusuvai.com/tamil/node/22594

உங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியலை..பொறுமையா இருங்க நிச்சயம் நல்லது நடக்கும்..இன்னைக்கு விசேஷமில்லையான்னு கேப்பாங்க நாளைக்கு குழந்தை வந்தப்ரம் குழந்தை இன்னும் கவிழலையா இன்னும் உக்காரலையா இன்னும் பேசலையா இன்னும் நடக்கலையா இப்படி எல்லோருக்கும் வாழ்க்கை முழுக்க சுற்றி சுற்றி கேள்விகள் வரும்..அதெல்லாம் கண்டுக்காதீங்க இப்ப இருக்கிற நீங்களும் இனி குழந்தை வந்தாலும் எப்பவுமே நமக்கு சந்தோஷமும் வருத்தமும் இருக்கத் தான் செய்யும்..நாளைக்கு நடக்கிற ஒரு விஷயத்துக்காக இன்னைக்கு தொலைக்காதீங்கன்னு படிச்சேன்..உங்களுக்கும் அதையே சொல்றேன்

தோழி 1 1/2 வருடம் தானே ஆகுது,ஏன் இவ்வளவு பீல் பண்றீங்க. 10 வருடங்களுக்குப் பின் தாய்மையடைந்த எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன். நிச்சயமாய் இறைவன் எனக்கு இந்த பாக்கியத்தை தருவான் என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள். தளிகா சொன்னது போல் கேள்வி கேட்க ஆயிரம் பேர் வருவார்கள் அதை எல்லாம் மனதில் போட்டுக்குள்ளக்கூடாது. எனக்குத்தெரிந்த ஒரு பெண் திருமணமாகி எத்தனையோ வருடங்களுக்குப் பின் ஒரு குழந்தையை பெற்றெடுத்தா. ஒரு முறை அவவை மீட் பண்ணிய போது சொன்னா “ஒருவ்ர் சொல்றாங்க குழந்த நிறம் கம்மி” அப்பிடின்னு எனக்கு ரொம்ப கோபம் ஆச்சு, அட குழந்த இல்லன்னு எத்தன வருடமா அழுது அழுது வாழ்ந்திட்டிருந்தேன் இப்போ இறைவன் அந்த வரத்த எனக்கு தந்துடான் அது கறுப்பா இருந்தா என்ன சிவப்பா இருந்தா என்ன எனக்கு தேவை குழந்தை “” அப்படி சொன்னாங்க இது தான் இன்றைய சமுதாயத்தில் நடக்குது,என்வே மற்றவர் பேச்சுக்களை புறந்தள்ளுங்கள், நம்பிக்கை கொள்ளுங்கல் நல்லதே நடக்க இறைவன் துணை.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்