நீங்களும் வெல்லலாம் “அறுசுவை விருதுகள்”

அன்பு அறுசுவை தோழிகளே....

சீதாலஷ்மியும் நானும் (வனிதா வனிதா... ) கொஞ்ச நாள் முன்னாடி பழைய இழை சிலது பார்க்க நேர்ந்தது. அதில் நம்ம அட்மின் அண்ணே பலருக்கும் பல விருதுகள் கொடுத்து அட்டகாசம் பண்ணிருந்தார் :) அதை பார்த்ததும் எங்களுக்கு இதை மீண்டும் கொண்டு வந்தா நல்லா இருக்குமேன்னு ஆசை வந்தது.

ஆனா பாருங்க... அண்ணே இப்போ ரொம்ப.... பிசி. அதனால அவரை தொந்தரவு பண்ணாம ஏதோ எங்களால முடிஞ்ச ரேஞ்சுக்கு குட்டியா ஒரு பாராட்டு விழா நடத்திட்லாம்னு நினைச்சிருக்கோம். இது முழுக்க முழுக்க குறிப்புகள், கதை, கவிதை, கைவினை, பட்டிமன்றம் போன்ற பகுதிகளில் உங்க பங்களிப்பை பொருத்தே அமையும்.

முதல்ல துவங்கும் இந்த இழை ஏப்ரல் மாதத்து பங்களிப்பில் இருந்து துவங்குகிறது. நீங்க எல்லாருமே இதை அன்போடு வரவேர்பீங்கன்னு நம்பறோம். :)

வாங்க வாங்க... புதுசா ஒரு பகுதிய உங்களை நம்பி துவங்கி இருக்கோம்... வருக வருக... ஆதரவு தருக :)

12 மணிக்கு மேல வந்து ஏப்ரல் மாத மொத்த தகவலும் இங்க தரேன். வெற்றி பெற்றவர்களையும் இங்க அனௌன்ஸ் பண்ணிடறேன் :) பாராட்ட நீங்க தயாரா இருங்க. எல்லாருக்கும் இப்பவே நன்றி சொல்லிக்கறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி என்னவோ புதுசா கலாட்டா..
நல்ல ஐடியாபங்களீப்பு தருபவர்களுக்கு சாக்லேட் சாப்பிடறாப்பல இருக்கும்...
ஆனா எல்லா துறையிலும்முதலிடம் உங்களுக்குத்தான்
வாழ்த்துக்கள்:)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனிதா ,சீதாலக்‌ஷ்மி நல்ல முயற்சி சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். பாராட்ட நாங்க ரெடி விருது அறிவிக்க நீங்க ரெடியா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வெல்கம்.......வெல்கம்.......மோஸ்ட் வெல்கம்.......... நம் அறுசுவையின் முடி சூடிய அன்புத்தோழிகள்களின் அணிவகுப்பைக் காண ஆவலோடு இருக்கிறோம்....... இப்பணியை மேற்கொள்ளும் தோழிகள் வனி & சீதாலஷ்மி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

தலைப்பே ரொம்ப ஈர்க்குது. நிச்சயம் இந்த பகுதி நல்ல வெற்றியடைய என் வாழ்த்துக்கள். இந்த ஏப்ரல் மாதம் என் பங்களிப்பு இருக்காது வர மாதம் முயற்சிக்க போறேன். விருதுகள் வழங்கும் விழா எப்போ நிச்சயம் நானும் கலந்துகிட்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்த முதல் ரோவில் இருப்பேன்.

அடடா ரொம்ப நாட்களுக்கு அப்பறம் ஒரு புது தலைப்பு சூப்பர் வனிதா & சீதாம்மா. உங்க முயற்சி நிச்சயம் வெற்றியடையும் அதுவும் அறுசுவையின் 2 ஜாம்வான்கள் இணைந்தால் அது அமர்க்களமால்ல இருக்கும். என்னுடைய வாழ்த்துக்கள். என்னக்கின்னு சொல்லுங்க சும்மா விசிலடிச்சு கைதட்டி விருது வாங்குபவர்களை உற்சாகப்படுத்திடுவோம். நானும் ரெடி.

தோழிகளை அறுசுவையின் அனைத்து பகுதிகளிலும் பங்குகொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்க போகும் நம் அன்பு தோழிகளுக்கு பாராட்டுக்கள். விரைவா ஆரம்பிங்க, விசிலடிக்க, கைத்தட்ட நான் ரெடி.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு தோழிகளே...

இதோ ஏப்ரல் மாத பங்களிப்பு பட்டியல் உங்களுக்காக:

யாரும் சமைக்கலாம்

7. வனிதா -

கட்டா டோக்லா
சன்னா சாட்
தேங்காய் லட்டு
டோனட்ஸ்
க்ரீன் சன்னா பிரியாணி
பாசிப்பருப்பு அல்வா
தக்காளி சாதம்

6. அனுஷ்யா -

பால் பணியாரம்
சீயம்
கோசுமல்லி
ஈஸி ஃப்ரைடு ரைஸ்
மண்டி(செட்டிநாடு)
உப்புக்கறி(செட்டிநாடு)

6. ஹர்ஷா -

சேப்பங்கிழங்கு ஃப்ரை
முள்ளங்கி குழம்பு
கேரமல் கஸ்டர்ட்(Flan)
பொங்கல் - கொத்சு
வாழைப்பூ வடை
ஸ்ட்ராபெர்ரி கப் கேக்

5. லாவி -

வெஜ்ஜி கேக்
ஷஷுவன் ரைஸ்
ஃபிஷ் ஃபிங்கர்ஸ்
ஸ்வீட் கார்ன் சூப்
பீட்ரூட் கட்லெட்

5. கல்பனா -

முட்டை பொடிமாஸ்
கத்தரிக்காய் சாப்ஸ்
BBQ சிக்கன்
தக்காளி சாதம்
டூனா சமோசா

3. சுஸ்ரீ -

பாதாம் பராத்தா
புடல‌ங்காய் பால்கூட்டு
மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்

2. கமர் நிஷா -

உளுத்தங்களி
பொரித்த சிக்கன் கிரேவி

2. ரேவதி -

மட்டர் பனீர்
செட்டிநாடு புலாவ்

1. ஜெயலக்‌ஷ்மி - உருளை மசாலா

1. சுவர்ணா - ப்ரெட் சாண்ட்விச்

1. பிரியா ஜெயராம் - க்ரீன் குருமா

1. செல்வி செந்தில் - நெத்திலி பொடி வறுவல்

1. பார்வதி - பலாக்கொட்டை பொடிமாஸ்

1. ஆர்த்தி - அரிசி பாயாசம்

கூட்டாஞ்சோறு

3. தளிகா - டயட் அவல் உப்புமா, கலத்தப்பம், கோதுமை கேக்

2. சுஸ்ரீ - கீன்வா (Quinoa) கீரைச்சாறு, ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் ஸ்மூத்தி

2. ரேவதி - பாவ் பாஜி, பனீர் பிரியாணி

1. ஹர்ஷா - எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட்

1. சீதாலஷ்மி - தக்காளி கருணைக்கிழங்கு மசியல்

1. வனிதா - பட்டர் நாண்

கைவினை

6. டீம் - போட்டோ ப்ரேம் டிசைன், பேப்பர் வால்ஹேங்கிங் , ஸீஷெல் ஹவுஸ், ohp ஷீட் நிலைமாலை, மிரர் ஒர்க், பேப்பர் பருப்பு கூடு

2. பிரியா ஜெயராம் - வால் ஹேங்கிங், மெகந்தி டிசைன் - 19

1. ரேணுகா - வால்ஹேங்கிங்

சிறுகதை

கண்ணன் மனம் என்னவோ.... - நித்திலா
மௌனமே பார்வையால்... - வனிதா
சுத்தி சுத்தி வந்தீக... - வனிதா

கவிதைகள்

ந.ஜெயலெட்சுமி, வனிதா கவிதைகள்

பட்டிமன்றங்கள்

பட்டிமன்றம் - 62
தலைப்பு: உறவுமுறைகளில் சிறந்தது எது ??
நடுவர்: வனிதா
தீர்ப்பு: கணவன் மனைவி உறவே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22315

பட்டிமன்றம் - 63

தலைப்பு: எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது ??
நடுவர்: ரம்யா கார்த்திக்
தீர்ப்பு: சூழ்நிலைக்கு ஏற்ப பேசுவது (இரு அணியும்)
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22427

பட்டிமன்றம் - 64

தலைப்பு: பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: அன்பு
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22547

என்னை தொடர்ந்து நம்ம அன்பு தோழி சீதாலஷ்மி விருதுகள் அறிவிக்க வருகிறார் வருகிறார் வருகிறார்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி... புதுசு புதுசா கலாட்டா பண்ணா தானே நாம இங்க தான் இருக்கோம்னு நியாபகம் வருது ;) வாழ்த்துக்களுக்கு நன்றி இளவரசி.

பூங்காற்று... இதோ ரெடி ரெடி... வந்துட்டே இருக்காங்க :) வாழ்த்துக்களுக்கு நன்றி.

ப்ரியா அரசு... நன்றி நன்றி... அணிவகுப்பு இதோ பட்டியல் தயார்... மகுடம் சூடப்போகும் ராணிகளை காண இன்னும் சற்று நேரம்... :)

உமா... நன்றி... அடுத்த மாதம் உங்க பங்களிப்பு தான் எங்க தலைப்பின் வெற்றி :)

யாழினி... நன்றெ செய் இன்றே செய்... விருதுகள் வழங்கும் விழா இன்றே தான்... :) நன்றி யாழினி.

பிரேமா... பங்களிப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கவும், புதிதாக பங்களிப்புகள் இடம்பெற செய்யவும் இந்த முயற்சி :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உள்ளங்களே,

இந்த இழைக்கு ஆதரவு தெரிவித்த, ஆதரவு கொடுக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி.

பாராட்டுக்கள்தான் நமக்கு பெரிய டானிக். அந்த டானிக் கொடுத்து, நம் தோழிகளை இன்னும் உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு.

இந்த யோசனையை வடிவமைத்து, இழையைத் தொடங்கி, ஏப்ரல் மாத பங்களிப்பு விவரங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் வனிதாவுக்கு முதலில் நன்றி.

அறுசுவையின் எல்லாப் பகுதிகளிலும் பங்கெடுத்திருக்கும் தோழிகளின் அனைத்துப் படைப்புகளுமே மிகவும் சிறப்பானவை.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தொகுத்து வழங்கி, ஒரு ஸ்டார் விருது கொடுக்கும்போது, மற்றவர்களுக்கும் இன்னும் நிறையப் பங்கெடுத்துக் கொள்ள ஆர்வம் வரும்.

இந்த எதிர்பார்ப்பை இன்னும் வரும் மாதங்களில் நம் தோழிகள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் விருதுகளை அறிவிக்கிறோம்.

இது முதல் முயற்சி. போகப் போக, இந்த விருதுகள் வழங்கும் விதத்தை, மேலும் மேலும் செம்மைப் படுத்தி வழங்க ஆசை.

உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்