ப்ளூபெர்ரி மஃபின்

தேதி: May 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

’மஃபின்’கப் கேக்கின் வடிவிலான சுவையான காலை நேர உணவு. இதனை டீ, காபியுடன் ஸ்நாக் ஆகவும் பரிமாறலாம். இதிலும் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ’மஃபின்கள்’ பழங்கள், காய்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.

 

மைதா/ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப்
ஃப்ரெஷ் ப்ளூபெர்ரி - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
முட்டை - ஒன்று
வெஜிடபிள் ஆயில் - 1/3 கப்
தயிர் - 1/3 கப்
ஆரஞ்சு ஜெஸ்ட் (ஆரஞ்சு தோல் துருவியது) - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். ஆல் பர்பஸ் ஃப்ளாருடன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும். ப்ளூபெர்ரியை அலசி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஆயில் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்க்கவும்.
இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனை வாயகன்ற பாத்திரத்துக்கு மாற்றி, சர்க்கரை மற்றும் ஆரஞ்சு ஜெஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் 2 தேக்கரண்டி பால் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக ப்ளுபெர்ரி சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
இந்த கலவை மிகவும் கெட்டியாக இருக்கும்.
ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனர்ஸ் வைத்து அதில் 3/4 பாகம் வரை மாவை நிரப்பவும்.
அவனை 400 டிகிரி F ல் முற்சூடு செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
மஃபின் வெந்ததும் நன்றாக மேலெழும்பி, மேற்பகுதி கோல்டன் ப்ரவுன் கலரில் மாறியிருக்கும்.
சிறிது ஆறியதும் பரிமாறவும். சுவையான மிருதுவான ப்ளூபெர்ரி மஃபின் தயார்.

மஃபின் ட்ரேயில், கப் கேக் லைனர்ஸ் பயன்படுத்தாமல் பேக்கிங் ஸ்ப்ரே (ட்ரே முழுவதும்) அடித்து, அப்படியே மாவை நிரப்பியும் பேக் பண்ணலாம். இதில் தயிருக்கு பதிலாக ஆப்பிள் சாஸ் அல்லது சவர் க்ரீம் பயன்படுத்தலாம். பொதுவாக இவற்றுக்கு ப்ராஸ்ட்டிங் செய்வதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர்!!! மஃபின் சுவை படத்துலையே தெரியுது :) ரொம்ப அழகான ப்ரெசண்டேஷன், சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் ஹர்ஷா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் சூப்பர் சூப்பர் வேற எதுவும் சொல்ல தெரியல.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹர்ஷு
மஃபின் அருமை போங்க.. மிருதுவா இருக்குனு படத்தை பார்த்தாலே தெரியுது. அமர்க்களமா இருக்குது..வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ஹர்ஷா,

கலக்கலாக இருக்கு. இந்த வகை உணவுகளின் சிறப்பம்சங்களை சொல்லியிருப்பது நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சூப்பர் சூப்பர்.... அப்படியே பார்சல் பன்னிடுங்க ப்ளீஸ்
ப்ரெசண்டேஷன் ரொம்ப அழகுப்பா வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஃபின், கேக், கஸ்டர்ட், ப்ரௌனிஸ் விதவிதமா செய்து அசத்துறீங்க. படங்களும் தெளிவா இருக்கு. வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
முதலாவதாக பதிவிட்டதற்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

jaypon,
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ரம்ஸ்,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ரம்ஸ்.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
பார்சல் தானே அனுப்பிடுவோம்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

வினோஜா,
கப் கேக்கை விட்டுட்டீங்களே! ;-) உங்க பதிவுக்கு மிக்க நன்றி வினோஜா.

இது என் மகளின் பேவரைட். கண்டிப்பாக செய்துக் கொண்டுக்கிறேன். படங்கள் அருமை. வாழ்த்துக்கள். அதிலும் அந்த பத்தாவது படம் அட்டாகாசம். டயகோனலாக அந்த ஆங்கிள் சூப்பராக இருக்கிறது. அந்த மூன்று ப்ளூ பெர்ரிக்கு நன்றி. நானும் என் குழந்தைகளும் எடுத்து சாபிட்டுட்டோம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
ஃபோட்டோஸ் எல்லாம் கவனித்து,பதிவிட்டதற்கு நன்றி.அந்த 3 ப்ளூபெர்ரியை ப்ரஜ்ஜு கிட்ட இருந்து காப்பாத்தி நான் ஃபோட்டோ எடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ;-) மஃபின் கண்டிப்பா குழந்தைகளுக்கு செய்து கொடுங்க.பதிவுக்கும் மிக்க நன்றி.

ஆஹா... அசத்தல் ப்ளூபெர்ரி மஃபின்ஸ், ஹர்ஷா! :) ஒரே பேக்கிங் ஸ்ப்ரில இருக்கிங்க‌ போல! :) என் பசங்களோட ஃபேவரைட். இப்பகூட போன வாரம், பொண்ணு கேட்டா. கடைக்கு போய் ஃப்ரஷ் ப்ளூபெர்ரிஸ் வாங்க முடியாமலே பிஸில வீக்கென்ட் மிஸ் ஆகிடிச்சி. இப்ப உங்க ரெசிப்பில, வர வாரமே ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

படங்கள், ப்ரசண்டேஷன் எல்லாம் எப்பவும்போலவே கலக்கல், சும்மா அட்டகாசமா வந்திருக்கு! :) உட‌னே செய்துபார்க்க‌ சொல்லுது :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஹர்ஷா!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
இவ்வளவு லேட்டா பதில் போடுவதற்கு மன்னிக்கவும்.பேக்கிங் ஸ்ப்ரீ எல்லாம் இல்லைங்க சுஸ்ரீ. இங்கு ஒரு தோழி கிடைச்சிருக்காங்க.எந்த ரெஸிப்பி செய்தாலும் பாதி அவங்களுக்கு தந்துடுவேன்.அப்போதானே இருவரும் சேர்ந்தே வெயிட் போடலாம். :-)

கண்டிப்பா இம்முறையில் செய்து கொடுங்க. குட்டிக்கு. ரொம்ப சுலபம் தான்.அவன் டெம்ப்ரேச்சர் மட்டும் 350 டிகிரி F வச்சுக்கோங்க.அப்போதான் மஃபின் மேற்பகுதி வெடிக்காமல் வரும்.யோகர்ட்டுக்கு பதில் பால் மட்டுமே கூட பயன்படுத்தலாம்.