தேதி: May 12, 2012
OHP ஷீட் - ஒன்று
கிளாஸ் கலர் விருப்பமான வண்ணங்கள்
3D கோல்டு அவுட்லைனர்
A4 ஷீட் பேப்பர் - ஒன்று
மேற்சொன்ன அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். OHP ஷீட்டை வெள்ளைதாளில் இருந்து பிரித்து வைக்கவும்.

A4 ஷீட் பேப்பரில் விருப்பமான டிசைனை வரைந்து அதன் மேல் OHP ஷீட்டை வைத்து ஹேர் பின் அல்லது ஜெம் கிளிப் கொண்டு நகராமல் இருக்கும்படி செய்ய வேண்டும்

3D அவுட்லைனர் கொண்டு டிசைன் முழுவதையும் OHP ஷீட்டில் ட்ரேஸ் செய்யவும்

அதில் விருப்பமான வண்ணங்களை நிரப்பவும். இதற்கு வாட்டர் பேஸ்டு கிளாஸ் கலர்கள் வாங்கினால் எளிதாக நிரப்ப முடியும்.

நன்கு காய்ந்ததும் அதில் 3D அவுட்லைனர் கொண்டு வேண்டிய டிசைன்கள்(டீடெயில்ஸ்) வரைந்து முடிக்கவும்.

இந்த டிசைன்கள் காய்ந்ததும் ப்ரேம் செய்தால் அழகான OHP பெயிண்டிங் ரெடி.

Comments
பிரியா
அபாரம்... அழகோ அழகு :) நல்லா வரையும் திறமை உங்களுக்கு... வெச்ச கண் வாங்காம பார்க்கலாம் போலிருக்கு. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
priya
நுணுக்கமா வரைந்திருக்கீங்க பிரியா நல்லா இருக்கு
சூப்பரோ சூப்பர்.....
ரொம்ப அழகான handwork....... சூப்பரோ சூப்பர்..... வாழ்த்துக்கள்.....
The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.
மனமார்ந்த நன்றிகள்
அறுசுவை அட்மின் மற்றும் டீமிற்கு மனமார்ந்த நன்றிகள்...... உடனுக்குடனே வெளியிடுவது மனதிற்கு மிகவும் உற்சாகமாகவும், ஊக்கமாகவும் உள்ளது....
வனிக்கா மிக்க நன்றி... முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே... நன்றி நன்றி... கைவினை பகுதியில் உங்களது மெகந்தி டிசைன்கள் மட்டுமே இப்போதெல்லாம் வருகிறதே... கிராப்ட் ஒர்க் எல்லாம் என்ன ஆச்சு... உங்கள் முட்டை ஓடு, காபி பெயிண்டிங்,கிப்ட் பாக்ஸ் எல்லாம் ஞாபகம் வருது........
மிக்க நன்றி நிகிலா....
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி ரேவதி.........
மயில் ரொம்ப அழகு
வாவ் சூப்பர் கலக்கிடீங்க...
எனக்கு எப்பவுமே மயில் டிசைன்னாலே ரொம்ப பிடிக்கும்... அதுவும் நீங்க அசத்தலா வரைந்து ரொம்ப அழகா பெயின்ட் பண்ணிருக்கிங்க... இன்னும் பார்த்திட்டே இருக்கணும் போல தோணுது...
வாழ்த்துக்கள்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
OHP ஷீட் பெயிண்டிங்
அன்பு ப்ரியா,
ரொம்ப அழகாக இருக்கு.
கடைசி மூன்று படங்களையும் பாக்கறப்பவே தெரியுது, எவ்வளவு நுணுக்கமான கலரிங் வொர்க் என்று. பொறுமையாக, அழகாக செய்திருக்கீங்க.
பாராட்டுக்கள்.
அன்புடன்
சீதாலஷ்மி
பிரியா
உங்க மயில் டிசைன் ரொம்ப அழகாக இருக்கு ப்ரியா வாழ்த்துக்கள். நல்லா வரைஞ்சு அழகா கலர் கொடுத்து இருக்கீங்க. பெயிண்டிங்க்கு தேவையானப் பொருட்கள் எல்லாம் இருக்கு செய்து பார்க்கிறேன்.
ப்ரியா
ப்ரியா மயில் வண்ணமயமா பார்க்கவே ரொம்ப ரம்மியமா இருக்குங்க. கலர் நல்லா செலக்ட் செய்து இருக்கீங்கங்க. வாழ்த்துக்கள். நானும் இதுப் போல் கண்ணாடியில் செய்திருக்கேன் ஆனால் அவுட் லைன் மட்டும் ப்ளாக் லைனரால் கொடுத்தேன்.
மிக்க நன்றி
பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப்ரேமா....... இது அன்னபட்சி... நான் உங்களுக்காக ஒரு மயில் செய்து அனுப்பறேன்.....
மிக்க நன்றி சீதாம்மா... இது நைட் 11 மணிக்கு செஞ்சது...... பகலா இருந்திருந்தா இன்னும் நீட்டா வந்து இருக்கும்.....
நன்றி வினோஜா கண்டிப்பா செஞ்சு பாத்து போட்டோ அனுப்புங்க........
நன்றி உமா... நானும் கண்ணாடியில் தான் வரையணும்னு நினைச்சேன் ஆனா வீட்டில் வாங்கி தரவில்லை... அதனால தான் இதுல ட்ரை செஞ்சேன்... உள்ளே கோல்டு டீடெயில்ஸ் கொடுப்பதால் அவுட்லைனும் கோல்டுலேயே கொடுத்தேன்......
பிரியா
எனக்கு இப்போலாம் இந்த குட்டீஸ் டைம் கொடுப்பதில்லை :) அதனால் மெஹந்தி மட்டுமே வருது. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மற்ற வேலைகள் வரும் :) எல்லாத்துக்கும் மெட்டீரியல் வாங்கி வெச்சு ஷெல்ஃபில் தூங்குது ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
OHP ஷீட் பெயிண்டிங்
நல்ல டிசைன்... அழகா வரைந்திருக்கீங்க. கலர் காம்பினேசன் சூப்பர்!!!
வாழ்த்துக்கள்!!!
ப்ரியா,
ப்ரியா,
அன்னப்பறவை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.ரொம்ப அழகா வரைந்து,அருமையா கலர் பண்ணி இருக்கீங்க.அற்புதமான வேலைப்பாடு.5 ஸ்டாரும் கொடுத்துட்டேன்.வாழ்த்துக்கள் ப்ரியா.
ப்ரியா
உங்களுடைய ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அருமை. அதிலும் அந்த ஆரஞ்சு நிற ஸ்கெட்ச் இருக்கு பாருங்க அட்டகாசமா இருக்கு. கலர் காம்பினேஷன் அமர்க்களம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் கலைப்பணி.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Looks neat and good
Looks neat and good
jayaraje
வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி
harshaa
வாழ்த்துக்களுக்கும், ஸ்டார் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி ஹர்ஷா
lavanya
பாராட்டுக்கு மிக்க நன்றிங்க லாவண்யா
lakshvathi
மிக்க நன்றி லக்ஷ்வதி........ உங்க பெயர் கரெக்டா? மிகவும் வித்யாசமா இருக்கு
ப்ரியா
ப்ரியா
அருமையான அன்னப்பறவை :)
ரொம்ப அழகு .. நேர்த்தியா இருக்கு.வாழ்த்துக்கள் :) இன்னும் பல படைப்புகள் தரனும்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ப்ரியா
ப்ரியா
உங்க அன்னப்பறவை பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கு :) வெகு நேர்த்தியா செய்து காட்டியிருக்கிங்க. இங்கே சம்மர் ஹாலிடேஸ் நெருங்கிட்டே இருக்கு. கட்டாயம், என் மகளுடம் சேர்ந்து செய்து பார்க்கிறேன்.
தொடர்ந்து அனுப்புங்கள் உங்கள் படைப்புகளை... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
அன்னப்பறவை பெயிண்டிங்
அற்புதமான திறமை உங்களுக்கு,இதில் உங்க பொறுமையும்,கலையாக்கமும் நல்லாவே தெரியுது,5 ஸ்டார் தராம போக முடியலே.(தந்தாச்சு)
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
ரம்யா.....
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... கண்டிப்பா என்னால் முடியும் போது செய்து அனுப்புவேன்.....
சுஸ்ரீ
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... கண்டிப்பா செஞ்சு பாருங்க... எளிதானது தான்........
பாத்திமா
நன்றி.... ஸ்டார் கொடுத்ததில் மிக்க சந்தோசம்.........
ப்ரியா
சூப்பர் சூப்பர் சூப்பர்.
பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
OHP சீட்ல கிளாஸ் பெயிண்ட்
OHP சீட்ல கிளாஸ் பெயிண்ட் எப்பெக்ட் ரொம்ப அருமை பிரியா...வாழ்த்துக்கள்!!!!
Don't worry...be Happy!!
can we do tis painting in
can we do tis painting in glass?
fralika 3d எங்கு கிடைக்கும்
பிரியா மிகவும் அழகு.என் ஊர் கும்பகோணம் எனக்கு ஓர் உதவி JAYA TV புகழ் லதாமணிராஜ்குமார் சிநேகிதி நிகழ்ச்சியின் மூலம்,அனைவருக்கும் FROLIKA 3dபெயின்ட் கெண்டு.POT பெயின்டிங் கற்றுக்கொடுத்தார்.இப்போது இந்த fralika 3d பொயின்ட் எங்கு கிடைக்கும் PLZ சொல்லுங்க.