****அரும்புகளின் குறும்புகள்****

என்ன தோழிகளே தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே இது என்ன மாதிரியான இழை என்று.....:-)) புரியாதவர்களுக்காக இதோ...நமது வீட்டில் உள்ள சுட்டி குட்டீஸ் செய்யும் ரகளைகள்,சின்ன சின்ன அட்டகாசங்கள்,கலாட்டாவான துடுக்குதனங்கள் இவற்றை இங்கே பகிர்ந்து ரசிக்கலாம் வாங்க........

சுண்டுவின் குறும்பு....
என் மூத்த மகனை அம்மாவீட்டில் பள்ளியில் சேர்த்திருந்தோம்(டெலிவரிக்காக லீவ் போட்டதால் அங்கு போகட்டும்னு).அது மெட்ரிக்பள்ளி. அங்கே ஓரல் மட்டும்தான்.என் தங்கைதான் அவனுக்கு மிஸ் அவளிடம் இவனுக்கு பிரத்யேகமாக எழுதிப்பழக்கிவிட சொல்லியிருந்தேன், இவனும் எழுதிப்பழகிவந்தான். ஒருநாள் சீனியர் மிஸ்வந்து ABCD எழுதச்சொல்ல இவன் சொல்லியிருக்கான்" நான் பிரீ.கே.ஜி தா மிஸ், எல்.கே.ஜி இல்ல, எனக்கு ஓரல் மட்டும்தான்னு" நானும் அங்குதான் முன்பு வேலை பார்த்தேன்......இவனை பள்ளியில் அனைவருக்கும் தெரியும்......ரேனு மிஸ் பையன் தைரியமா பேசரான்பா இப்பவேன்னு ஒரே பேச்சு. அடுத்தநாள் நான் பள்ளி சென்றால் இவனது கலாட்டாவை சொல்லி ஒரே சிரிப்புதான்.............:-))

எனக்கு 2 வயசு பொண்ணு இருக்கா, பேரு திவ்ய சரஸ்வதி. எப்பவும் நான் சாக்லேட்களை ப்ரீசர் ல வச்சிருப்பேன்னு என் பொண்ணுக்கு நல்லாவே தெரியும்... அடிகடி அதை எடுப்பா, நான் திரும்ப வாங்கி உள்ள வச்சிடுவேன்... ஒருநாள் நான் ஆர்வமா சமைச்சிட்டு இருக்கும்போது... பிரீசரை தொறந்து ஒரு பெரிய சாக்லேட்ட எடுத்திட்டு... தாங்க யு அம்மா நு சொல்லி எளிபல்லை காமிச்சு ஸ்மைல் பண்ணிட்டே ரூம்க்கு ஓடிடுச்சு... குழந்தையோட அழகிய சிரிப்பை பார்த்ததும் சாக்லேட்ட பிடுங்க மனசு வரலை... இந்த காலத்து பொடிசுகள் எவ்ளோ உஷாரா இருக்குங்க... என்னமா ஐஸ் வக்கிதுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஒரு அப்பா அம்மா 3 வயசு குழந்தையா கூட்டிட்டு ரோட் கிராஸ் பண்ணி இருகாங்க... இதில் அப்பா வேகமா போய் நடுவில் உள்ள பர்டிசன் கிட்ட போய் நின்னுடாறு.. அம்மா பயத்தில் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.... திடீர்ன்னு அப்பா, அம்மா கையில் பிடித்திருந்த குழந்தையை காணலையே நு செய்கையில கேட்டிருக்காரு... அம்மாவும் அச்சச்சோ புள்ளைய காணுமேன்னு தேடி இருக்காங்க... அப்பா இடுப்பில் உக்கார்ந்துகிட்டு அம்மா நான் இங்க இருக்கேன்னு சொல்லிச்சாம் ஒரு வாண்டு... அது வேற யாரும் இல்லைங்க நான் தான்... ஹி ஹி ஹி

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நீங்க சாக்கோலேட் நு சொன்னதும் எனக்கும் ஒன்னு நியாபகம் வருது..சின்ன வயசில் என் பொண்ணு முன்னாடி எதாவது சொன்னால் டக்குன்னு புடிச்சுக்குவா..அதனால் சிலதை எழுத்து வச்சு பேசுவோம் இல்ல இங்லீஷில் பேசுவோம் ..அப்படி அவர் என்னிடம் சி ஹெச் ஓ சி இருக்கா என்பார்..நான் தெரியாம சாக்கலேட் கொடுப்பேன்..அப்போ ஒரு நாள் என்னிடம் பொண்ணு வந்து அம்மா எனக்கு ஐ சி ஈ சி ஆர் ஈ ஏ எம் இருக்கா என்றாள்..நான் ஆடிப் போயிட்டேன்

தோழிகளுக்கு சௌமியன் நின் வணக்கம் .குழந்தைகளின் குறும்புகள் எப்பவும் மகிழ்வை தரும் .எமக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி உள்ளது .குறும்புகள் எதிர் பார்கிறேன் .

ஹாய் தோழிஸ்,எங்க வீட்டு வாலு பண்ணிய குறும்பு தனத்தை உங்ககிட்ட சொல்லனும் என்று தோனுச்சு.கேளுங்க
என்னுடைய திருமணத்துக்கு முன்னாடி எங்க வீட்டில் எல்லாரும் திருப்பதி கோவிலுக்கு போய்யிருந்தோம்,மேல் திருப்பதி கீழ் திருப்பதி அம்மன் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு எங்க சித்தி சொன்னங்க பாப்பா(எங்க வீட்டு வாலு) முதல் முறைய கூட்டிட்டு வந்து இருக்கோம் மொட்டை போட்டு கூடிபோகலாம்.குட்டிக்கு அப்பொ வயசு 31/2.
எல்லாரும் மொட்டை போடும் இடத்துக்கு போனோம்
அங்க ஒரே கூட்டம இருந்தது.எப்படியொ டொக்கன் வாங்கி மொட்டை பொடுபவரிடம் போய்டோம். அங்கேயும் கூட்டம் 5 பேருக்கு பிறகுதான் நாங்க எங்க அப்ப சொன்னாங்க நீங்க இங்க இருந்து மொட்டை பொடுங்க, நாங்க ரூம்ல போய் லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டுவறோம்.அப்ப சித்தப்பா தம்பியும் போய்டாங்க நானும் அம்மா சித்தி குட்டி நாலூபெரும் அங்கேஇருந்தோம். குட்டிக்கு தெரிந்துபோச்சு நமக்குதான் மொட்டை போட போறாங்கன்னு,ஒரே அழுகை அம்மா நக்கு நானம் நானமுன்னு.அப்பறம் முடி திருத்துபவர் தெலுங்குல ஒரு அதட்டு போட்டாரு பாருங்க குட்டி பேசம,அழுத்கிட்டெ உக்கந்து மொட்டை போட்டுகிச்சு,
அப்பறம் என்ன பாத்து அழுகுது.எங்க அம்மாவ பாத்து அழுகுது.தெம்பி தெம்பி அழுதுகிட்டெ இருக்கு . நாங்க வெளியில எங்க அப்பா வருவாங்க அப்படினு காத்துகிட்டு இருந்தோம்.குட்டியொட அழுகை ஓயவே இல்லை .அப்ப சித்தி சொன்னாங்க ஏன் பாப்பா அழுதுகிட்டே இருக்க இங்க பாரு உன்ன மாதிரி குட்டி பிள்ளைகள் இன்னும் சின்ன பிள்ளைகள் எல்லாம் எப்படிமொட்டைபோட்டு அழுகாம விளையாடிகிட்டு இருக்கங்க நீயும் இந்த மாதிரி அழுகாம இருக்கனும் அப்படி சொன்னங்க

அதுக்கு எங்க செல்லகுட்டி என்னதெரியுமா சொன்னா
அவுங்க அம்மாஎல்லாம் மொட்டி போட்டுஇருக்கங்க நீயேம்மா போடல...............................................................?என்னத்த சொல்லுறது மழலை மொழியில் அவள் கூறியதை கேட்டு நாங்க சிரிச்சுகிட்டே இருந்தோம்.
அப்பா சித்தப்பா தம்பி எல்லாம் வந்த பிறகு சொல்லிசிரித்தோம் .மறக்கவே முடியாத நிகழ்ச்சி இப்ப உங்களிடமும் சொல்லியாச்சு.

மேலும் சில பதிவுகள்