***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

அன்பு நடுவரே,

எப்பிடி இருந்த நாங்க இப்பிடி ஆயிட்டோம் ?? அப்படின்னு யாரோ சொல்றாப்புல இங்கே பேசிக்குறாங்க??

இக்கால படங்களுககு பேஸ்மென்ட் அந்த கால படங்கள் தாங்க, நாங்க ஒண்ணும் மறுக்கலைங்கோ ஆனாக்க சிறந்த படங்கள் இக்காலத்துல தாங்க அதிகமா இருக்கு.

கருத்து மட்டுமல்ல கருத்து சுதந்திரம் , எல்லாருக்கும் வாய்ப்பு இதெல்லாம் கூட இக்கால சினிமாவில தாங்க இருக்கு.

பானுமதி அவர்களுக்கு அப்புறம் யாராவது பெண் இயக்குனர் பார்க்க முடிந்ததா ?(அது கூட அவங்க கணவர் சப்போர்ட் அதான் சாத்தியம் ஆச்சு )

இப்போ எத்தனை பேர் இந்த பீல்டுல வந்துட்டாங்க , நல்ல எண்ணங்கள் எங்கிருந்தா என்னங்க முன்னுரிமை சிறிது கஷ்டப்பட்ட்டாலே வந்துடுது.

அதே போலே கவிஞர் தாமரை , எவ்வளவு அழகான வரிகளுக்கு இவங்க உயிர் கொடுத்தாங்க.ஆணாதிக்க சினி உலகத்தில் வியக்கத்தக்க வகையில் ஒரு பெண் முன்னோடியா வர முடிந்தது (கே.பி எஸ் க்கு அப்புறம் )
அதே போலே தான் டான்ஸ் மாஸ்டர்ஸ் தன குடும்ப பாரத்தை சுமக்க , தன்னனம்பிக்கை மட்டுமல்ல திறமையும் இருந்தது அதை மக்கள் வரவேற்றது இந்த காலத்துல தாங்க .

சினிமாவில நன்மையையும் தீமையும் கலந்து தாங்க இருக்கு.

எண்ணை தலையும் பரட்டை லுக்கும் கொண்டவர்கள் எல்லாம் பொறுக்கிகள் என்பது இருந்த காலம் போச்சு,
உங்களுக்கே ஒரு பெண் இருந்தா கூட , அழகா சல்மான் காண மாதிரி இருக்கற ஆண்கள் கூட ஏகப்பட்ட பிராட் பண்றவன்களா இருக்கலாம் என்பதை புரிய வைக்க சினிமா பார்த்தா தானே தெரியுது.

மனிதனின் எண்ணங்கள் ,மனநிலை கோளாறுகள் இதற்கெல்லாம் காரணம் சினிமாவின் பாதிப்பா என்று கேட்டால் (கோழியிலிருந்து முட்டையா இல்லை முட்டையிலிருந்து கோழியா ) என்ற ரேஞ்சுக்கு அலச வேண்டும்.

லைட்டா சொன்னா , வக்கிரம் பிடித்த மனிதர்கள் எந்த அழகிய போர்வையிலும் இருக்கலாம் என்பதை நாம் உணர்ந்து , யாரிடம் பழகினாலும் ஒரு அடி தள்ளியே இருக்க வைக்க இது போன்ற ஊடகங்களும் ஒரு விதை தான் .

முற்றிலும் உண்மையா, இல்லை கற்பனையா என்ற ஆராய்ச்சிஎலாம் வேண்டாம் நடுவரே.அது பார்க்கரவங்க விருப்பம். படைப்பாளி தான் இயக்குனர் அண்ட் கதாசிரியர்.
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
என்றொரு படம் நடுவரே , தலைப்பு பார்த்து சத்தியமா நீங்க கதையை பிக்ஸ் பண்ணவே முடியாது. ஆனா அதன் வசனங்கள் அவ்ளோ அருமையா இருக்கும்
காதல் தோல்வி என்பதால் காதலிக்கவே கூடாது என்ற முடிவுக்கு ஏன் வரணும்.
பெண் நம்மை விரும்பாவிட்டால் தற்கொலை அளவுக்கு போகனுமா இல்லை அவளுக்கு எதாவது ஹெல்ப் என்றால் போய் நிக்கனுமா என்ற வகையில் இதுவும் ஒரு நல்ல விதமான கண்ணோட்டம் தானே .

சமூக அக்கறை கொண்ட படங்கள் இப்பவும் வரத்தான் செய்யுது .
இப்ப இருக்கற சமூகமே வேற, சோ அதுக்கேத்த மாதிரி வருது .
அக்கால அணியினர் ஆடையை விட்டு வேற எதையும் சொல்ல மாட்டேங்குறாங்க.

கருப்பு வெள்ளை படங்களா போயிட்டதால் , நிறைய விஷயங்கள் அவங்க இப்போ உள்ள படத்தை பற்றி சொல்வது போலே அப்பையும் இருந்தது என்று அவங்க கண்ணுக்கு தெரியலை , சி த்ரோ புடவைகள் , மெல்லிய துப்பட்டா குட்டி பிராக் , ஏன் லேகிங்க்ஸ் கூட அங்கேயிருந்து தான் வந்திருக்குமொன்னு ஒரு சந்தேகம் நடுவரே .:-))

அலங்காரம் அண்ட் மேகப்
இதிலென்ன ஒரு ஆச்சர்யமான விஷயம்னா, அந்தக்கால நடிகைகள் கூட இப்போ விழாவுக்கு எல்லாம் ,ரொம்ப மாடர்னா டிரெஸ் பண்ணிட்டு வராங்க, ஐ லைனர் என்ன பேஷியல் என்ன , நாம் எல்லாம் தோத்துருவோம்.
அவங்க எல்லாமே இப்ப இருக்கற புதுமைகளை விரும்பி , அடடா நாம் இந்த காலத்துல பிரக்கலையே அப்படின்னு வருத்தப்படராங்கனா பாருங்க :-))

கர்ணன் படம் இப்போ கூட ஓடுது //

ஆக்சுவலா நல்ல படங்கள் எந்த காலத்துல போட்டாலும் வரவேற்போம் நாம், இக்கால தொழில்நுட்பத்தால் அதை மேம்படுத்தியதால் தான் அதை போய் தியேட்டரில் மக்கள் பார்த்தாங்க தவிர தெரு தெருவா டிவிடிக்களை வாங்க முடியற இக்காலத்தில் அக்கால அடாசு படங்களை மீண்டும் ரிலீஸ் பண்ணினா அதுக்கு ஈ தான் ஓட்டனும் .

ரோஜா படத்தை விழுந்து விழுந்து பார்த்த ரசித்த மக்கள் எங்கே ?
அது எடுக்கப்பட்ட விதம் அண்ட் முழுமையான பொழுதுபோக்கா இருந்தது தானே.

இக்கால படம் சரியில்ல என்று சொல்லவே போய் படம் பார்ப்பது

ரொம்ப சின்னபுள்ள தனமால்ல இருக்கே

அன்பு நடுவர் என்னப்பா 80க்கு பின் இக்காலம்னு சொல்லிபுட்டீங்க... நான் அப்போ பிறக்கவே இல்லையே.......... சரி ஓகே.....

நான் பிறக்காத காலத்தில் வந்த திரைப்படங்கள் ஒரு தடவை பார்த்ததிலேயே மனதில் நிற்கின்றன...... இப்போ வந்த படங்கள்? விரல் விட்டு எண்ணிப்புடலாம்...... எங்களணி தோழிகள் இக்காலத்தில் வந்த சில படங்களின் குறைகளை எடுத்துக்காட்டுடன் கூறினர்... இக்கால திரைப்படங்களின் அருமை பெருமைகளை எடுத்துக்காட்டும் எதிரணி தோழியினர் சும்மா அக்காலத்திலும் ஒடாத படங்கள் வந்ததுனு சொல்றாங்களே தவிர ஒரு எடுத்துக்காட்டு கூட இல்லீங்களே.... ஏன்னா ஒவ்வொரு படமும் ஒரு விதத்தில் ஒரு நிறையை கொண்டு இருந்தது....... தவிர ஓடாத படங்கள் எல்லாம் சிறந்த படம் இல்லைனு எடுத்துக்க முடியாது நல்லா ஓடுற எல்லா படமும் சிறந்த படம்னும் எடுத்துக்க முடியாது.......

இக்கால திரைப்படங்கள் ஒரு விதத்திலாவது சில குறைகளுடன் தான் வெளிவருகின்றன.... ஏதோ அத்திபூத்தாற்போல தான் சில நல்ல படங்கள் வெளியாகின்றன.... அவற்றை வைத்து இக்கால படங்களே சிறந்தவைனு கூற முடியாதே... உலக அளவில் கொண்டு போனாலும் கூட நம் நாடு சிறக்கும் வழிமுறைகள் இப்படங்களில் இல்லையே...
//சமுதாயம் என்பது மாற , டைம் மிஷினில் பின்னாடி போயோ , எதாவது மேஜிக் செய்தோ சரி செய்ய முடியாது. இப்படி நடக்கிற விஷயங்களுக்கு தீர்வே இல்லியா என்று நாம் மலைத்து போகும் பொது ஒரு ஸ்பார்க் வருமாறு நம்மை கேள்வி கேட்கும் நம் மனசாட்சியாக வரும் சினிமாக்கள் இப்பவும் நிறைய இருக்கு.. எப்படி நாம் அடிமை இந்தியாவாகவே அழிஞ்சு போயிடுவோமோ என்று பயந்த காலத்தில் திரைப்படங்கள் மூலமா தேசப்பற்றை உருவாக்கினான்களோ அதே போல இப்ப வேறொரு சிச்சுவேஷன் , அதற்கும் இக்கால சினிமாக்கள் கேள்விகளை உருவாக்குது எனலாம்.//
இந்தியன் படம் வந்து எத்தனை வருடங்கள் ஆச்சு? லஞ்சம் ஒழிந்ததா? இன்னும் மோசம் தானே ஆச்சு?
//ஹீரோயின் அரைகால் ஆடையோட வரும் படங்களுக்கு ஏன் போறீங்க. ?// அரைக்கால் ஆடை இல்லாத ஹீரோயின் எந்த படத்தில் வந்தாங்க... எனக்கு தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படங்கள் மட்டும்தான் அதுக்கு மட்டும் போனா போதும்னு எதிரணி தோழி சொல்றாங்க போல நடுவரே...
//அந்த காலத்தில் எல்லா ஆடைகலுமே கவர்ச்சி தான். ப்ளவுஸ் எல்லாம் உடம்போடு வைத்து தைத்தார்களோ என்று இருக்கும்.//அது எல்லாம் கண்ணுக்கு உறுத்தாது... இப்போ சேலையை கூட சேலை மாதிரியா நம்ம ஹீரோயின்ஸ் கட்டுறாங்க? கண்றாவினு எதிரணி தோழிகளே புலம்புவாங்க....

மீண்டும் வருவேன் கடமை கடமை அழைக்கிறதே...

உதிரா கிளப்பிட்டாங்கய்யா........
உதிரா இக்கால படங்களே சிறந்ததுன்னு உங்கள் அணீக்காக பல நல்ல வாதங்களை முன் வைத்துள்ளீர்கள்......வாழ்த்துக்கள்.........மீண்டும் வாருங்கள்......

வாங்க பிரியா இன்னும் பதில் கொடுக்கலையோன்னு இருந்தேன்.....கொடுத்தாச்சா சமத்து.......கடமையை முடித்துவிட்டு வாங்கோ..காத்திருக்கேன் உங்களின் வாதப்பதிவுகளுக்காக........

அனைவருக்கும் வணக்கம் !

நல்ல தமிழில் பேசும் நாயகி கூட 2 படம் ஹிட் ஆகி விட்டால் ஏதோ வெளிநாட்டில் இருந்து இப்போ தான் இந்தியா வந்த மாதிரி பீட்டர் விடுவதை பார்த்ததில்லையா ?
"மச்சி எங்க போச்சு ?
நா வூட்ல வந்துச்சு" இது தான் இப்போ உள்ள ஹீரோயன் பேச்சு. தமிழை வளர்த்த அறிகர்கள் இதெல்லாம் கேட்டா தூக்கு போட்டு தொங்கிடுவாங்க.

//ஏங்க நீங்க யாராவது உங்க பிள்ளைகளை நகராட்சி பள்ளியில் செர்பீன்களா ?// என்ன கேள்வி இது ? நான் நினைக்குறேன் எதிரணி தோழிகள் நகராட்சி பள்ளிகளை போய் பார்த்தது இல்லை என்று. நான் நகராட்சி பள்ளிஇல் தான் படித்தேன். இதில் என்ன இருக்கு ? இங்க மதுரைல இருக்குற நல்ல நல்ல டாக்டர்ஸ், டீச்சர் மற்றும் பல உயர் அதிகாரிகளா இருக்குறவுங்க எல்லோரும் நகராட்சி பள்ளில படித்தவுங்க தான். என் பெண்ணை நாங்க நகராட்சி பள்ளியில் தான் சேர்க்கணும்னு நினைச்சு இருக்கோம்.

//சாதரனாமா உடை போட்டு வந்து உங்க வீட்டு விசேஷத்துக்கு ஒருவர் வந்தா, அவருக்கு முன் உரிமை கொடுப்பென்களா , இல்லை தச புச்னு ஆங்கிலத்தில் பேசி ,சாப்ட்வேர் அல்லது பெரிய பதவி வகிக்கும் ஒருவரை வாய் நிறைய வரவேர்பீர்களா ?// அப்போ எதிரணி மக்கள் வீட்டு விசேசத்துக்கு அப்பவோ இல்ல ரொம்ப நெருங்கிய உறவினர்களோ கொஞ்சம் சாதாரண உடை அணிந்து வந்தா மதிக்கவே மாட்டாங்க போல இருக்கு,

இக்கால நடிகர்களிடம் போய் உங்களுக்கு யார் மாதிரி ஆகணும்ன்னு ஆசை ? யார் உங்க ரோல் மாடல் அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவாங்க தெர்யுமா ?

காமெடி - NSK , நாகேஷ், பாலையா and etc
(ஏன் இக்கால காமெடி நடிகர் விவேக்கை நாம "சின்ன கலைவாணர்" அப்படின்னு தானே சொல்றோம்.

நடிப்பு - சிவாஜி, MGR and etc

நடனம் - பத்மினி, வைஜெயந்தி மாலா and ஏறக்

இசை - MSV ராமமூர்த்தி and etc

பின்னணி பாடகர்கள் - TMS , சுசீலா, ஜானகி, KPS சுந்தராம்பாள் and etc

இப்படி எந்த துறை எடுத்தாலும் நம் முன்னோடிகள் அக்கால பட மக்களே.

சிவாஜி நடிப்பு நடை, MGR இன் சண்டை. கத்தி என்று வந்தாலே என்ன சொல்றோம் " கத்தி எடுத்து சண்டை போடுபவன் எல்லோரும் மக்கள் திலகம் ஆகி விட முடியாது" அப்படின்னு தானே.

இந்த காலத்து காமெடி எத்தனை பேர் மனதை புண் படுத்துவதாக உள்ளது. ஆனா அக்காலத்துல காமெடி அப்படின்றது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது தானே. இதை நம்மால மறுக்கவா முடியும் நடுவரே ?

எதிரணி மக்கள் என்ன தப்பு நடக்குதுன்னே தெரியாம புரிஞ்சுக்காம பேசுவதை பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு கரும் பலகைல போய் வெள்ளை புள்ளி ஒன்னு வைத்தா அது தான் பளீர்ன்னு தெரியும். அது போல தான் இப்போ உள்ள படங்கள் வெள்ளை புள்ளி. அதுல நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் எல்லாம் இலை மறை காயாகவே சொல்லப்படுகின்றது. எது தேவை இல்லாததோ அது வெட்ட வெளிச்சமாக காட்டப்படுகின்றது. சமுதாயத்துக்கு நல்லதா விட கெட்டதே அதிகமா சீக்கிரமா பரவும். ஒரு பொண்ணு நல்ல மார்க் எடுத்தா (ஸ்டேட் ரேங்க் இல்ல சும்மா ஒரு 400 மேல) அது பக்கத்துக்கு வீட்டு காரனுக்கு கூட சரியா தெரியாது. ஆனா அதே பொண்ணு ஏதாவது தப்பு பண்ணிட்டா அது இந்த உலகத்துக்கே ஒரு நிமிஷத்துல தெரியும். அப்படிதானே இருக்கு. இங்க என்ன சீக்கிரம் பரவுச்சு நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் ?

அந்த காலத்து படங்களை எல்லாம் குடும்பத்தோடு போய் பார்க்கலாம். ஆனா இப்போ உள்ள படங்களை எப்படி பார்க்க முடயுது ? உதாரணத்துக்கு 3 படத்து பாடல்களை எல்லாம் எத்தனை பேர் அவுங்க அவுங்க பிள்ளை அம்மா அப்பா அப்படின்னு குடும்பத்தோடு பார்த்தீங்க ? இது மாதிரி எத்தனையோ படம். எது ஹிட்டோ ஹிட் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகுது "சிறு வயது காதல், பெண்ணை அவமானப்படுத்தும் பாடல்" இப்படிப்படிப்பட இது தானே. அப்போ நம்ம இளம் சமுதாயம் எதை விரும்பி பார்க்குது ?

இப்போ உள்ள ஒரு படத்துல "நாயகனும் நாயகியும் 1 நாள் இரவு மட்டும் கணவன் மனைவியா இருப்பாங்கலாம் அப்புறம் காலைல அந்த பொண்ணு அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது நான் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறேன் நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லிது" என்ன கொடுமை இது ? இது தான் நம்ம கலாச்சாரமா ? அக்கால படத்துலேயும் தான் 2 கல்யாணம் பண்ணின மாதிரி காட்டுனாங்க அப்படின்னு எதிரணி கத்துறது காதுல கேட்குது. ஆனா இந்த புது கலாச்சாரம் என்ன என்ன என்ன ?

இந்தகால நடிகைகள் எல்லாம் திறம்சாளிகள் ஆல் இன் ஆல். ஆனா அவுங்க திறமைய ஆடை குறைப்புலேல காட்டுறாங்க. அதுதான் வருத்தத்துக்குரிய விஷயமே. நம் கண்ணுக்கு கவர்ச்சி வேற. ஆனா பசங்களுக்கு கவர்ச்சி வேற. ஒரு பெண்ணை காட்டும் போதே இவ்ளோ கேவலமா காட்டினா அப்போ பார்குற பையன் கண்ணு என்ன பண்ணும் ? ஒரு சின்ன பொண்ண கூட விடாது. பெண் சிசு கற்பழிப்பு அதிகம் நடக்குறது அக்காலத்திலா இல்ல இக்காலத்திலா ?

எல்லாமே மாறனும் புதுசாகனும் அப்படின்னு சொல்லி நாம்ம பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாத்தையும் மாத்தலாமா ? எல்லாத்தையும் மாத்தனும்ம்னு சொல்லி அம்மாவை என்ன ஆன்ட்டி அப்படின்னா கூப்பிடுறோம் ? மாறனும் மாறவேண்டிய விஷயங்கள் மட்டும். ஆனா இக்கால படம் மூலம் ஏற்படும் மாற்றம் அழிவு பாதைக்கு தான் அழைத்து செல்கிறது. சாதரணமா ஒரு டிவி ஷோ நடத்துற ஆண் பெண் எப்படி வராங்க ?

"ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்" இது உண்மை தான். ஆனா அது உரிமைல மட்டும் தான். அவன் போடுற மாதிரி உடை எல்லாம் மாத்திட்டோம். சரி. ஆனா அவன் மாதிரி எல்ல விஷயத்திலேயும் ஒரு பெண்ணால் கண்டிப்பா இருக்க முடியாது. ஆண் ஆண் தான் பெண் பெண் தான். பெண்ணுக்கு என்று பல சிறப்பு அம்சங்கள் இருக்கு "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" இப்படி. ஒரு பெண் எவ்வளவு மடலா இருந்தாலும் அழகா சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து, நெற்றி நிறைய போட்டு வைத்து, கை நிறைய வளையல் போட்டு, தலைய தலைய தாலி கட்டி, பூ போன்ற பாதங்களை தரையில் ஊன்றி மெல்லிதான கொலுசு ஒளியோடு வந்தால் ஏதோ வானத்து தேவதையே மண்ணில் இறங்கி வந்தது போல அல்லவா இருக்கும். ஒரு பையன் கிட்ட உனக்கு பொண்ணு எந்த மாதிரி வேன்னும்ன்னு கேட்ட சினி பீல்ட்ல இருக்குற நடிகைய மாதிரி வேணும்ன்னா சொல்வான்? குடும்ப பொண்ணுன்னு தானே சொல்வான். அதே மாதிரி தான் அக்கால படங்கள் அம்சமான படங்கள்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

வாங்க ஜென்னி காலையில் புதுத் தெம்போட வந்து கேள்வியா அடுக்கியிருக்கீங்கபோல........உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல இன்னும் சிறிது நேரத்தில் இக்காலமே அணி வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்....

நடுவரே...

கட்டபொம்மனாக மனதில் பதிந்த செவாலியர் சிவாஜி

இணை பிரியா ஜோடியாக எம் ஜி ஆர் சரோஜா தேவி

மாயாபஜார் ரங்காராவ் சாவித்திரி

மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பத்மினி

சொன்னது நீ தானா தேவிகா

அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான் பானுமதி

தன் குறலாலும் கம்பீரத்தாலும் நமை கட்டி வைத்த ஔவையார் கே.பி. சுந்தராம்பாள்

நகைச்சுவை நடன நாயகனாய் நாகேஷ்

ஆடலுடன் பாடலும் சேர்ந்து கலக்கிய சந்திரபாபு

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என். எஸ். கிருஷ்ணன், முத்துலக்‌ஷ்மி ஜோடி

ஆலினால் ஆச்சி மனோரமா

மென்மையான காதல் காவியங்களில் கெமினி கணேசன்

காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் தந்த கண்ணதாசன்

இசையால் உலகையே ஆட்டி வைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி ஜோடி

செந்தமிழ் தேன் மொழியாள் டி.ஆர்.மகாலிங்கம்

நிஜ வில்லனாகவே பலர் மனதில் குடி புகுந்த நம்பியார்

இரத்த கண்ணீர் எம். ஆர். ராதா

அசோகன், பாலைய்யா...

இப்படி பட்டியல் இன்னும் ஏகம் ஏகம்... இதெல்லாம் நெஞ்சை விட்டு நீங்குமா??? ஒவ்வொருவரும் தனக்கென ஒரு ஸ்டைல், நடிப்பு, குறல் என நம்மை வியக்க வைத்தவர்கள். இன்னைக்கும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் இவங்களை போன்ற குறல்களை வைத்தே வாழ்க்கை ஓட்டுறாங்க. புது முகங்களுக்கு தனக்கென குறலேது??? எல்லாம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தானே ;)

இவங்க எல்லாம் பெரிய பேக்ரவுண்ட், அப்பா அம்மா தாத்தா பாட்டி உதவியோட சினிமாவில் வரல. ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவங்க தான் அதிகம். நாடகம் அப்படி இப்படின்னு உள்ளே வந்து சினிமாவில் கொடி கட்டி பறந்த ஜாம்பவான்கள் இவர்கள்.

இன்று போல் இன்னாரின் மகன், மகள் என்று யாரும் பிரபலமா வரல. அப்படி பிரபலமா வந்தும் இவங்களால் நிலையா நிக்க முடியல. நடிப்பு வந்தா நடனம் வரல, நடனம் வந்தா குறல் வரல, இப்படி அடுக்கிட்டே போகலாம். இன்னைக்கு ஒருவர் ஒரு பாட்டை பாடிட்டா என்ன பந்தா... என்னா சீனு... “இந்த பாடலை பாடியவர் உங்கள் ----”. ரொம்ப முக்கியம்... அந்த சகிக்காத குறலுக்கு சொந்தக்காறன் நான் தான்னு பந்தா வேற.

ஆனா அந்த காலத்தில் பாட்டு பாடி நடனமாடி நடிச்சவங்க யாரும் இப்படி ஸ்க்ரீனில் போட்டு பந்தா விட்டுக்கல. ஏன்னா அன்று அதெல்லாம் தெரியலன்னா தான் அசிங்கப்பட்டாங்க. அன்று தகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்றோ எதுவுமே வேணாம்.... ஒரு புது முகம், ஒரு படம்னு இடத்தை காலி பண்ணிடுறாங்க. யார் வேணும்னா ஹீரோ ஆகலாம், ஹீரோயின் ஆகலாம்.

அன்று புது முகங்களுக்கு வரவேற்பு இல்லை என்று சொன்னது நியாயமா நடுவரே??? சினிமாவே அப்போ புதுசு... வந்த அனைவரும் புது முகம் தான்... ஆனால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட சாதனையாளர்கள் அவர்கள். ஏன் சிவகுமார், ரவிசந்திரன், கோபால கிருஷணன், சி. ஐ. டி. சகுந்தலா, சி. ஐ. டி. சங்கர், வெண்ணிர ஆடை மூர்த்தி, வெண்ணிர ஆடை நிர்மலா, இப்படி பிரபலமா இருக்க பலரும் அன்றும் புது முகம் தானே???? இன்னைக்கு இப்படி ஒரு புது முகத்தால் வெற்றி பெற முடியலயே ஏன்???

இன்றைய நடிகர் நடிகையிடம் எதை பிரதானமா சொல்ல???

வாயே திறக்காம டயலாக் என்னன்னே புரியாம பேசும் விஜயா???

தன் சொந்த தமிழில் டயலாக் பேசி அட்டர் ஃப்லாப்பாக்கிய சிட்டிசன் பட அஜித்தா??

ஒன்னுமே இல்லன்னாலும் பந்தா குறையாத சிம்புவா?

தமிழ் படத்தையே பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு போன தனுஷா??

பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், வெய்யில்னு வன்முறையும் கவர்ச்சியும் தலை விரித்தாடிய படங்கள் கம்மியா???

இன்னும் பேரே தெரியாம படத்தில் நடிச்சுட்டு போகும் 100 ஹீரோக்கள், 100 ஹீரோயின்களா??? என்ன சொல்ல???

அந்த கால சிங்கார வேலனே பாட்டுக்கு இணையா இன்று ஒன்று உண்டா???

மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாட்டுக்கு இணையா இன்று ஒரு பிக்சரைஷேஷன் உண்டா??

அன்று சொல்லாத வரலாரா? அன்று சொல்லாத இதிகாசமா? அன்று சொல்லாத ஆன்மீகமா? எல்லாத்தையும் அழகா சொன்னாங்க. டெக்னாலஜி வளர்ந்தும் இன்று அப்படி ஒரு படம் யாராலும் பண்ண முடியல.

நடுவரே... இன்று நடிகர்கள் நடிகைகள் வெறும் பொழுது போக்கா நடிக்கறாங்க... அன்றோ அதில் ஈடுபாடும், நாட்டமும், ஆர்வமும், கலை உணர்வும் நிரைந்து நடிச்சாங்க. அன்றைய நடிகர்கள், நடிகைகள், நகைச்சுவை, வில்லன்கள், இயக்குனர்கள், இசையமைப்பாலர்கள், பாடலசிரியர்கள், பாடகர்கள் என யாரோடும் இன்றைய யாரையுமே ஒப்பிட முடியாது.... காரணம் அவர்கள் சிகரம் தொட்டவர்கள், இவர்கள் மடுவையே தாண்ட மாட்டார்கள்.

அதனால் தான் இன்றைய நட்சத்திரங்களும் கூட அன்றைய சிவாஜி கூட நடிச்சதை பெறுமையா நிஅனிக்கறாங்க. அவங்களுக்கே டெஹ்ரியும், இன்றைய சினிமாவோ, இன்றைய ஹீரோக்களோ அன்றைய மக்கள் முன்னாடி நிக்க கூட முடியாதுன்னு.

இன்னைக்கும் நெஞ்சில் நின்றவை,என்றும் இனியவை, ஓல்ட் இஸ் கோல்ட், காவிய புதன், க்ளாசிக் மேட்னி, நினைத்தாலே இனிக்கும், தேன் கின்னம்னு அழகான பெயர்களில் இடம் பிடிப்பவை அந்த கால படமும், பாட்டும்... குத்து பாட்டு, மசாலா மெயில், ரீமிக்ஸ், பாட்டு புதுசு என ரசனை இல்லாமல் போனது புது படங்களும், பாட்டும். சிந்தியுங்கள்... ரசனை மாறிவிட வில்லை... மாற்றப்பட்டது இன்று நம் சினிமாவால்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// கருத்து மட்டுமல்ல கருத்து சுதந்திரம் , எல்லாருக்கும் வாய்ப்பு இதெல்லாம் கூட இக்கால சினிமாவில தாங்க இருக்கு // அந்த காலத்திலேயும் கருத்து சுதந்திரம் இருந்த்ததுங்க. இப்போ உள்ள நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்குதுன்னு "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்துல தெளிவா சொல்லி இருப்பாங்களே. அந்த காலத்துல திறமைக்கு தான் மதிப்பு. இந்த காலத்துல உடம்புக்கு (மன்னிக்கவும்) தானுங்க மதிப்பு. ஒரு பொண்ணு எவ்வளவுக்கு எவ்வளவு ஆடை குறைக்கின்றாலோ அவ்வளவுக்கு அவளுக்கு படத்தில் சான்ஸ் கிடைக்கும்.

அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட ஒரு பொண்ணு கல்யாணம் ஆனா பிறகு சினி பீல்ட்ல இருக்கணும்னா அவுங்க கணவரோட சம்மதம் கண்டிப்பா வேணும். அவுங்க சப்போர்ட் இல்லாம ஒண்ணுமே பண்ண முடியாது. ஏன் இப்போ உள்ள நடிகைகள் கல்யாணத்துக்குப் பிறகுமா நடிக்குறாங்க இல்லையே. அப்போ உள்ள மனோரமா ஆச்சி, சரோஜா தேவி எல்லாரும் இன்னும் நடிச்சிட்டு தானே இருக்காங்க.

எண்ணை தலையும் பரட்டை லுக்கும் கொண்டவர்கள் எல்லாம் பொறுக்கிகள் என்பது இருந்த காலம் போச்சு இப்போ இவர்கள் தான் கதையின் நாயகன் அப்படி ஆயாச்சு.

அக்கால நடிப்பில் ஒரு உயிர் இருந்தது. அவர்களுக்கு என்று ஒரு கடமை இருந்தது. ஆனா இப்போ அதெல்லாம் மாறிப்போச்சு. பெண்ணை அழகாய் வர்ணித்த காலம் போய் அடிடா உதைதா என ஏக வசனம் பேசும் பாடல்களே அதிகம். அக்காலத்தில் எத்தனை தவறான படங்கள் வந்தது ? இக்காலத்தில் எத்தனை வந்து கொண்டு இருக்கிறது. நல்ல கருத்துக்கள் உள்ள படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அது தான் அந்தகாலம்.

"அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்

என்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்"

இது கேட்க எப்படி இருக்கு ?

"எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க "

இது கூட காதல் சோகப்பாடல் தான். இப்போவும் தான் வருகிறதே. இப்போ உள்ள பாடல் வரிகளை கேட்டு இளைகன் பொங்கி எழுந்து காதலியை கொலையே செய்து விடுகிறான். இது அவசியமா ?

"" தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி ""

அன்னையைப்பற்றி எவ்வளவு அழகாச்சொல்லி இருக்காங்க ?

அக்கால படம் விழிப்புணர்வு தருவது போல் இருக்கும். இப்போது வரும் படங்களில் விழிப்புணர்வு எதைப்பற்றி உள்ளது ? இந்த விழிப்புணர்வு நல்லதுக்கான பாதையா இல்ல எங்கு நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது ? எல்லோரும் கொஞ்சம் யோசிங்க. எங்க எதிரணி தோழிகள் அனைவரும் உங்க மனசாட்சில கை வச்சு உண்மையா பதில் சொல்லணும், "உங்க பிள்ளைகளை எந்த ஒரு உறுத்தலும் இல்லாம நிம்மதியா டிவி பார்க்க விடுவீங்களா ?" நீங்க சொல்லல்லாம் பெற்றோர் வளர்ப்பதில் தான் பிள்ளை என்று. வீட்டில் நீங்க இது தான் பார்க்கணும் இது பார்க்க கூடாது அப்படின்னு ஒரு எழுதப்படாத சட்டமே வைத்து இருந்தாலும் வெளில உங்க பிள்ளை எப்படி இருக்கான்னு என்ன ஆள் வச்சா பார்க்குறீங்க? பிள்ளைகள் வீட்ல இருக்குற மாதிரி தான் வெளிலேயும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுபா. நாம எத செய்ய கூடாதுன்னு சொல்றோமோ அதை தான் முதல்ல செய்வாங்க. இது மனிதனோட இயல்பு. இத யாராலும் மாத்த முடியாது.

" திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ (திருடாதே ....)

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (திருடாதே ....)

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது"

இப்போ எங்கங்க இந்த மாதிரி படங்கள் வருது ?

//மனிதனின் எண்ணங்கள் ,மனநிலை கோளாறுகள் இதற்கெல்லாம் காரணம் சினிமாவின் பாதிப்பா என்று கேட்டால் (கோழியிலிருந்து முட்டையா இல்லை முட்டையிலிருந்து கோழியா ) என்ற ரேஞ்சுக்கு அலச வேண்டும்// அவ்ளோ கஷ்டமான வேலைகள் இல்லைங்க இது. கொஞ்சம் உட்கார்ந்து உங்க மூளைய தட்டி எழுப்பி விடுங்க அது சொல்லும் உண்மைய எல்லாத்துக்கும் காரணம் சினிமாவின் பாதிப்பு தான் என்று.

அந்த காலத்து படங்கள் பார்த்தால் நேரமும் நல்லா போகும் போற நேரமும் பயனுள்ளதா இருக்கும். ஆனா இப்போபோபோபோபோபோபோபோபோபோ ???????????

ஜென்னிவினோ

Dare To Paly With Life

///இந்தியன் படம் வந்து எத்தனை வருடங்கள் ஆச்சு? லஞ்சம் ஒழிந்ததா? இன்னும் மோசம் தானே ஆச்சு//?

ஹைய்யோ ஹைய்யோ ஒரே காமெடியா இல்ல இருக்கு .
நீங்க வேற ஆங்கிலேயரை தான் நாட்டை விட்டு துரத்திட்டோம், ஆனா அவங்க விட்டு போன இந்த ஆங்கில பாதிப்பும் வெளிநாட்டு மோகமும் முற்றிலும் அழிந்ததா , சுத்தமா இல்ல, ஜாஸ்தியாகி போச்சு.

அவங்க விட்டு போன சீட்டை நமாளுங்க பிடிச்சி வெச்சுகிட்டு பண்ற ரகளைஎல்லாம் இக்கால படங்களை பார்த்து தான் தெரிஞ்சுக்கோணம் ,
ஆங்கிலேயரையாவது காந்திஜி வந்து அஹிம்சையா சொன்னவுடன் கொஞ்ச நாளிலாவது புரிஞ்சு வெளியே போனாங்க. அப்பப்பா , நம்ம மந்திரி மாறுங்க பண்ற அட்டூழியம் , எந்த ஜி வரணுமோ ?

என்னை பொருத்தவரை ஜி எல்லாம் தேவையில்ல , மக்கள் கை கோர்த்து நின்னு ,சில விஷயங்களை ஆதரிக்காம இருந்தா போதும். அதுக்கு இப்படியும் கூட நடக்கலாம் என்று தோன்ற இம்மாதிரி படங்கள் தேவை தாங்க.

இன்னொன்னு -- அரசாங்க வேலைனாலே ஏதோ லஞ்சம கொடுத்து தான் சாதிக்க வேண்டியிருக்கு என்ற காலம் போய் இப்போ நேரடியா நீங்க ரேஷன் கார்டை கொடுத்த தேதியில் வாங்க முடியுது. (நானே சாட்சி,அதுக்கு --நாலஞ்சு தடவை இடமாற்றம் செய்தும் யாருக்கு ஒரு நயா பைசா கொடுக்கலை ) இந்த மாதிரி சில விஷயங்கள் மக்கள் ஒன்னு சேர்ந்து குரல் கொடுத்தா அரசாங்கமும் செவி சாய்க்கும் என்பதற்கு இந்தியன் போன்ற திரைப்படங்கள் இன்ஸ்பிரேஷன் தான்.

ஏன் தெலுங்கு முதல்வர் (அப்போ இருந்தவர் ) இப்படத்தின் சில கருத்துக்களை வைத்து ஒரு மாதிரி தாலுகா ஏற்படுத்தியதாக தகவல் உண்டு .

வன்முறைகள் அதிகம் ஆகிவிட்டது இந்தியாவில் மட்டுமா என்ன ? அதுவும் தமிழ்நாட்டில் தான் குறைவா இருக்கு , மத்த ஸ்டேட் பார்க்கரச்சே. ரோடில் போறப்பவே சடாலேன்று சுட்டு போகும் தேசங்கள் எல்லாம் எந்த திரைப்படத்தை பார்த்து கெட்டு போனாங்க சொல்லுங்க.

அடிடா உதைடா
வொய் திஸ் கொலைவெறி பாடலுக்கு வரவேற்பு வந்த மாதிரி எதிர்ப்பும் வந்ததே
அதை ஏங்க கவனிக்கலை.
இது சரியில்லை என்றால் கண்டிப்பாக சொல்ல முடியும் நம்மால் .
அந்த காலத்தில் சொல்ல முடியுமா தைரியமா ?
ஒரு பெரிய நடிகர், தனக்கு பிடித்த மாதிரி கவிதை இல்ல என்பதற்காக ஒரு கவிஞரை சொல்லாமல் தூகிவிட்டாராம் அந்த படத்திலிருந்து .இந்த அவமான பெரிய இடைவெளியை உண்டு பண்ணுமா இல்லையா ?

அதை விடுங்க, தொழிலில் போட்டி இருக்கலாம் , ஆனால் நிஜத்தில் ஏங்க நண்பர்களா இல்லை ???
இப்போ கமல் ரஜினி இலிருந்து , அஜித் விஜய் வரை தொழில் முறை போட்டியிலிருந்து விலகி நட்பு போஸ் கொடுக்கிறாங்க தானே .

நடுவில் களேபரம் ஏற்பட்டப்போ தன ரசிகர் மன்றத்தை கலைத்த தில் இக்கால நடிகருக்கு வந்ததே ???
மறுக்க முடியுமா
ரசிகர்கள் தேன் பால் ஊற்றி அபிஷேகம் செய்து ஒரு நடிகனுக்காக உயிர் போகும் அளவு தன குடும்பத்தை பற்றி கவலைப்படாமல், தான் சம்பாதிக்கும் காசை கூட தலைவனுக்கு செலவு செய்ததை கூட பாலச்சந்தர் தன படத்தின் மூலம் காட்டினார்.

இதற்கு நடிகரின் மேல் குற்றம் சொல்ல முடியாது. அப்போ அதை பார்த்து வாயை மூடிகிட்டு இருந்தாங்க, ஏதோ கொஞ்சம் பணம் கொடுப்பாங்க.இப்போ இது மாதிரி செய்ய வேண்டாம். இதுவும் ஒரு ப்ரோபெஷன் என்பதை பேட்டியில் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க.
இப்போ ரசிகர் மன்றம் என்பது தேவை இல்லை என்ற கருத்துக்கு வந்து விட்டாங்களே ?

நம்ம மக்கள் தாங்க நடிப்பையும் அரசியலையும் குழப்பி , நடிப்புல சொல்றதை நம்பி , அதை வைத்து ஒருவரின் குணத்தை நாமே எடை போட்டு, அரசியல் சாயம் தடவி ஒரு ரூட்டை போட்டுட்டோம். பக்கத்து மாநிலத்துல எல்லாம் அரசியல் வேற , சினிமா வேற தாங்க.

இதுவும் மாறும் நநிலை வரணும் , நம் மாநிலத்தில் - அதை சொல்லும் குறும்படங்கள் வந்தாச்சு. இன்னும் திரைப்படங்கள் வரலை.பட் சினிமா முகத்தை வைத்து அரசியலுக்கு வந்து இப்போ பபூன் ஆயாச்சு, மக்களும் தான், சூடு பட்டது போதும் என்று நம் இளைய தலைமுரைக்காவது சொல்லி தரனும்.

சாரி நடுவரே தலைப்பை விட்டு தள்ளி போனதுக்கு, அது பெரிய குற்றம் ஆயிடும் .
ஏன்னா, அக்காலத்தில் தலைப்பை வைத்து நீங்க கெஸ் பண்ண முடியும் , இப்போ ஒவ்வொரு சின்ன கேரக்டர்ச்க்கும் இம்பார்டன்ஸ் இருக்கும். அதுல ஒரு குட்டி கதையோ, ஹைக்கூவோ ஒளிஞ்சிருக்கும்.

டெக்னாலஜி (காந்திஜி போல இந்த ஜி கூட ரொம்ப பாபுலர் ஆயிட்டாரு ) வந்ததற்கு நாம் யாருமே காரணம் இல்லை.

ஒரு வேளை அந்த காலத்தில் வந்திருந்தா, அவங்க எண்ணங்கள் கூட இப்படி இருந்திருக்கலாம்.
சினிமா ஆரம்பித்த புதிது வேறு, அப்புறம் யார் என்ன சொல்லுவாங்களோ என்ற பயம் சோ ஒரு விதி முறைக்குள்ளே எல்லாம் இருந்தது, கால போக போக போக அதுவும் மாறத்தான் செய்தது.

// அப்போ வந்தவங்க எல்லாம் எந்த புஷ் பேக் இல்லாம வந்தவங்க //

இது என்ன வாதம் சொலுங்க, நாடக நடிகர்களுக்கு முன்னுரிமை இருந்ததுக்கு பேர் புஷ் பேக் தான், அதையும் தவிர முதல் முறை வர, அப்போ தான் வளர்ச்சி அடையும் நேரம் இந்திய சினிமா >

இப்பயும் புஷ்பக் இருந்தும் திறமை இருந்தா தான் இருக்க முடியும்.

சூர்யாவுக்கு எந்த சப்போர்ட் உம கிடைக்கலை.
பாக்யராஜ் மகன், சத்யராஜ் மகன் எல்லாம் எங்கே கானா போனாங்க. ஏன் ஷாலினியீன் ப்ரதர் கூட அவ்ளோ தான்னு ஆயாச்சு.
ஒரு படம் அப்பாவுடைய காசில் நடிக்கலாம். அது சொதப்பலா இருந்தா மக்களே அனுப்பிறாங்க வீட்டுக்கு .

போய் சாப்பிடனும் நடுவரே,
தெலுகு டப்பிங் புது படம் போட்டிருக்காங்க டி வியில் போய் பார்க்க போறேனே:::-) .
மக்களும் தெளிவாக ஆரம்பிச்சுட்டாங்க. நீங்களும் தெளிவா இருக்கீங்களா.

தண்ணி தெளிச்சு தெளிச்சு எழுப்பரமே,

அடிக்கற வெயில்ல இந்த தண்ணி தான் கிடைக்கும்
நான் வேணா கலர் ஜோடா கொடுக்கிறேன் .
வாங்க

அக்காலத்தின் கல்வெட்டுக்களை பட்டியல் போட்டுட்டாங்க..நினைத்தாலே இனிக்கும் படங்களைப்போல இப்போது உண்டான்னு கேக்கராங்கப்பா........

மேலும் சில பதிவுகள்