***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

தோழி ப்ரியா இக்காலமே என்று சொல்வதையே நானும் ஆமோதிக்கிறேன்

நட்புடன்
குணா

//விழிப்புணர்வு தான் வந்ததா? நாங்க வீடு அப்ரூவல், தண்ணீர் பைப் கனெக்சன், கரண்ட் கனக்சனுக்குனு எத்தனை கொடுத்தோம் தெரியுமா? (போலீஸ்ல சொல்லிட மாட்டீங்களே, போலீஸ் கூட வாங்குச்சு) வேற வழி எங்களுக்கு இல்லை அந்த சமயத்துல..... சினிமாவால எதையும் மாத்த முடியாது// கண்டிப்பா வந்தது... லஞ்சம் குடுப்பது தவறென்று படித்தவன் முதல் பாமரன் வரை அனைவருக்கும் உணர்த்தப்பட்டது. ஆனால் என்ன செய்ய முடியும் வேலை ஆகணுமேங்கர கட்டாயத்தில் குடுக்க வேண்டிய நிலை. இன்று அண்ணா ஹசரே விற்கு நாடே ஆதரவு தருகிறதென்றால் அதற்க்கு இந்த மாதிரி மக்கள் விழிப்புணர்வே காரணம்.

//ஒண்ணு ரெண்டு தான் அப்போ வந்து இருக்கும்... இப்பொ எல்லா படமுமே அப்படிதானுங்களே இருக்கு.... முதல் படத்துல ஒழுங்கா சேலை கட்டிட்டு வர்ற ஹீரோயின்ஸ் அப்புறம் போடுராங்களே ட்ரஸ்// நடுவர் அவர்களே, ஒரு கிளாஸ் பாலில் ஒரு துளி விஷம் தான் விட்டிருந்தாலும் அது நல்ல பால் ஆகிடுமா... அது எப்படிங்க எல்லாரும் எல்லா படத்துலயும் சேலையே கட்டிட்டு நடிச்ச அப்பறம் பாக்குறவங்களுக்கு வெரைட்டி வேண்டாமா... ஆபாசமான படங்களும் வருது, ஆபாசம் இல்லாத படங்களும் வருது (அவன் இவன், கழுகு, நில் கவனி செல்லாதே, நஞ்சுபுரம், அன்புள்ள கமல், அன்வர், தெய்வத்திருமகள், 7 ஆம் அறிவு, தோனி, வாகை சூட வா, எங்கேயும் எப்போதும், குட்டி பிசாசு, கோ, மெரினா, முரண், போராளி, வந்தே மாதரம், கொண்டான் கொடுத்தான்) இவை அனைத்துமே கடந்த ஒரு வருஷத்தில் வெளி வந்தது. இந்த படங்களை எல்லாம் விட்டுட்டு நம்ம எதிரணி என் ஓடாத ஆபாசமான படங்களை பத்தியே ஏன் பேசிட்டு இருக்காங்க... இந்த ஒரு வருஷத்திலேயே இவ்ளோ படம் என்றால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பட்டியல் போட்டால் பட்டி போதாது நடுவர் அவர்களே...

பழைய படங்கள் கோல்ட் தான் அவைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டியவை தான். ஆனாலும் இக்காலப்படங்கள் வரபிரசாதம், ஒரு பெரிய சென்செசுவல் இச்சுவா கூட ரொம்ப அழகா எல்லாருக்கும் புரியற மாதிரி எளிமையா படத்தில் கொண்டு வந்திருவாங்க... சிவாஜி, ரோபோ, தசாவதாரம், மாதிரி படங்கள் எல்லாம் அந்த காலத்தில் எடுக்கவே முடியாது... கோடிக்ககனக்கான ரூபா செலவு பண்ணி எடுத்திருந்தாலும், படத்தோட கதை, கலைஞர்களின் திறமை, இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள் இவற்றுக்காக தான் மக்கள் விரும்பினார்கள். இதில் சிறு அரைகுறை ஆடைகள் வந்தது தான் அது நாம் சாப்பாட்டிருக்கு தொட்டுக்கொள்ளும் ஊருகாவை போல தான்.

//வேறு மாநில நடிகைகள் ஓகேங்க... நம்ம தமிழ் நடிகைகள் ஏங்க தமிழை கொன்னு எடுக்கிறாங்க... தமிழை தப்பு தப்பா பேசுறதுல அவ்வளவு சந்தோசம்... ம்ம்ம் கலிகாலம் நடுவரே// நம்ம தமிழ் நாட்டில் எத்தனை பேர் ஒழுங்கான தமிழில் பேசுறோம் சொல்லுங்க... அந்த பச்ச வாளப்பளம் வாங்கிட்டு வா. தமில் நாட்டில் அடிகடி பவர் கட் ஆகுது... இதுல பல பேருக்கு ழ உச்சரிப்பே வராது... தமிழ் மக்களாகிய நாமே தமிழ் பேசுறோம்னு தமிழை கொன்னுட்டு தான் இருக்கோம்... நண்பன் படம் நான் நேத்து கூட பார்த்தேன், அதுல இலியான உச்சரிப்பு சுத்தமா ஆனா அதுவே அவங்க பேசுற ஸ்லாங் ஸ்டைலா இருக்கும்... நம்ம ஊரிலேயே மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், சென்னை தமிழ் நு பல ஸ்லாங் இருக்க மாதிரி தான் இது சினிமா ஸ்லாங்.

//இவங்க சொல்ற இந்த நடிகர்களுக்கெல்லாம் அந்த கால நடிகர்கள் தானே ரோல்மாடல்.... அத எதிரணி ஒத்துகிட்டே ஆகணும்// ஏங்க ரஜினி சார் கிட்ட போய் உங்க ரோல்மாடல் யாருன்னு கேட்டால் அவங்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களை தானே சொல்லியாகனும்... தேர் இஸ் நோ சாய்ஸ் பார் தெம் இஸ் இட்...

//ராக்கெட்ல போற பொன்னுங்க புடவை கட்ட வேண்டாம்....மாற்றம் மாற்றம்னு சொல்லி மணமேடையில் ஜீன்ஸ் போடாம இருந்தா போதும்... சினிமா போற போக்கை பார்த்தால் இனி அதுவும் காட்டிடுவாங்க.... ஏற்கனவே பொண்ணு பாக்க போறதுங்கிறதை காமெடி சீனு ஆக்கிட்டாங்க...// பொண்ணு பார்க்க போகும்போது பொண்ணு புடவை தான் கட்டி இருக்கணும்னு கட்டாயம் இல்லையே, எங்க மாமனார் வீட்டிலிந்து என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ நான் சுடிதார் தான் போட்டிருந்தேன். நடுவர் அவர்களே, இப்ப எல்லாம் திருமண ரிசப்சன் ல கூட சேலை போய் காக்ரா சோலி வந்டிடுச்சுங்கோ...

//சுடிதார் அணியற பெண்கள் கூட தாலி கட்டுற நேரத்தில் சேலையில் தான் இருக்கணும்னு தான் மாப்பிள்ளைகள் விரும்புவாங்க...// சேலை என்பது நம் பாரம்பரிய உடை, அதுமில்லாமல் எப்படிப்பட்ட பொண்ணு கூட சேலை கட்டினால் அழகு கூடும். திருமணத்தின் போது கல்யாண பொண்ணு லட்சணமா அழகா இருக்கணும்னு தான் எல்லாரும் விரும்பறாங்க மணமகன் உட்பட. சேலைக்கு வேறு ஒரு அழகான ஒரு மாற்று உடை வந்தால் காலப்போக்கில் மக்கள் மாற தான் செய்வாங்க... முன்பெல்லாம் அண்களும் திருமணத்தில் வேஷ்டி சட்டை தான் அணிந்திருந்தார்கள், ஆனா இப்ப சில பேர் மனமேடை ல கூட கோட் சூட் அணியறாங்க... காலம் மாறிட்டே இருக்கு நடுவர் அவர்களே...

////இப்ப எங்க பார்ட்டி நாலும் அவரோட வேர் இஸ் தா பார்ட்டி தான் பிரபலம்.// தமிழை கொலை செய்யும் பாட்டு பிரபலம்.... இது தமிழுக்கு செய்யும் துரோகம் இல்லையா// இங்க இந்தோனேசியாவின் தேசிய மொழி பஹாசா, இங்க உள்ள மக்கள் ஒவ்வொரு குடும்பத்திருக்கும் வேறு வேறு மொழிகள் இருந்தாலும், தேசிய மொழி தெரியாத ஆளே கிடையாது... ஆனா நம்ம நாட்டின் தேசிய மொழியான ஹிந்தி தெரியாத பல தமிழ் நாட்டவர்கள் இருக்க தான் செயாறாங்க... தாய் மொழியினை கத்துக்க்ரதுமில்லாமல் பிற மொழிகளையும் ஆதரிக்கனும்... சும்மா தமிழ் தமிழ் நு சொல்லிட்டே இருந்தால் எங்களை மாதிரி தேசிய மொழி கூட தெரியாது பிற நாட்டவரிடம் அவமானப்பட வேண்டியது தான்.

//ஆமாங்க கல்யாண வீட்டில் போய் அடிடா அவள, எவண்டி உன்ன பெத்தான் நடுரோட்டுல செத்தானு பாடினா ரொம்ப நல்லா இருக்கும்...// கல்யாண வீட்டில் லேட்டஸ்ட் பாட்டு தான் போடுறாங்க, காதுகளுக்கு இனிமை பயக்கும் பாடல்கள், நம்மை தாளம் போடா வைக்கும் பாடல்கள்... அதுக்காக நீங்க சொல்ற மாதிரி அடிடா, உதைடா போன்ற கேவலமான பாட்டெல்லாம் போடா மாட்டாங்க...

//கரகாட்டக்காரன் காமெடியை தான் சொல்றீங்க இப்ப வந்தது எதுவுமே சொல்லிக்கிற மாதிரி இல்லைனு உங்களுக்கே தெரிஞ்சுடுச்சு...// கரகாட்டக்காரன் படத்துக்கு அப்பறம் சொல்லிக்கற மாதிரி காமெடி இல்லையா என்ன சொல்றாங்க நம்ம எதிரணி... இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் முழுக்கவே காமெடி தாங்க... என்னது இது வஞ்சிர மீனை வறுத்து வச்ச மாதிரி ரவுண்டு ரவுண்டா இருக்கு... ஹோ இட்ஸ் ஹியுமன் ப்ரைன... இன்னும் எவ்வளவோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

//நல்ல டைமன்ட் என்பது அரிது தான் ஏன்னா அதிலேயே தோஷம்னு பல இருக்கே..... அது போல தான் இன்றைய படங்களும் நல்லவை என்பது அரிது தான் ஆனா கோல்ட் தான் எல்லாராலையும் விரும்பி வாங்கபடுது... பழைய படங்களும் அப்படித்தாம் எல்லாராலையும் விரும்ப படுது...// உங்க கோல்ட் மூவீஸ் பெரியவங்க, வயசானவங்களால தான் விரும்பப்படுது.... கண்ணை பறிக்கும் டைமண்ட் மூவீசையே இந்த ஜெனரேசன் விரும்புது....

நடுவரே, என்ன தலை சுத்தர மாதிரி இருக்கோ... இந்தாங்க வெயிலுக்கு எத்த ஜில் ஜில் ஸ்வீட் லஸ்ஸி...

கடமை அழைக்கிறது, மீண்டும் வாரேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பதிலடிக்கு பதிலடியா.......

///ராக்கெட்ல போற பொன்னுங்க புடவை கட்ட வேண்டாம்....மாற்றம் மாற்றம்னு சொல்லி மணமேடையில் ஜீன்ஸ் போடாம இருந்தா போதும்... சினிமா போற போக்கை பார்த்தால் இனி அதுவும் காட்டிடுவாங்க.... ஏற்கனவே பொண்ணு பாக்க போறதுங்கிறதை காமெடி சீனு ஆக்கிட்டாங்க... ///

(நினைத்துப்பார்த்தாலே வயித்த கலக்குதுப்பா,மேடையில ஜீன்ஸ்சா நோசான்ஸ்)

///நல்ல டைமன்ட் என்பது அரிது தான் ஏன்னா அதிலேயே தோஷம்னு பல இருக்கே..... அது போல தான் இன்றைய படங்களும் நல்லவை என்பது அரிது தான்///

டைமன்ஸ்லகூட தோஷமிருக்குள்ள.சரியாதா சொல்லிருக்கீங்க........காலையில் புதுதெம்போட வாங்க.....

பட்டியில் தங்களின் மீள் வருகைக்கு மகிழ்ச்சி. பட்டியில் பெயர் குறிப்பிட்டு பதிவிடுவது விதிமீறலாக கருதப்படும் திருத்திக்கொள்ளுங்கள்.... வாதங்களுக்காக காத்திருக்கிறேன்.

நடுவர் ரேணுகாவிற்கு வாழ்த்துக்கள்.. நடுவரே.. இப்பவும் சரி அப்பவும் சரி, எப்பொழுதுமே பழைய திரைப்படங்களே விஞ்சி இருக்கின்றன.. இப்பொழுது வருபவை திரைக்கலைகளாக இல்லை.. திரைக்கொலைகளாக உள்ளன. அந்தக்காலப் படங்கள் சமுதாயம், கலாச்சாரம் இந்த இரண்டையும் சீர்கெடுக்காமல் அதன் தரம் குறையாமல் இருந்தன.. ஆனால் இப்பொழுது வரும் படங்கள் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சீர்கெடுப்பதாகவே உள்ளது. இப்பொழுது வரும் படங்கள் பத்தில் ஒன்று உறுப்படியாக உள்ளது. ஆனால் அக்காலத்தில் பத்து வந்தால் பத்துமே பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தது.. எனவே இக்காலத் திரைப்படங்களை வி ட அக்காலத் திரைப்படங்களே அனைத்திலும் சிறந்தவை என கூறி எனது முதல் சுற்று விவாதத்தை முடிக்கிறேன்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்லா சொன்னீங்க பிரேமா....

///நம்ம தமிழ் நாட்டில் எத்தனை பேர் ஒழுங்கான தமிழில் பேசுறோம் சொல்லுங்க... அந்த பச்ச வாளப்பளம் வாங்கிட்டு வா. தமில் நாட்டில் அடிகடி பவர் கட் ஆகுது... இதுல பல பேருக்கு ழ உச்சரிப்பே வராது... தமிழ் மக்களாகிய நாமே தமிழ் பேசுறோம்னு தமிழை கொன்னுட்டு தான் இருக்கோம்... நண்பன் படம் நான் நேத்து கூட பார்த்தேன், அதுல இலியான உச்சரிப்பு சுத்தமா ஆனா அதுவே அவங்க பேசுற ஸ்லாங் ஸ்டைலா இருக்கும்... நம்ம ஊரிலேயே மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், சென்னை தமிழ் நு பல ஸ்லாங் இருக்க மாதிரி தான் இது சினிமா ஸ்லாங்.///
(தமிழ் நாட்டிலயே பள்ளியில் மிஸ் தமிழ் பேசினாங்கன்னு பிரின்ஸ்பல்கிட்ட மாட்டிவிட்ட பையன் இருக்கான்.....இவ்விடம் தமிழ் அழியலையா??)

///இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் முழுக்கவே காமெடி தாங்க... என்னது இது வஞ்சிர மீனை வறுத்து வச்ச மாதிரி ரவுண்டு ரவுண்டா இருக்கு... ஹோ இட்ஸ் ஹியுமன் ப்ரைன... இன்னும் எவ்வளவோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்...///(முற்றும் தெரிந்த ஞானமுனி.......முற்று(த்த)ம் தெரிந்த ஞானமுனி....ஹ,,,ஹா,........ஹஹஹா......).......கடமையை முடித்துவிட்டு வாருங்கள்.....

வாங்க ரங்கா,
பத்தரை மாத்து தங்கம்னு முதல்கட்ட வாதத்தை முடிச்சாச்சா,......அடுத்தகட்டத்திற்கு வாங்க.....

அன்பான பண்பான நடுவர் அவர்களுக்கும், சீறிப்பாயும் எனதருமை எதிரணி வீராங்கணைகளுக்கும் இனிய காலை வணக்கம்...

நடுவர் அவர்களே....... இந்தாங்க எங்க பதிலடி........

### அந்தகால சினிமா எல்லாம் போர் அடிக்கிற பாடம் கற்பிக்கறமாதிரிதான் இருந்தது. எல்லாமே நிழல பார்க்குறமாதிரிதான் இருக்கும். ஒரே விதமான மியூசிக்.

அடுத்ததா 70 களில் வந்த படத்துலலாம் ரேப் சீனும், கிளப் டான்ஸை வச்சு தான் படத்த ஓட்டியிருப்பாங்க. அதுவும் அந்த ஈஸ்மேன் கலர் வந்த புதிதில் காட்சிகளிலும் நடிப்பிலும் நிறைய தடுமாற்றம் இருக்கும்.

மேக்கப் பொருந்தியிருக்காது. இப்ப இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைவிட 60 டூ 70 களில் வந்த படங்களில் தான் அதிக முகம் சுளிக்கவைக்கும் ரேப் காட்சி, கிளப் காபரே டான்ஸ், ஆபாச வசனம் போன்றவை அதிகமா இருந்தது.

அனைத்திலும் ஒரு முழுமை இருக்காது. ஒரு இம்மெச்சூரிட்டி இருக்கும்.

### அடுத்து நிறைய செயற்கைதனம் இருக்கும். இன்டோர் லயே செட்டு போட்டு எடுத்திருப்பாங்க. பைக், கார், குதிரை பொன்ற சண்டைகாட்சிலல்லாம் நமக்கு நல்லாவே தெரியும் சும்மா நிக்கிற குதிரைல, கார்ல, பைக்குல சண்ட போடுறாங்கன்னு.

அதேபோல காட்சி அமைப்பை பார்த்தீங்கன்னா ஒரே மாதிரிதான் இருக்கும்.

டூயட் பாடல்னா சாத்தனூர் டேம், ஆழியார் டேம், கிருஷ்ணராஜ சாகர் டேம் தவிர வேற எங்கயும் போய் எடுப்பது ரொம்ப ரொம்ப அரிது.

மேக்கப் இல்லாம திரையில தோன்றவே மாட்டாங்க.

எதார்த்தம் என்பதும் மிக மிக குறைவே.... இங்கு எதார்த்தம் என்பது வசனம், காட்சி அமைப்பு, செட், நடிப்பு எல்லாமே. கண்டிப்பா சிவாஜி, எம்.ஜியார் மாதிரி நம்மளோட கஷ்ட்ட சூழல்ல அதே டயலாகை இலக்கண பிழையில்லாம பேசமுடியுமான்னு சொல்லுங்க பாப்போம். அப்படியெல்லாம் பேசினா எல்லொரும் கண்டிப்பா சிரிப்பாங்க.

### அந்தகாலகட்டத்திலுமே சரி எல்லா மக்களும் இலக்கணப் பிழையில்லாமல் பாடபுத்தகத்துல வர்ர தமிழ் மாதிரி எல்லாம் பேசினது கிடையாது.
எல்லோருமே அவங்கவுங்க வட்டாரத்தில் வழக்கத்திலிருக்கும் மொழிலதான் பேசியிருப்பாங்க.

ஆனா அந்தகால படத்தில் பார்த்தீங்கன்னா கட்டபொம்மன் படத்தில ராஜாகாலத்து தமிழும், பராசக்தில விரக்தில பேசர தமிழும், குரத்திமகனில் குறத்தியாக பேசிய கேயார் விஜயா அவர்களின் தமிழும் ஒன்னாதான் இருக்கும்.

நீங்களே சொல்லுங்க இதைதான் நாங்க நாடகத்தன்மை, எதார்த்தமின்மைனு சொல்லுறோம்.

நீங்களே உண்மையை யோசித்துபாருங்கள். புரிந்ததா.........

### இன்றைய சினிமாவில் இருக்கும் மிகபெரிய சாதனையே அதில் இருக்கும் எதார்த்தம், காட்சி அமைப்பு, லொகேஷன்ஸ், மொழி இவையெல்லாமேதான்....

அவர்கள் பேசும் விதத்தை வைத்தே கதைகளம் எந்த ஊரு சம்பந்தப்பட்டது, என்ன வட்டாரம்னு சொல்லிடலாம்.

குறிப்பா பொள்ளாச்சில ஒரு கதை நடக்குதுனா அந்த நடுகர்கள் அப்படியே பொள்ளாச்சிவாசிகளாகவே வெளிப்படுத்துவாங்க. அந்த காட்சிகளில் அப்படியே அந்த மண்ணின் மணம் கமழும்.

அதேபோலதான் சென்னை தமிழ், மதுரை தமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ் மக்களையெல்லாம் உலகுக்கு வெளிப்படுத்தியது.

### அடுத்தது டெக்னாலஜி...... நீங்களே சொல்லுங்க இரட்டை வேடம் எப்படி போடுறாங்கன்னு சொல்லிக்கொடுத்ததே ஜீன்ஸ் படம் தானே.....

உலக அதிசயத்தை எல்லாம் செட்டு போடு ஏதோ ஒரு பொம்மை ரேஞ்சுக்கு பார்த்ததையெல்லாம் அந்த லொகேஷனுக்கே போய் அப்படியே உள்ளது உள்ளவண்ணம் காண்பித்தது இன்றைய சினிமாதானே....

### இன்னும் சொல்லனும்னா மணிரத்னம், பாரதிராஜா,ஷங்கர் போன்றவர்கள் தமிழ்சினிமாக்கு வரலைனா இன்னும் நாம கல்யாணப் பெண்ணை உனக்கு பாட தெரியுமா, ஆடத்தெரியுமா, டான்ஸ் ஆடத்தெரியுமானு கேள்விகேட்கிற சீனை விட்டு வெளியில வந்திருக்கவே மாட்டோம்.

ரோபோ நடிக்கிற சீன்ல கையில கால்ல தலையில அட்டைல அலுமினியப் பெயின்ட் அடிச்சு காடிக்கிட்டு வர்ரதை இன்னும் தான்டியிருக்க மாட்டோம்.

அட நோய்ல கூட பிளட்கேன்சரை இன்னும் விட்டுருக்க மாட்டோம்.

### இந்தகால சினிமா நடக்காததை ஒன்னும் சொல்லலையே. இன்னைக்கு சமூகத்துல நடந்த, நடக்கின்ற விஷயத்தை மறைக்காமல் தெள்ளத்தெளிவா கண்ணாடி போல காண்பிக்கிறது.

"உண்மை சுடும்" என்ற வழக்கு உள்ளது. அதுபோலத்தான் சினிமாவில் காண்பிக்கப்படும் பளிச் உண்மை.

இன்றைய சினிமாவில்

==>சண்டை போட்டா எப்படி கோவம் தலைக்கேறுது,
==>அடிவாங்கினா எப்படி நம்ம தசையில அதிர்ச்சி பரவுது,
==>கைகால் ஒடிஞ்சா எப்படி எலும்பு உடையுது
==>கருவில் குழந்தை எப்படி இருக்கும்
==>மைண்டு வாஸ் கேட்பது

இதையெல்லாம் காட்சியமைப்பு செய்ததெல்லாம் இன்றைய சினிமாதே...

### இன்றைய சினிமாவில் நிறைய அறிவியல் ரீதியான நுணுக்கமான விஷயங்கள் கொட்டீகிடக்குது. அதை விட்டுட்டு ஹீரோயினோட குறைந்த உடைதான் உங்க கண்ணை உருத்துது.

==> என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு ஸ்பைடர்மேன்2 படத்தைதான் உதாரணமா சொல்ல்றேன். அதுல என்னங்க இருக்கு ஹீரோ ஹீரோயின் முத்தக்காட்சிதான் இருக்குனு எதிரணிகாரங்க டைப் மக்கள் சொல்லுவாங்க.

ஆனா நாங்க அதில் என்ன கத்துகிட்டோம்னா "சூரியனில் நடை பெறுவது அணுக்கரு இணைவு" என்ற தகவலுக்கு நேரடி உதாரணம்.

பள்ளிப்பாட புத்தகத்தில் சொல்லிடுவாங்க "சூரியனில் நடப்பது அணுக்கரு இணைவு (அ) பிணைவு, ஹைட்ரஜன் பாம் ல நடப்பது அணுக்கரு இணைவு, அணுகுண்டு(ஆட்டம் பாம்)ல் நடை பெறுவது அணுக்கரு பிளவு" அப்படீனும்.

நம்ம மக்கள் மனசுல பதியனுமே...... எப்படி எக்ஸாம் ல எழுதும்போதும் தூக்கத்துல எந்திரிச்சு கேட்டாகூட சோலனும்னா புரியனும்.

இந்த ஸ்பைடர் மேன்2 ல வில்லன் செயர்கை சூரியனை முயற்சி செது உருவாக்குவார். அதும் உருவாகி "அணுக்கரு இணைவு" ப்ராசஸ் ஆரம்பிச்சு உலகத்துல இருக்கும் பொருளையெல்லாம் எஈர்க்க ஆரம்பிக்கும். அப்ப ஸ்பைடர்மேன் வந்து காப்பாற்றுவார்.

இதை சொன்னபோது பிள்ளைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. இப்ப அந்த பிள்ளைங்களுக்கு எந்த ஸ்டேஜ்ல கேட்டாலும் கரெக்ட்டா சொல்லுறாங்க.

அப்போ பல சிக்கலான அறிவியல் விஷயங்களை காட்சியமைப்பா பார்க்க இயலாத விஷயங்களை மக்களுக்கு கதைசொல்லி புரிய வச்சது இன்றைய சினிமா தனங்க.......

==> நம்ம தசாவதாரத்தில கூட டார்வின் தியரி சொல்லியிருக்காங்க.
==>ரோபோல எவ்வளவு சயின்ஸ் சொல்லியிருக்காங்க.
==> நம்ம நன்பன் படத்துல "உப்புதண்ணிக்கு மின்சாரத்தை கடத்தும் திறன் அதிகம்"னு சொல்லியிருக்காங்க.
==>மழைத்துளி விழுவதில் ஒவ்வொரு துளியும் தெளிவாதெரியிரமாதிரி ரசனையா எடுத்திருக்காங்க.

அத்தனையையும் வாய்ல ஈ எறும்பு போறதை கூட கவனிக்காமல் பார்த்துட்டு இன்னும் அந்தகால சினிமாதான் சிறப்பு சிறப்புனு கொடிபிடித்தால் நாங்க என்னங்க செய்ய முடியும்.

சொல்லுங்க நடுவரே.... சொல்லுங்க.....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆனந்தப்பிரியா,
தெம்பா வந்து பின்னோ பின்னோன்னு பின்னிருக்கீங்க....அட காட்சியமைப்புகளை சொன்னேன்.....:)யதார்த்தம் யதார்த்தம்னு பதார்த்தமாகாம இருந்தா சரிதாபோங்க......

///என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு ஸ்பைடர்மேன்2 படத்தைதான் உதாரணமா சொல்ல்றேன். அதுல என்னங்க இருக்கு ஹீரோ ஹீரோயின் முத்தக்காட்சிதான் இருக்குனு எதிரணிகாரங்க டைப் மக்கள் சொல்லுவாங்க.
ஆனா நாங்க அதில் என்ன கத்துகிட்டோம்னா "சூரியனில் நடை பெறுவது அணுக்கரு இணைவு" என்ற தகவலுக்கு நேரடி உதாரணம்.
பள்ளிப்பாட புத்தகத்தில் சொல்லிடுவாங்க "சூரியனில் நடப்பது அணுக்கரு இணைவு (அ) பிணைவு, ஹைட்ரஜன் பாம் ல நடப்பது அணுக்கரு இணைவு, அணுகுண்டு(ஆட்டம் பாம்)ல் நடை பெறுவது அணுக்கரு பிளவு" அப்படீனும்.
நம்ம மக்கள் மனசுல பதியனுமே...... எப்படி எக்ஸாம் ல எழுதும்போதும் தூக்கத்துல எந்திரிச்சு கேட்டாகூட சோலனும்னா புரியனும்.
இந்த ஸ்பைடர் மேன்2 ல வில்லன் செயர்கை சூரியனை முயற்சி செது உருவாக்குவார். அதும் உருவாகி "அணுக்கரு இணைவு" ப்ராசஸ் ஆரம்பிச்சு உலகத்துல இருக்கும் பொருளையெல்லாம் எஈர்க்க ஆரம்பிக்கும். அப்ப ஸ்பைடர்மேன் வந்து காப்பாற்றுவார்.
இதை சொன்னபோது பிள்ளைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. இப்ப அந்த பிள்ளைங்களுக்கு எந்த ஸ்டேஜ்ல கேட்டாலும் கரெக்ட்டா சொல்லுறாங்க.
அப்போ பல சிக்கலான அறிவியல் விஷயங்களை காட்சியமைப்பா பார்க்க இயலாத விஷயங்களை மக்களுக்கு கதைசொல்லி புரிய வச்சது இன்றைய சினிமா தனங்க.......///
(இந்தமாதிரி வீடியோ ஸ்டடிஸ் இருந்தா பிள்ளைங்க அதிகமார்க் எடுப்பாங்களே.......யோசிங்க........மக்களே..யோசிங்க......(இந்த படத்த முதல்ல பாக்கனும்,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மைண்டு வாய்ஸ் காட்ச் ஆயிடுச்சா.....)

// டிவி ல செய்திவாசிகரவங்க எப்பவும் சேலைல தான வராங்க ... ஆனா எத்தனை பேரு உக்கார்ந்து ஒழுங்கா செய்தி பாக்குறாங்க... உங்களையெல்லாம் ஒரு டிவி ஷோ பார்க்க வைக்க அவங்க எவ்ளோ பண்ணவேண்டியிருக்கு... அப்ப சினிமா சொல்லவே வேண்ட //
அப்போ மக்களை படம் பார்க்க வைக்க என்ன வேனும்னானும் பண்ணுவாங்களா ? அத நீங்க உட்கார்து ரசிச்சு பார்ப்பீங்களா ? என்ன கொடுமையான ரசனை. உங்களைப்போல ஒரு பெண்ணை தானே இழிவு படுத்துறாங்க. அது பெண் இனத்துக்கே கேவலம்ன்னு நாங்க சொல்றோம். ஆனா நீங்க ச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன தப்பு நடக்குதுன்னு கூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு இக்கால cinemaa மக்களை எப்படி மாத்தி இருக்கு.

//நடுவரே, இப்ப எல்லாம் பொண்ணுங்க ராகேட்ல போற காலம் வந்திருச்சு, அதுல என்ன தழைய தழைய புடவை கட்டிட்டா போக முடியும். காலத்துக்கு எத்த மாதிரி மாறி தான் ஆகணும். // ராக்கெட்ல ஏறி எங்க போனாலும் வீடுன்னு வந்துட்டா அத பெண் தானே சிறப்பா நிர்வாகம் பண்ணனும். பெண் சரி இல்லைனா அந்த வீடு அவ்ளோதான். பெண் எப்போதும் பெண்ணா இருக்கணும். நாங்க ஒன்னும் சுடிதார், ஜீன்ஸ் போடுறத தப்புன்னு சொல்லல. உடலை காட்டாத சுடிதார், மிகச்சரியாக அணியும் ஜீன்ஸ் இதெல்லாம் சரி தான். உள்ளாடை தெரியும் சுடிதார், எப்போ கழண்டு விழுமோ என்ற நிலையில் உள்ள ஜீன்ஸ் இதெல்லாம் வேணுமா ?

ஆண்களுக்கு பார்க்கும் பெண் எல்லாம் மும்தாஜ் மாதிரி இருக்கனும்ன்னு விரும்புவாங்க. ஆனா கல்யாணம்னு வந்தா மகாலட்சுமி தான் வேணும்ன்னு சொல்லுவாங்க.

//இப்ப இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைவிட 60 டூ 70 களில் வந்த படங்களில் தான் அதிக முகம் சுளிக்கவைக்கும் ரேப் காட்சி, கிளப் காபரே டான்ஸ், ஆபாச வசனம் போன்றவை அதிகமா இருந்தது// இதில்ருந்து தெரியுது இவுங்க அந்த காலத்து படம் பார்க்கலைன்னு.

//காட்சி அமைப்பை பார்த்தீங்கன்னா ஒரே மாதிரிதான் இருக்கும்.// கட்சி ஒன்றாக இருந்தாலும் சொல்ல வரும் கருத்து பயனுள்ளதாக இருக்கும்.

இக்கால படத்துல எல்லாதயுமே வெட்ட வெளிச்சமா சொல்லிடுரான்களே அதான் வருத்தமா இருக்கு. எங்கோ ஒரு மூலைல ஒரு தப்பு நடக்குது அத அப்படியே சொல்லி அதே மாதிரி இந்த ஊர் உலகமே நடக்குற மாதிரி பண்ணிடுது இக்கால cinemaa.

தத்துவம் அப்படின்னாலே அக்கால படம் தானே. பட்டுகோட்டை எழுதாத தத்துவப்பாடல் என்ன இருக்கு ? நம் அரசியல்ல கூட அந்த பாடல்கள் தானே யூஸ் பண்ணுறாங்க.

//உங்க கோல்ட் மூவீஸ் பெரியவங்க, வயசானவங்களால தான் விரும்பப்படுது.... கண்ணை பறிக்கும் டைமண்ட் மூவீசையே இந்த ஜெனரேசன் விரும்புது// டைமண்ட் ஒரிஜினலா இருந்தா பரவாஇல்ல ஆனா இது டூப்ளிகேட்ஆல இருக்கு. அது தானே இப்போ பிரச்சனையே. டூப்ளிகேட் டைமண்ட்யை விட ஒரிஜினல் 24 காரட் தங்கம் எவ்வளவு உயர்ந்தது.

அந்த காலத்துல என்ன லஞ்சமா இருந்தது ? அத கத்துக்கொடுத்ததே இக்கால cinemaa தான். பின்ன அத எப்படி தடுக்குரத்துன்னும் சொல்லி தராங்களாம். எதுக்கு இந்த வெட்டி வேலை. தவறான விஷயங்களை ஏன் தெரியபடடுத்தனும் ?

நாங்க என்ன சொல்றோம், மக்களின் ரசனைய ரொம்ப கீழ்த்தரமா நினைத்து படம் எடுக்காதீங்க. பெண்களுக்கு நல்ல ஆடை கொடுங்க. எல்லாம் ஒரு வரம்புக்குள் காட்டுங்க. நல்ல விஷயங்களை சொல்லுங்க அப்படின்னு தானே. இதுக்கு என்னமோ தாம் தூம்னு குதிக்குறீங்க.

இக்கால சினிமாவோட தாக்கம் இப்போ சின்ன திரைல கூட வந்திடுச்சு. நம் அறுசுவைல இதுக்குன்னே ஒரு தனி இழை இருக்கு. ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரத்துல கொஞ்சம் சினிமா பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா முடியுதா? இக்காலத்துல டென்ஷன் தான் அதிகம். ஆனா அக்காலத்துல இப்படி எல்லாம் இல்ல.

"சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே"

"சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க

முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க

ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க"

"மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,

உழைப்பை மதித்து
பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்."

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்