***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

இக்காலத்திற்கு ஏற்றதுபோல நம்மே மாறும்போது சினிமா மாறாதா என்ன? பதில் சொல்லுங்க அக்கால அணி.

/////அந்த காலபடங்களில் ஆபாசம் இல்லை, ரெட்டை அர்த்தம் இல்லை, நல்ல நடிப்பு, பிரமிப்பான சண்டை காட்சிகள் எல்லாம் நம்ம தோழீஸ் சொல்றாங்க தான்... இந்த நாகரீக உலகிற்கு ஏற்ற மாதிரி தாவணி, சேலை அணிந்த நாமே இப்பொழுது காக்ரா சோலி, சுடிதார் நு அணிவதில்லையா, அது தான் கம்பார்டபளவும் இருக்கு... அதேபோல் தான் அந்த கால சினிமாக்களின் வசங்களை இந்த காலத்து பிள்ளைகள் புரிஞ்சுகறதே ரொம்ப சிரமம்... சோ இந்த காலத்திருக்கு ஏற்ற மாதிரி மார்டனா கொஞ்சம் மசாலா சேர்த்தும் குடுக்கறாங்க... இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தை விட இந்த காலத்தில் மிக பிரமாண்டமான படங்கள் வந்திட்டு இருக்கு... ஜோதா அக்பர், தசாவதாரம், எந்திரன் வாவ்.../////

சிரமமில்லாத வசனங்கள்,பிரம்மாண்டமான படங்கள் இக்காலத்தில்தானே வருகின்றதுன்னு தனது முதல்கட்ட வாதத்தை முடித்திருக்கிறார் பிரேமா.........

வருகையை வரவேற்கிறேன் ஜென்னி.......நீங்களும் அக்காலமே அணியா வாழ்த்துக்கள்......தோழிகளே அக்காலம் பாய்ண்ட் பாயிண்டா கொடுத்திருக்காங்க,

///நம்ம படத்துல நாகன் என்ன பன்றாரோ அதை அப்படியே செய்வதுதான் நம்ம பிள்ளைகளோட பழக்கம். நாயகனே சிகரெட், தண்ணி அப்படி இப்படின்னு இருந்தா பிள்ளைகளும் அதையே தானே பண்ணுறாங்க.//

இக்கால படங்கள் பார்த்து பிள்ளைகள் எதை கத்துக்கறாங்களோ இல்லையோ நல்லா மொக்கபோடவும் ,எதிர்பதில் பேசவும் கத்துக்கறாங்கப்பா.......

////அந்தகாலத்து பாடல் எல்லாம் அமுதம்,
* எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
* புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக
* சிந்து நதிஇன் இசை நிலவினிலே
* ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
* தாயத்து தாயத்து
சக்கரவத்தி திருமகள்" படத்துல mgr க்கும் nsk க்கும் ஒரு பாடல் வரும் (பாடல் வரிகள் இங்கே தரலமா) மிக அருமையான பாடல். அதில் சொல்லப்படும் கருத்துக்கள் அம்மம்மா எனவென்று சொல்ல ?
--> " உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது ?
நிலைகேட்டுபோன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது ?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது" <---
இப்படிப்பட்ட கருத்துக்கள் எங்கே இப்போ உள்ள பாடல் வரிகள் சொல்கிறது ?
சொட்ட சொட்ட காதல்,
* மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
* மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
* நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இது மட்டுமா நம் சிறு பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்கள் எத்தனை எத்தனை,
--> "வேப்ப மரம் உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும் பாத்து சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கில்லி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே
நீ வீட்டுக்குளே பயந்து கிடந்து வெம்பி விடாதே" <---
எப்படிப்பட்ட பொன்னான வரிகள்.////////

ஆமாம்ப்பா......அமுதகானங்கள் அவை......ஒளிக்கும்போது காதிற்கு இனிமையாக மனதினை வருடும் பாடல்கள்........இக்காலமே அணி வாங்கப்பா, வந்து இக்காலத்திலும் இதுபோல உண்டான்னு எடுத்துவிடுங்க.......(கிளப்புடா கிளப்புடா......)

வாங்க ஷீபா,வரும்போதே அவையை அமளி துமளி ஆக்கரீங்களே....!நீங்களும் இக்காலமா வாழ்த்துக்கள்......இக்காலத்திற்கு ஏற்றார்போல சினிமா பேஷா மாறலாமே.....

முன்னல்லாம் கறில மசால்பிடிக்கலனாதா சண்டை வரும், இப்பஎன்னடான்னா படத்துலயும் மசாலா வேணுமாம்........ஹைய்யோ.....ஹைய்யோ.....
மீண்டும் வாருங்கள்.....

\\ நடுவரே!! அந்த காலத்திலாவது பரவாயில்லை. பெரிதாக பாட்டிற்கு டான்ஸ் ஆடத் தேவையில்லை.//நடுவரே,தில்லானா மோகனா படத்ல பத்மினி அம்மா ஆடுவாங்க அதுதான் நடனம் நளினம் உள்ள நடனம்.இந்த கால படத்ல ஆடுறாங்க ஆனா நளினமா இருக்கா?எப்ப்டி கொலை,கொள்ளையடிக்கலாம்,எப்ப்டி தப்பிக்கலாம் இதுதா இக்கால சினிமா.

நடுவர் அவர்களே,

அந்த கால படங்களிலும் தான் மது அருந்துவது, புகை பிடிப்பது எல்லாம் இருந்திச்சு... ஆனால் இன்றைய படங்களில் செய்வதை மட்டும் தான் பிள்ளை பழகிக்கொள்கிறார்களா?

அந்த கால படங்களில் சேலை உடுத்தும் விதங்களை பார்த்தால், ஆபாசம் இல்லையென்று கூற முடியாது...

ஒரு கருப்பு வெள்ளை படம், பெயர் நியாபகம் இல்லை... அதில் ஹீரோ ஹீரோயினோட அம்மாவை காதலிப்பார்... ஹீரோயின் ஹீரோவோட அப்பாவ காதலிப்பார்... என்ன ஒரு கேவலவமான கரு...

நடுரே... இந்த கால படங்களிலும் உள்ள சில நல்ல பாடல்கள்... இன்னும் நிறைய இருக்குங்க...

1. உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி தோளை உயர்த்து... தூங்கி விழும் நாட்டை எழுப்பு... எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்... (நம் மறைந்திருக்கும் திறமைகளை தட்டி எழுப்பும் வரிகள்)

2. குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க... மத்தாளம் மத்தாளம் கொட்டி முழக்க... குற்றம் பார்க்கும் உள்ளம் அது கெட்டிப்பட்ட பாறை, சொந்தம் பார்க்கும் உள்ளம் அது சொக்க தங்கமே... பாறை கொண்ட கீறல் அது ottikkolvadhillai ... தங்கம் கொண்ட கீறல் அது ஒட்டிக்கொள்ளுமே... (என்ன அழகான ஒரு அட்வைஸ்)

3. என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.. இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்... (என்ன ஆழமான காதல் வரிகள்)

4. அத்தி அத்திக்கா அத்தைமடி மேலே ஆடிக்கிடந்தால் சுகமல்லோ... தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ... கண்கள் வேறு கனவுகள் ஒன்று தான், கைகள் வேறு ரேகைகள் ஒன்று தான்... மறைகள் வேறு ஆனதம் ஒன்று தான்... உருவம் வேறு உணர்வுகள் ஒன்று தான்... (பல வண்ண மலர்களால் ஆனா பூங்கொத்தை போன்ற கூட்டு குடும்பத்தை பற்றிய அர்த்தம்முள்ள வரிகள்)...

5. தமிழா தமிழா நாளை நம் நாளே...
தமிழா தமிழா நாடும் நம் நாடே...
என் வீடு தாய் தமிழ்நாடு என்றே சொல்லடா...
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா...
நிலம் மாறலாம் குணம் ஒன்று தான்...
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்...
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்...
கலி மாறலாம் கோடி ஒன்று தான்...
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்...
இசை மாறலாம் மொழி ஒன்று தான்...
நம் இந்திய மொத்தம் ஒன்று தான் வா...
(எவ்ளோ அர்த்தமுள்ள நம் தேசப்பற்றை தூண்டும் பாடல்)

6. மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது...
மனதோடு மனம் இன்று பகை கொள்வதேனோ...
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம், மலர் மீது துயில் கொள்ளட்டும்...
வருகின்ற கண்ணீரில் இனம் இல்லையே...
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே...
காற்றுக்கும் திசை இல்லை தேசம் இல்லை...
மனதோடு மனம் சேரட்டும்...
(இந்தியரின் ஒற்றுமைக்கு நீர்வார்த்த வரிகள்)

எல்லா விஷயத்திலுமே ப்ளஸ் அண்ட் மைனஸ் இருக்கு... நாம் எப்பவும் வாழ்க்கைக்கு தோதான ப்ளஸ் மட்டுமே எடுத்துக்கணும்...

திரும்ப வருவேன்....

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இதோ இக்கால படங்களிலிருந்து பொன்னான் சில பாடல் வரிகள்
1. ஒவ்வொரு பூக்களுமே.... சொல்கிறதே.....
வாழ்வென்றால் போராடும் போர்களமே.
ஒவ்வொரு விடியலுமே... சொல்கிறதே.....
இரவானால் பகலொன்று வந்திடுமே...

2. ஒரு பெண் புறா....கண்ணீரில் தள்ளாட, என் உள்ளம் திண்டாட, என்ன வாழ்க்கையோ?
சுமை தாங்கியே, சுமை ஆனதே, எந்தன் நிம்மதி, போனதே...

3. ஆம்மா என்றழைக்காத உயிரில்லையே...
ஆம்மாவை வண்ங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்....
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?

4. உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

5. இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தோழைத்தோமே!!
நம்மால் முடியதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே....

6. மண்ணை திறந்தால் நீர் இருக்கும்.
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்.
ஒளியை திறந்தால் இசை இருக்கும்.
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்.
வானம் திறந்தால் மழை இருக்கும்.
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்.
இரவை திறந்தால் பகல் இருக்கும்.
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்...

7. மார்பிற்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே.
மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே.
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி.
என் புன்னகையாலே ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி.
வார்த்தை என்னை கை விடும் போது மௌனம் பேசுகிறேன்.
என் கண்ணீர் பேசுகிறேன்.
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை

இன்னும் ஏராளமான நல்ல பாடல்கள் அந்த காலத்தை விட இந்த காலத்தில் நிறையவே உள்ளது நடுவரே.

நம் எதிரணி தோழி ஒருவர் சொல்லியிருந்தாங்க
\\* காதல் பண்றது (அறியாத சிறு வயசுலேயே)
* தம், தண்ணி அடிப்பது
* பெண்களை எப்படி எல்லாம் கேவலமா பார்ப்பது & கிண்டல் அடிப்பது
* வீட்டுக்கு தெரியாம ஊர் சுற்றுவது
இப்படி ஏராளம் ஏராளம்.\\

**அந்த காலத்துலை அறியாத வயசுல காதல் பன்னவே இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய் அறியாத வயசுல கல்யாணமே செய்து வைத்த காட்சிகள் உண்டு. ஏனென்றால் அந்த கால பழக்கவழக்கம் அப்படி. இப்ப நாம அதையா செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை எல்லாம் நம்மிடம் இருந்து களைந்தது இந்த கால சினிமா தானே.
**அந்த கால சினிமாவில் தம், தண்ணி அடிப்பது போன்ற காட்சிகள் இல்லவே இல்லைனு அடித்து சொல்லமுடியுமா உவர் ஆனர்? அந்த காலத்துலையும் நல்ல படங்கள் கெட்ட படங்கள்னு 2 விதமா இருக்கத்தான் செய்தது.
**பெண்கள் அந்த கால சினிமாவில் வீட்டு வேலைகள் செய்யவும், குழந்தைகளை வளர்ப்பதுமான கதாபத்திரங்களில் தோன்றியது தான் அதிகம். ஆனால் இப்போவெல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய வருகின்றன (மகளிர் மட்டும், கல்கி,...).
**காதலிகுறவங்க வீட்டுக்கு தெரியாம ஊர் சுற்றுவது எல்லா காலத்துலையும் நடக்கிறது தான். இதெல்லாம் அந்த காலத்தில் இல்லையா?

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

நடுவரே!! நாங்க கருப்பு,வெள்ளை திரைப்படங்கள் சிறந்தவை இல்லைனு சொல்லவேயில்லை. அவற்றை காட்டிலும் இக்காலப் படங்கள் இன்னும் சிறந்தவைகளா இருக்குனுதான் சொல்றோம். எங்களுக்கும் பழைய பாடல்கள் பிடிக்கும். ரசிப்போம். ஆனால் எதிரணிதான் இன்றைய திரைப்படங்களையும், பாடல்களையும் ரசிக்க தெரியாமல் சாடுகிறார்கள்.

நடுவரே!! எதிரணி, பெரிய நடிகர்கள் நடித்த கமர்ஷியல் படங்களை மட்டும் பார்த்துட்டு குறை சொல்றாங்க. எல்லா படங்களையும் பார்த்தாதானே தெரியும், இன்றைய படங்களை பற்றி. ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. பிறகு எப்படி நல்ல படங்கள் கிடைக்கும்.

இளையராஜாவும், ஏஆர் ரகுமானும், வைரமுத்துவும் இந்த காலத்தில்தானே இருக்காங்க. திரைப்பட தொழில்நுட்பமும் இக்காலத்தில்தானே வளர்ந்திருக்கு. உலகத் தரம் வாய்ந்த இசையில், வெரைட்டியான குரல்களில் பாடல்களை கேட்பது இப்போதானே. அப்போதெல்லாம் ஒன்றிரண்டு பாடகர்கள்தானே இருந்தாங்க. இசைக்கருவிகளும் கூட குறைவுதான்.

பெண்கள் பிரச்சனை, சமுதாய பிரச்சனை பற்றியெல்லாம் பேசும் படங்கள் இப்போதான் அதிகம்.

''வாழ்த்துக்கள்''னு ஆங்கில வார்த்தையே கலக்காமல் தமிழில் மட்டுமே எடுக்கப்பட்ட, கூட்டுக் குடும்பத்தின் அருமையை, முதியோர்களின் பெருமையை சொல்லும் நல்ல படம். ஒரு சின்ன முகம் சுழிக்கும் காட்சி கூட இல்லை. ஆனால் அந்த படம் தியேட்டரில் 4நாள் கூட ஓடவில்லை. நாங்க அந்த படத்துக்கு போன போது மொத்தமே 10பேர்தான் இருந்தாங்க. மாதவன், பாவனா நடிப்பு.

''அம்புலி'' புதியவர்களின் முயற்சியில் உருவான நல்லதொரு முப்பரிமாண திரைப்படம். தவறான அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட பெண்ணுக்கு பிறந்த மிருக மனிதனின் கதை. பாடல்களும் சூப்பர்.

''பயணம்'' தீவிரவாதிகளால், பயணிகளோடு கடத்தப் பட்ட விமானத்தை, அரசாங்கம் புத்திசாலித் தனமாய் மீட்கும் கதை. பாடல்களே இல்லை படத்தில். ஆனாலும் படத்தில் கடைசி வரை ஆர்வம் குறையவேயில்லை. இன்னும் இயக்குனர் ராதா மோகனின் மொழி, அபியும் நானும் போன்ற படங்களும் நெஞ்சில் நிற்பவையே.

இயக்குனர் சுசீந்திரனின் ''அழகர்சாமியின் குதிரை'' பாஸ்கர் சக்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. படம் அழகோ அழகு. ஆனால் எத்தனை பேர் பார்த்திருப்பாங்க? இவரின் ''வெண்ணிலா கபடிக்குழு'', ''நான் மகான் அல்ல'' படங்களும், பாடல்களும் கூட நல்லாதானே இருக்கு. என்ன குறையை கண்டாங்க.

சித்தார்த் நடித்த ''180'' என்ற படம், கேன்சரோடு எப்போது வேண்டுமானால் மரணம் வரும் என்ற நிலையில் ஒரு இளைஞன் வாழ்க்கையை எப்படி பாஸிட்டிவாக, மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறான் என்பது கதை. புற்றுநோயோடு போராடும் பலருக்கும் நம்பிக்கை விதை. படம் அருமை.

இயக்குனர் பாண்டிராஜின் ''பசங்க'' படம். குட்டீஸின் குறும்புகளையும், அவர்களின் எண்ணங்களையும், கணவன் மனைவி சண்டையில் அவர்கள் பாதிக்கப்படுவதையும் அதற்கான தீர்வையும் அழகாக சொன்ன படம். பாடல்களும் சூப்பர்.

சமீபத்தில் வெளியான ''தோனி'' படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பாங்க. இதில் இன்றைய மாணவர்களின் கல்வி சுமையை அழுத்தமா சொல்லியிருக்காங்க. இளையராஜா இசையில் பாடல்களும் அருமை.

''கந்தசாமி'', ''சிவாஜி'' போன்ற படங்கள் கமர்ஷியலோடு, கருப்பு பணத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கலையா?

நடுவரே!! இப்போ, ''எங்கேயும் காதல்'' படத்திலிருந்து இந்த பாடலை கேளுங்க. படம் சுமாராதான் இருக்கும். ஆனா ஹாரிஸ் ஜெய்ராஜின் இசையில், தாமரையின் பாடல் வரிகள் எவ்ளோ சூப்பர்.

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
காதலுக்கான அழகான பாடல் நடுவரே!!

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

அன்பு நடுவர் தோழி ரேணுகா அவர்களுக்கும் அழகான,அருமையான,விவாதிக்க கூடிய தலைப்பு கொடுத்த தோழி பூர்ணிமா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

நடுவர் அவர்களே என்னோடைய ஓட்டு அந்த கால திரை படங்களுக்கு தான்.

நடுவரே விவாதங்கள் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால் அதன் அடிப்படியிலேயே ஆரம்பிக்கிறேன்.

1.கருத்து & கதையம்சம் : சினிமா என்ற ஊடகம் நல்லபல கருத்துகளையும்,
அக்கால சினிமா அன்பையும்,அறத்தையும்,ஒழுக்கத்தையும்,
பக்தியையும் உள்ளடக்கிய கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்தது.அக்கால படங்களில் வன்முறையும்,வக்கிரமும்,இருக்காது.மாறாக அமைதியும்,அறிவுறுத்தலும்,சீரிய கருத்துக்களும் இருந்தன

ஆனா இப்போ வர படங்கள கருத்து எங்க இருக்கு. அப்படியே இருந்தாலும் அவங்க என்ன சொல்ல வராங்கனு கடைசி வரைக்கும் புரியவே புரியாது.நடுவர் அவர்களே புதிய "ஆயிரத்தில் ஒருவன்" படம் பாத்து இருப்பீங்க?அந்த கதை எதாவது புரிஞ்சா எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க.நான் ரெண்டு முறை பாத்தேன்.நல்லா இருக்குனு இல்ல!!!! என்ன கதை நு தெரிஞ்சிக்க.கடைசி வரைக்கும் எனக்கு புரியவே இல்ல.!!!???.

2.கலாச்சாரம் : இந்த கால படங்கள் கலாச்சாரத்த வளர்குதுன்னு யாரவது ஒரு example சொல்ல சொல்லுங்க. நடுவர் அவர்களே உலகத்துக்கே முதன் முதல பூக்கள எப்படி பயன்படுத்தணும் நு சொல்லி கொடுத்தது நம்ம தமிழர்கள் தான்.தமிழர்கள் தான் முதன் முதலா பூவை தலைல வச்சிக்கிடதும் மாலையா சாமிக்கு போட்டதும்.ஆனா இப்போ வர ஒரு heroin வது தலை ல பூ வச்சிருக்காங்களா? அட அத விடுங்க எப்போ பாத்தாலும் பேய் மாதிரி தலைய விரிசிகிட்டு வராங்க.அத பாது நம்ம பொண்ணுங்க எல்லாம் தலை விரிச்சி போடுகறது தான் fashion நு நினைக்கறாங்க.நடுவர் அவர்களே எங்க ஆபீஸ் ல தலை பின்னி போட்டுகிட்டு வர ஒரே பொண்ணு நான்தான்.இதுல காமெடி என்னனா அவங்க எல்லாம் என்ன கிண்டல் பண்றாங்க? !!..கலி காலம் டா சாமி.....

3.பாடல்கள்: அந்த காலத்துல எவளவு அருமையான பாடல்கள்
சமூக சீர்திருத்தங்கள்,மூட நம்பிக்கைகள்,மானிட வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள்,சகோதர பாசப் பிணைப்புகள்,மற்றும் சமூக நலன் நோக்கிய கருத்துகள் நிறைய இருந்தன.அவை மக்கள் மத்தியில் தெளிவையும்,விழிப்புணர்ச்சியையும்,ஏற்படுத்தியது.மாணவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய எத்தனையோ பாடல்கள் அன்றைய திரைப் படங்களில் வந்திருக்கின்றன.குறிப்பாக:

"நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"
"திருடாதே பாப்பா திருடாதே"
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி"
"சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா "
போன்ற பழைய பாடல்கள் பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பெரிதும் பயன்பட்டன.

ஆனால் இப்போதைய பாடல்கள் எப்படி இருக்கிறது?

"Y திஸ் கொலை வெறிடி"
"உதடா அவள..வெட்டுடா அவள.."
"எவண்டி உன்ன பெத்தான் கைல கிடச்சா செத்தான்"
"லூசுப்பெண்ணே ,,லூசுப்பெண்ணே,,"

என்றெல்லாம் லூசுத்தனமாக பாடல்கள் வருகின்றன.இவை மாணவர்கள்,இளைஞர்கள் மனதில் வன்முறைத்தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன.

இன்று நடக்கும் பல சீர்கேடுகளுக்கு இன்றைய சினிமாக்களே பெரிதும் காரணமாக இருக்கிறது

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அம்மாடியோவ்....இப்பவே கண்ணக்கட்டுதே,இவ்வளவு பாடல்கள் உள்ளனவா....?

////*அந்த காலத்துலை அறியாத வயசுல காதல் பன்னவே இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய் அறியாத வயசுல கல்யாணமே செய்து வைத்த காட்சிகள் உண்டு. ஏனென்றால் அந்த கால பழக்கவழக்கம் அப்படி. இப்ப நாம அதையா செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை எல்லாம் நம்மிடம் இருந்து களைந்தது இந்த கால சினிமா தானே. ///

அதானே சின்ன வயசில் திருமணம் செய்யரது,அடிமைப்படுத்தறது..இதுதானே அக்கால படங்களில் இருந்தது.....இதை நான் சொல்லலப்பா இக்கால அணி சொல்றாங்க.....

நடுவர் அவர்களுக்கும் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களுக்கப்புறம் அட்டகாசமான தலைப்போடு அமர்க்களமாக வந்திருக்கும் - “மீண்டும் ரேணுகா” - வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்!

நாங்கல்லாம் சும்மாவே காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சற ஆளு, நீங்க எங்களுக்குப் பிடிச்ச தலைப்பை வேற கொடுத்து, காய்ச்ச சொல்லிட்டீங்க. காய்ச்சிருவோம்!(இதை விஜய் குரல்ல படிங்க நடுவரே)

இந்தக் காலத்துல நடிகர்கள் குரல் மட்டும்தானே தெரியுது, நடிகைகள் யாருங்க சொந்தக் குரல்ல பேசறாங்க.

நேத்திக்கு ஒரு புதுப் படத்துக்குப் போய் நொந்து போய்ட்டேன். ஹீரோயின் வாய்ஸ் கேட்டுட்டு, எங்க வீட்டுக்காரர் “இது யாரு, ஜோதிகா குரல் கொடுத்திருக்காங்களா”ன்னு அப்பாவியாகக் கேக்கறாங்க.

அழுத்தம் திருத்தமாகப் பேசும் கண்ணாம்பா குரல்,

நிதானமாகப் பேசும் டி.ஆர். ராஜகுமாரி

குரலில் குறும்பு தொனிக்கப் பேசும் சாவித்திரி

உணர்ச்சிப் பிழம்பாகப் பேசும் பத்மினி

கொஞ்சிக் கொஞ்சி மயக்கும் குரலில் சரோஜா தேவி

வித்தியாசமான கனமான குரலில் கே.ஆர்.விஜயா

சற்றே ரெட்டைக் குரலாகப் பேசும் லட்சுமி

கொஞ்சும் கிளியின் குரலில் ஜெயலலிதா

இத்தனை பேருக்கும் ஒரு ஒற்றுமை - அட்சர சுத்தமான உச்சரிப்பும் பாவமும் இருக்குமே.

இன்னிக்கு அத்தனை ஹீரோயின்களும் இரவல் குரலை நம்பித்தானே இருக்காங்க. எந்தப் படத்தைப் பார்த்தாலும் ஒரே மாதிரி தோணுதே.

ஜோதிகாவுக்கு குரல் கொடுக்கும் அதே ஆள்தான் எல்லாருக்கும் பேசறாங்கன்னு விளக்கி சொன்னேன்.

அதே தியேட்டர் காம்ப்ளெக்ஸ்ல இன்னொரு படத்துக்கும் செம கூட்டம். என்ன படம் தெரியுமா?

அந்தக் கால படமான கர்ணன் படம்தான் அது. அரங்கு நிறைந்த காட்சிகளாக, சும்மா அதிர அதிர ஓடிட்டிருக்குங்க.

அட்டெண்டெண்ஸ் போடறதுக்காக இந்தப் பதிவு,

இனி இந்த அலைகள் ஓய்வதில்லை

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்