***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

நன்றிகள்ப்பா, வாதங்கள் அருமையாக இருந்தன.....தொடர்ந்து பங்கெடுங்கள். சொல்லவந்ததில் பாதிதான் பதிவிட முடிந்தது.....மீதியை இதேபோல தலைப்பு வரச்சே வாதங்களில் கொடுக்கிறேன்.....

ஜெயா வாழ்த்துக்கு நன்றிகள்ப்பா.....

உமா,
விளையாட்டுகள்கூட பொழுதுபோக்குதான்,ஆனால் அதில் கருத்துவேணும்,மெசேஞ் வேனும்,சொதப்பல் இருக்ககூடது,இப்படியெல்லாம் எதிர்பார்ப்பதில்லை நாம்..அதுபோலவே சினிமாவையும் பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக் கொள்ளனும்.......வாதங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்ப்பா......

வெண்ணிலா,
மிக்க நண்றிகள்ப்பா பட்டியில் பங்கெடுத்து வாதாடியதற்கும் பாராட்டுக்கும்.......
பூங்காற்று,
நீ சொன்னது உண்மைதான்ப்பா,ஒத்துக்க முடியாத விஷயங்கள் வரும்போது மெளனமாகத்தான் இருக்க முடிகிறது.....அடுத்தபட்டியில் வங்து வாதாட வேண்டும் சரியா?

நீங்களும் சீதாம்மாவும் கடைசிவரை வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.ஆனாலும் பரவாயில்லை விடுங்க,அடுத்த பட்டியில் இன்னும் கலக்கனும் சரிய:-) நன்றிகள்ப்பா.....வருகைக்கும் வாழ்த்துக்கும்......

அபி கலந்துக்க முடியாட்டியும் ஆர்வமாக பட்டியை ரசித்ததற்கு மிக்க நன்றி...இந்தமுறை வெளிய இருந்து தீர்ப்ப சீக்கிரம்போடுங்கன்னு மிரட்டினதுபோல இல்லாமல், பட்டியின் உள்ளிருந்து வாதாடி மிரட்டனும் சரியா.....நன்றி....:-)

ரங்கா....
ஒவ்வொரு பட்டியில் நடுவராக நான் வரும்போதும் இரு அணிகள் வாதாடுவதோடு அவ்விரு அணிகளுக்கும் எதிரணியாகவும் இருந்து எனக்கு நானே வாதாடிக்குவேன்.....இறுதியில் என்னவர் என் அம்மா இவர்களின் கருத்துகளையும் கேட்டுப்பேன்.பின்தான் தீர்ப்பெழுதுவேன்ப்பா.......யாரொருவரையும் புண்படுத்தவோ,அல்லது தெரியாமல்கூட சங்கடப்படும் நிலையோ வரக்கூடாதுன்னு நினைப்பேன்ப்பா......
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீகள் ரங்கா, மீண்டும் அடுத்தடுத்த பட்டிகளில் வந்து சிறப்பிக்கனும் .:-)

அன்பு நடுவருக்கு,

ஜனரஞ்சகமான ஒரு தலைப்பை எடுத்து, எல்லோரையும் ஆர்வத்துடன் பங்கெடுக்க வைத்து, நல்லதொரு தீர்ப்பையும் கொடுத்திருக்கீங்க.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

கைக்குழந்தையையும் பாத்துகிட்டு, பதிவுகளைப் படிச்சுப் பார்த்து, தீர்ப்பு, தீர்ப்புக்கு முன் சில கருத்துக்கள் என்று அசத்தியிருக்கீங்க. மனம் நிறைந்த பாராட்டுக்கள், ரேணுகா!

பட்டிமன்றத்தில் பங்கு கொண்ட தோழிகள் வழக்கம் போலவே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க. எல்லோருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தோழி ரேனு, வாழ்த்துக்கள் அற்புதமான தீர்ப்பிற்கு. நேரமின்மையால் தொடர்ந்து பங்கு பெற முடியவில்லை. “தீர்ப்பின் முன்” பதிவில் அருமையா இரண்டு கால திரைப்படங்களையும், வெவ்வேறு கோணத்திலிருந்து ஆராய்ந்து அலசியது டாப்புங்க. பின்னிட்டிங்க போங்க.

பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழிகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
எங்கள் அணியில் பிச்சு உதரிய தோழிகள்
பூர்ணிமா சங்கர், உதிரா, ப்ரேமா ஹரிபாஸ்கர், லாவண்யா, உமா, ஆனந்தப்ரியா அரசு, இளவரசி, குணா2962

எதிரணியில் வாதாடிய தோழிகள்
வனிதா, ஜெயராதா, பாத்திமா, ஜென்னிவினோ, வென்னிலா, சீதாம்மா, பாரதி, நிகிலா, ப்ரியா ஜெயராம், ரெங்கலக்ஷ்மி, பவித்ரா ராம் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்போம்!!!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ரேணுகா
தீர்ப்பை இபோ தான் பார்த்தேன்.ஊருக்கு போயிருந்தேன்.
என்ன தான் அக்கலத்திற்கு வாதாடினாலும் இக்கால படங்கள் ரொம்ப different ஆ இருக்கும்.காமெரா ஒளிப்பதிவு எல்லாம் ரசிக்கும் படியா இருக்கும்.So.
தீர்ப்புக்கு o. k..Renu.

மேலும் சில பதிவுகள்