***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

அனைவருக்கும் வணக்கம்.

அந்தக் கால படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.

கதை, நடிப்பு, வசனம், பாடல்கள், நகைச்சுவை இப்படி ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொரு தடவை பாக்கலாம்.

சமீபத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த மிஸ்ஸியம்மா படம் (மீண்டும்) டி.வி.ல பாத்தேன். என்ன அழகு, என்ன ஜோடிப் பொருத்தம்! அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் பாடல்கள் - வாராயோ வெண்ணிலாவே,
அப்புறம் - முடியுமென்றால் படியாது, படியுமென்றால் முடியாது - இப்படி எல்லாப் பாடல்களும் கேட்கவும் இனிமை, பார்க்கவும் ரசனை.

அதே நாளில் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி பாடல் காட்சியும் டி.வி.யில் பார்க்க நேர்ந்தது. “எ.கொ.ச” என்று நொந்து போயிட்டேன். உண்மையில் இவங்க இருவருமே அழகான தோற்றமும் திறமையும் கொண்ட கலைஞர்கள்தான். ஆனா, அந்தப் பாடல் படமாக்கப் பட்ட விதத்தினால், சில வினாடிகளுக்கு மேல் அதைத் தொடர்ந்து பார்க்க முடியாமல், அருவருப்பாக இருந்தது.

டைரக்டர் ஸ்ரீதர் ஆரம்ப காலத்தில், தன்னுடைய படங்களில் வித்தியாசமான கோணங்களை வைப்பாராம். அப்ப அவருடைய சீனியர் அவருக்கு புத்தி சொன்னாராம் - “ நீ வித்தியாசமாக படம் பிடிக்கணும்னு மட்டும் நினைச்சால் போதாது, அந்தக் காட்சியை தியேட்டரில் பாக்கற ரசிகர்களுக்கு அன் ஈஸினெஸ் இருக்கக் கூடாது. அதை மனசில் வச்சுகிட்டு காமிரா கோணங்கள் வைக்கணும்” என்று. அதிலிருந்து ஸ்ரீதர் படம் எடுக்கும் போது ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும்போது, ரசிக்கணும் என்ற எண்ணத்துடனேயே படம் பிடிப்பாராம்.

இந்தக் காலத்தில் படம் எடுக்கற .. டைரக்டர் எதை நினைச்சு எடுக்கறார்னு அவருக்கே தெரியாது:)

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

""//அன்றைய கருப்பு வெள்ளை திரைப்படங்களை இன்று திரையிட்டால் தியேட்டரில் ஈ ஆடாது. அதுவே ரீமேக் செய்து கொஞ்சம் மசாலா சேர்த்துக் கொடுத்தால் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி கூட பார்ப்போம்."// நடுவர் அவர்களே கர்ணன் படம் டிஜிட்டல்-எ மறு வெளியீடு செஞ்சாங்க.நடுவரே சொன்ன நம்ப மாடீங்க அரங்கம் முழுக்க ஒரே கூட்டம்.எங்களுக்கு Ticket கிடைகலனா பாத்துகோங்களேன்.இதுல எந்த மசாலா வும் சேர்க்கல.முக்கியமா குத்து பாட்டே கிடையாது.ஆனா படம் சூப்பர் ஹிட்(2nd time also).

////*அந்த காலத்துலை அறியாத வயசுல காதல் பன்னவே இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய் அறியாத வயசுல கல்யாணமே செய்து வைத்த காட்சிகள் உண்டு. ஏனென்றால் அந்த கால பழக்கவழக்கம் அப்படி. இப்ப நாம அதையா செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை எல்லாம் நம்மிடம் இருந்து களைந்தது இந்த கால சினிமா தானே. ///

காதல் பண்ணினாங்க அதுல ஒரு ஒழுக்கம் இருந்தது. காதல் பண்ணினாலும் கல்யனதுகப்புரம் தான் எல்லாமே.இப்போ?நடுவர் அவர்களே நீங்க காதலுக்கு மரியாதை படம் பாத்து இருப்பீங்க அந்த படத்தோட success என்ன தெரியுமா?அவங்க ரெண்டு பெரும் தொடாம லவ் பண்ணுவாங்களாம்!!!? இந்த காலத்துல தொடாம லவ் பண்றாங்கன்னு ஒரு கான்செப்ட் காகவே மக்கள் இந்த படத்த பார்த்து இருகாங்கனா சோ நம்ம ஜனங்க காதல் காட்சிகளால எவளவு நொந்து போய் இருக்காங்கன்னு பாருங்க.இப்போ முத்த காட்சி இல்லாத படமே இல்ல.இத பாத்துட்டு தான் நம்ம பசங்க மெரீனா,பெசன்ட் நகர் கடற்கரையும் அசிங்க படுத்தறாங்க.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நீங்க எதிரணிய நம்பாதீங்க , அவங்க சொதப்பல் இந்த கால திரைப்படங்களையும் , சூப்பர் அந்த கால திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து உங்களை பார்க்க வைக்கறாங்க. அந்த காலத்திலேயும் அடாசு அண்ட் ஓடாத , படங்கள் எல்லாம் வந்துச்சு.

ஆனா எங்க அணி எப்பவுமே சிறந்த திரைப்படங்களை மட்டுமே பார்க்கறது வழக்கம், அதனால தான் சொல்றோம் , இப்ப தான் நாம் ஹாலிவுட் ரேஞ்சுக்கும், ஈரானிய படங்கள் பக்கத்திலேயும் வரோம்னுட்டு .

இக்காலதிரைப்படங்கள் பாடல்களை எளிமையாகவும் அழகாகவும் கொடுக்கரதுனால இன்னும் சிறப்பா இருக்கு .

எங்க அணியின் மக்கள் நிறைய நல்ல பாடல்களை போட்டுட்டாங்க.
இன்னும் கொஞ்சம் இதோ --

மறுபடியும் படத்தில் வரும் --நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

மொழி படத்தில் காற்றின் மொழி

தில் படத்தில் - என் சமையல் அறையில் நீ உப்பா சர்க்கரையா ?

தெய்வத்திருமகள் படத்தில் --விழிகளில் ஒரு வானவில்

மாயாவி படத்தில் --- கடவுள் தந்த அழகிய வாழ்வு

கேளடி கண்மணி படத்தில்--கற்பூர பொம்மை ஒன்று

திருமலை படத்தில் -- அழகூரில் பூத்தவளே

பொம்முக்குட்டி அம்மாவுக்கு --- எல்லா பாடல்களும்

ஜானி படத்தில் --எல்லாமே கவிதை மேலடிக்கள்

கோ படத்தில் -- வெண் பணியே

மின்னலே வில் எல்லாமே -- வசீகரா இன்னும் வசீகரிக்குதே

மௌன ராகம் படத்தில் அனைத்துமே காதை வருடும் தென்றல் இசை தானே

இன்னும் சொல்லிகிட்டே போறதுக்கு பதிலா உங்களுக்கு என்னோட மெலடி கலெக்ஷனை அனுப்ப்பிடறேன் . கேட்கலாம் , கேட்டுகிட்டே இருக்கலாம்.

பழைய பாடல்கள் இனிமையா இருந்தாலும் , செந்தமிழ் சொற்களை கொண்டதால் ,பாடுபவருக்கு கூட புரியாமையே இருக்கு.

இப்போ பேசற நாமே செந்தமிழ்லையா பேசறோம்.

இக்கால இசை :
இந்த வகையில் நிறைய படங்கள் சிறந்த இசை மட்டுமல்ல பின்னணி இசையும் ரொம்பவே அருமையா செய்யறாங்க.
ஹை டெக் கருவிகள் கொண்டு துல்லியமான இசை கூட நம் காதில் விழுமாறு , கொடுத்த டிக்கெட் காசுக்கு உத்தரவாதமான இசை இருக்கே .

இப்போ வந்த அழகர் சாமியின் குதிரை படம் எல்லா வகையிலும் சிறந்தது. பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க.
இயல்பான வசனம், ஒளிவு மறைவில்லாத வெகுளி மனிதர்களின் வாழ்க்கை , நகைச்சுவையோடு கொண்டு சென்ற நேர்த்தி எல்லாமே இந்த படத்தில் சிறப்பு.

பழைய படங்களில் பாதி இடத்தில் நீண்ட வசனம் வந்து நமக்கு தூக்கமே வரும் .
இப்போ சின்னதாவும் க்ரிச்பாவும் இருக்கே .
இசை எங்க சேர்க்கணும் என்று தெரிந்த வல்லுனர்களை வைத்து பண்ணப்படுவதால் பர்பெக்ஷனோட இருக்கு.

வாரணம் ஆயிரம் படப்பாடல்கள் உலக அளவில் பேசப்பட்டதே.
(உண்மையில் பழைய பாடல்கள் பல இந்தி படப்பாடல்களை அப்படியே தமிழில் போட்டு செய்திருப்பங்க. அவ்ளோ ஒரிஜினாலிட்டி இருக்காது )
புதிதா வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதென்பது குதிரைகொம்பு .
நிறைய பாடல்கள் நல்லா இருந்தும் கூட, நடிகர்கள் ஏற்காமல் போனது எல்லாம் நிகழ்ந்தது .
உயிரோட்டமுள்ள இசையும் வரிகளும் இக்கால திரைப்படத்தில் தாங்க அதிகம் இருக்கு . அட்டு படங்களை மட்டும் பார்த்து எந்த முடிவுக்கும் வராதீங்க. இப்போ போட்டி நிறைய இருக்கரதனால் நல்ல படங்கள் உங்க கண்ணுக்கு உடனடியா தெரியாது . ஏன்னா இப்போ டெக்னாலஜி முன்னேற்றத்துனால நீங்க கூட ஒரு படம் எடுத்து யூ ட்யூபில் அப்லோட் செய்யலாம் .

எங்க கூட வாங்க ,இசையை பொருத்தவரை கூட முன்னாடி இப்ப எப்ப வேணாலும் டைப் அடிச்சு சொல்லுவோம்
இந்த கால திரைப்படங்கள் சிறந்தவை தான் .
ரீமிக்ஸ் பண்ணினா கூட எவர்கிரீன் சாங்ஸ் இன்னும் இன்னும் நல்லா ஆகுதே.
பிடிக்கற பாட்டே ஏகப்பட்டது இருக்கறப்போ நீங்க ஏன் கொலை வெறி பாட்டை கேக்கறீங்க. ஆக்சுவலா கொலைவெறி ட்யூன் ரொம்ப ப்ரில்லிஎன்ட் ட்யூன், அதையே வேற லிரிக்ள நிறைய பேர் வீடியோ வில் அப்லோட் பண்ணியிருக்காங்க . அது கூட கேட்சியா தான் இருக்கு .
பழைய பாடலகளை போல அட்வைஸ் பண்ணிகிட்டிருந்தா நாம் கூட கேட்க மாட்டோம். அந்த கால பாடல்கள் நல்ல இருந்தா கூட , அதை மாத்தி இந்தக்கால பாடலகளை பெரும்பான்மையா எல்லாரும் விரும்பியதால் தான், இப்போ அந்தக்கல பாடலகள மாதிரி ட்யூன் போட்டா கூட ஹிட ஆக மாட்டேங்குது.

பெரியவங்க கூட இப்போதைய சிம்பிள் மேலடிக்களை விரும்பறாங்க.

நடுவரே உங்களுக்கு -- வாகை சூட வா படத்தின் -- சர சர சாரை காத்து வீசும் பொது சாங்கை டெடிகேட் பண்ரோம்பா
கேட்டு கேட்டு கேட்டு என்ஜாய் பண்ணுங்க .

இன்னிக்கி இரவுக்கு -- காற்றில் வரும் கீதமே : என் கண்ணனை அறிவாய

நாளை காலைக்கு -- புத்தம் புது காலை
பொன்னிற வேளை சாங்கை கேட்டு ரெடியாகுங்க.

மதியத்துக்கு -- வாணி, கீரவாணி
எவ்நிங் -- நறுமுகையே நறுமுகையே பாட்டு ஒகேன்களா
மீதி (சமுதாயம், கருத்து, நடனம் இத்யாதி பத்தி அடுத்து பதிவிடறேன் .)

\\\"பழைய பாடல்கள் இனிமையா இருந்தாலும் , செந்தமிழ் சொற்களை கொண்டதால் ,பாடுபவருக்கு கூட புரியாமையே இருக்கு"/// நடுவரே நீங்களே சொல்லுங்க எந்த கால பாடல்கள் புரியலன்னு.பொய் பேசலாம் அதுக்காக இப்படியா முழு பூசணிகாய சோத்துல மறைக்கறது?

இன்று தமிழ்ப்பாடல்களில் ஏதேதோ வார்த்தைகளைப் போட்டு, காதைப்பிளக்கும் இரைச்சலுக்கு நடுவே 'பாடல்' என்ற பெயரில் எதையோ திணிக்கின்றனர்.

இதோ புரியாத இந்த கால பாடல்கள் ...எதிரணியினரே!!! உங்களுக்கு புரிஞ்சா தயவு செய்து அர்த்தம் சொல்லுங்க பா.

1.அட்ரரா நாக்க முக்கா நாக்க முக்கா...

2.ஓமக ஜீயா ஓமக ஜீய

3.ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

4.முக்காலா, முக்காபலா'(இந்த பாட்ட கொஞ்சம் தப்ப பாடினாலும் அவளவுதான் மானம் போய்டும்)...இன்னும் சொல்லிகிட்டே போகலாம்

இந்த கால பாடல்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கேட்க முடியும். படம் வெளி வருவதற்கே முன்பே அலுத்து விடுகிறது.இந்த பாடல்களின் ஆயுட் காலம் மிகவும் குறைவு.இன்று, கேட்டாலே காது கூசும்படியான கொச்சை வார்த்தைகளின் களஞ்சியமாக பாடல்கள் மாறிவிட்டன.இதோ சில பாடல்கள்

1.வாடி வாடி நாட்டுக்கட்டை வசமா வந்து மாட்டிகிட்ட(தனிய தெருவுல நடக்க முடியல)'
2.எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா

ஆனால் என்றும் நினைவில் நின்றவை அந்த கால பாடல்கள் தான்.
இதோ சில பாடல்கள் உங்களுக்காக

1.நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
2.உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
3.உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
4.அழகிய தமிழ் மகள் இவள்
5.அத்தை மடி மெத்தையடி

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நடுவரே... மாலத்தீவில் இருந்து கும்புட்டுக்கறேனுங்கோ ;)

படம் என்பது எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்க தான். ஒரு படத்தில் பாக்கியராஜ் கூட வந்த தங்கைகளை சினிமா தேட்டரில் 5 பைசா போட்டுட்டு தேட விடுவார். அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அது தான் இது போல் ஆபாச படங்கள் வர துவங்கிய காலம். அப்போ அது அருவெருப்பா இருந்தது, சங்கட படுத்துச்சு. இப்போ படமென்றாலே இப்படி தான்னு ஆயிடுச்சு. இந்த காலத்தில் இப்படி ஒவ்வொரு சீனுக்கும் பைசா போட்டு தெட விடனும்னா, படம் முழுக்க எல்லாரும் தேட்டரில் கீழ தான் தேடிகிட்டே இருக்கனும். இது படமா??? சென்சாருக்கு போனா முழு படத்தையும் கட் பண்ணிட்டு மிஞ்சு மிஞ்சு போனா ஒன்னு, இரண்டு காட்சியை தான் வெளியிட முடியும்.

சண்டை காட்சிகள் பாத்து இந்த கால குட்டீஸ் அதை இமிடேட் பண்ணும்போது பயமா இருக்கு நடுவரே... இன்னும் எதை எல்லாம் படம் பார்த்து கத்துவாக்கங்களோன்னு :( என் மகன் இப்பவே ஒரு விரலை நீட்டி மிரட்டுறான்.

ஒரு ஸ்டேஜ்ல சினிமா பாட்டு என்பது யாரும் பாட முடியாத அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளோடு வர ஆரம்பிச்சிருக்கு. சூப்பர் சிஙர் ப்ரோக்ராம் பார்ப்பவங்க நல்லா கவனிங்க... ஒரு பழைய பாடலை குட்டீஸ் பாடும் போது ரசிக்கும் நாம் புது பாடலை பாடி அதுக்கு உணர்வுகளையும் கொடுத்தா ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அர்த்தம் புரியாம பாடுறாங்களேன்னு மனசு தவிக்குது.

அந்த காலத்திலும் படத்தில் காதல் இருந்தது... ஆனால் அவை வக்கிரம் இல்லாத கட்டிபிடி காட்சிகள், முத்த காட்சிகள் இல்லாத அழகான நேர்மையான காதல். பார்வையே பேசிக்கொள்ளும் அழகான காதல் அது. இன்று போல் காமத்துக்கு முதலிடம் தரும் காதலில்லை.

அந்த காலத்திலும் பாடல்கள் வந்தன... அவை காதலையும் காமத்தையும் கூட இலை மறை காய் மறைவாய் சொன்னது... யாரும் பாடினாலும் தப்பா இருக்காது. இப்போ பச்சை பச்சையாய் வருது நடுவரே. உதாரணமா ஒரு பாடலை என்னால் சொல்ல முடியல, ஏன்னா முக்கால் வாசி அப்படி தானே வருது... சொன்னா இந்த பட்டிமன்றம் போதாது. புலம்பிட்டே இருக்கலாம்.

அந்த காலத்திலும் அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை, அப்பா, அம்மா, சகோதர பாசம், பிள்ளை பாசம், எல்லாம் சொல்லி வெற்றியடைந்த படங்கள் கொட்டிகிடக்கு நடுவரே. பாச மலர், பச்சை விளக்குன்னு பட்டியல் நீண்டுட்டே போகும். அந்த காலத்தில் வந்த நல்ல படங்களை பட்டியலிட்டா பட்டிமன்றம் போதாது, இந்த காலத்தில் வந்த மோசமான படங்களை சொன்னா பட்டியல் போட பட்டிமன்றம் போதாது. வித்தியாசம் புரியுதா நடுவரே??

இன்னைக்கும் அன்பான அண்ணன் தங்கை பற்றி பேச சொன்னா “பெரிய பாசமலர் சிவாஜி”னு தான் சொல்வாங்க... யாராவது இந்த கால படத்தை உதாரணம் சொல்றாங்களா??? சொல்ல மாட்டாங்க... சொல்லவும் முடியாது. ஏன்னா அந்த கால படங்கள் கதை மட்டுமில்லை... காவியமா மனதில் பதிந்தது... இந்த கால படங்கள் வெறும் கதை என்றும் சொல்ல முடியாத பொழுது போக்காகவே இருக்கு. 2 மணி நேரம் போனோமா எதையோ பார்த்தோமா, முடிஞ்சா சிரிச்சோமா, அழுதோமா... முடிஞ்சுது... சினிமா முடிஞ்சு வரும் போது அது எந்த தாக்கத்தையும் மனதில் ஏற்படுத்துவதில்லை. அப்படியே தாக்கி மனதில் இடம் பிடிச்சாலும் அது அந்த படத்தின் சோகமோ, வன்முறையாகவோ தான் இருக்கு. படங்கள் மனதில் நிலைப்பதில்லை... பார்த்த படத்தை திரும்ப பார்க்கனும் என்ற எண்ணமே இப்போ வருவதில்லை. முன்பெல்லாம் 200 நாள் 300 நாள்னு ஓடுவது சகஜம்... இப்போ வரும் பொட்டி 25 நாள் ஓடி “வெற்றிகரமான 25வது நாள்”னு போஸ்டர் போடுறாங்க நடுவரே!!! 100 நாள் ஓடுறதுலாம் இப்போ பெரிய ஹிட் ஆயிடுச்சு. அப்போ அந்த கால படங்கள் எவ்வளவு ஹிட்???!!

முன்பு வருடக்கணக்கில் வேலை பார்த்து உழைத்து வருடத்தில் ஒன்றோ, இரண்டோ வெளியாச்சு... இப்போ பேர் தெரியாத நடிகர் நடிகை இயக்குனர்னு மாசம் பல படங்கள்... அன்று பூத்தவை குறிஞ்சிப்பூக்கள். இன்றோ எல்லாம் காகிதப்பூக்கள்.

வின்னைத்தாண்டி வருவாயா... படமாங்க அது??? காதலை அதை விட அசிங்கமா யாரும் காட்ட முடியாதுங்க. மயக்கம் என்ன... சொல்ல வார்த்தையே இல்லை... குப்பை. கந்தசாமி... ஸ்ரீயாவை இதை விட மோசமா யாரும் காட்ட முடியாது. அதுல பஸ்ல ஒரு பாட்டு வருமே... முடியலங்க. முன்பு கவர்ச்சி நடிகைன்னு ஒருவர் தனியா இருந்தாங்க, ஒரு பாடல் அப்படி இருந்தது... இப்போ மெலோடி ஒரு பாட்டாயிடுச்சு, மற்ற எல்லாம் ஹீரோயினே கவர்ச்சி பாடலா தான் ஆடுறாங்க. எப்படிங்க பார்க்குறது???

அப்பம்பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல... பாடுனவரே ஏன் இதுக்கு ஒத்துகிட்டோம்னு அசிங்கப்பட்டதா ஒரு ப்ரோகிராமில் சொன்னார். இதை தான் இந்த கால குட்டீஸ் டம் டும்னு இசைக்காக கேட்டு ஆடுறாங்க... பிள்ளைகளூக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு யாராவது கேட்டா வாய திறந்து சொல்ல முடியாம இருக்கு இன்றைய படங்களும், பாடல்களூம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஒண்னே ஒண்ணு சொல்லிட்டு போயிடறேங்க.(நேரம்,அனுபவம் ரெண்டும் பத்தலை) பழைய திரைபடங்கள் என்பது”பொற்காலம்”போன்றது
இன்றைய திரைபடங்களோ ”போர்க்காலம்”.அதுவும் சாதாரண போர் கிடையாது,அணு ஆயுத போர்,கொஞ்சம்,கொஞ்சமா இளம் சமுதாயத்தையே சீரழிக்கும் விஷத்தை பரப்புகிறது.இந்த நாட்டில் தமிழ் சினிமா தான் அவங்களுக்கு கலாசார முன்னோடி, தமிழ் சினிமாவுல வர மாதிரியே உடை,பாவனை எல்லாம் இருக்கும்,ஏன் பேச்சு கூட slum heroes மாதிரியே பேசுவாங்க.இப்படி தமிழ் சினிமாவின் தாக்கம் நாடு விட்டு நாடு பரவியிருக்கும்போது, ஏற்பட்டிருக்கிற மோசமான விளைவுகள் கண்டே இன்றைய திரைபடங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். விடைபெறுகிறேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அன்புக்குரிய நடுவர் அவர்களுக்கு, தலைப்பு அருமை... நான் "அந்தக்கால திரைப்படங்களே" என்ற தலைப்பில் வாதங்களை முன்வைக்கிறேன்.. அதற்கு முன்பு ஒரு சந்தேகம்... பீரியட் சொல்ல முடியுமா... ஒரு தோழி சொன்னது போல 70க்கு பின் என்பது இந்தக்காலமா... சொன்னால் வாதங்கள் வைக்க சௌகர்யமாக இருக்கும்... (1990 வரை அந்தக்காலமே என்பது என் கருத்து... )

நடுவர் அவர்களே... பாடல்கள், கதையம்சம், நடிப்புத்திறன் போன்ற படத்தின் ஒவ்வொரு அம்சங்களயும் மையப்படுத்தி நல்ல படங்களை தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு அம்சத்திலும் அந்த கால திரைப்படங்களே அதிக எண்ணிக்கையில் வரும்... என்னமோ சொல்றாங்க சின்ன பிள்ளைகளுக்கு இந்த கால பாடல்கள் தான் பிடிச்சிருக்குனு... அது எதனால் தெரியுமா நடுவர் அவர்களே... நம் பெருமைக்காக அர்த்தம் புரியாத அந்த பிஞ்சு குழந்தைகளிடம் நஞ்சை விதைக்கிறோம்... கொலைவெறி பாடலாகட்டும் எவன்டி உன்னை பெத்தான் போன்ற பாடலாகட்டும் குழந்தைகளை பாட விட்டு ரசிக்கின்றனர் சில பெற்றோர்... இதில் பெருமை வேறு எம்புள்ள எவ்வ்வளவு நல்லா பாடுறான்னு... இதே அவங்க பாடுவாங்களா இந்த பாடல்கள?
என் குழந்தை 5 மாதம்... அவன் கற்பூர பொம்மை, பச்சமல பூவு, பூமாலையில் ஓர் மல்லிகை, இந்த பச்சக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற பாடல்களை கேட்டால் தான் தூங்குவான் இது உண்மை நான் வாததிற்காக சொல்லவில்லை... ஏன் தெரியுமா நான் முதலில் இருந்தே அந்த பாடல்களை பாடி தூங்க வைத்ததினால்.... நானும் புது பாடல்களை போட்டு பார்த்து விட்டேன் தூங்க மாட்டேங்கிறான்.... இதை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஒரு விஷயத்தை நம்மால் தான் விரும்ப ஆரம்பிப்பர்... குழந்தை பாடுது, குழந்தை சொல்லுதுங்கிறதுக்காக ஒரு பாடல் சூப்பர் ஹிட்டுனும், அதனால அது சிறந்ததுனும் சொல்ல முடியுமா?
// குடும்ப பிரச்சனைகள், சமுதாய பிரச்சனைகள், பெண்களின் பிரச்சனை, அரசியல், கல்வியின் முக்கியத்துவம், கலாச்சார சீரழிவு, இப்படி பலவற்றையும் சமுதாய அக்கறையோடு இன்றைய படங்கள் பேசவே செய்கின்றன.//
சமுதாய அக்கறையோடு பேசவில்லை சமுதாயத்தை சீரழிக்கும் செயல்களையே காட்டுகின்றனர்... அப்படங்களால் இப்படி இருக்ககூடாது என்பது போய் இப்படி கூட தப்பிக்கலாம்னு தான் இன்றைய இளைஞர்கள் எடுத்துக்கிறாங்க... உதாரணமா கில்லி படத்துல நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய்த்தூள் தூவுவது போல ஒரு சீன்... அதை பார்த்துட்டு ஒரு பையனும் அதே போல செய்தான்னு பேப்பரில் படிச்சேன்... ஆனா அக்கால திரைப்படங்கள் மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டின(வீரபாண்டியகட்டபொம்மன் இன்னும் பல) இசையமுதம் தந்தன(திருவிளையாடல்) நடனம் நாதஸ்வர புகழ் பாடின(தில்லானா மோகனாம்பாள்) பக்திமனம் (கந்தன் கருணை, பல படங்கள் உதாரணம் கூறலாம் இன்றைய பக்திபடங்கள் பயத்தை தான் தரும்) மகாபாரத கதையை கர்ணன் படம் மூலம் அறியவில்லையா நாம்? இன்றைய படங்கள் மூலம் எதை அறிகிறோம் சொல்லுங்கள்? பழி வாங்குதல், ஒரே பாடலில் பணக்காரன் ஆக குறுக்கு வழி... காதலியின் அண்ணனிடம் மறந்து விட பணம் வாங்கி முன்னேறுவாராம் பிறகு அதே காதலியை மணம் முடிப்பாராம்... பார்ப்பவர்கள் முட்டாள்களாக்குபவை இக்கால திரைப்படங்களே......
//அன்றைய கருப்பு வெள்ளை திரைப்படங்களை இன்று திரையிட்டால் தியேட்டரில் ஈ ஆடாது. அதுவே ரீமேக் செய்து கொஞ்சம் மசாலா சேர்த்துக் கொடுத்தால் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி கூட பார்ப்போம்.// MGR படங்களுக்கு இன்று கூட ரசிகர்கள் கூட்டம் கூடும்... நிறைய புது படங்களுக்கு கூட்டம் இல்லை என்று TVக்கு கொடுத்து விடுகிறார்கள்....
//அந்தக்கால படங்கள் சூப்பர் நு பேசற எதிர் அணி மக்கள் கூட , ஒரு தடவைக்கு மேல் அந்த படங்களை பார்ப்பான்களா என்பது சந்தேகம் தான் .// இந்த கால படங்களில் பல ஒரு தடவை கூட பார்க்க முடியவில்லை.......... TVஇல் போடப்படும் பழைய படங்களை ஆர்வமாக பார்ப்பதில்லையா அது எத்தனை தடவை போட்டாலும்.......

//சிறிதும் சினிமாத்தனம் இல்லாத சிறந்த படம்// தூரத்தில் இருந்து பார்த்து முகம் சரியா தெரியாம, அம்மா பொண்ணு வித்தியாசம் தெரியாம லவ் பண்றது, யாருன்னே தெரியாத பொன்னுக்காக ஒரு நாள் IT கம்பெனிக்கு லீவ் போடுவது, அவளையே லவ் செய்வது எல்லாம் சினிமாத்தனம் இல்லையா?

மீண்டும் வருகிறேன் நடுவரே... தூக்கம் கண்ணை கட்டுது

// அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு... அந்த கால படங்களை ரசிக்க மட்டுமே முடியும், இந்த கால வாழ்க்கைக்கு ஒத்துவராது...// சினிமாக்களை பார்த்து நம் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது... ஒரு நாள் முதல்வர், இந்திய தாத்தா, அந்நிய கொலைகாரன் நிஜத்தில் இருந்தால் நம் நாடு தாங்குமா?

நடுவர் அவர்களே...

அந்த கால அணி சொல்ற மாதிரி இந்த காலத்தில் எப்படி சில மோசமான படங்கள் இருக்குதோ அதே மாதிரி அந்த காலத்திலும் தான் சில ப்ளேடு படங்கள் இருக்கு... எனக்கு பழைய படங்களாகட்டும், புது படங்களாகட்டும் படம் பார்கரதுனாலே ரொம்ப விருப்பம்... ஒரு முறை காவிய புதன் ல ஒரு செம பழைய படம் போட்டாங்க... நானே பார்க்கலாம் நு இருந்தப்போ என் அப்பா, அம்மா ஏண்டி சரியான அறுவை படத்தை வச்சிருக்க வேற எதுனா போடுன்னு சொன்னாங்க... யு சி இன் திஸ் யுவர் ஆனர் அந்த கால மனிதர்களே அந்த காலத்தில் வரும் ரம்பம் மாதிரி இருக்க படங்களை பார்க்க விரும்புவதில்லை... சம்பூர்ணராமாயணம் நு ராமாயண கதை பற்றிய ஒரு பழைய படம். அந்த படத்தை அந்த கால அணியில் எத்தனை பேரு பார்திருபாங்கனு கேளுங்க பாப்போம். அந்த காலத்திலேயே படம் எடுத்து போண்டியா போன எவ்ளோ ப்ரடியுசர்ஸ் இருந்தாங்க... பல படங்கள் எடுத்து வெற்றி பெற்றவங்க கூட சில படங்களில் காணாமல் போன கதை எல்லாம் நிறைய இருக்கு...

அந்த கால அணி அந்த காலத்தின் முத்தான படலை பத்தியே பேசுறாங்களே... இந்த காலத்திலும் இருக்க சிறந்த படங்களை பற்றி என் சிந்திக்க மாட்டேன்கறாங்க...

சரிங்க... இவ்ளோ சொல்ற அந்த கால அணி... அந்த கால படங்கள் தான் சிறந்ததுனுனால் ஏன் இந்த கால படங்களை பார்க்க செல்ல வேண்டும்... போகமால் இருக்கலாமே... அவங்க சொல்ற மாதிரி அப்படியாவது தியேட்டர் கலை கட்டளைன்னு இந்த கால தயாரிப்பாளர்கள் கொஞ்சமாவது தங்களை திருத்திபாங்க இல்ல...

நம் காவியங்களாகட்டும், காப்பியங்களாகட்டும் அவங்க எழுதியிருக்க செந்தமிழில் படிச்சா நமக்கே ஒன்னும் புரியாதுன்னு தான் எளிய தமிழில் வெளியிடறாங்க... இதுல அந்த கால சுத்த தமிழ் வசனங்களை கேட்டாலே நமக்கு தலை தான் சுத்துது...

அந்த கால கர்ணன் படமாகட்டும் பாசமலர் ஆகட்டும் எங்களுக்கும் பிடிக்கும் தாங்க... அதுக்காக இந்த காலத்திலும் எவ்ளோ சிறந்த படங்கள் எல்லாம் வந்திருக்கு... இன்னும் வந்து கொண்டும் இருக்கு... அதையும் நாம் பார்க்கலாமே... ஓடாத மொக்க படங்களை பத்தி பேசி என்ன பலன்...

பாலையும் தண்ணீரையும் பிரிச்சு அறிந்துமாம் அன்னப்பறவை... நாமும் அன்னம் பாலெனும் சிறிந்த படங்களை எதுத்துக்கொண்டு தண்ணீரென்று மோசமான படங்களை பிரித்து விட்டு விட வேண்டியது தான்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பூமியில் புதைந்திருக்கும் தங்கம் கருப்பு நிறத்தில் தான் இருக்குமாம்... ஆனால் அவற்றை சுத்தமாக்கி பளிச்சிட செய்யும் யுக்தி இந்த கால படங்களில் தான் உள்ளது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

// நம் பெண்களைக் கேட்டால் புடவை எனக்கு கம்பர்டபுலா இல்ல சுடிதார், ஜீன்ஸ் தான் கம்பர்டபுலா இருக்குதுனு சொல்றாங்க. இவங்க காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கலாம் ஆனா சினிமா மற்றும் அக்காலத்தைப் போல தான் இருக்கனும்னு சொன்னா நியாயமா ? // ஏன் அந்த காலத்து படத்துல சுடிதார் போட்டு பார்த்ததே இல்லையா ? சுடிதார் போடுறோம்னு லோ நெக், கையில்லாதது, கிழிந்தது, லோ ஹிப் எல்லாத்துக்கும் மேல கண்ணாடி போல உடலை அப்படியே காட்டும் ஆடை இப்படிப்பட்ட அட்டகாசம் எல்லாம் அவசியமா ?

//நம்முடைய உடை கலாச்சாரம் சினிமா பார்தெல்லாம் மாறல// சினிமாவாள தான் எல்லாமே மாறுது. ரஜினி ஸ்டைல், விஜய் டிரஸ், அஜித் பைக் ராஸ் இப்படி எல்லாமே. உதாரணத்துக்கு ஒரு படத்துல நாயகன் என்ன மாதிரி உடை உடுத்துராரோ அது தான் அப்போதைய பேஷன். ஏன் நம் வீட்டில் எத்தனை சிறு பிள்ளைகள் ரஜினி ஸ்டைல் பண்ணுறாங்க ? அதே பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்ததும் அவரைப்போல சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கிறார்கள். இது தெரியாதா எதிரணி மக்களுக்கு ?

//எவ்வளவோ நல்ல கருத்துள்ள சினிமாக்கள் இக்காலத்தில வருகிறது// இத கொஞ்சம் மாத்திக்கோங்க. எப்பையாவது ஒரு தடவை தான் ஏதோ நல்ல கருத்துக்கள் உள்ள படம் வருது. ஆனா அதுவும் தியேட்டர்ல ஓடுறது 1 2 நாள் மட்டும் தான். ஆனா அக்கால படங்கள் மோஸ்ட்லி நல்ல கருத்துக்களை மட்டுமே கொண்டது. எந்த படத்துல நம்ம நடிகர் திலகம் mgr தண்ணி அடித்து சிகரெட் பிடிப்பதை பார்த்து இருக்கீங்க ?
அந்த காலத்துல வில்லன்கள் தான் தண்ணி அடித்து சிகரெட் பிடிப்பார்கள். ஆனா இப்போ உள்ள படங்கள்ல நாயகன்கள் தான் தண்ணி அடித்து சிகரெட் பிடிக்கிறார்கள். என்ன கொடுமை இது ?

//ஒரு கருப்பு வெள்ளை படம், பெயர் நியாபகம் இல்லை... அதில் ஹீரோ ஹீரோயினோட அம்மாவை காதலிப்பார்... ஹீரோயின் ஹீரோவோட அப்பாவ காதலிப்பார்... என்ன ஒரு கேவலவமான கரு..// இது ஏதோ ஒரே ஒரு படம் மட்டும் தான். இப்போ உள்ள படங்கள் எத்தனையை நாங்கள் சொல்ல ?

//அந்த காலத்துலை அறியாத வயசுல காதல் பன்னவே இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய் அறியாத வயசுல கல்யாணமே செய்து வைத்த காட்சிகள் உண்டு. ஏனென்றால் அந்த கால பழக்கவழக்கம் அப்படி. இப்ப நாம அதையா செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை எல்லாம் நம்மிடம் இருந்து களைந்தது இந்த கால சினிமா தானே.// ஆமா ஆமா அந்த காலத்துல குழந்தை திருமணம் இருந்தது. ஆனா இப்போ வீட்டுக்கே தெரியாம register கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மா அப்பாக்கு தெரியாம எப்படி இருக்குறது இப்படில்ல சொல்லி தராங்க. இதெல்லாம் விட ஒரு கொடுமை இப்போ புதுசா தலைய எட்டி பார்க்குது. "கல்யாணத்துக்கு முன்னாடியே பொன்னும் பையனும் ஒன்னா சேர்ந்து வாழ்த்து பார்ப்பான்கலாம் பிடித்தால் கல்யாணம் இல்லைனா ப்ரிண்ட்ஸ்ன்னு சொல்லி கை குலுக்கிட்டு போய்டுவாங்கலாம். எங்க போகுது நம்ம கலாச்சாரம்.

// பெண்கள் அந்த கால சினிமாவில் வீட்டு வேலைகள் செய்யவும், குழந்தைகளை வளர்ப்பதுமான கதாபத்திரங்களில் தோன்றியது தான் அதிகம். ஆனால் இப்போவெல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய வருகின்றன // யார் சொன்னது இப்போ உள்ள படங்கள்ல என்னமோ பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதது போலல்ல காட்டுறாங்க. ஏன் கணவனுக்கு என்ன நோய் அப்படின்னு கூட தெரிஞ்சுக்காம அவன் கூட வாழும் மனைவி, நாயகனை அடித்தால் நின்று வேடிக்கை பார்க்கும் நாயகி இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கே. ஏன் நாயகியும் 2 அடி வில்லினை அடிக்க வேண்டியதுதானே. இது எல்லாத்தையும் விட ரொம்ப கொடுமையானது வேலை பார்க்கும் பெண் கூட ஒரு சிறு விஷயத்தை பற்றி யோசிக்காமல் நாயகனை மட்டுமே எதிர்பார்ப்பது பெண்கள் எல்லாம் யோசிக்க தெரியாதவர்கள் என இழிவு படுத்துவது போல ஆகும்.

//காதலிகுறவங்க வீட்டுக்கு தெரியாம ஊர் சுற்றுவது எல்லா காலத்துலையும் நடக்கிறது தான். இதெல்லாம் அந்த காலத்தில் இல்லையா?// அந்த காலத்துல எத்தனை படங்கள்ல இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தது. ஆனா இப்போ உள்ள அனைத்து படங்கள்ளேயும் இது தான் முக்கிய கருவே.
* துள்ளுவதோ இளமை
* காதல் கொண்டேன்
* 7G ரெயின்போ காலனி
* மயக்கம் என்ன
* பாய்ஸ்
* 3
இப்படி எத்தனையோ படங்கள் பெற்றோரை எப்படி ஏமாத்தலாம் அப்படி இப்படின்னு பல கெட்ட விஷயங்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

//இளையராஜாவும், ஏஆர் ரகுமானும், வைரமுத்துவும் இந்த காலத்தில்தானே இருக்காங்க// இவுங்க கிட்டயெல்லாம் பொய் உங்கள் ரோல் மாடல் யார்ன்னு கேட்டு பாருங்க அவுங்க பதில் என்னனு தெர்யுமா "கண்ணதாசன், வாலி, MSV, ராம மூர்த்தி, TMS " இப்படிப்பட்ட legents தான்.

//வெரைட்டியான குரல்களில் பாடல்களை கேட்பது இப்போதானே.// இப்போ உள்ள தொழில்நுட்பத்தால் சிங்கரோட ஒரிஜினல் குரலே இல்லாமல் பாடல் வெளி வருது. சிங்கர்ஸ் எல்லாரும் இந்த பாடலை நானா பாடினேன் அப்படின்ற அளவுக்கு குரலையே மாத்திடுறாங்க.

//பெண்கள் பிரச்சனை, சமுதாய பிரச்சனை பற்றியெல்லாம் பேசும் படங்கள் இப்போதான் அதிகம்.// இப்போ தானே பெண்களுக்கும் அதிக பிரச்சனைகள் வருகின்றது. கற்பழிப்பு அதிகம் நடக்கின்றது. அந்த காலத்துல எங்கங்க "ஈவ்டீசிங்" சட்டம் இருந்தது. இப்போ தானே இதெல்லாம். இது எதனால் இந்த காலத்து படங்களினால் தானே.

இப்போ காதல்லு சொல்லுறது எல்லாம் எப்படி இருக்கு,

"' அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு
அது காதலில உலகத்தையே மறந்துச்சு
அது வாழ்ந்த போதிலும், இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல, அது மறஞ்சதே இல்ல..

நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..
தும்பல போல வந்து போகுது இந்த காதலு..
காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
டப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..
காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
இது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..

இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
கண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..
எல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
வாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
இப்ப காதல் தொதுட்டா யாரும் சாவதே இல்ல..
அட ஒன்னு தொதுட்ட ரெண்டு இருக்குது உள்ள..
இப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..""

இதுலேயே என்ன சொல்றாங்க அந்த காலம் தான் பெஸ்ட்.

//பழைய பாடல்கள் இனிமையா இருந்தாலும் , செந்தமிழ் சொற்களை கொண்டதால் ,பாடுபவருக்கு கூட புரியாமையே இருக்கு.// தமிழ் கூட புரிஞ்சுக்க முடியாம இந்த காலத்து படம் இருப்பதால் தான் நம் எதிரணி தோழிகளுக்கு அக்கால சிறந்த தமிழ் கூட புரியல போல. இந்த காலத்துல தான் தமிழ் தெரியாத பெண் தான் படத்தின் நாயகி. வாயசைக்க ஒருத்தர், வசனம் பேச ஒருத்தர் இப்படியெல்லாம். ஆனா அந்த காலத்துல நாயகி தான் பேசணும். டப்பிங் எல்லாம் இல்லைங்கோ.

//உண்மையில் பழைய பாடல்கள் பல இந்தி படப்பாடல்களை அப்படியே தமிழில் போட்டு செய்திருப்பங்க. அவ்ளோ ஒரிஜினாலிட்டி இருக்காது// பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லுங்கப்பா. அக்கால பாடல்களிலா ஒரிஜினாலிட்டி இல்ல. இப்போ வர்ற அனைத்து பாடல்களும் பழைய பாடல்களை எடுத்து டப் செய்து தர்றாங்க.

அக்கால படங்கள் மூலம் தான் மக்களுக்கு நாட்டுப்பற்று தேசப்பற்று எல்லாம் வளர்ந்தது. கட்டபொம்மனையும், கோடி காத்த குமாரனையும் நம் கண் முன் காட்டியது அக்கால படங்களே. அது மட்டும் அல்லாமல் பக்தி படங்கள் அதிகம் வந்ததும் அக்காலமே. இக்காலத்து பக்தி படம் அப்படின்னாலே வேற அர்த்தம் சொல்றாங்க. என்ன கொடுமை நடக்குது இங்க ?

"பெண்கள் நம் நாட்டின் கண்கள்" ஆனா இப்போ வெல்லாம் பெண்கள் அப்படின்னாலே போதை பொருள் மாதிரி ஆக்கிட்டாங்க. ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களே பெண்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக அவர்களை சித்தரிக்க முடிமோ அப்படி சித்தரிக்குறாங்க. கோவம் வந்தால் கட்டின சேலையை அவிழ்த்து எதிராளி முகத்தில் மூடி அடிக்கும் வில்லி, நீச்சல் உடையில் வளம், சீலையவே கேவலமா கட்டுதல், இடுப்புக்கும் கீழ போடும் பான்ட் விட்ட அவிழ்த்து விழுந்து விடும் போல இருக்கு. படம் பார்க்கும் நமக்கு தான் டென்ஷன் ஐயோ இந்த பொண்ணு துணி கழண்டு விழுந்திடுமொன்னு. இதெல்லாம் நமக்கு தேவையா ?

"ஆண்" அவனைப்பற்றி சொல்லவே வேண்டாம். இடக்கையில் மது வலக்கையில் தம். வேலை : குட்டிசுவரில் அமர்ந்து பெண்களை கிண்டல் அடிப்பது, ரோட்டில் போகும் அப்பாவியை அடிப்பது, காலேஜ் கட் அடிப்பது இன்னும் பற்பல முக்கியமான வேலைகள் இது போல்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே"

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்