***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

ஏம்ப்பா, எம்முட்டு மொக்கபடங்க அக்காலத்துல இருந்திருக்கு.....அதையெல்லா உட்டுப்புட்டு 10 படங்களமட்டு சொல்லி நடுவர இழுக்கரீங்களா........(அடியே காந்தா.....என்ன யாரு அசச்சுக்க முடியாதாக்கும்.(நடுவர் முழுச்சுட்டாருங்கோ,....))இம்புட்டு நேரமா ஏதோ பழைய படங்கதான் பரவால்லையோன்னுகூட நினைச்சுட்டேன்ப்பா.......

///ஆயிரமாயிரம் ஆண்டுகள் பூமியில் புதைந்திருக்கும் தங்கம் கருப்பு நிறத்தில் தான் இருக்குமாம்... ஆனால் அவற்றை சுத்தமாக்கி பளிச்சிட செய்யும் யுக்தி இந்த கால படங்களில் தான் உள்ளது...///

கருப்பு தங்கத்தையே ஜொலிக்க வைக்கிராங்களாக்கும் இக்கால சினிமாக்காரங்க....தெரியுமா...???

வாங்க ஜென்னி நல்லதும் கெட்டதுமாக பல கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள்,
இப்போ உள்ள அனைத்து படங்கள்ளேயும் இது தான் முக்கிய கருவே.
* துள்ளுவதோ இளமை
* காதல் கொண்டேன்
* 7G ரெயின்போ காலனி
* மயக்கம் என்ன
* பாய்ஸ்
* 3
இப்படி எத்தனையோ படங்கள் பெற்றோரை எப்படி ஏமாத்தலாம் அப்படி இப்படின்னு பல கெட்ட விஷயங்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

இக்கால கெட்டபடங்களாக கருதுபவைகளில் சிலதை பட்டியல் போட்டுட்டேளா???பலே பலே ...போட்டி பட்டியல் தயாரா இக்கால அணியிடம்.....தாரை தப்பட்டைகள் முழங்க சமர்பியுங்கள் இங்கே.........(அடச்சே இக்கால அரசனான வடிவேலுவின் தாக்கம்.......பயப்படாதீங்க.........அவ்வ்வ்வ்வ்வ்வ் எப்படியெல்லா சமாளிக்க வேண்டியிருக்குடா சாமி.....)

///"ஆண்" அவனைப்பற்றி சொல்லவே வேண்டாம். இடக்கையில் மது வலக்கையில் தம். வேலை : குட்டிசுவரில் அமர்ந்து பெண்களை கிண்டல் அடிப்பது, ரோட்டில் போகும் அப்பாவியை அடிப்பது, காலேஜ் கட் அடிப்பது இன்னும் பற்பல முக்கியமான வேலைகள் இது போல்.///
ரொம்ப நல்ல வேலைங்க இதெல்லாம்.....

..

உதிரா 80க்கு முன் அக்கால படங்களாகவும்,80க்கு பின் இக்கால படங்கள்னே வைத்துக்கொள்ளுங்கள்.........

////வன்முறைகளும் ஆபாசங்களும் ஆங்கில படத்தில் இல்லையா என்ன, தமிழில் இப்போ நேரடி ரிலீஸ் அதுவும் தான் சக்கை போடு போடுது. டி வி இல குடும்பமே , டப்பிங் படத்தை பார்த்து என்ஜாய் பண்றாங்க. ///

//நல்ல டேக்னிக்ஸ், எதிலேந்து கத்துக்கிட்டா என்ன,?///

ஏன்பா டென்ஷன் குடுக்கரீங்க, இங்கலீஸ் படத்துல வந்தா சரி தமிழ்ல வந்தா தப்பா.......நல்ல டெக்னிகல் வேலைகளை எங்க கத்துண்டா என்னப்பா.......இப்படி கேட்பவர் நானில்லைங்கோ உங்க எதிரணித்தோழிங்கோ.......வாங்க வந்து பதில் சொல்லுங்கோ......

வாங்க லாவண்யா நீங்கள் இக்காலமே அணியா?பட்டி கலைகட்டுகிறது வாதங்களுடன் வாங்க.

வாங்க உமா வரும்போதே பல கேள்விக்கணைகளோட வர்ரீங்களே.....நீங்கள் இக்காலம்தானே அதான் இத்தனை கேள்விகள்.(என்னைப்போலவே....) பட்டிக்கு வருகை புரிந்ததற்கு நன்றிகள்....இன்னும் வாதங்களுடன் வாருங்கள்.......
வாங்க அக்காலமே வந்து பதில் சொல்லுங்க.....

வாதங்களை தொடருங்கள் நடுவரை பிள்ளை அழைக்கிறான். வந்து வாத பிரதி வாதங்களை படித்து பதிவு போடுவார்.....

அன்பு நடுவர் ரேனு அவர்களே எதிர் அணியினர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்துட்டு பழய படங்கள் தான் சிறந்ததுனு சொல்றாங்க.

”பழையன கழிதலும் புதியன புகுதலும்” இத அவங்க எல்லாத்துலையும் இம்ப்ளிமன்ட் பன்னினா நல்லா இருக்கும்.

இந்த கால அருமையான குடும்ப பாசத்தை உணர்த்தும் படங்கள் சில

**அப்பா-மகள் பாசத்துக்கு -- அபியும் நானும்

**அம்மா-மகன் எப்படி பாசமா நட்பா இருக்கனும்ங்கிறதுக்கு -- எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்சிமி

**நல்ல நட்புக்கு -- நட்புக்காக, ப்ரண்ட்ஸ், ப்ரியமான தோழி, புன்னகை தேசம்

**அண்ணன்-தங்கை உறவுக்கு -- கிழக்கு சீமையிலே, சம்திங் சம்திங்

**அண்ணன்-தம்பி உறவுக்கு -- வானத்தைப்போல, ஆனந்தம்

**சிறந்த காவியப்படம் -- பாரதி

**சமுதாய சீர்கேட்டை தட்டிக்க் கேட்க்கும் படம் -- இந்தியன்

**சிறந்த் காதல் படங்கள் -- இதயம், காதல் கோட்டை, மெளன ராகம்

**நல்ல குடும்ப காவியம் -- ஆஹா, ஆனந்தம்

**பெண் சிசு கொலைக்கு எதிரான படம் -- கருத்தம்மா

**நகைச்சுவைப் படங்கள் -- கரகாட்டக்காரன், கோபாலா கோபாலா, உள்ளத்தை
அள்ளி தா, வரவு எட்டனா செலவு பத்தனா, களவானி, பாஸ் என்கிற பாஸ்கரன்

இப்படி எத்தனையோ நல்ல படங்கள் இருக்கும் போது ஒரு சில படங்களை வைத்து இக்கால திரைப்படங்களில் நல்ல கருத்து இல்லை, ஆபாசமா இருக்குனு ஒதுக்கி வைப்பது சரியல்ல நடுவரே. இதையெல்லாம் விட்டுட்டு ஏன் கெட்ட படங்களை மட்டும் தேடித் தேடி எதிரணியினர் பார்க்கிறார்கள். எப்படி நடக்கனும்ங்கிறதுக்கும் இக்கால படங்கள் நிறைய உள்ளது, எப்படி நடக்க கூடாதுங்கிறதுக்கும் நிறைய படங்கள் உள்ளது

ப்ரியதர்ஸனோட “காஞ்சிவரம்” படம் எத்தனை பேர் பார்த்திருப்பீங்க ????. அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்ததாவது நம் எதிரணியினருக்கு தெரியுமா? எதிரணித் தோழிகளே இப்பவாவது போய் பாருங்க. இதை போல் எத்தனையோ நல்ல படங்கள் உள்ளது. இன்னும் பழைய பாட்டையே பாடமல் இக்கால படங்களையெல்லாம் பார்த்து எப்போதும் இளமையா இருக்க முயற்சி பன்னுங்கோ

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

நடுவர் அவர்களே... அக்கால நடிகைகள் உடலை இறுக்கும் விதமாக உடை அணிந்ததை ஆபாசம் என்று சொல்லும் எதிரணியினர் இக்கால நடிகைகளை என்னவென்று சொல்வர்.... நீங்கள் பார்த்து இருப்பீர்கள் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவை... பாவாடை தாவணியில் தான் வருவார் ஆனால் அது எப்போது கீழே விழுந்து விடுமோ என்பது போல கட்டி இருப்பார்... கந்தசாமி படத்தில் சொல்லவே வேண்டாம்.... பாடல் காட்சிகளில் அனைத்து நடிகைகளுமே அரை குறை ஆடைகளில் இடுப்பை வளைத்தால் ஐயோ டீனேஜ் பிள்ளைகளின் பெற்றோர் மனம் குமுறும்....

// ஆனால் இப்போவெல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய வருகின்றன (மகளிர் மட்டும், கல்கி,...).// இந்த படங்கள் எல்லாம் பழைய படங்கள் லிஸ்டில் எப்போவோ சேர்ந்தாச்சு... கல்கி படம் ரொம்ப நல்ல படமா அதன் கரு என்ன கொடுமைக்கார, இரு தாரம் புரிந்த ஒரு கணவனை லிவிங் டுகதரா வாழ்ந்து கல்யாணம் கட்டாம பிள்ளை பெற்று திருத்துவாளாம் நாயகி... இது பெண்களை மதிக்கும் படமாக ஏற்று கொள்ளலாமா? சொல்லுங்கள் நடுவரே?

// எதிரணிதான் இன்றைய திரைப்படங்களையும், பாடல்களையும் ரசிக்க தெரியாமல் சாடுகிறார்கள். // ரசிக்க தெரியாமல் அல்ல ரசிக்க முடியாமல் சாடுகிறோம்..........
ஒரு நடிகர் சமீப காலமாக ஒரே மாதிரியான படங்களில் (அனைத்திலுமே ஒரு ஊரின் வில்லன்களை அழிக்கும், பழிவாங்கும் கதை) நடித்து கொண்டிருந்தார்.. பல படங்கள் ஓடவே இல்லை... காரணம் மக்களுக்கு போரடித்து விட்டது...........
//ரீமிக்ஸ் பண்ணினா கூட எவர்கிரீன் சாங்ஸ் இன்னும் இன்னும் நல்லா ஆகுதே.
இப்போ அந்தக்கல பாடலகள மாதிரி ட்யூன் போட்டா கூட ஹிட ஆக மாட்டேங்குது.
//இதுவே முன்னுக்கு பின் முரணா இல்லை?
//"பழைய பாடல்கள் இனிமையா இருந்தாலும் , செந்தமிழ் சொற்களை கொண்டதால் ,பாடுபவருக்கு கூட புரியாமையே இருக்கு"// தமிழ் புரியலைனு சொல்ற அளவுக்கு இந்த கால திரைப்படங்கள் நம் மக்களை மாத்தி வச்சுருக்கு... இனி நம் வருங்கால தலைமுறை சுத்தமா தமிழே பேச மாட்டாங்க போல இருக்கே......... இப்பொ எல்லாம் சில படங்களில் ரவுடி தான் ஹீரோ..... பின்ன நம்ம குழந்தைகளும் ரவுடித்தனம் செய்யாம என்ன பண்ணுவாங்க?

அன்பு நடுவரே

மக்களுக்கு ரசனை திறன் குறைஞ்சுபோச்சு ன்னு சொல்லுங்க ஒத்துக்கலாம். ஆனா சிறந்த படங்கள் வரதில்லைன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம் .
யாருமே இந்த படங்களை நீங்க பார்த்து தான் ஆகணும் என்று திணிப்பதில்லை.

முன் காலத்திலாவது இவ்ளோ விமர்சனம் கிடையாது. வண்டி கட்டி கொட்டாயிக்கு போய் சினிமா பார்ப்பாங்க.

இப்போ நெட்லேந்து புக் வரை விமர்சனம் இருக்கு. ரிமோட் உங்க கையிலே. இவ்ளோ இருந்தும் சொதப்பல் படங்களை விடாம பார்க்கும் எதிரணியினர் இருக்கும் வரை எல்லா மொக்க படங்கள் கூட கல்லா கட்டும் போல இருக்கே !

படத்தின் கதை எப்படி வேணா இருக்கலாம் . அது பெரும்பான்மையினரால ஒத்து கொள்ள படாமல் போய் , ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் பொது இது சரி தானே என்று கூட தோன்றலாம். நம்மோட வரைமுறைகள் ஒரு பெண்ணை பற்றி, குடும்பம் பற்றி , ஆடைகள் பற்றி ஒரு கட்டுப்பாடு வெச்சிருக்கோம். மீறினா ஏதோ சமுதாய சீர்கேடு மாதிரி புலம்பறோம்.

ஆனா ஒளிஞ்சு மறைஞ்சு பார்த்து ரசிக்கும் மக்கள் இல்லாமையா போனாங்க அந்த காலத்திலும் . அழகுணர்ச்சி என்பது அவரவர் கண்ணை பொறுத்தது.

நாம் இவ்ளோ பேசுவோம் ஆனா தகவல் துறைக்கு , இந்நிகழிச்சி பிடிக்கலைன்னா எழுதி அனுப்புங்க என்று வருதே அதை செய்யல்படுத்துவோமா ??

// கல்கி படம் ரொம்ப நல்ல படமா அதன் கரு என்ன கொடுமைக்கார, இரு தாரம் புரிந்த ஒரு கணவனை லிவிங் டுகதரா வாழ்ந்து கல்யாணம் கட்டாம பிள்ளை பெற்று திருத்துவாளாம் நாயகி... இது பெண்களை மதிக்கும் படமாக ஏற்று கொள்ளலாமா? சொல்லுங்கள் நடுவரே?//

என்ன இது ? உங்களுக்கு அந்த கதை பிடிக்கலைன்னா அது நல்ல கதை இல்லையா ? ஏன் இருதாரம் என்ன ஏகப்பட்ட தாரம் கட்டி ஈ ன்னு போஸ் கொடுக்கற ஆண்மகனை எதிர்த்து ஒரு பெண் போராட்டம் நடத்த (உண்ணாவிரதம் இருந்தா வேலைக்கு ஆகுமா என்ன ? இந்த மாதிரி தலைகுனியராப்புல செய்தா தான் உண்டு .
அந்த பிரகாஷ் ராஜ கேரக்டர் மாதிரி ஆண்கள் உலகிலேயே கிடையாதா ? குழந்தை இல்லாத ஒரு காரணத்தினால் முதல் மனைவி படும் அவஸ்தைகளை காட்சி படுத்திய விதம் (எத்தனையோ தாய்மை பேரு அடையாதவரின் எண்ணமா தான் இருந்திருக்கும் ) இது என் கண்ணோட்டம் .

வெட்கம், அச்சம் மடம் நாணம எல்லாமே வீடு விட்டு வெளியில் வந்தாலே விட்டு விட வேணும் பெண்கள் . என்றார் நம் உலக கவி

அதை காட்சிகளில் வடித்து காட்டியதால் தான் அடக்கி ஆளப்பட்ட , எவ்ளோ டேலேன்த்ஸ் இருந்தும் வெளிக்காட்டி கொள்ள முடியாத பெண்களுக்கு தன்னம்பிக்கை வந்தது . கணவனே கண் கண்ட தெய்வம் என்பது சரி தான் -- ஆனா ஒரு கணவன் மனிதனே இல்லாமல் இருக்கறப்போ அவனை கொன்று அவளும் சீரழிவதை விட -- வேறு நல்ல வாழ்க்கையை தேடுவதில் என்ன தப்பு ?
வார்த்தையாலும் செய்யலகளாலும் பதில் தருவதும் ஒரு கொலை போன்றது தான் .
அஹிம்சை கொலை.
விழிப்புணர்வு என்பது எவ்வளவு முறை நாம் சில விஷயங்களை எழுதினாலும் சொன்னாலும் மனதில் பதியாது .

இப்போ வந்த மௌன குரு படம் எடுங்க . எனக்கே கூட என் பிள்ளை பருவம் போல வராதா என்ற ஏக்கம் உண்டு நடுவரே .

ஆனா ஏகப்பட்ட தொல்லைகள் நிறைந்த இக்காலத்தில் , இதை செய்யாதே என்று சொல்ல சொல்ல பசங்க அதை தேடி ஓடறாங்க. ஆனா இந்த படத்தை பார்த்து நாம் சொல்ல விரும்பிய சில விஷயங்கள் (எப்படி தான் செய்யாத தவறுக்கு சூழ்நில கைதி ஆகிறான் ஒருவன் , அதீத கோபத்தால் எதையாவது சாதிக்க முடியுமா ? என்ன தான் குற்றம் இல்லை என்றாலும் , அரசாங்கத்தின் கையில் சில பவர்கள் இருக்க தானே செய்யுது ? என்பதை புரிய வைக்க இந்த ஒரு படம் போதும்.

நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கவும் தவற வேண்டாம் . ஆனால் ஒரு வேளை நாம் எதிலாவது சிக்குண்டாள் கூட அதிலியே மூழ்கி சோகத்தால் நோகவும் வேண்டாம் என்பதை கூட இப்படங்கள் மூலமா உணர்கிறோம் தானே.

அலை பாயுதே படம் மூலம் " சட்டென்று என்ன ஓடி போய் திருட்டு தாலி கட்டி இதெல்லாம் ஒரு படம் " என்ற விமர்சனம் தான் எழுந்தது. பட் கல்யாணம் முடிந்த பின் இருவருக்கும் நடக்கும் தின சண்டைகள் இன்று எல்லா காதல் திருமணத்திலும் சொல்ல கேட்கிறோமே ?
நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்மை பொறுத்தது

நன்றி நடுவரே அப்புறம் வரேன்

// படித்தவர்களாலும், கலை ஞானம் பெற்றவர்களால் மட்டுமே பாடலையும், நடனத்தையும், வசனங்களையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
//படிக்காத பாமரத்தான் வாழும் பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்ற படங்கள் எத்தனை எத்தனை... தாத்தா பாட்டியிடம் கேளுங்கள்.......

//தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லா படமுமே ஒரே மாதிரி தான் இருக்கும்.// எத்தனை விதமான உணர்ச்சி காவியங்கள் அவை... ஒரே மாதிரி என்று பொதுவா சொல்லிட்டாங்களே.... பக்தி, பாசம், காதல், நட்பு, சண்டைனு எத்தனை படங்கள்... இப்போ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி தான் தராங்க... ஒவ்வொரு ஸ்வீட்டுக்கும் தனி டேஸ்ட் அதை எல்லாம் கலக்கி தந்தா நல்லாவா இருக்கும்?

//இசையிலும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்காது// பழைய பாடல்களை கேட்டதே இல்லை போல.... தேனமுது, தேனும் பாலும், சொக்குதே மனம், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நிகழ்ச்சிகளை TVஇல் பாருங்கள்... அப்போது தெரியும் பழைய பாடல்களின் தனித்துவத்தை........

//வசனங்களிலும், பாடல்களிலும் நிறய வடமொழி கலப்பு இருந்தது.// அது வடமொழினா இக்கால வசனங்கள் தூய தமிழோ.... தங்கிலீஷ் ஒரு பாஷையாங்க... நண்பன் படத்தில் இலியானா பேசுவது என்ன அட்சர சுத்தமான தமிழா?

//சொல்லப்போனால் அந்த காலத்தை விட இந்த காலத்தில் மிக பிரமாண்டமான படங்கள் வந்திட்டு இருக்கு... ஜோதா அக்பர், தசாவதாரம், எந்திரன் வாவ்...// 200 கோடி செலவு செய்து பிரம்மண்டமான படம் எடுக்கிற்றார்கள்... எங்கேயிருந்து வந்தது அந்த பணம்? அதை நாம் யோசிக்க முடியாமல் கண்கட்டி வித்தை செய்கிறது இக்கால சினிமா உலகம்...
// தலை அலங்காரம் எல்லா தாங்க முடியாது. பெரிய பெரிய கொண்டை வீட்டிலேயே கதாநாயகி அப்படி வலம் வருவாங்க . கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க .இதெல்லாமும் அந்த காலத்தில் இல்லைன்னு சொல்ல முடியுமா ?
//கொஞ்சி கொஞ்சி தமிழ் தானே பேசுனாங்க.... அதுல ஒரு நேர்த்தி, குரலுக்கே பல ரசிகர்கள் இருந்தாங்க... இப்பொ நடிகைகளோட சொந்த குரலை கேட்க முடியுமா? நல்லா தமிழ் தெரிஞ்ச நடிகைக்கே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுது......... இக்கால தலைவிரி கோலத்தை விட அக்கால கொண்டைகள் பெட்டர் என்பது என் கருத்து.........

//”பழையன கழிதலும் புதியன புகுதலும்// இதன் அர்த்தம் பழைய தீமைகளை விட்டொழித்து புதிய நன்மைகளை வரவேற்போம் என்பது தான்... இதை திரைப்படங்களுக்குனு எடுத்துக்கிட்டா பழைய நன்மைகளை நீக்கி புதிய தீமைகளை பாருங்கள் என்று அர்த்தமே மாறிவிடும்.....

//அந்த பிரகாஷ் ராஜ கேரக்டர் மாதிரி ஆண்கள் உலகிலேயே கிடையாதா //அந்த ஆண்களை திருத்த கல்கி ஹீரோயின் மாதிரி பெண்கள் புறப்பட்டா பாரத சமுதாயம் என்ன ஆகும்.......? நடுவரே நான் மீண்டும் சொல்கிறேன் சினிமாவும் வாழ்க்கையும் ஒன்றல்ல..........

என் சந்தேகம் இன்னும் தீர்க்கப்படவே இல்லை நடுவரே...........

மேலும் சில பதிவுகள்