***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

// மாற்றம் ஒன்றே மாறாது ஆக தொழில் நுட்பம் மாறியாச்சு, கலாச்சாரம் மாறியாச்சு, மக்களின் ரசனை மாறியாச்சு அப்போ அதற்கு ஏற்ற படங்கள் தானே மக்களை போய் சென்றடையும் // இப்படி சொல்லியே எல்லாத்தையும் மாத்தாதீங்க. எல்லாம் மாறியதுக்கு காரணம் இக்கால படங்கள்தான். சரி இந்த மாற்றங்கள் நல்லதுக்காகவா ? இத்தனை மாற்றங்களினால் எது அதிகமானது பெண் கொடுமை, திருமணத்திற்கு முன்பே ஆண் பெண் உறவு, பள்ளி படிக்கும் சிறுவன் கையில் கத்தி இதெல்லாம் எதற்காக ? தற்போது ஒரு மாணவன் ஆசிரியைஏ குத்தி கொலை செய்தது தெரியும். எப்படி அவன் மிகச் சரியாக அவர்களை ஒரே குத்தில் கொன்றான் ? ஆள் ஸ்பாட் அவுட். இது எப்படி ? எங்கு பயின்றான் இதை ? உங்கள் இக்கால படங்கள் மூலமாக தானே ? சிறந்த மருத்துவராக வரக்கூடிய மாணவர்களே சிறைக்கைதிகளாக மாறும் அவலம் எதனால் உருவாகின்றது உங்கள் இக்கால பண்டங்களால் தானே ? இந்த கலாச்சார சீரழிவு மாற்றம் நமக்கு தேவையா ?

மக்களின் ரசனை என்ன பெண்ணை அரைகுறையாய் காட்டுவதா? எதிரணி பெண்கள் எல்லாம் அப்போ கதையின் நாயகி போடும் உடைகளை போட்டு வெளியே வருவார்களா ? இப்போ எல்லாரும் சுடிதார் , ஜீன்ஸ் போடுறாங்க. சரிதான். ஆனா அது உடம்பில் சரியான இடத்தில் தான் அணிந்து வருகிறார்களா ? எல்லாம் லோ ஹிப். அப்போ பார்க்குற பசங்க சும்மாவா இருப்பாங்க ?
" ஹே பார்ட்டி நல்ல பார்ட்டி தான்" அப்படின்னு பாட்டு பாட மாட்டனுங்க ? இப்போவெல்லாம் அதுக்கும் மேல என்ன என்னமோ நடக்குது. " சரியா உடை உடுத்தாத பெண்ணும், சகத்தில மாட்டுன காலும் நல்ல படியா வீடு பொய் சேர்ந்ததா சரித்திரமே இல்ல"

// இந்த கால படங்கள் எல்லாமே நல்ல படங்கள்னு சொல்ல வரல, நிறைய நல்ல படங்கள் வருகின்றன, அதை பார்த்து நிறைய மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்காங்க. // இதை கொஞ்சம் மாத்துங்க இந்த மாதிரி " நிறைய மோசமான கருத்துக்கள் கொண்ட படங்கள் வருகின்றன, அதை பார்த்து நிறைய பிள்ளைகள் பல கேட்ட வழிகளில் விழிப்புணர்வு பெற்றிருக்காங்க" இது தான் மிகச்சரி.

// எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருக்கும்.// ஒன்னு நல்ல தெரிஞ்சுக்கோங்க நாடகத்துல இருந்து தான் படங்கள் வந்தது.

// பல புகழ்பெற்ற நடிகர்களின் நடிப்பு எல்லாமே ஓவர் ஆக்ட்டிங்காக இருக்கும். // ஓவர் ஆக்டிங் பண்ணினா மக்கள் ஏத்துக்க மாட்டங்க. ஏன் இந்த காலத்துல காசுக்கு மேல நடிக்குற எந்த அக்காவும் இல்லையா ? இது எதிரணிக்கு தெரியாதா ?

// தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லா படமுமே ஒரே மாதிரி தான் இருக்கும் // ஆனா கதையின் கரு மாறுபட்டு இருக்கும். பல நல்ல விஷயங்கள் இருக்கும் இப்போ தான் எல்லா படமும் ஒரே மாதிரி வருது. காதல் அப்படி இல்லைனா மனநோய்.

// இசையிலும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்காது // ஆனா கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். அதனால தான் "ஓல்ட் இஸ் கோல்ட்" அப்படின்னு சொல்லுறாங்க. அந்த காலத்து பாடல்களை நாம எப்போ வேணும்னாலும் கேட்கலாம். ஆனா இப்போ உள்ள இசை சிறுது காலம் மட்டுமே. பிறகு அதை அந்த அளவுக்கு கேட்க முடியாது. சரி இந்த காலமானாலும் கல்யாண வீட்ல பெண்ணை அழைத்துக்கொண்டு வரும் போது என்ன பாட்டு போடுறாங்க ?

"மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் - நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் - புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது - இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது"

இதுக்கு இணையா எந்த பாடுங்க வரும் ? கல்யாண வீட்ல இப்போ உள்ள லேட்டஸ்ட் பாட்டு போட்டா எப்படி இருக்கும் கொஞ்சம் யோசிங்க ?

//புது முகக் கலைஞர்களுக்கு அவ்வளவு சப்போர்ட் இருக்காது// யார் சொன்னது ? எந்த கலைகனும் முதுமுகமாக இருந்தே நமக்கு அறிமுகமானார்கள்.

//நடப்பு வாழ்க்கை முறையும் சினிமாவில் காட்டப்படும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்// இது இப்போ உள்ள cinemaala தான் நடக்குது. அந்த காலத்துல இருக்கும் போதேவா வெளிநாட்டுக்கு டூயட் பாட போவாங்க. இது எப்போங்க நடக்குது. இக்கால படத்துல தானே. கஞ்சிக்கே வழியில்லாத நாயகனும் நாயகியும் வெளிநாட்டுல குளிர்ல கூட அரைகுறையாய் ஆடுவாங்க. இதுதான் உங்க நடைமுறை வாழ்க்கையாங்க ?

// புதுமைகள் படைப்பதில் ஆர்வம் குறைவாகவே இருந்தது // இக்கால பட புதுமை எது தெர்யுமா நடுவரே " சயின்ஸ் மூலமா ஒரு 5 வயது பையன் 20 வயது வாலிபனா ஆய்டுவான். அவன ஒரு பொண்ணு விழுந்து விழுந்து லவ் பண்ணும். அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் தான் இவன் 5 வயது சிறுவன் அப்படின்ற விஷயமே தெரிய வரும். எப்படியாப்பட்ட சிறந்த புதுமைவாதிகள். நினைக்கவே மெய் சிலிர்கிறது.

// ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் பிற கலைஞ்ஞர்களின் உடைகள் பொறுத்தமே இல்லாமல் இருக்கும். உடைகளின் வடிவமைப்பு, டிசைன் நல்லா இருக்கும். ஆனா அவர்களுக்கு பொறுந்தி இருக்காது.// இப்போ போடும் உடைகள் அந்த அந்த கலைங்கர்களுக்கு பொருத்தமாக இருக்கா ? குண்டான பெண்ணிற்கு டைட்டா ஒரு சின்ன பிள்ளை போடும் கவுன், வானவில் கலரில் சட்டை போடும் நாயகன், 2 பீஸ் அணியும் நாயகி இதெல்லாம் நல்லவா இருக்கு பார்க்க ?

இப்படி அவர்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களிலும் அவர்கள் பக்கம் உள்ள தவறுகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி கொடுக்கிரதல்லவா நடுவரே ?

கவர்ச்சி - அந்த காலத்துல எல்லாம் கவர்ச்சி நடிகை அப்படின்னு ஒருத்தர் தனியாவே இருப்பாங்க. அவுங்க கூட உடை உடுத்தும் போது ஸ்கின் டிரஸ் போட்டு இருப்பாங்க. ஆனா இப்போவெல்லாம் நாயகி தான் எல்லாம். பில்லா படம் பார்த்தீங்களா ? அதுல நாயகிக்கு ஏன் இப்படி உடை தரனும் ?

கல்கி மாதிரி ஒரு பொண்ணு மட்டும் நிஜ வாழ்கையில் நம் பக்கம் இருந்தால் அவள் கதி என்ன ஆகும் தெர்யுமா ? அவள் எவ்வளவு சித்தரவதைக்கு ஆளாக்க படுவாள் ? நிஜம் வேறு நிழல் வேறு.

// நாம் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்மை பொறுத்தது // உண்மை தான். ஆனா இக்கால படங்களில் நல்லது எனபது இலை மறை காயாகவே சொல்லப்படுகின்றது. எனவே நம் மக்களுக்கு கேட்ட விஷயங்கள் தான் சீக்கிரமா ரொம்ப நல்ல படியா போய்ச்சேருது.

விடாது வருவேன் ........

ஜென்னிவினோ

Dare To Paly With Life

///நடுவர் அவர்களே....... இதுதாங்க அந்தகால திரைப்படங்கள்...... ///
ஆர்வத்திற்கு நன்றிகள் பிரியா, அந்தக்கால படங்களில் உள்ளவை இல்லாதவைகளை பட்டியல் போட்டுட்டீங்க........ உங்களின் இக்கால படங்கள் பற்றீய ஆராய்ச்சி பட்டியல் காண ஆவலாக உள்ளேன்........

அன்பு நடுவரே??

கலாச்சாரம் :

ஒருவனுக்கு ஒருத்தி, பழைய சம்பிரதாயங்களை அப்படியே ஏன் என்று கேட்காது பின்பற்றிய ஒரு தலைமுறை , ஆடை அணிகலன்கள் , நெற்றி வகிட்டில் குங்குமம் , கணவன் இறந்துவிட்டால் எல்லாமே துறந்து தவிக்கவேண்டும் பெண்கள் என்ற கோட்பாடு இந்த மாதிரி கலாசாரம் என்ற பெயரில் சில மூட நம்பிக்கைகளும் வாழ்விற்கு ஒத்துவராத சங்கதிகளும் , எதிர்த்து கேட்பாரை ஒரு வழி பண்ணி விடும் மனோபாவம் மிக்க ஒரு சமுதாயம் இல்லை நமது என்று சொல்ல முடியுமா ?

சினிமா என்கிற மீடியாவில், தன்னால் மாற்ற முடியாத ஆனால் மாற்ற விரும்பும் சில விஷயங்களை , தன இயக்கத்தின் மூலம் (மணிரத்னம், பாரதிராஜா ,பாலச்சந்தர் மகேந்திரன், பாலுமகேந்திரா )போன்றோர் ஒரு பர்டிகுளர் காலத்தில் திசை திருப்பி விட்டாங்க , என்ன கெட்டு போச்சு ? என்று தெரியவில்லை ? அவர்கள் எந்த காலம் என்பது உங்க கையில் ஆனா அவங்க ஒரு மாற்றுப்பாதையி கான்பிச்சான்களா இல்லையா ?

நாம் கேட்க விரும்பிய கேள்விகளை , அவங்க படங்கள் மூலமா கேட்டாங்க -- இது மறுக்க முடியாத உண்மை >

நடிகைகள் சொந்த குரலில் பேச வில்லை. தமிழா அது ??///

இது எதிரணி வீசிய கேள்வி .

ஏங்க நீங்க யாராவது உங்க பிள்ளைகளை நகராட்சி பள்ளியில் செர்பீன்களா ?
கிடையாது . எல்லாருக்கும் பாரின் லேவேளில் எஜுகேஷன் வேண்டியிருக்கு. பிறக்கரதுக்கு முன்பே எல்லாரும் நல்ல் பேர் பெற்ற ஸ்கூலில் அட்மிஷனுக்கு க்யூ கட்டி நிக்கறீங்க. கேமராவுக்கு போஸ் கொடுத்து ,முகபாவமும் கொடுக்க மொழி அவசியமில்லைன்னு போச்சு.

அதற்காக எந்த ஹீரோயினும் தமிழே பேசுவதில்லை என்று சொல்ல முடியாது. தமிழ் கற்றுக்கொண்டு அவர்கள் ஒழுங்காக பேசவாவது முயற்சிக்கிறார்கள். டப்பிங் என்றொரு பீல்ட் வந்து அதுனாளையும் நிறைய பேருக்கு பிழைப்பு கிடைக்க வைத்த புன்னியவதிகள் என்று எண்ணி கொள்ள வேண்டியது தான்.

நாம் தான் ஆங்கில மீடியம் என்று ஓடிய மக்கள். அப்ப்புரம் இப்போ வர யன்க்ச்டர்ஸ் க்கு தமிழ் பேசவே தெரியலை என்று உருகுவது ,மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
தமிழ் டீச்சர் என்றாலே இளக்காரம் செய்தது யார். நம் பிள்ளை என்ஜினியர் டாக்டர் ஆகா வேண்டும் என்று நாம் மட்டும் கனவு காணுவோம்.

ஆனா தமிழ் பற்றி படம் எடுத்தால் பார்க்க கூட மாட்டோம்.ஜீவா நடித்த அந்த படத்தில் ஏதாவது மிகை இருந்ததா ? நடப்பது தானே அது. சாதரனாமா உடை போட்டு வந்து உங்க வீட்டு விசேஷத்துக்கு ஒருவர் வந்தா, அவருக்கு முன் உரிமை கொடுப்பென்களா , இல்லை தச புச்னு ஆங்கிலத்தில் பேசி ,சாப்ட்வேர் அல்லது பெரிய பதவி வகிக்கும் ஒருவரை வாய் நிறைய வரவேர்பீர்களா ? நாம் தாங்க மாறனும். அதை மேடை போட்டு கூவினா , சரியான லூசு என்பீங்க. படமா எடுக்கிறோம் ,

பார்த்து ஒருவர் மாறினா கூட நல்லது தான். தேடி தேடி போய் வன்முறை கற்றுத்தரும் படங்களை பார்த்து பசங்க கெட்டு போறாங்க என்று சொல்லும் எதிரணியினர் , தப்பு யாரிடம் என்று யோசிங்க ஒரு நிமிடம் தன குழந்தையிடம் கவனம் செய்ய யோசிக்கும் பெற்றோர் மேலா இல்லை சமூகம் கொடுத்த சினிமா மீதா ? எல்லா காலத்திலும் கொலை கொள்ளை எல்லாம் இருக்கு. முன்பு இப்படி உடனே வெளிச்சம் போட்டு காண்பிக்க மாட்டாங்க. அமுங்கி ரணப்படுத்துவாங்க.

மாற்றம் நம் வசதிக்கு ஏற்ப வேணும், குழந்தை ஏ சி இல்லாம தூங்க மாட்டான், இதெல்லாம் ஓகே அதோட கூட வர தீமைகளுக்கு ஏ சி கம்பெனி காரரை குற்றம் சொல்வது போல உள்ளது நீங்க சுட்டி காட்டுவது .

தன்னுடைய ஆதங்கத்தை படம் மூலமா சொல்கிற இயக்குனர்களின் படங்களை மிஸ் பண்ணாம பார்த்தோம் என்றாலே நல்ல மாற்றங்கள் கூடிய சீக்கிரம் வரும்.

சமுதாயம் என்பது மாற , டைம் மிஷினில் பின்னாடி போயோ , எதாவது மேஜிக் செய்தோ சரி செய்ய முடியாது. இப்படி நடக்கிற விஷயங்களுக்கு தீர்வே இல்லியா என்று நாம் மலைத்து போகும் பொது ஒரு ஸ்பார்க் வருமாறு நம்மை கேள்வி கேட்கும் நம் மனசாட்சியாக வரும் சினிமாக்கள் இப்பவும் நிறைய இருக்கு

எப்படி நாம் அடிமை இந்தியாவாகவே அழிஞ்சு போயிடுவோமோ என்று பயந்த காலத்தில் திரைப்படங்கள் மூலமா தேசப்பற்றை உருவாக்கினான்களோ அதே போல இப்ப வேறொரு சிச்சுவேஷன் , அதற்கும் இக்கால சினிமாக்கள் கேள்விகளை உருவாக்குது எனலாம்.
நாட்டில் நடக்கும் அநியாங்களுக்கு எத்தனை படம் பார்த்தும் நம் ,ரைட்ஸ் டு ஆஸ்க் ,உரிமைக்கு குரல் கொடுக்க தயங்குவது, ஒட்டு போடாமல் மொக்க படத்துக்கு டிக்கெட் வாங்கி பார்ப்பது , தண்ணி அடிப்பது என்பதே சினிமாவால் வந்தது என்று இவ்ளோ படித்தும் நாம் நினைப்பது சமூகம் என்பது பக்கத்துவீட்டுக்காரர் தான், நானில்லை என்று தனித்து வாழ்வது, என்னவோ பழமை தொலைந்ததால் இனிமே குப்பை வாரவே மாட்டோம், எக்கேடு கெட்டு போங்கள் என்று விட்டு விடுவது என்று இதெல்லாம் நாம் செய்யும் அட்டூழியங்கள் தானே .

நம்முடைய தவறுகளுக்கு , நாம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியவைகளுக்கு ,எதற்காக பழியை மட்டும் போடா வேண்டும் சினிமா மேல் ?

நம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் சமூகம் மாறும். நாடா பாவாடை தழைய தழைய , நாலாவது வகுப்பு பெண்ணே கட்டிய காலம் எங்கே ? உங்க பெண்ணுக்கு வாங்கி தந்து பெருமையோட வெளியில் கூட்டி போவீங்களா ?
சில பல மாற்றத்தோட நம் வசதிக்கு தக்க ஏற்ற இறக்கங்கள் செய்துக்கறோம் தானே.

ஹீரோயின் அரைகால் ஆடையோட வரும் படங்களுக்கு ஏன் போறீங்க. ? அப்படியே அது தவறு என்று உங்க கண்ணோட்டம் இருந்தா, அதே போலே தான் ஜீன்ஸ் போடுவதும் அசிங்கம் என்று சொல்ல ஒரு கூட்ட்டம் இருக்கு, சுடிதார் தேவையா என்று ஒரு சாரார் கேட்பாங்க.

கவர்ச்சி என்பது ஒன்பது முழ புடவையில் கூட இருக்கு, நாம் அணிந்து கொள்ளும் விதம் தான் முக்கியமே தவிர, என்ன ஆடை என்பது இல்ல.
அந்த காலத்தில் எல்லா ஆடைகலுமே கவர்ச்சி தான். ப்ளவுஸ் எல்லாம் உடம்போடு வைத்து தைத்தார்களோ என்று இருக்கும்.

சமீபத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டர் (சரோஜா ) சொன்னது ,அவங்க க்ரூப் டான்சரா இருந்தப்ப

புதர் மறைவில் தான் ட்ரஸ் மாற்ற வேண்டியிருக்கும்
வசதியே இருக்காது. ரொம்ப நேரம் கழிவறைக்கு கூட போக முடியாது.
ஒரு முறை அக்குளில் வியர்வைவந்து தெரியுது காமிராவில் என்று எல்லார் முன்பும் ஒரே திட்டு .

எவ்வளவு கஷ்டம் அத்தனை பேர் முன்பும் அவமானபடுத்த பட்டும் அவங்களுக்கு எல்லாம் வெளிச்சம் கிடைக்க ரொம்ப நாளாச்சு.
இப்போ எல்லா யூனியன் இருக்கு,
மக்கள் மத்தியில் அவங்களுக்கு ஒரு மரியாதை இருக்க தானே செய்யுது. பழைய ஆர்டிஸ்ட் எல்லாம் சிறந்தவங்க இல்ல என்று சொல்ல வரலை. ஆனா தன உரிமையை கேட்கவே பயந்தான்களே ?
குரல் கொடுத்து ஒரு தனி இடம் கிடைக்க இந்தக்கால சினிமா ஒரு வழி வகுக்குது .

நன்றி

வாருங்கள் பாரதி வருகைக்கு மகிழ்ச்சி.......பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வந்து நிறை குறைகளைக்கூறியுள்ளீர்கள்.....மீண்டும் வாதங்களுடன் வாருங்கள்.......

வாருங்கள் நிக்கி கொஞ்சம் குழப்பிட்டீங்க. இறுதியில் தெளிவாக்கிட்டீங்க நீங்க அந்தக்கால அணின்னு.....மீண்டும் வாங்க....

அப்பப்பா எம்புட்டு நல்ல படங்கள் வந்திருக்கு....அட புடவையை பற்றிய விளக்கம் இலவசமா.......?இன்னும் என்னென்ன இருக்கு சொல்லுங்கப்பா......

/////காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ஒரு திகில் காட்சியை விவரிப்பார் அந்த நகைச்சுவைக்காட்சிக்கு ஈடான ஒரு காட்சியை இப்பொதிலிருக்கும் படத்தில் இருந்து எதிரணி தோழிகளை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்...... ஒருவரின் உடலமைப்பை எள்ளி நகையாடுதல், ஊனத்தை கிண்டல் அடித்தல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல், இரு அர்த்த வசனங்கள் போன்றவை தான் இக்கால நகைச்சுவை.... அதை பார்த்து பார்த்து அவையெல்லாம் தவறல்ல என்றே ஆக்கிவிட்டது........ /////
ஆமாம்ப்பா நானும்கூட பல படங்களில் பார்க்கிறேன்.....இப்படி பண்ணினா அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமில்லையா.....? ஏன்ப்பா இப்படி சீன் வைக்கிறாங்க இக்கால படங்களில்......?அந்த சீன அடுச்சுக்க முடியுமா பிரியா.......ஜல்ஜல்ஜல்........ஊஊஊ.......

அபிராமி...அபிராமி.......

அவ்வளவு விஷயங்களுக்கும் பதில் கொடுத்துட்டாங்க இக்கால அணியினரே.....புதிய கேள்விகளோ, விவாதங்களோ இருப்பின் முன்வையுங்கள்......

பதிலுக்கே பதிலடியா பலே பலே பட்டி சலசலக்குதுடோய்.....

////*கவர்ச்சி என்பது இப்போ கிளாமர் அவ்ளோ தான் வித்தியாசம் . ஆனா என்ன இதில் வேறுபாடு என்றால் கவர்ச்சி நடிகை கவர்ச்சி மட்டுமே காட்ட முடியும், அவருக்குள் நடிப்பு ஆற்றல் இருந்தா கூட , யாரும் ஒரு கேரக்டரை கொடுக்க மாட்டாங்க. ஐடம் சாங் ஆட மட்டுமே அவங்க. சமூகத்த்தால் இழிவு படுத்தப்பட்டாங்க. எவ்ளோ வேதனைகள் , பணக்கஷ்டத்துக்காக நடிக்க வந்து , தவறாக யூஸ் பண்ண பட்டாங்க .வெளியில் சிலவற்றை சொல்லவே பயப்படுவாங்க. ஜோதிலட்சுமியை பாட்டி வேடம் போடட்ட கூட கவர்ச்சியா தான் யூஸ் பண்ணும அளவு போயாச்சு .
இப்போ பெண்கள் தெளிவா இருக்காங்க , தனக்கு என்ன தேவை என்பதில் கூட.
கிளாமர் தாலா இருந்த ரோஜாவுக்கு , அழகான பாத்திரம் கொடுத்த விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் எந்த கால படம். நாம் ஆதரவு கொடுக்கலையா என்ன ? இல்லை அவங்க நடிக்க தான் மருத்தாங்களா? அதே போலே பானுப்பிரியா, குஷ்பு இவர்களின் நடிப்பு திறனை வெளிக்கொண்டு வந்த இயக்குனர்கள் இந்த காலத்தை சேர்ந்தவங்க தான் .////

வெறும் கவர்ச்சி காட்டும் பெண்களுக்குள்ளும் திறமையை வெளிக்கொணர்வது இக்கால இயக்குனர்களின் படம்தானே....... என்ன அக்கால அணி இதை ஒத்துக்கரீங்களா......உங்க எதிரணி கேட்கராங்கப்பா....

அட இத்தனை விதங்களில் புதுபடங்கள் வெளியாகி உள்ளனவே....அக்கால அணியினரே போய் பாருங்க பார்த்துட்டு இளைமையோட வந்து பதிவு போடுங்க. அணி மாறிடுவீங்கன்னு நானில்லை இக்கால அணியினர் சொல்றாங்கப்பா.......

////ப்ரியதர்ஸனோட “காஞ்சிவரம்” படம் எத்தனை பேர் பார்த்திருப்பீங்க ????. அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்ததாவது நம் எதிரணியினருக்கு தெரியுமா? எதிரணித் தோழிகளே இப்பவாவது போய் பாருங்க. இதை போல் எத்தனையோ நல்ல படங்கள் உள்ளது. இன்னும் பழைய பாட்டையே பாடமல் இக்கால படங்களையெல்லாம் பார்த்து எப்போதும் இளமையா இருக்க முயற்சி பன்னுங்கோ///

காஞ்சிவரம் யாராவது பாத்தீங்களா.?எவ்வளவு நல்ல படம் (நடுவருக்கு ஒரு காப்பி அனுப்பறது)

மேலும் சில பதிவுகள்