***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

ஆடைக் குறைப்பு இந்த கால சினிமாவில் மட்டுமா இருக்கிறது. அந்த காலத்தில் சினிமாவில் உடுத்திய சுடிதார் ப்ளவுஸ் பாட்டர்ன்தான் இப்பொழுது பேஷனாக உள்ளது. இதற்க்கு என்ன சொல்றீங்க? அந்த காலத்தில் திரைப்படங்களில் நாயகிகள் மட்டும் இல்லை நடுவரே நாயகர்களும் இப்பொழுது உள்ள சல்மான் கான்களை தோற்கடிக்கும் அளவிற்கு தான் உடுத்தியிருந்தார்கள். அந்த கால நாயகிகளும் பாம்புக்கு சட்டை போட்டது போல் தான் போட்டிருப்பார்கள். தைத்து போட்டார்களா இல்லை போட்டுட்டு தைத்தாங்களான்னு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

நமக்கு ராஜாக்கள் எப்படி இருப்பாங்கன்னு கதைகளில் படித்து தான் தெரியும். அதை கண்முன் கொண்டு வந்ததே அந்தக்கால சினிமா தான். நமக்கு தெரிந்த வரையில் ராஜாக்கள் என்றால் நம்ம கட்டபொம்மன் சிவாஜி ரேஞ்சுக்கு தான் கற்பனை பண்ணுவோம். ஆனால் இப்பொழுது வந்துள்ள சினிமாவாகிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உள்ளது போல் தான் அந்த காலத்தில் நிஜத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன இவர்கள் நமக்கு அப்பொழுதே உண்மைக்கு கலாச்சராதுக்கு அரிதாரம் பூசி தான் மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார்கள். அப்புறம் எப்படி அந்த ரீலை (சினிமா ரீலை சொன்னேங்க....) முற்றிலும் உண்மை என்று எடுத்துக் கொள்வது.

அந்த காலத்தில் ஏன் ராஜா படையெடுத்தல் இப்படி பட்ட கதை, அடுத்த வீடு அம்புஜம் புடை வாங்கிய கதை, பக்கத்துக்கு வீட்டில் ஒரு நடிகை குடியேறினால் என்னவாகும் என்றெல்லாம் தான் கதையாக வெளி வந்தன. இதெல்லாம் எதை காட்டுகிறது. அந்த கால சமுதாயத்தில் நடந்த நடிக்கிற சாதாரண விஷங்களை தான் பிரதிபலிக்கின்றன. அதே போல் இந்த கால சினிமாவில் பழி வாங்குவதற்காக ஆசிட் ஊற்றுதல், படிப்பை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள், அரசியல் ஆதாயங்களுக்காக பஸ் எரித்தல் என்று இந்த காலத்தில் நடக்கும் நிகைவுகளை வெளித்திரையல் படம் பிடித்து காட்டுகிறார்கள். அதனால் என்ன தப்பு? அப்போ செய்தித்தாள் வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா?

எந்த ஒரு திரைப்படத்தின் கதை எங்கிருந்து எடுக்கப்படுகிறது? சமுதாயத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அல்லது ஏற்க்கனவே புனைக்கப்பட்ட ஒரு நாவல், அல்லது ஒரு கலைஞனின் கற்பனையில் உருவாகிறது கதையின் கரு. அப்படியிருக்க அந்த கால படத்தில் மட்டும் சமுதாய விழிப்புனர்ப்பு இருப்பது இப்பொழுது உள்ள படத்தில் எப்படி இல்லை என்று சொல்லி விட முடியும். சொல்லப் போனால் சமுதாய சீர்க்கேடுகள் இப்பொழுது தான் அதிகமாக உள்ளது. அதற்க்கு காரணம் சினிமா என்றால்....அப்போ அந்த கால சினிமா தானே அதற்க்கு காரணம்? அதை பார்த்து தானே கேட்டுப் போயிருப்பார்கள். அதை திருத்த தானே இப்போ படங்கள் உருவாகுகின்றன.

ஒரு பேட்டியில் ஒரு இசையமைப்பாளரிடம் ஏன் இப்படி புரியாத பாஷை போட்டு பாட்டு எடுக்குறீங்களே என்று கேட்டதற்கு அவர் சொன்னார் " பாட்டில் உள்ள வார்த்தைகள் இசை பெரியவர்களை கவரும் , சின்ன பசங்களை எப்படி கவர்வது என்று யோசித்தோம், அப்பொழுது வந்தது தான் இந்த அர்த்தமில்லாத வார்த்தைகள்" என்றார். சோ இதிலிருந்து என்ன தெரிகிறது? காலம் மாறிவிட்டது இப்பொழுது நாம் எல்லோருடைய அறிவுக்கும் ரசனைக்கும் தீனி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சினிமா எதற்க்காக? இது ஒரு கலை சேவை. அதை இந்த கால சினிமா செவ்வனே செய்கிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பலே பிரியா பலவற்றையும் நயம்பட சொல்லியிருக்கீங்க....சிவாஜி,கந்தசாமியில் கொஞ்சம்(ரொம்பவே ஓவர்தா) ஜாஸ்திதான்ப்பா.

பட்டி தொட்டியிலும் பாமரரும் வயலில் கலைப்பாற்றவும் நிறைய பாடல்கள் அந்தகாலத்தில் பரவியுள்ளனன்னு அக்கால அணி வாதங்களாஇ குவிக்கின்றனர்.....
சந்தேகத்தை தீர்த்துவிட்டேன் பிரியா...மீண்டும் வாருங்கள்.....

ஏங்க அந்த காலத்தில் ஹீரோயின்ஸ் போட்ட ட்ரெஸ் அத்தனையும் டைட் பிட்டிங் தான் சுடிதாரா இருந்தாலும் சரி புடவையா இருந்தாலும் சரி, ஏன் அதில் அப்படியே அவங்க உடல் அமைப்பு தெரியலையா? ஆடையை குறைத்து உடம்பை காட்டனும்னு அவசியம் இல்ல இப்படி டைட்டா போட்டு உடல் அமைப்பை காட்டினால் அதுவும் மற்றவர்களை முகம் சுலிக்க வைக்காதா? அதற்கு பெயர் கவர்ச்சி இல்லையா?
///இக்காலத்தில் இழுத்து போர்த்தி கொண்டு நடிக்கும் கதாநாயகி நடிகைகள் என்று யாரேனும் ஒருவரை காட்ட இயலுமா ?///
இந்த காலத்து நடிகைகள் தன் நடிப்பால் மட்டுமே புகழ் அடைஞ்சிருக்காங்க, ஷாலினி, கோபிகா, அனன்யா, கெளசல்யா, ஸ்வாதி, மீரா நந்தன், இனியா.

இம்சை அரசன் படம் பார்த்துட்டு நீங்க விழுந்து விழுந்து சிரிக்கலன்னு சொல்லுங்க பார்ப்போம், தலைநகரம் பார்த்து பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்பெண்ட் வீக்கு இந்த வசனைத்தை சொல்லாதவர்கள் கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னான் இத நீங்க ரசிக்கல, மாப்பிள்ளை படம்(தனுஷ் நடிச்சது) அதுல விவேக் பார்த்தாலே சிரிப்பு தான் வரும், மாயி படத்து வசனத்த மறந்திருப்பீங்க - மாயி அண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கை சாமி வந்திருக்காங்க......, கோவை சரளா அடிக்காத காமெடியா - சினேகிதனை சினேகிதனை(ஷாஜகான் படம்), அவ்வைசண்முகி, வசீகரால வ் இஜய் வடிவேலு ஜோக், மைக்கேல் மதன காமராஜன் அப்பப்பா இதுல இருக்கற காமெடிக்கு அளவே இல்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்ச கதைலாம் இருக்கும்
///திருமணத்திற்கு முன்பே ஆண் பெண் உறவு, பள்ளி படிக்கும் சிறுவன் கையில் கத்தி இதெல்லாம் எதற்காக ? தற்போது ஒரு மாணவன் ஆசிரியைஏ குத்தி கொலை செய்தது தெரியும். எப்படி அவன் மிகச் சரியாக அவர்களை ஒரே குத்தில் கொன்றான் ? ஆள் ஸ்பாட் அவுட். இது எப்படி ? எங்கு பயின்றான் இதை ? உங்கள் இக்கால படங்கள் மூலமாக தானே ?/// இவையெல்லாம் நடப்பதற்கு சினிமா மட்டுமே காரணம் என்று சொல்வதை ஒத்துக்கொள்ள முடியாது சும்மா சினிமாவை சாட வேண்டும் என்பதற்காக சொல்லவேண்டாம், அந்த பிள்ளைகள் வளர்ந்த சூழ்நிலை, அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்கள், அவர்களுடைய பெற்றோர்கள், அவர்களின் நண்பர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சும்மா பிள்ளைங்க சினிமாவை பார்த்து கெட்டு போறாங்கன்னு சினிமாவை குறை சொல்லாதீங்க தோழிகளே நம் பிள்ளைகளுக்கு சிறந்ததை கொடுக்க வேண்டியது நம் கடமை தானே. அந்தகால சினிமா தான் பெஸ்ட்னு சொல்றீங்கல்ல அந்தகாலத்தில் மோசமான சினிமா இல்லைனு சொல்ல முடியாதுல அதுல பெஸ்ட்ட தான நீங்க எடுத்துக்கிட்டீங்க, உங்க பிள்ளைகள் ஒன்னும் 70 வது களில் இல்லையே இந்த காலகட்டத்தில் தானே இருக்காங்க அதில் சிறந்தது நிறையவே இருக்கு அதில் அவர்களை வழிநடத்துங்கள் சிறந்த சினிமாவை அவர்களுக்கு காட்டுங்கள்.

தொடர்ந்து சரவெடிபோல உதாரணங்களையும்,பிரம்மாண்டங்களாஇயும் கொடுத்து கொண்டுள்லார் உதிரா..வாழ்த்துக்கள்.....தொடருங்கள் உங்களின் அடுத்தகட்ட வாதங்களை......

////மக்களின் ரசனை என்ன பெண்ணை அரைகுறையாய் காட்டுவதா? எதிரணி பெண்கள் எல்லாம் அப்போ கதையின் நாயகி போடும் உடைகளை போட்டு வெளியே வருவார்களா ? இப்போ எல்லாரும் சுடிதார் , ஜீன்ஸ் போடுறாங்க. சரிதான். ஆனா அது உடம்பில் சரியான இடத்தில் தான் அணிந்து வருகிறார்களா ? எல்லாம் லோ ஹிப். அப்போ பார்க்குற பசங்க சும்மாவா இருப்பாங்க ?
" ஹே பார்ட்டி நல்ல பார்ட்டி தான்" அப்படின்னு பாட்டு பாட மாட்டனுங்க ? இப்போவெல்லாம் அதுக்கும் மேல என்ன என்னமோ நடக்குது. " சரியா உடை உடுத்தாத பெண்ணும், சகத்தில மாட்டுன காலும் நல்ல படியா வீடு பொய் சேர்ந்ததா சரித்திரமே இல்ல"///

அப்பா என்ன பஞ்ச்சுடா சாமி(ரவி பாணியில் படியுங்க)

////"மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் - நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் - புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது - இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது"

இதுக்கு இணையா எந்த பாடுங்க வரும் ? கல்யாண வீட்ல இப்போ உள்ள லேட்டஸ்ட் பாட்டு போட்டா எப்படி இருக்கும் கொஞ்சம் யோசிங்க ?///

இப்ப எதுனா பாட்டிருந்தா சொல்லுங்கப்பா........

நடுவரே
சினிமா என்றாலே அது ஒரு பொழுது போக்கு சாதனம் .பொழுது போக்கும் அதே சமயத்தில் நல வழியையும் கட்டுவதாய் இருக்க வேண்டும்
கதை : அக்காலம் -நல்ல அறிவுரை கூறும்.நல்ல பண்புகளை வளர்க்கும்
இக்காலம்-நேரம் போகும் அவ்வளவே .

பாடல் : அக்காலம்- மறக்கமுடியாத உள்ளதை கொள்ளை கொள்பவை .
இக்காலம்-புரியாத வார்த்தைகள் .சீசன் பாடல்கள்.

காமடி: அக்காலம்-சிந்திக்க வைக்கும் .வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
இக்காலம்-சரியான பிளேடுங்க

நடனம்: அக்காலம்-நட்டியகலை வல்லுனர்களின் விருந்து
இக்காலம்-ஆபாச அசைவு,குத்தாட்டம்

காஸ்ட்யும் :அக்காலம்-குழந்தைகளுடன் பார்க்கலாம்
இக்காலம்-கொஞ்சம் ஓவர் தான்

இசை: அக்காலம்- மென்மையானது.மனதை மயக்கும்
இக்காலம்-செவிப்பறை கிழியுது போங்கோ

ஒளிப்பதிவு: அக்காலம்-
இக்காலம்-

:ரிசல்ட்: அக்காலம்- குடும்பத்தோட பாருங்க .மீண்டும் மீண்டும் பாருங்க
இக்காலம் -தியேட்டருல கஊட்டமே குறைந்து போச்சே

(ஒளிப்பதிவு குறித்து நோ கமெண்ட்ஸ் ஹி ஹி )

;

இக்கால உதிராவே வாழ்க.....இக்கால கட்ட சினிமாவில் உள்ள உரிமைகளையும்,அவை எப்படி இந்த அளவுக்கு யாரால் வந்ததுன்னும் சொன்னீங்க..... மீண்டும் வாங்க வாதங்களோட.....

///அந்த கால நாயகிகளும் பாம்புக்கு சட்டை போட்டது போல் தான் போட்டிருப்பார்கள். தைத்து போட்டார்களா இல்லை போட்டுட்டு தைத்தாங்களான்னு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். ///
இவையெல்லாம் இக்கால படங்களில் மட்டும் உள்ளதுபோல பேசரீங்களே....ஜகன்மோகினி, ஜெமினிபடம் சிம்லால வருமே அது இப்படி நானும் இருக்கௌடை சினிமா பார்த்துள்ளேன்........(அரசியல்ல இதெல்லா சாதாரணம்ப்பா இருஅணிகளும் நடுவர் போட்டுவாங்குவதை கண்டுக்ககூடாது...ஹி,.ஹி.....)

உமா வந்திருக்காக.........உதிரா வந்திருக்காக.....லாவி வந்திருக்காக........இவங்க எதிரணியா, வனி வந்திருக்காக.....சீதா வந்திருக்காக.......பாரதி வந்திருக்காக.......இவங்க வாதங்கள் பார்த்து தீர்ப்பெழுத நடுவர் காத்திருக்காக...........

///இம்சை அரசன் படம் பார்த்துட்டு நீங்க விழுந்து விழுந்து சிரிக்கலன்னு சொல்லுங்க பார்ப்போம், தலைநகரம் பார்த்து பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்பெண்ட் வீக்கு இந்த வசனைத்தை சொல்லாதவர்கள் கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னான் இத நீங்க ரசிக்கல, மாப்பிள்ளை படம்(தனுஷ் நடிச்சது) அதுல விவேக் பார்த்தாலே சிரிப்பு தான் வரும், மாயி படத்து வசனத்த மறந்திருப்பீங்க - மாயி அண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கை சாமி வந்திருக்காங்க......, கோவை சரளா அடிக்காத காமெடியா - சினேகிதனை சினேகிதனை(ஷாஜகான் படம்), அவ்வைசண்முகி, வசீகரால வ் இஜய் வடிவேலு ஜோக், மைக்கேல் மதன காமராஜன் அப்பப்பா இதுல இருக்கற காமெடிக்கு அளவே இல்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்ச கதைலாம் இருக்கும்/////

சிப்பு.சிப்பா வருதுப்பா இப்படி காமெடியப்போட்டா நடுவர் டைப்பண்ண முடியாதாக்கும்........ஹி...ஹீ............ஹிஹிஹீ....ஹ.ஹ...ஹா.....

////அந்தகால சினிமா தான் பெஸ்ட்னு சொல்றீங்கல்ல அந்தகாலத்தில் மோசமான சினிமா இல்லைனு சொல்ல முடியாதுல அதுல பெஸ்ட்ட தான நீங்க எடுத்துக்கிட்டீங்க, உங்க பிள்ளைகள் ஒன்னும் 70 வது களில் இல்லையே இந்த காலகட்டத்தில் தானே இருக்காங்க அதில் சிறந்தது நிறையவே இருக்கு அதில் அவர்களை வழிநடத்துங்கள் சிறந்த சினிமாவை அவர்களுக்கு காட்டுங்கள்.////

சும்மா இக்கால சினிமாவ குறை சொல்லாதீங்கப்பா.....பிள்ளைகள சரியா வழிநடத்துங்க....... (சொல்லிட்டேன் உமா உங்க எதிரணிக்கு)

நிகிலா,
அட தீர்ப்பின் முன் சேகரித்து கொடுப்பதுபோல இருக்கே இன்னும் தீர்ப்பிற்கு நாட்கள் உள்ளனப்பா......:-)

மேலும் சில பதிவுகள்