***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

அன்பிற்கும் பண்பிற்கும் உரிய பிரம்மாண்டமான தீர்ப்பளிகப்போகும் நடுவர் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.......

நடுவர் அவர்களே...... எதிரணியினர் சொல்றாங்க

### // எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருக்கும்.//
நாடகங்கள் என்பன என்ன நல்லதன்மை உடையன இல்லையா ?
பல வித நாடக சபாக்கள் பார்த்து உணர்ச்சி பொங்கின மக்கள் இதை பார்த்தும் பொங்கி இருக்க வாய்ப்பில்லையா ?என்ன ?//// என்று......

நாடகக் கலை வேறு....... சினிமா கலை வேறு....... எதிரணியினரின் பதிலிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சினிமாவை இன்னும் நாடக ரேன்ஞ்லயே பார்த்துக்கொண்டிருக்காங்க.

நாடகத்தைப் பொறுத்தவரை அனைத்து விளக்கத்தையும் கலைஞர்கள் தான் வசனம், பாடல் மூலமாக எடுத்துரைப்பார். அதற்க்கு சப்போர்ட்டிங் தான் இசை.

ஆனால் இன்றைய சினிவாவில் வசனம் பேசிதான் அனைத்தையும் புரிய வைக்கனும்னு இல்ல. உதாரணத்துக்கு சொல்லனும்னா சென்றமாதம் ஃபேஸ்புக்ல ஒரு குறும்படம் வந்திருந்தது. அதில் விளையாட வேண்டிய வயதில் இருக்கும் குழந்தையின் ஆசையை கண்டுகொள்ளாமல் பெற்றோர் அவனை அவர்களின் விருப்பத்தை திணித்து முடக்குவர். கடைசியில் அந்த சிறுவனின் மனதைப் புரிந்து கொள்வர். இதுதான் கதை. அதில் அந்த சின்ன பையன் அவ்வளவு அழகா இயல்பு மாறாமல் முகபாவனையிலேயே அனைத்தையும் வெளிப்படுத்தி இருக்கான்.

அப்போ எல்லாம் வசனம் இல்லைனா பாடல்.... இதுதான் மாறி மாறி இருக்கும். ஒரு வெரைட்டியே இருக்காது.

###//தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லா படமுமே ஒரே மாதிரி தான் இருக்கும்.//
அப்படியா ?இந்த கால தொழில்நுட்ப வளர்ச்சியால் "கிராபிக்ஸ் "
எனப்படும் போர்வையில் பல பல பொய்காட்சிகளை உருவாக்குவது நல்லதா ?
ஆரோக்கியமானதா ?/////

கிராபிக்ஸ் தொழில்நுட்பம் சினிமாவிற்கு எவ்வளௌ பெரிய வரப்பிரசாதம். அதைபோய் நல்லதான்னு கேட்கறாங்களே....... இவங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.......நடுவரே........

கிங்காங், அனகோன்டா, ஸ்டூவர்ட் லிட்டில், ஸ்பைடர்மேன், day ஆப்டர் டொமாரோ, தெ host, ஹல்க், ஹாரிபாட்டர் மற்றும் பல படங்களை இவர்கள் என்ன சொல்வார்கள்னு புரியலையே.......

இப்படி மற்ற நாடுகளின் புதுமையை வாய் பிளந்து பார்த்தே பழகிய நமக்கும் தசாவதாரத்தில சுனாமி சீன்,
ரோபோல ஆயிரக்கணக்குல ரோபோ வந்து சண்ட போடுற சீன், ஹெலிக்காப்ட்டர்ல இருந்து குதிக்கற சீன்,
முதல்வன் படத்தில் வரும் முதல்வனே பாடல் காட்சி, இப்படி பல காட்சிகளில் நம் தமிழ் சினிமாவை உலக மக்களும் பார்க்கும்படி காலம் வந்துள்ளதே......

இதெல்லாம் வரப்பிரசாதம் இல்லையா........

###ஒருசில வசனங்களைத் தவிர மற்ற வசனங்கள் எல்லாம் சாதாரன நடைமுறையில் பேசக்கூடிய வசன நடையிலேயே இருக்காது.

அதைத் தான் நாடகத்தன்மை என்கிறோம்.

### எல்லா பாடல்களுமே மோசம் என்று சொல்லுவது ரொம்ப தவ்று.......(ஹி...ஹி...ஹி... நீங்களும் பாட்டு பட்டியல் இட்டுட்டீங்>ளானு சொல்லுற உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது)

>கனாகாண்கிறேன் கனாகாண்கிறேன் கண்ணாளனே
>காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா
>ஆசப்பட்ட எல்லத்தையும் காசிருந்தா வாங்கலாம்
>மயிலிறகே மயிலிறகே
>என் நெஞ்சிலொரு பூ பூத்தததன் பேர் என்னவென்று .கேட்டேன்
>கண்ணத்தில் முத்தமிட்டால்
>ஒரு தெய்வம் தந்த பூவே
>முதல் பனியா முதல் மழையா
>மார்கழிப்பூவேமார்கழிப்பூவே
>என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
>என் மனவானில் சிறகு விரிக்கும் வண்ணப் பறவைகளே
>தீந்தனனா தீம்தனனாதீம்தனனா தீம்தனனா தினனா
>காற்றுக்குள்ளே வரும் வாசம் போல எனக்குள் நீ
>சிறகுகள் நீளுது எங்கோ செல்ல
>சில இரவுகள் இரவுகள் தான் போகாபோகாதே
>உயிரே உயிரே
>கையில் மிதக்கும் காற்றா நீ
>ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
>நான் போகிறேன் மேலே மேலே......-நாணயம்
>என்னைக்கொஞ்சம் மாற்றி_காக்ககாக்க
>முன்பே வா என் அன்பே வா-ஜில்லுனு ஒரு காதல்
>பார்த்த முதல் நாளே-வேட்டையாடு விளையாடு
>மார்கழித் திங்கள் அல்லவா& அனைத்து பாடல்கள்- சங்கமம்
>சரசர சாரக்காத்து
>தரையிரங்கிய பறவை போலவே,மழையே மழையே-ஈரம்
>வின்னைத்தாண்டி வருவாயா படப் பாடல்கள்
>வாரணம் ஆயிரம் படப் பாடல்கள்
>ஆதவன், வேலாயுதம்

போன்ற பாடல்கள் எந்த விதத்தில் குறைசொல்லமுடியும்.

###//புதுமைகள் படைப்பதில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.//
புதுமைகள் இல்லாமலா ஒவ்வொரு படமும் வெற்றிபெற்றது .//

நடுவர் அவர்களே....... புதுமைகளுக்காக வெற்றி பெறவில்லை. அந்தகாலத்தில் உழத்து களைத்து வேர வழியில்லாமல் போய் பார்த்தாங்க மக்கள்.

ஆனா இப்போல்லாம் மக்களை தியேட்டர்க்கு குடும்பத்தோடு வர வைப்பதே பெரும் சவால். அது என்ன சவால் என்றால் உலகத்தின் எந்த மூலையில் நல்ல தரமான படம் வந்தாலும் தேடிப்பிடித்து பார்க்கும் ஆர்வம், வசதி பெருகிவிட்டது. நம்ம மொழியில் நல்ல படம் வரலைனா உடனே சற்றும் தயங்காமல் பிறமொழியில் உள்ள தரம் வாய்ந்த படங்களைப் பார்க்கின்றனர். எனவே நம்ம மக்களை திருப்திபடுத்தி பார்க்க வைப்பதில்தான் இன்றைய சினிமாக்காரர்களின் சாமர்த்தியம் இருக்கு. அதில் நவீன தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது.

### அன்றைய சினிமாத்துறையில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான டாமினேஷன் இருந்தது.

இது உண்மையில் யாருக்கும் தெரியாத ஒன்று. திருவிளையாடல் பதத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே பாட்டை உண்மையிலேயே எழுதியது ஒரு முஸ்லிம் கவிஞர். ஆனால் திரையில் பெயர்போடும்போது கண்ணதாசன் என்று தான் போட்டர்களாம். இந்துமத சம்பந்தமான பாட்டுக்கு ஒரு இஸ்லாமியர் எப்படி பாட்டு எழுதலாம் என்று இந்துக்கள் கோவிச்சுக்குவாங்க என்று பட நிர்வாகிகள் சொன்னதால் அப்படி நடந்ததாம். சோ அவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தது அந்தகாலத்தில்.

இந்த விஷயம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'வேர் ஸ் த பார்ட்டி" பாட்டை பாடிய பாடகர் கூறியது.

ஆனால் இப்போதெல்லாம் ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து எல்லோரும் எல்லாம் செய்யலாம் என்கிற சுதந்திரம் இருப்பதே ரொம்ப பெரிய சிறப்புதானே. அதனால்தானே ஏ.ஆர். ரகுமான் நமக்கு கிடைத்தார்.

###ரசனை, அறிவியல், தொழில் நுட்பம், பிரம்மாண்டம், காட்சியமைப்பு, இசை, கதை, எதார்த்தம் என அனைத்தையும் சிறப்பாக தந்துகொண்டிருக்கும் இந்தகால திரைப்படங்களே சிறந்தவை......சிறந்தவை.......சிறந்தவை............. என் கூறி விடைபெறுகிறேன் நடுவர் அவர்களே...............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

///அன்பிற்கும் பண்பிற்கும் உரிய பிரம்மாண்டமான தீர்ப்பளிகப்போகும் நடுவர் அவர்களுக்கு///
( அடிக்கடி இதசொல்லி வயித்துல ஏம்மா புளிய கரைக்கிற, 2நாள் வாதங்களிலேயே நான் ரொம்ப குழம்பியிருக்கேன்.....)

///கிங்காங், அனகோன்டா, ஸ்டூவர்ட் லிட்டில், ஸ்பைடர்மேன், day ஆப்டர் டொமாரோ, தெ host, ஹல்க், ஹாரிபாட்டர் மற்றும் பல படங்களை இவர்கள் என்ன சொல்வார்கள்னு புரியலையே.......

இப்படி மற்ற நாடுகளின் புதுமையை வாய் பிளந்து பார்த்தே பழகிய நமக்கும் தசாவதாரத்தில சுனாமி சீன்,
ரோபோல ஆயிரக்கணக்குல ரோபோ வந்து சண்ட போடுற சீன், ஹெலிக்காப்ட்டர்ல இருந்து குதிக்கற சீன்,
முதல்வன் படத்தில் வரும் முதல்வனே பாடல் காட்சி, இப்படி பல காட்சிகளில் நம் தமிழ் சினிமாவை உலக மக்களும் பார்க்கும்படி காலம் வந்துள்ளதே......///

பிரசாதமா பொங்கல் கொடுத்து அதுல நெவிட்டுட்டு சாப்பிட்டு ரசித்து பாருங்கள் என்பதுபோலல்லவா இருந்தது.

///..(ஹி...ஹி...ஹி... நீங்களும் பாட்டு பட்டியல் இட்டுட்டீங்>ளானு சொல்லுற உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது)///

மைண்டுவாய்ஸ் கேட்டா மட்டும் விட்டுடப்போரீங்களா..?இன்னும் என்ன சொல்லனுமோ சொல்லுங்க......

///திருவிளையாடல் பதத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே பாட்டை உண்மையிலேயே எழுதியது ஒரு முஸ்லிம் கவிஞர். ஆனால் திரையில் பெயர்போடும்போது கண்ணதாசன் என்று தான் போட்டர்களாம். இந்துமத சம்பந்தமான பாட்டுக்கு ஒரு இஸ்லாமியர் எப்படி பாட்டு எழுதலாம் என்று இந்துக்கள் கோவிச்சுக்குவாங்க என்று பட நிர்வாகிகள் சொன்னதால் அப்படி நடந்ததாம். சோ அவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தது அந்தகாலத்தில்.

இந்த விஷயம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'வேர் ஸ் த பார்ட்டி" பாட்டை பாடிய பாடகர் கூறியது.///

இவ்வளவு அரசியல் இருந்திருக்கா அப்பவே. அப்போ இப்போ...?(அடிக்க வராதீங்க சின்ன டவுட் அவ்வளவுதா.......)

///###ரசனை, அறிவியல், தொழில் நுட்பம், பிரம்மாண்டம், காட்சியமைப்பு, இசை, கதை, எதார்த்தம் என அனைத்தையும் சிறப்பாக தந்துகொண்டிருக்கும் இந்தகால திரைப்படங்களே சிறந்தவை......சிறந்தவை.......சிறந்தவை............. என் கூறி விடைபெறுகிறேன் நடுவர் அவர்களே............///

இங்கிட்டும் ஒரு முன் தீர்ப்பா அளும்பல் தாங்களடா சாமியோவ்.....

(இத்தன வாதங்களையும் கேட்டு இன்னும் ஸ்டெடியா இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவ்ர் நடுவரேன்னு ஒருவராவது சொல்ரீங்களா பாருங்க....)

அவரவர் அவரவர் வாதங்களில் ஈடுபாட்டோட இருக்கீங்க....வெரி குட்.....(ஆனாலும் உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு.....)

ஆஹா.... நடுவர் அவர்களே.......... நாங்களும் பாட்டு வச்சிருக்கோம்ல.........கேட்டுக்கோங்க.........

கும்மியடி... பெண்ணே கும்மியடி.......
கூடி குலவை போட்டு கும்மியடி.......(2)

குமரி பொண்ணுக்கு மாலை வரும்
கொழைஞ்சு கொழைஞு கும்மியடி.......
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி....

என்று கும்மியடிச்சு கல்யானப்பொண்ணை பாடியிருக்கொம்.

அப்புறம் ரொம்ப அந்த லொகேஷன்கு ஏற்ற மண்வாசனையோட சில்லுனு ஒரு காதல் படத்தில்

அவளுக்கென்ன அம்மாசமுத்திர ஐயர் ஹோட்டல் அல்வா மாதிரி
தாழம்பூவென தள தளவென வந்தா வந்தா....

அவனுக்கென்ன ஆழ்வார்குறிச்சி அழகுத்தேவரு அருவா போல
பர்மா தேக்கென பளபளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அட்i கும்மி அட்i கும்மி அடியோ...
கொட்டு போட சந்தம் போட கும்மியடியோ...

அடி ராசாயி ரோசாயீ ராசாமனி
நம்ம ராசாக்கு ராணி வந்துட்டா......

ரொம்ப சோக்கானது இந்த சோடிதான்னு
அந்த ஆத்தா தான் சேர்த்துட்டா...
ஓவல் வராமதான் நாம சுத்திபோடனும்....
சுடல மாடருக்குக் கடாயை நேந்து விடனும்...
நல்ல பொன்னான நாள் இதுதானே........

அவளுக்கென்ன........

பாருங்க நடுவர் அவர்களே....... எவ்வளவு இயல்பா அந்த மக்கள் பேச்சு வழக்கில் இருப்பதுபோலவே அதே பேச்சு வழக்கு வார்த்தைகளையே போட்டு பாடியிருக்காங்க.... இதுதானே எதார்த்தம் என்பது........

நடுவர் வர்களே........ இப்பவே தெணரிட்டீங்களா............ இன்னும் இருக்குங்கோ............ஓகே.........

இருந்தாலும் நீங்க ரொம்ப..........நல்லவ்ருங......(சொல்லிட்டோம்ல)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கும்மிஅடி கும்மிஅடி கும்மியடி ஹோ.... பட்டி படும் பாட்டபாத்து கும்மியடி ஹோ........... சும்மா இந்தகால பாட்டா எடுத்துவிடராங்க இக்கால திரைப்படமே அணி..எங்கப்பா ஓடிட்டீங்க அக்கால திரைப்படமே அணி..........

///(இத்தன வாதங்களையும் கேட்டு இன்னும் ஸ்டெடியா இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவ்ர் நடுவரேன்னு ஒருவராவது சொல்ரீங்களா பாருங்க....)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதேகேல்லாம் சோக கீதம் வாசிக்கப்படாது அரசியல்ள்ள இதெல்லாம் சாதரணமப்பா !!

நம்ம வாழ்க்கையில் அப்படியே கிடக்கும் காமெடிகளை அள்ளி விட்ட நம்ம கைப்புள்ள இருக்க வரை சிரிப்புக்கு பஞ்சம் ஏது?

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க ?
ஆணியே புடுங்க வேண்டாம்
பீ கேர்புல் நான் என்னை சொன்னேன் /
அவனா நீயி
அண்ணனை குளிப்பாட்டி பட்டி டிங்கரிங் எல்லார் பார்த்து ---
நானெல்லாம் ஓடற பச்சுலே கூட ஸ்டெடியா நிப்போம்ல
வொயிட் ப்ளட் சேம் ப்ளட்
ஐ அம ஸ்விங் இன் தி ரெயின் , ஐ அம காவ்ன் இன் தி ராயின்
< நான் என்ன சொன்னேன் நு கேட்ட எதுவுமே சொல்லைன்னு சொல்லிடுங்க >
நெக்ஸ்ட் டைம் வண்டி கொஞ்சம் பெரிசு : ட்ரெயின் பரவாயில்லையா >
இந்த குரங்கு பொம்மை என்ன விலை சார் அது உங்க முகம் சார் >
கேக்றான் அண்ட் மேக்றான் கம்பெனில வேலை பார்த்தேன் >
உஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே >
இந்த சில்வண்டு பேச்சை எல்லா கேக்க வேண்டிதா இருக்கே >

நடுவரே அக்கால காமெடி இக்கால காமெடி என்று வித்தியாசம் எல்லாம் சொல்ல முடியாது. நம்மை தன்னை அறியாமல் சிரிக்க வைக்கும் காமெடி எந்த காலம் ஆனால் என்ன , இப்போ கூட சிறந்த காமெடிகள் இருக்க தாங்க செய்யுது.
மேலே சொன்ன அனைத்தும் ஒரு வரி படிப்பதற்குள் அந்த காட்சி மனதுக்குள் வந்து நம் முகம் சிரிப்பாகிறதே அதுவே அந்த காமெடியின் வெற்றி தானே.
பாபு ச்நேக்க் பாபு என்பது வடிவேலுவின் வாய்சில் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் சிரிக்க வைத்தது தானே .

காமெடிகள் முகம் சுளிக்க வைப்பதாக இருந்தால் , நம்மை அறியாமல் நம் கை மாற்றி விடும் சிரிப்பொலி காமேடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சேனல், இப்போ உள்ள காமெடிகளும் நிறைய இடம் பிடிக்கவே செய்கின்றன ,

ஏன் , அந்த கால காமெடி மட்டுமே சிறந்தது என்றால் மனோ ஆச்சி எல்லாம் நடிக்க ஒத்துகொண்டிருக்கவே மாட்டங்க, இப்போவும் அவங்க காலத்துக்கேற்ற வாறு டயலாக் மாற்றி நடிக்கலையா என்ன ?

ஹீரோ ஹீரோயின் காமெடி செய்ய கூடாது என்பது போலே , அவங்களுக்கு உணர்ச்சி பிழம்புகளா மட்டுமே நடிக்க வாய்ப்பு இருந்தது . இப்போ எல்லாருமே எல்லா விதமான ரோல்ச்க்கும் தயார்.சின்சியரா இருந்தா மட்டுமே இந்த பீல்டுல நிலைச்சு நிக்க முடியும் என்பது இக்கலத்துக்கும் பொருந்தும் மை லார்ட் .

தெய்வ திரு மகளில் சந்தானத்தின் காமெடி கூட சிரிக்க வைத்து , படத்தோடு இழைந்தே இருந்தது .
நாகேஷ் கூட மகளிர் மட்டும் படத்தில் ,நடிக்காமலே காமெடி பண்ண வில்லையா /

இப்போ பாருங்க , நான் கூட தான் இம்புட்டு நேரம் சொல்றேன், திரும்பி ஜூம் போட்டு பார்த்தா யாரையும் காணலை .

எல்லாம் நாம் வாயை தொரந்தாலே எங்கியோ ஒடீறாங்க
டோர லாக்

என் கருத்து அக்கால திரைப்படங்களை விட இக்கால படங்களே சிறந்ததுன்னுதாங்கோ...மன்னிக்கவும்...
எனக்கு 4 நாளாக காய்ச்சல்..எனக்கு விட்டு பிள்ளைகளுக்கு இப்ப வந்திருக்கு...:(
அதனால ஆர்வமிருந்தும் பதிவுகள் போடமுடியல..பதிவு போடுமுன் பட்டி முடிஞ்சுடும்..அதான் ஒரு அவசர பதிவு..
சூழல் அனுமதித்தால் பட்டி முடியுமுன் பதிவு போடறேனுங்கோ

அருமையான தலைப்பை தந்த பூர்ணிமாவுக்கும்,எடுத்து நடத்தும் நடுவருக்கும்,வாதாடும் தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

காமெடி உதிரா.......
என்னா....திது.......சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.........நடுவரையே கலாய்சுட்டீங்களே.அதுசரி அழுமூஞ்சி நடுவர்னு சொல்லாம இருந்தா சர்தா........நடத்துங்கடா.....நடத்துங்கடா.....

//நடுவரே நான் மீண்டும் சொல்கிறேன் சினிமாவும் வாழ்க்கையும் ஒன்றல்ல// சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று நன்கு அறிந்த அந்தக்கால அணி ஆடை விசயத்திலும் தீயப்பழக்கங்களிலும் மட்டும் சினிமாவை குறை கூறுவது ஏன்?

// ஒன்னு நல்ல தெரிஞ்சுக்கோங்க நாடகத்துல இருந்து தான் படங்கள் வந்தது// ஒன்னுமே இல்லாத போது நாடகம் வந்தது அது வளர்ந்து சினிமா படங்கள் எடுக்கப்பட்டது. சினிமா வந்ததுக்கு அப்பறம் மேடை நாடகங்களையே மக்கள் அவ்ளவா விரும்பறது இல்ல. நீங்க சொல்ற அதே பழையகால நாடகதொனி வசனகளையும், நடிப்பையும் மட்டும் வச்சிட்டே ஓட்டிட்டு இருக்க முடியுமா... இக்காலமக்கள் கதைக்கு ஏற்ற எதார்த்தமான நடிப்பையே விரும்பறாங்க.சினிமாவும் வளர்ந்து இந்தகாலத்திருக்கு ஏற்ற மாதிரி மாறி தானே ஆகணும்.

//இப்போ தான் எல்லா படமும் ஒரே மாதிரி வருது. காதல் அப்படி இல்லைனா மனநோய்// நம்ம எதிரணியினர், காதல் அல்லது மனநோய் சம்பந்தப்பட்ட படங்களை மட்டும் தான் பார்த்திருக்காங்க போல. நட்பு, அண்ணன் தங்கை பாசம், அப்பா பொண்ணு பாசம், அம்மா மகன் அன்பு, மரியாதை, நகைச்சுவை, த்ரில்லர் என்று எவ்வளவோ படங்கள் எல்லாம் இருக்கு. அதையும் போய் பார்க்க சொல்லுங்க நடுவர் அவர்களே...

//இது இப்போ உள்ள சினிமால தான் நடக்குது. அந்த காலத்துல இருக்கும் போதேவா வெளிநாட்டுக்கு டூயட் பாட போவாங்க. இது எப்போங்க நடக்குது. இக்கால படத்துல தானே. கஞ்சிக்கே வழியில்லாத நாயகனும் நாயகியும் வெளிநாட்டுல குளிர்ல கூட அரைகுறையாய் ஆடுவாங்க. இதுதான் உங்க நடைமுறை வாழ்க்கையாங்க?// ஏங்க நீங்க குடுக்கற 50, 100 ரூபாயில சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், சீனா, கனடா, அமெரிக்கா நு எல்லாத்தையும் சுத்திகாமிச்சா சும்மா ஜாலியா சந்தோஷப்பட வேண்டியது தானே... விட்டா நீங்க சொல்ற கஞ்சிக்கு வழியிள்ளதவங்க கனவுல கூட வெளிநாட்ல டுயட் பாடக்கூடாதுன்னு சொல்லுவிங்க போல...

//கவர்ச்சி - அந்த காலத்துல எல்லாம் கவர்ச்சி நடிகை அப்படின்னு ஒருத்தர் தனியாவே இருப்பாங்க. அவுங்க கூட உடை உடுத்தும் போது ஸ்கின் டிரஸ் போட்டு இருப்பாங்க. ஆனா இப்போவெல்லாம் நாயகி தான் எல்லாம். பில்லா படம் பார்த்தீங்களா ? அதுல நாயகிக்கு ஏன் இப்படி உடை தரனும்?// இந்தகால நடிகைகள் எல்லாம் திறம்சாளிகள் ஆல் இன் ஆல். அவங்களால கவிச்சி மட்டும் இல்லை நடிக்கவும் முடியும்னு நிரூபிக்கறாங்க...

//இக்காலபடத்தில் வெறும் ஆபாசமே// ஆபாசம் பத்தி இவ்ளோ பேசுறாங்களே நம்ம அந்த கால அணியினர், ஏன் அந்த கால படங்களில் மட்டும் கை இல்லாத சுடிதார், கொசுவலை போன்ற துப்பட்டா அணிந்ததில்லையா? அதுவே இந்த மார்டன் உலகில் நாங்க அணிந்தால் மட்டும் ஆபாசமா? என்ன கொடுமை டா சாமி... நம்ம ஊரில் எத்தனை பொண்ணுங்க லோஹிப் ஜீன்ஸ் அணிந்து தொப்புள் தெரிய போவதை பார்த்திருக்கிங்க... ஏதோ சில 5% மேற்தட்டு வர்கத்தினர் பேஷன்னு சொல்லிடு இந்த மாதிரி ஆடைகளோடு திரியலாம். திநகர் ரங்கநாதன் தெருவில் என்ன மார்டன் ஆடைகள் தான் விக்கிறாங்களா? மற்றும் பெருநகரங்கள், கிராமங்களிலும் பெண்கள் என்ன லோஹிப் டிரஸ் போட்டுட்டு தான் திரியராங்களா? மீதி 95% மக்கள் தாவனி, சுடிதார், சேலை, ஜீன்ஸ் குர்தா வகையராக்கள் தான். என்னதான் சினிமாக்களில் ஆடைகள் குறைந்தாலும் நம்மோட அளவு என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும்.

குத்தாட்டம், குத்தாட்டம் நு கேள்வி கேக்குறீங்களே... பின்ன என்னங்க எப்ப பார்த்தாலும் பரதமும், இல்ல உங்க ஸ்லொ மோசன்ஸ் சாங் மட்டுமே ஆடிட்டு இருக்க முடியுமா... சும்மா ஒரு குத்து பாட்டு போட்டு பாருங்க, உங்க வீட்டு குட்டீஸ் கூட பாஸ்ட் பீட் டான்ஸ் ஆடும்.

அந்த கால கவிஞர் வாலி அவங்களை மட்டும்தான் நம்ம எதிரணியினர் பார்க்கிறாங்களா ... இக்கால வைரமுத்துவின் வரிகளுக்கு மயங்காதவரும் உண்டோ நு நீங்களே கேட்டு சொல்லுங்க நடுவரே...

ஓல்ட் இஸ் கோல்ட் எல்லாம் ஓகே தான். கிளாசிக் மாட்னி வார நாட்களில் தான் வருது.. சனி, ஞாயிறுகளில் இக்கால படங்களே போடறாங்களே... அப்போ மக்களின் ரசனை எதுன்னு நீங்களே சொல்லுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இக்கால இளவரசியா நீங்க.......
உங்க ஆர்வத்திற்க்கும் வருகைக்கும் மிக்க மிக்க நன்றிகள் இளா, உங்க ஓட்டும் இக்கால திரைப்படங்களுக்கா நல்லது நல்லது......முடிந்தால் கண்டிப்பாக வாருங்கள் வாதங்களை எதிர்பார்க்கிறேன்........வரனு.........ம்ம்......கண்டிப்பா வரனு.என்ன........(வடிவேலு ஸ்டைலுமா.....)வரும்போது குச்சி மிட்டா குருவி ரொட்டில்லா வாங்கிட்டு வரனு....

பார்டா....ஒரு பதிவுக்கு பதில் போட்டா அதுக்கு முன்ன மற்றொரு பதிவு வந்திருக்கு.....ஆனாலும் ரொம்பத்தா ஃபாஸ்ட்டுங்க இக்கால அணி......

///குத்தாட்டம், குத்தாட்டம் நு கேள்வி கேக்குறீங்களே... பின்ன என்னங்க எப்ப பார்த்தாலும் பரதமும், இல்ல உங்க ஸ்லொ மோசன்ஸ் சாங் மட்டுமே ஆடிட்டு இருக்க முடியுமா... சும்மா ஒரு குத்து பாட்டு போட்டு பாருங்க, உங்க வீட்டு குட்டீஸ் கூட பாஸ்ட் பீட் டான்ஸ் ஆடும்.///

ஏலே ஏலம்மா..ஏலே ஏலம்மா.......(விடு ஜூட் நானில்லப்பா உங்க எதிரணி பாடுராங்க)

மேலும் சில பதிவுகள்