தக்காளி ஊறுகாய்

தேதி: May 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (15 votes)

 

தக்காளி - 10 (அரை கிலோ)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

தக்காளியை முதல் நாள் இரவு நன்றாக அலசி, இரண்டாக நறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் கன்டைனரில் போட்டு 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து, கைபடாமல் குலுக்கி வைக்கவும். இரவெல்லாம் ஊறி தக்காளியில் நீர் விட்டிருக்கும். வேண்டுமானால் இந்த உப்பு நீரிலேயே ஊறுகாய்க்கு பயன்படுத்தப் போகும் புளியை போட்டு வைத்து விடலாம்.
அடுத்த நாள், தக்காளி துண்டுகளை ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு நீரையும் வெயிலில் வைக்கவும். மாலையில் தக்காளி துண்டுகளை அதே உப்பு நீரில் சேர்த்து மூடி வைத்து விடவும். மீண்டும் அடுத்த நாள் காலையில் தக்காளி துண்டுகள் தனியே, உப்பு நீர் தனியே பிரித்து வெயிலில் வைத்து காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் போதும். தக்காளி துண்டுகள் நன்றாக சுருங்கிவிடும். உப்பு நீரும் வற்றி இருக்கும்.
மிக்சியில் தக்காளி துண்டுகள், புளி மற்றும் வற்றியுள்ள உப்பு நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதில் அரைத்த தக்காளி-புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வெயிலில் காய வைத்திருப்பதால் தக்காளி விரைவிலேயே வதங்கி விடும்.
இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சரிப்பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.
இப்போது பொடித்து வைத்துள்ள கடுகு-வெந்தயம் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

தக்காளியை வெயிலில் காய வைத்து செய்வதால், ஊறுகாயை வெளியே வைத்திருந்தாலும் ஒரு மாதம் வரை கூட நன்றாக இருக்கும். கைப்படாமல், ஈர ஸ்பூன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஊறுகாய்க்கு தாளிக்கும் போது கடுகு, பெருங்காயத்துடன் 7-8 குண்டு மிளகாய் சேர்த்து தாளித்து விட்டால், மிளகாய்கள் ஊறுகாயின் புளிப்பில் ஊறி, மோர் மிளகாயைவிட மிகவும் சுவையானதாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

wow....super-a irukkudhu...ippave seyyapporen...

vazhga valamudan

தக்காளி ஊறுகாய் பேர்ல எத்தனை தோழீஸ் விதவிதமா செய்து காண்பிக்கிறீங்க. ஒவ்வொருத்துவங்க கைப்பக்குவத்துலையும் வித்தியாசம். ஊறுகாய்சூப்பரா இருக்கு ஹர்ஷா. ஊறுகாய்க்கு நிறத்துக்கு மேட்சிங்கா தக்காளி ரோஸும் அழகு. வாழ்த்துக்கள்.

அன்பு ஹர்ஷா,

சூப்பராக இருக்கு, பாக்கறதுக்கே. உடனே இந்த ஊறுகாய் கிடைச்சுதுன்னா, ஒரு தட்டு தயிர் சாதம் காலி பண்ணிடுவேன்.

சூப்பர், சூப்பர், அசத்துறீங்க!!

அன்புடன்

சீதாலஷ்மி

ஹர்ஷு

என் மனதில் இந்த குறிப்பும் இருந்ததுன்னு சொன்னா நம்பவா போறிங்க.. ;)
கலக்கலா இருக்கு.. கடைசி படம் ரொம்பவே அழகு ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தக்காளியில் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊறுக்காய் என்றால் விடவா போகிறேன். உங்களுக்கு (குழந்தைகளை வைத்துக் கொண்டு) ரொம்பவே பொறுமை தான். அடிக்கும் கொஞ்ச நஞ்ச வெயில் பார்த்து பார்த்து வைத்து எடுத்து சுவைப்பட ஒரு ஊறுகாய் செய்து அசத்தி இருக்கீங்க. முகப்பு படம் அசர வைக்கும் அழகு. எனக்கெல்லாம் ப்ரெசண்ட் பண்ண வராது வராதுன்னு சொல்லிட்டே கவித்துவமா ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

//ஐந்து ஸ்டாரும் கொடுத்துட்டேன். //

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சுதா,
முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி.செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.

வினோஜா,
இது எங்கள் வீட்டில்(அம்மா) செய்யும் முறை. மினி ரோசஸ் நல்லா இருக்கா? நன்றி ;-) உங்க பதிவுக்கும் மிக்க நன்றி வினோஜா.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
தயிர் சாதத்துடன் அட்டகாசமா இருக்குமே! உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றிங்க.

ரம்ஸ்,
’தக்காளி ஊறுகாய் - 3’ அனுப்பினால் தான் நம்புவேன். ;-) உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ரம்ஸ்.

லாவண்யா,
போன வாரம் எல்லாம் இங்கு சரியான வெயில்.அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன். ;-) //எனக்கெல்லாம் ப்ரெசண்ட் பண்ண வராது வராதுன்னு சொல்லிட்டே கவித்துவமா ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க.// பூக்களோடு சேர்ந்த நாறும் மணக்குது. ;-) மினி (tomato peel)ரோசஸும்,கொத்தமல்லி இலையும்தான்.உங்களுக்கு பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கும்,5 ஸ்டார் கொடுத்ததற்கும் ரொம்ப நன்றி.

தக்காளி ஊறுகாய் செம சூப்பரா இருக்கு உடனே சாப்பிடனும்னு ஆசையை தூண்டுது கடைசி படம் ரோஸோடு செம அழகு வாழ்த்துக்கள்....:-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாவ்... ஹர்ஷா, தக்காளி ஊறுகாய் - செய்முறை, படங்கள் எல்லாம் சும்மா சூப்பரா இருக்கு! :) உண்மையிலேயே அந்த கடைசிப்படம், ப்ரசண்டேஷனை பார்க்கும்போதே, ஊறுகாயின் சுவையை உணர முடியுது! :) அந்த குட்டி குட்டி தக்காளி ரோஸஸ், அழகான கொத்தமல்லி தழையின் பசுமையுடன்... லவ்லி! அத்தனை அழகா இருக்கு! பார்க்கிறேன், பார்க்கிறேன்... பார்த்துட்டே இருக்கேன்! :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஹர்ஷா!

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்வர்ணா,
மினி ரோஸ் ஐடியா திடீர்னு வந்தது.உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

சுஸ்ரீ,
உங்களை தான் எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன். :-) வந்துட்டீங்க.அந்த கிண்ணம் ரொம்ப குட்டி. அதான் ரோஸ் சைஸும் சின்னதாக்கிட்டேன்.உங்களுக்கும் பிடிச்சதில் சந்தோஷம். உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி சுஸ்ரீ.வாழ்த்துக்களுக்கும் நன்றி.

my fav.. En Mother in law Eatheye method la seivanga. En husband inaiku mrng than india la irunthu vantharu vanthathum na luggage open panni yeaduthathu eantha thakali urugai than idlli ku vachu sapudurean super punch ooda iruku afternoon ku curd rice ku. friends kandipa eatha try pannunga apaatam eathu ellima eathuvum yearagathu. Harshaa thanks for sharing such a nice receipe

தக்காளி ஊறுகாய் நல்லா செய்து காட்டி இருக்கீங்க. அவசியம் செய்து பார்க்கிறேன். ப்ரெசண்டேஷன்... சூப்பரோ சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அகிலா,
உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

வனிதா,
கண்டிப்பா செய்து பாருங்க.ரொம்ப சுலபம் தான்.ப்ரசண்ட்டேஷன் உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.பதிவுக்கு மிக்க நன்றி வனிதா.