4 மாத குழந்தை அவசர உதவி தேவை.........

என் பையன் பிறந்து நான்கு மாதம் ஆகிறது. இப்போது மூன்று நாளாக அவனுக்கு வெளிய (மலம்) போகவே இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? தாய் பால் மட்டும் தான் குடுகின்றேன்.நீர் நன்றாக போகிறது.டாக்டர் அவனுக்கு தண்ணீர் குடுக்க கூடாதுன்னு சொல்லி இருகாங்க ஆனால் வெயிலும் வெக்கையும் அதிகமாக இருக்கு. அவனுக்கு தண்ணீர் குடுக்கலாமா? எவ்வளவு குடுக்க வேண்டும்? உதவி செயுங்கள் தொழிகளே...........

என் குழந்தைக்கு இந்த பிரச்சனை இருந்தப்ப டாக்டர் சொன்னத உங்களுக்கு சொல்றேன். தாய் பால் மட்டும் குடிக்கிற குழைந்தை 1 வாரம் வரைக்கும் கூட மலம் கழிக்காம இருக்கலாமாம் அதுனால பிரச்சனை இல்லை. வயிற மட்டும் தொட்டு பாத்துக்கோங்க சாப்ட்டா இருக்கானு.கல்லு மாதிரி இருந்த டாக்டர் ட போங்க.கவலை படாம இருங்க. உங்க பாப்பா கு தண்ணி கன்டிப்பா குடுக்கனும்னு அவசியம் இல்ல.உங்களுக்கு குடுக்கனும்னு தோனிச்சினா சங்கு ல ஒரு சங்கு குடுங்க போதும் அதுகு மேல குடிக்கமாட்டங்க குழந்தைக.so dont worry.....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நீங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதாலும், சிறுநீர் நன்கு போவதாலும், மலம் வெளியேறாமல் இருப்பதற்கு பயப்பட வேண்டாம்... உலர் திராட்சை 2 ஐ நன்கு ஊறவைத்து 4 ஸ்பூன் மிதமான வென்னீரில் கசக்கி பிழிந்து வடிகட்டி அந்த தண்ணீரை ஸ்பூன் (அ) பில்லரால் கொடுக்கவும்.... கண்டிப்பாக மலம் வெளியேறும்... வெறும் வெந்நீரும் கொடுக்கலாம்... தப்பில்லை அப்பொழுது தான் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க பழகும் இல்லையேல் சிரமம் தான்... முதலில் 2 (அ) 3 ஸ்பூனாக ஆரம்பியுங்கள்...மிதமான சூடாக இருக்கட்டும்... காலை நேரத்தில் முதலில் கொடுக்கலாம்.... எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் கூழ் கொடுக்க ஆரம்பிக்கும் போது தண்ணீர் தர வேண்டும்... (எனக்கும் 5 மாத குழந்தை இருக்கிறது... )

எனக்கும் இதே பிரச்சன்னை தான், என் பையனுக்கு நாளையோட 3 மாதம் முடியுது, ஆனால் இது வரைக்கும் அவன் தினமும் மலம் போனதே இல்ல, 3 நாளைக்கு ஒரு தடவை, இல்லைன்னா 6 நாளைக்கு ஒரு தடவ தான் போறான் டாக்டரும் அதெல்லாம் ஒன்னும் பிரச்சன்னை இல்லன்னு சொல்லிட்டாரு அதனால் கவலை படாதீங்க சரி ஆகிடும்
--

அன்புடன் அபி

Please give some apple juice which comes as a packaged drink. Home made/ from juice shops are not advised. My Pediatrician in USA advised this and it worked for my baby.

மேலும் சில பதிவுகள்