குழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்

என் தோழி ஒருத்திக்கு 2 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது ,தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் துரியன் பழம் சாப்ட குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று அதன் பிறகு அவள் சாபிட்டால் இப்பொது அவள் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது .இத்தனைக்கும் அவள் வேற எதுவும் மருத்துவம் செய்யவில்லையாம் .அந்த பழம் பார்ப்பதற்கு பலா போன்று இருக்குமாம் ,விலையும் கொஞ்சம் அதிகமாம் 350 ,அது வருடத்திற்கு மிக குறைந்த பழங்கள் மட்டுமே விளையுமாம் அதுவும் உதகையில் விளையுமாம் ,சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் ல் கிடைக்கும் ,பெரிய பழ கடைகளில் கிடைக்கும் பழமுதிர்சோலை அந்த மாதிரி ,அந்த கடைகளில் கேட்டாலே அதனை பற்றி சொல்வார்கள் .

குறிப்பு
அந்த பழம் கடைகளில் வந்த சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுமாம் .

நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !

Dear Parvathi,

Please check Prema Haribasker's comment above,

//முக்கியமானவை :
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் துரியன் பழம் சாப்பிட கூடாது. குழந்தைக்கு எதிர் பார்ப்போர் பெண்கள் சாபிடாமல் உங்கள் கணவருக்கு குடுக்கலாம்.//

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி Welgin. நேற்று எனக்கு மாதவிலக்கு ஆரம்பம் அதனால் இந்த பலம் சாப்பிடலாம் என நினைத்தேன் ஆனால் இந்த நாளில் சாப்பிடலாமா என தெரியவில்லை. எத்தனையோ மாதங்கள் காத்திருந்தேன் அதனால் இன்னும் ஒரு மாதம் தானே என நினைத்தேன். என் கணவருக்கு BP இருக்கு அதனால் அவருக்கு இந்த துரியன் பழத்தை கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள். "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்று இருக்கிறேன்.

நீங்க டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிருக்கிங்களா? இதுவரை இல்லையென்றால் நல்ல டாக்டர் விசாரிச்சு கொஞ்சம் செக் பண்ணி பாருங்களேன். எதும் ப்ராப்ளம் இல்லைனா ஃபோலிக் ஆசிட் டேப்லட் மட்டும் தருவாங்க. எனக்கும் marriage ஆகி 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது. scan பண்ணி பார்த்தா cyst and fibroid இருந்தது. ஆனால் வெளிப்படையா எனக்கு எந்த symptomsம் இல்ல. எனக்கு நல்ல டாக்டர் கிடைச்சாங்க with God's grace. அதனால இப்போ ஒரு பையன் இருக்கான் 1 year and one month ஆகுது. 2 monthக்கு முன்னால laperoscopy பண்ணி fibroid remove பண்ணோம்.
கண்டிப்பா ப்ராப்ளம் இருக்கும்னு சொல்லல. டாக்டர் செக் பண்றது ரொம்ப நல்லது. எப்படி இருக்கணும், என்ன சாப்பிடணும்னு நல்ல அட்வைஸ் கிடைக்கும். நமக்கும் பயம் இல்லாம இருக்கலாம். ரொம்ப போர் அடிச்சுட்டேன்னு நினைக்கறேன். Bye Take care All the best for this month

உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கி பதில் அளித்தமைக்கு முதலில் நன்றி. நீங்க சரியாக கைட் பண்ணறிங்க. போர் எல்லாம் இல்லை. நாங்க டாக்டர் கிட்ட கன்சல்ட் செய்தோம். ஃபாலிக் ஆஸிட், விட்டமின் டீ, iron எல்லாம் எடுத்துக்கிறேன். எனக்கு pcos ,தைராய்ட் இல்லன்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் கொலஸ்ட்ரால் இருக்கு அதை உணவில் சரிசெய்து கொண்டிருக்கிறேன். ஹார்மோன் டெஸ்ட் ரிஸல்ட்காக காத்துகிட்டு இருக்கேன். Thanks.

உங்கள் டாக்டர் தர்ற tablets கரெக்டா சாப்பிடுங்க. ஹார்மோன் டெஸ்ட் ரிஸல்ட்டும் உங்களுக்கு favourஆ வரும். பயப்படாம, confuse ஆகாம follow பண்ணுங்க. நல்லா pray பண்ணுங்க. நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும். All the very best

ரொம்ப நன்றி. நீங்க சொல்கிறது போல செய்கிறேன். Thank you.

Hi enku marriage agi 6 months aguthu..but inum baby form agala..before mrg enku periods lam 4days continues ah irunthuchi..after mrg enku periods 2days dhan varthu..ethunala enku ethum prblm aguma?ellam durian fruit sapda soldranga..so etha sapta ena agum...pls rpl

want thurian palam

துரியன் பழம் பற்றிய முழு தகவலுக்கு கீழ்க்கண்ட தொடர்பிற்கு சேல்க,,

https://youtu.be/WKEBA7hlqO4

புதிதாக‌ இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்கு உதவும் என்று தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பருங்கள்.
http://www.arusuvai.com/tamil/policy
http://www.arusuvai.com/tamil/node/14918

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்