அடிக்கடி இரவில் குழந்தை முழிக்கிறான் pls help me.

தோழிகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!...என் குழந்தைக்கு 8 முடிந்து 9 மாதம் நடக்கிறது.கடந்த 1 மாதமாக இரவு 4 தடவை முழிக்கிறான். தாய்ப்பால் கொடுக்கிறேன்.இரவு 7 மணிக்கு baby pasta or cereal கொடுக்கிறேன்.அதற்கு மேல் பால் கொடுத்து துங்கவைப்பேன்.இதை மாற்ற என்ன வழி தயவுசெய்து உதவவும்.ஒரு நாளைக்கு 3 முறை உணவு கொடுக்கிறேன்

தூங்கும் முன் கொஞ்ச நேரம் விளையாட வைய்யுங்க.பிறகு வெதுவெதுப்பான தண்ணியில் மேல் கழுக வச்சுட்டு தூங்க வைய்யுங்க..ஜான்சன் &ஜான்சனில் நைட் பவுடர் கிடைக்குது லேசா உடம்புக்கு தேச்சு விட்டுட்டு தூங்க வைய்யுங்க சுகமா தூங்கும்.ஒரு வேளை பல் முளைக்கிறதால் தூங்குறதில்லையோ என்னவோ

நீங்க 7 மணிக்கெல்லாம் குழந்தைக்கு உணவு குடுத்திட்ரதாள அது இரவு தூங்குரதுக்குள்ள ஜீரணம் ஆகிடும். தளிகா சொன்ன மாதிரி செய்து தூங்கும் முன் வயிறு நிறையும் வரை பால்குடுத்து தூங்க வையுங்கள். இருந்தாலும் இந்த வயது குழந்தைங்க இரவில் 2 - 3 முறை முழித்து பால் கேட்பது சகஜமே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்