கிலிட்டர்ஸ் பாட் டிசைன்

தேதி: May 19, 2012

5
Average: 4.4 (12 votes)

 

மண் பானை
பேர்ல் பேப்பரிக் பெயிண்ட் பிங்க் நிறம்
ப்ரஷ்
கிலிட்டர்ஸ் - நீலம், பச்சை, மஞ்சள், மற்றும் கோல்டுநிறங்கள்
பென்சில்

 

கிலிட்டர்ஸ் பெயிண்டிங் செய்ய தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைக்கவும்.
மண்பானை முழுவதும் பிங்க் நிற பெயிண்ட் அடித்து காயவிடவும்.
பின்னர் பென்சிலால் தோகையுடன் கூடிய மயில் டிசைனை வரையவும். உடம்புக்கு நீலநிற கிலிட்டர்ஸூம், தோகைக்கு பச்சைநிற கிலிட்டர்ஸூம் கொடுக்கவும்.
மயிலின் கொண்டை, மூக்கு, இறகுகளுக்கு கோல்டுநிற கிலிட்டர்ஸ் கொடுக்கவும். தோகையின் உள்ளே பச்சைநிற கிலிட்டர்ஸால் சின்ன சின்ன வளைவுகள் வரைந்து உள்ளே மஞ்சள்நிற கிலிட்டர்ஸால் புள்ளி வைக்கவும். இதேப்போல் பானை சுற்றி இடைவெளிவிட்டு மூன்று மயில்கள் வரையவும்.
இரண்டு மயிலுக்கும் நடுவில் ஆறு பூக்களை இடைவெளிவிட்டு வரையவும். அந்த பூக்களின் இடையில் கொடிப்போல் வரைந்து அதன் இரு ஓரத்திலும் சின்ன சின்ன இலைகளை வரைந்து விடவும். இதேப்போல் மீதமுள்ள இரண்டு இடைவெளியில் பூக்களும், இலைகளும் வரைந்து முடிக்கவும்.
விரும்பினால் பூக்களின் நடுவில் ஸ்டோன் ஒட்டி அலங்கரிக்கலாம். மிக சுலபமாக செய்யக்கூடிய கிலிட்டர்ஸ் பாட் டிசைன் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அருமையான வொர்க் டீம் வாழ்த்துக்கள் பானைக்கு பிங்க் கலர் குடுத்து இருபது அருமையா இருக்கு கடைசி படம் மயிலிறகால் அற்புதம் by Elaya.G

டீம்....... உங்க வொர்க் ஒவ்வொண்ணும் அழகுதான்... மயிலை அதன் இறகுடன் காட்டி இருப்பது சூப்பர்... கடைசி படம் ஓவியம் போல இருக்கு

அன்பு டீம்,

அழகான வேலைப்பாடு. பானைக்குக் கொடுத்திருக்கும் பிங்க் நிறம், எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

அருமை!

அன்புடன்

சீதாலஷ்மி

அருமை...அருமை

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வாவ்...அழகான பானையில் மயில் டிசைன் செம அழகா இருக்கு.அதுவும் இரண்டாவது படத்தில் பானையின் பின்க் நிறம்- அசத்தல்.

மயிலிறகுடன் ப்ரசண்ட் செய்திருக்கும் ஐடியாவுக்கு ‘ஸ்பெஷல் பாராட்டுக்கள்’.ஐடியா யாருடையது?

வழக்கம் போலவே அருமையான க்ராஃப்ட். நேரம் அமையும்போது செய்து பார்க்கிறேன்.பாராட்டுக்கள் அறுசுவை குழு.

ரேவதி, பத்மா... சான்ஸே இல்ல... கடைசி படம் என்னை அப்படியே இழுத்துட்டு வந்துட்டுது. மயிலிறகு... போட்டோ... பானை... எல்லாம் எல்லாமே அழகு. டீம்னா டீம் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு பாட் டிசைன். எனக்கும் அந்த மெட்டாலிக் / பர்ல் பிங் பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்