கோல்ட் & ஐஸ்ட் காஃபி

தேதி: May 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.9 (8 votes)

 

கோல்ட் காஃபி
இன்ஸ்ட்டண்ட் காஃபி பவுடர் - 1 அல்லது 2 தேக்கரண்டி
சாக்லேட் சிரப் - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் - 4 அல்லது 5
ஐஸ்ட் காஃபி:
டிகாஷன் - ஒரு கப்
டிகாஷன் - ஒரு கப்
பவுடர்ட் சுகர் - சுவைக்கேற்ப
பால் - கால் கப்


 

கோல்ட் காஃபி தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். இன்ஸ்ட்டண்ட் காஃபி தூளுடன் சிறிது வெந்நீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
கண்ணாடி டம்ப்ளரின் ஓரத்தில் சாக்லேட் சிரப் ஊற்றி காய விடவும்.
ப்ளென்டரில் ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் காஃபி தூள் கலவையை ஊற்றவும்.
இதனுடன் தேவையான பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நுரை பொங்க நன்கு அடித்துக் கொள்ளவும். விரும்பினால் இதனுடன் சிறிதளவு க்ரீம் அல்லது (வெனிலா ஃப்ளேவர்) ஐஸ்க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை சாக்லேட் சிரப் ஊற்றியுள்ள கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
மேலே சிறிது இன்ஸ்ட்டண்ட் காஃபி தூள் தூவி பரிமாறலாம். சுவையான கோல்ட் காஃபி(Cold Coffee) தயார்.
ஐஸ்ட் காஃபி இதற்கு ஃபில்டர் அல்லது காஃபி மேக்கரில் தயாரித்த டிகாஷன் நன்றாக இருக்கும். முதல் நாளே டிகாஷனுடன் சிறிது பவுடர்ட் சுகர் சேர்த்து, ஆறியதும் ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடவும்.
அடுத்த நாள், ஃபில்டர் காஃபியில் டிகாஷன் தயாரித்து கொண்டு, ஆறியதும் 4 அல்லது 5 மணி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஒரு கண்ணாடி டம்ப்ளரில் தயாரித்து வைத்துள்ள காஃபி ஐஸ் க்யூப்ஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு டிகாஷன் ஊற்றவும்.
இதனுடன் மிக குறைவான அளவு பால் அல்லது க்ரீம் சேர்க்கவும். தேவையான அளவு பவுடர்ட் சுகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுவையான ஐஸ்ட் காஃபி(Iced Coffee) தயார். இதில் வெறும் ஐஸ் க்யூப்ஸ் போட்டால் சிறிது நேரத்தில் ஐஸ் கரைந்து காஃபியின் சுவை குறைந்துவிடும் என்பதால் இதில் காஃபி ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கிறோம். நீண்ட நேரம் வைத்து பருகும் போதும் ஐஸ் க்யூப்ஸ் கரைந்தாலும் காஃபியின் சுவை அப்படியே இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே ருசிக்கதூண்டுது வாழ்த்துக்கள் பிளஸ் ஒன் கிளாஸ் பார்சல் பிளீஸ் by Elaya.G

இந்த வெயிலுக்கு ஏற்ற காபி வகைகள்... பிரமாதம்... நிச்சயம் செஞ்சு பார்ப்பேன்....... ப்ரசன்ட் செஞ்ச விதம் அழகு......

அன்பு ஹர்ஷா,

வழக்கம் போலவே ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ப்ரசெண்ட் பண்ணியிருக்கீங்க.

ரெண்டு காஃபியும் சீஸனுக்கேற்ற ஸ்பெஷல் குறிப்புகளாக இருக்கு.

பிரமாதம்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஈஸியாவும் இருக்கும் வீட்டுல் இருக்கும் பொருட்கள் கொண்டு உடனே செஞ்சுடலாம் போல ஆனால் சாக்லேட் சிரப் இல்லையே அதுக்கு வேற ஆப்ஷனல் இருக்கா ஹர்ஷா. வாழ்த்துக்கள்

ஹர்ஷா''

வாழ்த்துகள். சூப்பரா இருக்கு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வெயிலுக்கு ஏற்ற அருமையான டிரிங்க்,ப்ரசண்டேஷன் சூப்பர்.வாழ்த்துக்கள்.

ஹர்ஷு

சூப்பர்.அறுசுவையில் நீங்கள் கொடுக்கும் குறிப்பை பார்க்கும் போது வெளியில் இருந்து எதுவுமே வாங்க தேவையில்லை.நாமே தயாரித்துவிடலாம் என் இருக்கிறது
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

unga coffe superrrrrr pakkave superaaa iruku iced coffee rombave differenta iruku

எனது குறிப்பை இவ்வளவு விரைவில் வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

இளையா,
நலமா? பார்சல் அனுப்பியாச்சு. :-) முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி மா.

ப்ரியா,
Well said! கண்டிப்பா இந்த வெயிலுக்கு ஏற்ற காஃபி தான்.என்னை போன்ற காஃபி பிரியர்களுக்காகவே இந்த குறிப்பு.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி ப்ரியா.செய்துட்டு பிடிச்சதானு சொல்லுங்க.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
ப்ரசண்ட்டேஷன் அந்த அளவுக்கு இருக்கான்னு தெரியலங்க.ஆனால் சுவை ரொம்ப நல்லா இருக்கும்.
//ரெண்டு காஃபியும் சீஸனுக்கேற்ற ஸ்பெஷல் குறிப்புகளாக இருக்கு.// உற்சாகமூட்டும் உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

உமா,
நானும் வீட்டிலுள்ள பொருட்கள் வைத்தே தான் செய்தேன். என்னிடமும் சாக்லேட் சிரப் ஸ்டாக் இல்லை. சேம் பின்ச். ;-)

கோகோ பவுடர் 1/4 தேக்கரண்டி,பவுடர்ட் சுகர் 2 தேக்கரண்டி,ஓரிரு சொட்டு பால்/தண்ணீர் சேர்த்து குழைத்து தேன் பதத்தில் செய்துக்கோங்க.இதனை சாக்லேட் சிரப்-க்கு பதிலாக பயன்படுத்தலாம்.கண்ணாடி டம்ளரின் ஓரத்தில் ஒரு ஸ்பூன் கொண்டு விரும்பிய டிசைனில் மெல்லியதாக ஊற்றி,அரை மணி நேரம் ஆறவிடுங்க.ஃப்ரீசரில் சில நிமிடங்கள் வைத்தாலும் உடனே கெட்டியாகிவிடும்.பிறகு கோல்ட் காஃபி ஊற்றி குடிக்கலாம்.

உங்க பதிவுக்கு மிக்க நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க. கொஞ்சம் பெரிய பதிவாயிடுச்சு. சாரி. :-)

மஞ்சு,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி மஞ்சு.பதிவுக்கும் நன்றி.

ரீம்,
இங்கு சம்மரில் அதிகம் குடிப்பது கோல்ட்/ஐஸ்ட் காஃபிதான். வாங்கி 2 - 3 மணி நேரம் வச்சு குடிப்பாங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ரம்ஸ்,
வீட்டில் செய்தால் நம்ம டேஸ்ட்டுக்கு செய்துக்கலாம்.என்ன தான் விதவிதமா காஃபி குடிச்சாலும் நம்ம ஊர் ஃபில்டர் காஃபிதான் பெஸ்ட். இல்லையா? .உங்க பதிவுக்கு மிக்க நன்றி ரம்ஸ்.

சத்யா,
இங்கு பெரும்பாலும் ஐஸ்ட் காஃபியில் பால்/க்ரீம் சேர்த்துக்க மாட்டாங்க.அப்படியே சேர்த்தாலும் குறைவா தான் சேர்ப்பாங்க.குறிப்பு உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.பதிவுக்கும் மிக்க நன்றி.

சூப்பர்... ரொம்ப நல்லா செய்திருக்கீங்க ஹர்ஷா... அந்த க்ளாஸில் ஊற்றி இருக்கும் விதம்... ப்ரொஃபஷனலா இருக்கு. சிம்ப்ளி சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ட்ரின்க்ஸ் பகுதியின் கீழ் ஒரு குறிப்பாவது அனுப்பனும்னு நினச்சுட்டு இருந்தேன்.இப்போ தான் அனுப்ப முடிந்தது.உங்க பதிவுக்கு மிக்க நன்றி வனிதா.

Dear harsha
i am new member for dis site,ver nice to see this and cook dis ,my childrens like this very much .

konu sella yedhum illai koduthu selvom unmayana nermai,kadamai,anbai

எனக்கு இப்பவே வேணும். இதோ கிளம்பிட்டேன். இப்போ செய்ய ஆரம்பித்தாலும் நான் அங்கு வருவதற்குள் ஐஸ் முதல் எல்லாம் ரெடியாகிடும். சகொலேட் இல்லாமல் அதற்க்கு மாற்று சொல்லியிருப்பது அருமை. ப்ரெசன்டேஷன் கலக்கல். ரெண்டு க்ளாசில் ப்ரெசென்ட் பண்ணி எனக்கே ரெண்டும் கொடுத்துட்டு உங்களுக்கு என்ன பண்ணுவீங்க?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுமி,
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

லாவண்யா,
இதோ ஃப்ரீசரில் வச்சாச்சு.கிளம்பிட்டீங்களா? //ரெண்டு க்ளாசில் ப்ரெசென்ட் பண்ணி எனக்கே ரெண்டும் கொடுத்துட்டு உங்களுக்கு என்ன பண்ணுவீங்க?//
எனக்கு தான் நீங்க விதவிதமா சூப் செய்து தருவீங்களே!

படங்களும் , விளக்கங்களும் அருமை. நீங்க கொடுக்கும் குறிப்பில் படங்கள் எப்பவுமே சூப்பரோ சூப்பர். பார்த்தவுடனே சாப்பிட தூண்டுது.

ஹர்ஷா,

இன்னொரு செட் க்ளாஸ்-சசும் சேர்த்து எடுத்து வைங்க, ஃப்ரீசரில்... நானும்
கிளம்பிட்டேனே! :)

சூப்ப்பர்ப் ப்ரசண்டேஷன், அட்டகாசமான படங்கள் (எப்போதும் போல), அருமையான விளக்கம். மொத்தத்தில் ஃபன்டாஸ்டிக்கா இருக்கு உங்க கோல்ட் & ஐஸ்ட் காஃபி! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வெறும் க்ளாஸ் மட்டுமே போதுமா சுஜா :P

சீக்கிரம் வந்துடுங்க.....இல்லைனா அதையும் நானே காலி பண்ணிடுவேன்.

(சாரி அன்பரசி)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆஹா... லாவண்யா, ஆனாலும் ரொம்ப பேராசை! ;)

'க்ளாஸ்-சசுக்கும்' என்று எழுத வந்து, ஏதோ தூக்க கலக்கத்தில,.. டைப்போ! :) ம்ம்...ம், எதுக்கும் சீக்கிரமே வரப்பார்க்கிறேன்! :D

அன்புடன்
சுஸ்ரீ

ரியலி சூப்பர்ப்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நசீம்,
எப்படி இருக்கீங்க? மீண்டும் உங்க பதிவு பார்த்து மகிழ்ச்சி. பதிவுக்கும் ரொம்ப நன்றி நசீம்.

சுஸ்ரீ,
பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ. வாங்க..வாங்க.கண்டிப்பா கிளாசஸ் மட்டுமில்லாமல் காஃபியும் கிடைக்கும்.இப்போ ஃப்ளைட்டை பிடிச்சாலும் அரை நாளில் வந்துடலாம். நம்ம லாவண்யாவை நம்பி வாங்க! நமக்கு சூப்பரா சமைச்சு தருவாங்க.

லாவண்யா,
எல்லா காஃபியும் நீங்களே குடிச்சுட்டு,தெம்பா சமைச்சு கொடுங்க.அது போதும். :-)

ஆசியா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.பதிவுக்கு ரொம்ப நன்றிங்க ஆசியா.

ஹர்ஷா
சாக்லேட் சிரப்பிற்கு பதிலா பூஸ்ட் வச்சி செய்திட்டேன்வெரி வெரி டேஸ்டி ஹர்ஷா.