அறுசுவை விருதுகள் - சிறப்பு இழை

அன்பு தோழிகளே... புதிதாக துவங்கப்பட்டிருக்கும் நீங்களும் வெல்லலாம் “அறுசுவை விருதுகள்” பகுதி பட்டிமன்றம் போல வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையோடு அதற்கென்று சில சட்ட திட்டங்களை, விதிமுறைகளை வகுத்து, நேர் வழியில் கொண்டு செல்ல விரும்புகிறோம்.

அதற்காகவே இந்த சிறப்பு இழை. இது மாதா மாதம் அவார்ட் வென்றவர்கள் பெயர்களோடு அப்டேட் ஆகும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, அரட்டை அடிக்கவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

அன்பு தோழிகளே... இனி இடம்பெற போகும் விருதுகள் இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த பதிவின் கீழே உள்ள பதிலளியை யாரும் தட்டி விட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். விருதுகளை தேர்வு செய்ய போகும் நடுவர்கள் கருத்துக்கு ஏற்ப இதை மாற்றும் தேவை ஏற்படலாம்.

நீங்களும் வெல்லலாம் அறுசுவை விருதுகள்:

1. யாரும் சமைக்கலாம் பகுதி விருதுகள் – பெஸ்ட் ப்ரெசண்டேஷன் & போட்டோக்ரபி அவார்ட், பெஸ்ட் ரெஸிபி அவார்ட்.

2. கூட்டாஞ்சோறு பகுதி விருதுகள் – பெஸ்ட் ரெசிபி காண்ட்ரிபியூட்டர் அவார்ட்

3. கைவினை பகுதி விருதுகள் – பெஸ்ட் க்ரியேட்டிவிட்டி அவார்ட்

4. சிறுகதை பகுதி விருதுகள் – பெஸ்ட் நரேட்டர் அவார்ட்.

5. கவிதை பகுதி விருதுகள் – பெஸ்ட் லிரிக்ஸ் அவார்ட்.

6. பட்டிமன்ற பகுதி விருதுகள் – பெஸ்ட் நியூ ஃபேஸ் அவார்ட், பெஸ்ட் ஆர்கியூமண்ட் அவார்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... எதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும் என்பது இப்போதே தீர்மானிக்கபடுவதால் எதன் அடிப்படையில் அவை விருது பெறுகின்றன என்பது திறந்த புத்தகம் ஆகின்றது. இதனால் பாரபட்சம் இன்றி விருதுகள் வழங்க உதவியாக இருக்கும் என்பதால் இங்கே பதிகின்றோம்.

இதன் கீழே இருக்கும் பதிலளியும் யாரும் தட்டி விட வேண்டாம் என் அன்போடு கேட்டு கொள்கிறோம்.

விருதுக்கான தகுதிகள்:

1. யாரும் சமைக்கலாம் பகுதி:

பெஸ்ட் ப்ரெசண்டேஷன் & போட்டோக்ரபி அவார்ட்: மதிப்பெண்: 8 (குறிப்பு + படங்களின் தெளிவு + படங்களின் அழகு + தனித்தன்மை)

பெஸ்ட் ரெஸிபி அவார்ட்: மதிப்பெண்: 8 (குறிப்பு + பொருட்களின் அவைலபிலிட்டி + தனித்தன்மை(அதாவது வேறு பட்ட குறிப்புகள்) + விளக்கம்)

2. கூட்டாஞ்சோறு பகுதி:

பெஸ்ட் ரெசிபி காண்ட்ரிபியூட்டர் அவார்ட்: மதிப்பெண்: 8 (தொடர் பங்களிப்பி + தனித்தன்மை + விளக்கம் + படம் இணைப்பு)

3. கைவினை பகுதி:

பெஸ்ட் க்ரியேட்டிவிட்டி அவார்ட்: மதிப்பெண்: 10 (தனித்தன்மை + அழகு + பயன்பாடு + க்ரியேட்டிவிட்டி (4))

4. சிறுகதை பகுதி:

பெஸ்ட் நரேட்டர் அவார்ட்: மதிப்பெண்: 8 (கதைக்கரு + எழுத்துநடை + கற்பனை + தனித்தன்மை)

5. கவிதை பகுதி:

பெஸ்ட் லிரிக்ஸ் அவார்ட்: மதிப்பெண்: 8 (கவிதை நடை + கற்பனை/ஒப்பனை + தனித்தன்மை + மொழி பயன்பாடு)

6. பட்டிமன்ற பகுதி:

பெஸ்ட் நியூ ஃபேஸ்/ பெஸ்ட் ஆர்கியூமண்ட் அவார்ட்: மதிப்பெண்: 8 (எழுத்து நடை (கோர்வையாக சொல்ல வந்த விஷயத்தை தமிழில் சொல்வது) + சுறுங்க சொல்வது + யாரும் சொல்லாத கருத்துக்களை சொல்வது + அந்த அணிக்கு பலம் சேர்ப்பது)

7. ஸ்டார் ஆஃப் தி மன்த் அவார்ட்: எல்லா பகுதிகளிலும் பங்களிப்பு + எல்லாவற்றிலும் நாமினியா செலக்ட் ஆகி இருப்பது + 2 பகுதிக்கு மேல் பரிசுகள் வென்றிருப்பது

//

எல்லா தகுதிக்கும் டீஃபால்ட் மதிப்பெண் 2. 0 (சுத்தமா அந்த தகுதி இல்லை) - 1 (இருக்கு... ஆனா ஓக்கே ரகம்) - 2 (சூப்பர்... நிச்சயம் அந்த தகுதி இருக்கு)

//

தெளிவாக இருக்கும் என்றே நம்புகிறோம். இதன் அடிப்படியிலேயே நடுவர்களாக தேர்வு ஆகும் தோழிகள் மதிப்பெண் கொடுப்பார்கள். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு நடுவர்களில் மாற்றம் இருக்காது. அதன் பின் அவர்கள் விருப்பினால் மாற்றங்கள் செய்யப்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்டார் ஆஃப் தி மன்த்: ரேவதி, பத்மா

யாரும் சமைக்கலாம் விருது: அனுஷ்யா

பெஸ்ட் ப்ரெசண்டேஷன் விருது: சுஸ்ரீ, ஹர்ஷா

பெஸ்ட் ரெசிபி காண்ட்ரிபியூஷன்: தளிகா

பெஸ்ட் க்ரியேட்டிவிட்டி விருது: ரேணுகா

பெஸ்ட் ஸ்டோரி: நித்திலா

பெஸ்ட் கவிதை: ஜெய்

பெஸ்ட் நியூ ஃபேஸ்: பிரியா ஜெயராம் & ஜென்னி வினோ

பெஸ்ட் நடுவர் விருது: இளவரசி

லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22655

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது தமிழ் தளம் அல்லவா? தமிழில் விருதுகள் பெயர் இருந்தால் இன்னும் சிறக்குமே விருதுகள்... இது என் கருத்தே தவிர ஆலோசனை அல்ல.......

வனி நான் ரொம்பவே லீவ் போடுறேனோ?

ரொம்ப நல்ல விஷயத்தை ஸ்டார்ட் பண்ணி வைத்துள்ளீர்கள். இது அமோக வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது இந்த விருதை யார் பெயரிலாவது வழங்கலாமா?

இல்லை இந்த கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என்று இருக்கிறதல்லவா அது மாதிரி வைக்கலாமா?

நம் தொழிகளிடமே கேட்டுப் பார்ப்போம். அவர்கள் என்ன சொல்றாங்களோ அது படி செய்வோம். அப்படியே தோழிகள் விருதுகளுக்கு பெயர் சூட்டலாம். எந்த பெயர் அதிக ஒட்டு பெறுதோ அதையே அந்த விருதுக்கும் வைத்து விடலாமே.

இது என் யோசனை தான்... பிடித்திருந்தால் செயல் படுத்தலாமே ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நிச்சயம் ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன... :) இதை எல்லாம் நான் சீதாலஷ்மி மற்றும் நடுவரா வர போறவங்ககிட்ட பேசிட்டு ஃபைனல் பண்றேன். இதில் மாற்றங்கள் வரலாம் என்பதால் தான் யாரையும் பதிலளி தட்ட வேண்டாம் என்று சொல்லிருக்கேன். புது பகுதி என்பதால் இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும், எல்லாம் ஸ்டெடி ஆக :) நீங்களே விருதுகளுக்கு மாற்று பெயர்கள் யோசிச்சு சொல்லுங்களேன்... எங்களுக்கும் கொஞ்சம் ஐடியா கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா எப்போ மே மாதத்திற்கான விருதுகளை அறிவிக்க போகிறீர்கள்? விருது வாங்க போகும் தோழிகளுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள்....

மேலும் சில பதிவுகள்