சோயா தோசை

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சோயா - 2 கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சை பருப்பு - ஒரு கப்
பெருங்காயத்தூள் - ஒரு சிறிய ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
புதினா கீரை - ஒரு கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்


 

சோயா, புழுங்கலரிசி, பச்சைபருப்பு, வெந்தயம் அனைத்தையும் தனித்தனியே ஊறவைக்கவும்.
7 அல்லது 8 மணி நேரம் ஊறிய பிறகு, சீரகம், 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு மீதி 2 பச்சை மிளகாய், புதினா இரண்டையும் நைசாக நறுக்கி அதில் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தோசையாக சுடவும்.
இதற்கு இட்லிப்பொடியோ, சட்னியோ சேர்த்து பரிமாறலாம்.


இது சற்று மெதுவாகத்தான் முறுகும். அதனால் லேசாக எண்ணெய் விட்டு சுடவும். இது உடம்புக்கு ரொம்ப நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

asma madam,
ragi mudde is one of the famous recipe of karnataka people.i need the proper quantity for recipe,can u tell me the preparation.
i.e with ragi and rice preparation,

with wishes,,
regi