கறிவேப்பிலை பொடி(ஆந்திரா ஸ்டைல்)

தேதி: May 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கறிவேப்பிலை(காய வைத்தது) - 2 கப்
கடலை பருப்பு - 4 மேஜை கரண்டி
உளுந்து - 2 மேஜை கரண்டி
சீரகம் - 1 மேஜை கரண்டி
பூண்டு - 2 அ 3 பல்
காய்ந்த மிளகாய் - 6
முழு தனியா - 1 தேக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் தனியா,சீரகம்,பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இன்னொரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து,காய்ந்த மிளகாயை ஒரிரு நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து வைக்கவும்.எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.
இப்போது மிக்சியில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு சேர்த்து கொர கொரவென அரைத்து வைக்கவும்.அதனுடன் தனியா,சீரகம் சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் பூண்டு,புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இந்த பொடி கொர கொரப்பாக இருக்க வேண்டும்.
ஆந்திரா கறிவேப்பிலை பொடி தயார்.இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் ,சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும்.


இந்த குறிப்பு என் ஆந்திர தோழியுடையது.சமீபத்தில் சாப்பிட்டு மிகவும் பிடித்துப் போனது.புளி சேர்த்திருப்பதால் இதுவரை சாப்பிட்டிராத சுவையில் அருமையாக இருந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

படிக்கயிலயே சுவை தெரிகிறது.வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ஹர்ஷா, கறிவேப்பிலை பொடி, நன்றாக இருக்கிரது. நானும் கறிவேப்பிலை பொடி செய்திருக்கிரேன். ஆனால் புளி சேர்த்ததில்லை, எனவே சிறிது துவர்ப்பாக இருக்கும், என் மகளுக்கு அந்த துவர்ப்பு பிடிக்காது, இந்த முறையில் இன்றே செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பரேன். வாழ்த்துக்கள்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கண்டிப்பா செய்து பாருங்க. ரொம்ப நல்லா இருந்தது.இந்த பொடியின் கலர் வேறு கருப்பா இருந்தது.என்ன பொடினு முதலில் என்னால கெஸ் பண்ணவே முடியல.பிறகு தான் ரெஸிப்பி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.விரைவில் படத்தையும் இணைக்கிறேன்.செய்துட்டு மகளுக்கு பிடிச்சதானு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

கருவேப்பிலையில் இரும்புசத்து அதிகம் உள்ளது, கருமையான கூந்தலுக்கு கறிவேப்பிலை மிக சிறந்தது. சமையலில் கருவேப்பிலை சேர்த்தாலும் அநேகம் பேர் அதை சாப்பிடுவதில்லை எடுத்து தூர தான் எறிவார்கள், நான் உட்பட. அந்த மாதிரி ஆட்களுக்கு இந்த கருவேப்பிலை பொடி தான் சரியானது.

நல்லதொரு குறிப்பு ஹர்ஷா, வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கறிவேப்பிலையில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லியிருக்கீங்க.ரொம்ப நன்றி.உங்க பதிவுக்கும் ரொம்ப நன்றி பிரேமா.

This food good health and good taste