பிரெட் ஃப்ரைஸ்

தேதி: May 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ப்ரெட் துண்டுகள் - 4
கடலை மாவு - 3 மேஜை கரண்டி
அரிசி மாவு - 1 மேஜை கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் / மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு,ஒவ்வொரு ப்ரெட்டையும் நீள வாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
இதனுடன் சீரகம் சேர்த்து மிளகு தூள் அல்லது மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கொத்த மல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ப்ரெட் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரு பக்கங்களும் சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய ப்ரெட் ஃப்ரைஸ் தயார்.


ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போல நீள நீளமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.சுலபமாக செய்யக்கூடிய மாலை நேர ஸ்னாக்ஸ்.

மேலும் சில குறிப்புகள்