தேதி: May 23, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா/ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப்
ரோல்ட் ஓட்ஸ் - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
முட்டை - ஒன்று
வெஜிடபிள் ஆயில் - 1/3 கப்
பால் - 3/4 கப்
வாழைப்பழம் - ஒரு கப் (மசித்தது)
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
ரெய்சின்ஸ் - அரை கப்
ஆல் பர்பஸ் ஃப்ளாருடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும். இதனுடன் ரோல்ட் ஓட்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் பால், வெஜிடபிள் ஆயில் மற்றும் மசித்த வாழைப்பழம் சேர்க்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த வாழைப்பழ கலவையை மாவு-ஓட்ஸ் கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடைசியாக உலர்ந்த திராட்சை சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருக்கும்.

ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனர்ஸ் வைத்து அதில் 3/4 பாகம் வரை மாவை நிரப்பவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் அல்லது சிறிய குழிக்கரண்டியில்/சட்னி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றலாம்.

அவனை 350 டிகிரி F ல் (180 டிகிரி C ) முற்சூடு செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

மஃபின் வெந்ததும் நன்றாக மேலெழும்பி, மேற்பகுதி கோல்டன் ப்ரவுன் கலரில் மாறியிருக்கும்.

சுவையான ’ஓட்ஸ்-பனானா-ரெய்சின் மஃபின்’ தயார்.

இதனை சூடான காஃபி/டீயுடன் பரிமாறலாம். சத்தான காலை/மாலை நேர ஸ்நாக்.

இதில் இரண்டு வாழைப்பழங்கள் சேர்த்து இருப்பதால் சர்க்கரை அரை கப் போதும். அதிக இனிப்பு விரும்பினால் ரெய்சினுக்கு பதில் சாக்லேட் சிப்ஸ் பயன்படுத்தலாம். வால் நட்ஸ் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் மைதாவுக்கு பதில் கோதுமை மாவும், வெள்ளை சர்க்கரைக்கு பதில் ப்ரவுன் சுகர் சேர்த்தும் செய்யலாம்.
Comments
அன்பு ஹர்ஷா
ரொம்ப நல்லா இருக்கு... இது மஃபின் மாதமா ;) பட்டய கிளப்புறீங்க கடைசி படத்தில் வழக்கம் போல. நல்ல குறிப்புகள், குட்டிஸ் ஸ்பெஷல். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஓட்ஸ் பனானா மஃபின்
அன்பு ஹர்ஷா,
ஓட்ஸில் செய்திருப்பதால் கலோரிஸ் கம்மியாகும். குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. வாழைப்பழத்தை கலர் மாறாமல், சேர்த்திருக்கீங்க.
படங்களும் எப்பவும் போலவே அருமை.
குறிப்பில் செய்யக் கூடிய மாறுதல்களுக்கான டிப்ஸும் கொடுத்திருப்பது சிறப்பு.
அன்புடன்
சீதாலஷ்மி
ஹர்ஷு
ஹர்ஷு
என்னத்தை சொல்ல..
கடைசி படம் பார்க்கவே அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு.
மபின் ரொம்பவும் அழகா இருப்பதால, கடிக்காம அப்படியே சாப்பிடனும் போல இருக்கு.
அந்த கேக்கை பிச்சு எடுத்துப்பதை என்னால தாங்கவே முடியாது.அப்படி கோல்டன் கலர்ல முழுசா பார்க்க அருமையா இருக்கு..
வாழ்த்துக்கள்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஓட்ஸ்-பனானா-ரெய்சின் மஃபின்
ஹர்ஷாவுக்கும் ப்ரஜுவுக்கும் கொண்டாட்டம் தான் போங்க.....இந்த மாதிரி மஃபின், கப் கேக் தான் குழந்தைகளின் பேவரைட். யூ ஆர் அ கிட்ஸ் பெர்சன். பேக்கிங் குயின் ஆயிட்டீங்க. கலக்கல். வாழ்த்துக்கள். டீ கப் ரொம்ப பிடித்திருக்கு :)
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Banana Muffin
Appears to be very tempting. Could this be made without egg?
mythuroy
நன்றி !!!
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.
ஓட்ஸ் பனானா மஃபின்,
வனிதா,
கண்டிப்பா...மஃபினில் தான் அத்தனை வகை இருக்கே! குழந்தைகளுக்கும் நிச்சயம் பிடிக்கும்.முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
சீதாலக்ஷ்மி அம்மா,
வாழைப்பழம் மசிச்சதும்,கலந்துட்டேன்.அதனால் தான் கலர் மாறாமல் இருக்கு.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.
ரம்ஸ்,
//அந்த கேக்கை பிச்சு எடுத்துப்பதை என்னால தாங்கவே முடியாது.//
அட அட அடா! எப்படியாவது தாங்கிக்கோங்க.ஏன்னா....அத்தனை மஃபினும் காலி. பதிவுக்கு ரொம்ப நன்றி.
லாவண்யா,
//பேக்கிங் குயின் ஆயிட்டீங்க.// இங்கிலிபீஸ்ல எல்லாம் . ;-)
டீ கப் எங்க வீட்டு குட்டிஸ்க்கு வாங்கினது.பதிவுக்கு மிக்க நன்றி.
mythuroy,
கண்டிப்பா முட்டை சேர்க்காமல் பண்ணலாம்.முட்டைக்கு பதிலாக 1/4 கப் தயிர் அல்லது ஆப்பிள் சாஸ் பயன்படுத்தி செய்யலாம்.பதிவுக்கு ரொம்ப நன்றி.
ஹர்ஷா
முகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேனே! :)
ஓட்ஸ் அன்ட் பனானா, ரொம்ப நல்ல காம்பினேஷன் மஃபின்! ரொம்ப அழகா வந்திருக்கு மஃபின்ஸ் & உங்க படங்கள்!
குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டமா இருக்கும் ரெசிப்பிஸ் எல்லாம் ஒவ்வொன்னா தொடர்ந்து வந்திட்டே இருக்கு... ;) ஓ... இது சம்மர் ஹாலிடேஸ் ஸ்பெஷலா?! நடத்துங்க, நடத்துங்க... :) வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
ஹர்ஷா
ஹர்ஷா நீங்க கொடுக்கிற குறிப்பு எல்லாம் சூப்பர். படங்கள் பளிச். மஃபின் பார்த்ததும் எடுத்து சாப்பிட சொல்லுது.
அன்பு
அன்பு உங்க எல்லா கேக் ரெசிபியையும் ஒன்னு விடாம செய்து சாப்பிட்டாச்சு.. (மே மாசம் எனக்கு கேக் மாதம் ) இப்போதான் பதிவு போடறேன்.எல்லாமே கரெக்ட் அளவுகள்.சூப்பரா வந்தது .ஈஸி ரெசிபீஸ்,ஆனா எல்லாத்துக்குமே பட்டர் தான் போட்டேன் ஆயில் யூஸ் பண்ணலை. எதுவுமே சொதப்பலை ...தேங்க்ஸ் அன்பு .
Kalai
ஓட்ஸ் பனானா மஃபின்
ஹாய் ஹர்ஷா,
உங்களுடைய பல குறிப்புகள் படிச்சுருக்கேன். பின்னூட்டம் தருவது இதுவே முதல் முறை. செய்து பார்த்து பின்னூட்டம் தரனும் நு தான் இவ்வளவு லேட். நேற்று உங்களுடைய ஓட்ஸ் பனானா மஃபின் செய்தேன். ரொம்ப நல்லா வந்தது.
நான் மஃபின் செய்வது இதுவே முதல் முறை. என்னாலையே என் கண்களை நம்ப முடியவில்லை :) பார்பதற்கு அழகு! டேஸ்டும் சூப்பர்!
ரொம்ப சந்தோசம் ஆகிருச்சு.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய குறிப்புகள் தாங்கள்.
அன்புடன்,
சந்திரா
Fantastic receipe. Can you
Fantastic receipe.
Can you let me know where the muffin tins will be available and what is the approximate cost of it? Can we make it in the normal oven compatible vessels and then cut it? will it get bakes properly?
Thanks