ஃபெல்ட் பேனை பூக்கள்

தேதி: May 23, 2012

5
Average: 4.7 (15 votes)

 

மை தீர்ந்த / காய்ந்து போன ஃபெல்ட் பேனைகள்
மெல்லிய கம்பி
குரடு
பச்சைநிற கம்டேப்
கத்தரிக்கோல்
மெல்லிய க்ராஃப்ட் நைஃப்
டிஸ்போசபிள் க்ளவ்ஸ்

 

மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் வைக்கவும்.
முதலில் மேசையில் பழைய தாள்கள் விரித்து வைக்கவும். (எப்படி உலர்ந்திருந்தாலும் குச்சிகளிலிருந்து மை கசியும்.) க்ளவ்ஸ் மாட்டிக் கொண்டு பேனைகளிலிருந்து குச்சிகளைப் பிரித்து எடுக்கவும். பச்சை, கறுப்பு, நீலம் போன்ற கடுமையான நிறங்களைத் தனியே எடுத்து வைத்துவிடவும்.
பூக்கள் செய்யப் பொருத்தமான நிறக் குச்சுகளை, அவற்றின் நீளத்திற்கு ஏற்ப நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டி, வெளிப்பக்கம் இருக்கும் ப்ளாஸ்டிக் உறையை நீக்கி வைக்கவும்.
கருப்புநிற ஃபெல்ட் துண்டுகளையும் இதே அளவுக்கு வெட்டிக் கொண்டு மீண்டும் நீளவாட்டில் பாதியாக வெட்டிவிட்டு ப்ளாஸ்டிக் உறையை நீக்கி வைக்கவும்.
கம்பியில் 6 செமீ அளவு துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். பூக்களுக்கான துண்டுகளில் ஒரே நிறத்தில் இரண்டு எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் மெதுவே பிரிக்கவும். நடுவில் தயாராக வைத்திருக்கும் கருப்புத் துண்டொன்றை வைத்து இரண்டையும் வெளிப்பக்கம் மூடி கம்பியால் கட்டிவைக்கவும். கருப்பு ஃபெல்ட் சற்றுக் கீழிறங்கினாற்போல் வைக்கவும்.
கம்பி தெரியாதவாறு கம்டேப் கொண்டு சுற்றிவிடவும்.
பூக்களை மெதுவே விரித்து விடவும். விரும்பினால் இதழ்களை விரும்பிய வடிவத்தில் வெட்டியும் விடலாம்.
பச்சை நிறக் குச்சிகளை நீளமாக இரண்டாக மட்டும் வெட்டவும்.
வெளியுறைகளைப் பிரித்து எடுத்துவிட்டு, ஃபெல்ட்டினை பிரிந்துவிடாமல் கவனமாகத் தட்டையாக்கி எடுக்கவும். ஒவ்வொரு துண்டையும் இரண்டிரண்டு இலைகளாக வெட்டிக் கொள்ளவும்.
கம்பியால் கட்டி கம்டேப் சுற்றிக் கொள்ளவும்.
சிறிய கூடை அல்லது வாஸின் உள்ளே ஒயாசிஸ் வைத்து பூக்களை விருப்பம் போல் சொருகிவிடவும். சொருகும் போது குரட்டினால் பிடித்துச் சொருகலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் வாவ் வாவ்.... சான்ஸே இல்ல. எனக்கு பாராட்ட வார்த்தையும் இல்ல. :) குடுத்துடுங்க இமா... நான் கண்டிப்பா ஹென்னா போட்டு விடறேன், லட்டும் செய்து கொடுத்துடறேன். வெரி கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இமா,

என்னால பார்த்துப் பார்த்துப் பிரமிக்கத்தான் முடியுது!!!

இந்தப் பூ படத்தை மட்டும் பார்த்தால், எதிலிருந்து செய்திருக்கீங்கன்னு கெஸ் பண்ணவே முடியாது.!!

சூபர்ப்!!!

அன்புடன்

சீதாலஷ்மி

இமா அழகோ.அழகு உள்ளம் கொள்ளை போகுது.வாழ்த்துக்கள்.இமா ஒரு சின்ன டவுட் எஸ்ட்ரோ (பானக்குழாய்) இனால் செய்ய முடியுமா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இமா, சூப்பரோ சூப்பர். எதையும் விட்டு வைக்க மாட்டீங்க போலிருக்கு. அப்ப நான் பேஸ் புக்கில் சொன்ன விடை தவறா?
வாணி

இமா சூப்பரா இருக்கு,எனக்கு முதலில் பேரை புரிச்சுக்க முடியல.உள்ளே குறிப்பை பார்த்ததும் செய்து பார்க்கனும் என்று ஆசை வந்துடுச்சு,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா
அதிகம் நான் இந்த பகுதிக்கு வந்தது இல்லை.
ஆனா இது வரவைத்து விட்டத்து.அருமை போங்க
உங்க யோசனைக்கு ஒரு சபாஷ் :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா......... எப்படி இப்படியெல்லாம்........ம்ம்ம்ம்ம்ம். ரொம்ப வித்தியாசமா அருமையா இருக்கு. நாங்கல்லாம் அதுல ஒருபக்கம் நான்கு சொட்டு தண்ணி விட்டு உதரி உதரி ஒரு மூனுமாசம் யூஸ் செய்வோம். நீங்க அதையே வெட்டி பூவாக்கிட்டீங்களே......... சூப்பர்......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இமா நீங்க விரித்ததால் மட்டும் தான் ஃபெல்ட் குச்சுகள் இப்படி பூ போல விரிந்ததோ? Outstanding.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முகப்புல மேலே ஓடிட்டு இருந்த அழகான சமையல் குறிப்பு படங்களையே பார்த்துட்டு இருந்தேன். இதை இப்பதான் கவனிச்சேன், மிக்க நன்றி அட்மின் & டீம். ;)

உற்சாகம் தரும் உங்கள் கருத்துகள் அனைத்துக்கும் நன்றி வனி, ரம்ஸ், லாவி, சீதாலஷ்மி, ப்ரியா, பூங்காற்று, வான்ஸ் & ரேணு.

@ சீதாலக்ஷ்மி & ப்ரியா- ஃபெல்ட் பேனைகள் புழக்கத்திற்கு வர ஆரம்பித்த காலத்தில், ப்ரியா சொன்னது போல //அதுல ஒருபக்கம் நான்கு சொட்டு தண்ணி விட்டு உதறி உதறி ஒரு மூணுமாசம் யூஸ் செய்//து உயிரை முழுசா உறிஞ்சி எடுத்துட்டு, பிறகும் வீசப் பிடிக்காமல் (12 வயசு அப்போ) வைச்சு அழகு பார்த்து... அதன் பிறகு இப்பிடி செய்து வைத்தேன். கம்டேப்லாம் அப்போ கிடையாது. இப்போ பழையது எல்லாம் தூக்கிப் போடும்போது திரும்பவும் செய்யலாம் என்று தோன்றியது.

@ பூங்காற்று - //பானக்குழாய்// அழகாக வரும். முடிந்தால் செய்து காட்டுகிறேன். ஆனால்.. அது எல்லோரும் செய்கிற விஷயம்தான். ;)

காத்திருந்ததுக்கு நன்றி வான்ஸ். ;) இங்க வரமுதல் அங்க சொல்ல விரும்பேல்ல. ;)))

@ ரேணு... சந்தோஷம், செய்து பாருங்க. கலர் ஒட்டும் என்கிறதை மட்டும் நினைவுல வைச்சுக்கணும். நான் ஒரு Ferrero Rocher காலி டப்பா உள்ள ஒட்டி வைச்சு இருக்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

அழகான பூக்கள்.......... ரொம்ப அழகாக இருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
பவித்ரா

வாழ்க வளமுடன்
பவி

//////அதுல ஒருபக்கம் நான்கு சொட்டு தண்ணி விட்டு உதறி உதறி ஒரு மூணுமாசம் யூஸ் செய்//து உயிரை முழுசா உறிஞ்சி எடுத்துட்டு, பிறகும் வீசப் பிடிக்காமல் (12 வயசு அப்போ) வைச்சு அழகு பார்த்து... அதன் பிறகு இப்பிடி செய்து வைத்தேன்.//////

ஹஹ்ஹஹ்ஹா....... இமா........ 7 to 12 agela இருக்கும்போது ஸ்கெட்ச் பென்லமுழுசா கலர் தீர்ந்து போனபின்பு ஒருபக்க நுனியிலிருக்கும் கவரைமட்டும் அரை இன்ச் நீளம் கட்செய்துவிட்டு வெளியில் தெரியும் பஞ்சை சிறிது கைகளால் கலைத்துவிட்டு பிரெஷ் போல பயன்படுத்தி இருக்கேன். மேக்கப் செட்டில் வரு பிரெஷ் நான் போடுற மேக்கப்க்கு ஈடுகொடுக்க முடியாம சீக்கிரம் வீணாகிடும் அல்லது எங்கையாவது விழுந்து காணாமல் போய்டும். அப்பல்லாம் இந்த பிரெஷ்தான் கைகொடுக்கும். வாட்டர் கலர் பெய்ன்ட்டுக்கும் ஒவ்வொரு கலர்க்க் ஒவ்வொரு பிரெஷ்ஷா பயன்படுத்த சுலபமா இருக்கும். கழுவி கழுவி பயன்படுத்தி ஒருகலர் மற்றொருகலர்ல மிக்ஸ் ஆகுவதை தவிர்க்க........

இப்ப நினைத்தால் ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது....... சூப்பர் எஃபக்ட்டிவ் யூட்டிலைசர் ல நாங்கல்லாம்............(அட அவ்வளவு கங்சம்னு நீங்க சொல்லுவது காதுல கேட்குதுங்கோ.......)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அழகான, கலக்கல் கலர் பூக்கள். மொத்தத்தில் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வாவ் இமா... அருமையோ அருமை...

கண்ணை கவரும் வண்ண வண்ண பூக்கள்,
நெஞ்சை கொள்ளை கொல்லுதே...

வாழ்த்துக்கள் !!!

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பூக்கள் ரொம்ப அழகா இருக்கே எதுல செய்திருக்கீங்கன்னு யோசிச்சுகிட்டே பாத்தா பெரிய ஆச்சர்யம்......... இந்த பொருள்ல இப்படி ஒரு use ஆனு........ சும்மா கலக்குரீங்க போங்க.......... மேலும் மேலும் ஆச்சர்ய படுத்த வாழ்த்துக்கள்....

The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.

இவளோ நேரமா பார்த்து படிச்சு இப்போ தான் பேனை நா என்னன்னு கண்டுபுடிச்சேன் ரொம்ப அழகான கைவினை செய்து பார்க்க ஆசையா இருக்கு அருமை அருமை வாழ்த்துக்கள் சீக்கிரமே செய்து பார்க்க ட்ரை பண்றேன் by Elaya.G

வாவ் !!!!!!!!!!!!சூப்பர்ப் !!!
ரொம்ப அழகா இருக்கு இமா

இது மேட் இன் சைனா இல்லையா..?? அவ்வ்வ் :-)))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

இமா,
பூக்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.செய்து பார்க்கும் போது கவனத்தில் கொள்ள கொடுத்திருக்கும் டிப்ஸ்களும் அருமை.ரொம்ப அருமையான படைப்பு.பாராட்டுக்கள் இமா.

இமாமா சான்ஸே இல்ல பூக்கள் அவ்வளவு அழகா இருக்கு. ஐடியாவும் சூப்பர். பூக்கள் கட் பண்ணின விதம் ஒரிஜினல் பூ மாதிரியே இருக்கு. கலர் காமினேஷனும் அசத்தல். வாழ்த்துக்கள்

கருத்துக்கு நன்றி பவித்ரா, சுபா, ப்ரேமா, ரேவதி, ஏஞ்சல், ஹர்ஷா, வினோஜா, Elaya, ஜெய் & ப்ரியா.

இது மேட் இன் நியூஸி ஜெய். :)

ப்ரியா... ;) //ப்ரஷ்// ஐடியா சூப்பர்.
ம்ஹும்! நான் //அட அவ்வளவு கங்சம்னு // ;) சொல்லேல்ல, அப்பிடியெண்டால் என்ன!!

‍- இமா க்றிஸ்

ஹஹ்ஹஹ்ஹாஹ்ஹா.............இமா...........கஞ்சம் என்பதை கங்சம் ஆ ஆக்கிட்டேன் போல......... ;)))

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

;)))) ம். நானும் சீரியசாக ஏதோ இந்திய வார்த்தை என்று நினைத்தேன் ப்ரியா. ;)

அறுசுவைக்கு வந்த புதிதில்... இப்படியெல்லாம் தட்டும்போது தப்பாகும் என்பது புரியாமல் ஒருவரிடம் சந்தேகம் கேட்கப் போய் நைசாக வாங்கிக் கட்டியது ஞாபகம் வருகிறது இப்போது. ;D
சிரிச்சுட்டே பதில் சொன்னதுக்கு தாங்ஸ். ;))

‍- இமா க்றிஸ்

இமா அப்படியே பிரமிக்க வச்சுட்டிங்க ......செம அழகு .... வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மிக்க நன்றி சங்கீ. :)

‍- இமா க்றிஸ்

அழகான மலர்கள். உங்கள் கைவண்ணத்தில் மலர்ந்து சிரிக்கின்றன.

super akka. yenaku romba pidichi iruku

"AANAI PIRANTHAL ARUMAI
PENNAI PIRANTHAL PERUMAI"

Hai Imma! Romba nalla iruku! Neenga mention panna ஃபெல்ட் பேனைகள்
na enna? Enga kadaikum? Please sollungalen..

நன்றி மலர், சங்கரி.

விஷ்ணு பிரியா... //ஃபெல்ட் பேனைகள்// குட்டீஸ் பொம்மை போடுற சாதாரண கலரிங் பேனா, மை தீர்ந்து போனதும் பின் பக்கம் உள்ள குச்சியை எடுத்தால் உள்ளே கலராக ஒரு குச்சி இருக்கும். அதைக் கொண்டு பூக்கள் செய்திருக்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்போதான் கண்ணில் பட்டது. ;(

‍- இமா க்றிஸ்

sketch pen-ஆ

;)) உங்களுக்காக கூகுள்ல தேடினேன். ஆமாம், இந்தியால sketch pen என்று தான் சொல்றீங்க. இங்க 'ஸ்கெட்ச் பென்' என்கிறது வேற. :) உங்களால இன்று எனக்கு புதுசா ஒரு விஷயம் தெரியவந்திருக்கு. தாங்ஸ் ஜெயா.

‍- இமா க்றிஸ்