ஈரலில் கொழுப்பு படிவு

தோழிகளே ,ஈரலில் கொழுப்பு படிதல் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? இதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கின்றதா / இதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும்.

கொழுப்பு,இனிப்பு நிச்சயம் குறைக்கணும்..கொழுப்பை ரொம்பவே குறைக்கணும் அல்லது தவிர்க்கணும்

நன்றி தளிகா. இன்னும் இது பற்றி தகவ்ல் தெரிந்தவர்கள் சொல்லவும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வெள்ளைபூசணிக்காய் சாறு ரத்தத்திலுள்ள கொழுப்பை அகற்றும் தோழி.

வாலை தண்டு

உண்மை அன்பு சாவது இல்லை

ஹாய் பூங்காற்று....... நமது உடலிலுள்ள கொழுப்புகள் செரிமாணம் ஆகும் இடம் கல்லீரல்(ஈரல்). உடலில் அதிகப்படியான கொழுப்புகள் இருந்தால் ஈரல் சற்று பெருத்து காண்ப்படும். இதை நம்முடைய ஸ்கேனிங் ரிபோர்ட்டில் "ஃFபேட்டி லிவர்" என்று குறிப்பிடுவர். உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலே இது சரியாகிவிடும். மற்றபடி பயப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. இருந்தாலும் ஈரலுக்கு அது ஓவர்லோடு போன்றது. ஓவர்லோடானால் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படும். எனவேகொழுப்பை குறைத்தாலே போதுமானது.

சென்றமாதம் எனது கண்வருக்கு சிறுநீரகக்கல் பிரச்சனைக்கு ஸ்கேன் எடுத்த்போது அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஃfபாட்டி லிவர் என்று போட்டிருந்தது. மருத்துவரும் அதைப்பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை. எதற்கும் கேட்போமே என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறியவைதான் மேற்சொன்னவை...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ப்ரியா அரசு, எங்க அம்மாவுக்கு ஸ்கேன் செய்ததில் இப்படித்தான் சொன்னாங்க. வயிறு கொஞ்சம் ஊதினாற்போல் இருந்து களைப்பும் இருந்ஹது அதனால் தான் ஸ்கேன் செய்தோம் ,ரிப்போர்ட் பார்த்த டாக்டர் ஈரலில் சிறிது கொழுப்பு சேர்ந்துள்ளது பயப்படும்படி எதுவுமில்லை என்றார், இது பற்றி தெஇரிந்த தோழிகளின் ஆலோசனையைப் பெறலாமே என்றுதான் இங்கே கேட்டேன். உங்கள் பதிலிற்கு நன்றி.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்களுக்கும் நன்றி

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று...... அம்மாவால் உடற்பயிற்சி செய்ய முடிந்தால் சிறு சிறு பயிற்சி செய்யலாம். அப்படி முடியாத பட்சத்தில் நடைபயிற்சி செய்ய சொல்லுங்கபா... தினமும் சாப்பிட்ட பின்பும் இரவு தூங்க போகும் முன்பும் சுடுதண்ணீர் குடித்தால் உணவிலுள்ள கொழுப்பு உணவுப்பாதையிலுள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். முயற்சித்து பாருங்க.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ப்ரியா அரசு,நன்றிப்பா நடைப்பயிற்சி சரிவராது ஏற்கனவே மூட்டுவலி பிரச்சினை. சுடு தண்ணீர் ட்ரை பண்ணிப்பார்ப்போம். மிகுந்த ந்ன்றி ப்ரியா.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு எடை குறைப்பது கொஞ்சம் கஷ்டம்..என் அம்மாவுக்கும் மூட்டு வலி தான் ஆனால் உடம்பை குறைச்சாங்க..எப்படின்னு சொல்றேன் ட்ரை பண்ணுங்க உடம்பும் குறையும் கொழுப்பும் கரையும்.தினமும் இரவு தேன் எலுமிச்சை நீர் வெதுவெதுப்பான தண்ணியில் கலந்து குடிக்க சொல்லுங்க..காலை பூசணிக்காய் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிக்க சொல்லுங்க..தினம் ஒரு மலநெல்லிக்காய்..அடிக்கடி கொள்ளு சேர்க்க சொல்லுங்க..கண்டிப்பா உடம்பு குறையும்

மேலும் சில பதிவுகள்