பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

அன்பு நடுவருக்கும் மற்றும் என் முகம் காண தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் !

நல்ல தலைப்பு. என் ஓட்டு "நல்ல நண்பன் நல்ல வாழ்க்கை துணையாகலாம்". நண்பனைப்போல நம்மை புரிந்து கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை. அதை தவிர காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அது எப்போது யார் மீது எதற்காக வரும் என்று ஒருவராலும் கூறவே முடியாது. பிறகு வருகிறேன் என் வாதங்களை வைக்க.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அகா... உங்களை இந்த நிலையில் வைத்து பார்க்க நான் எத்தனை நாள் ஏங்கினேன் ;) இந்த பரிசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி நன்றி நன்றி...

நல்ல எசக்கு பிசக்கான தலைப்பு தருவதில் கெட்டிக்காறரான சுகிக்கு வாழ்த்துக்கள் :) எப்புடி?? எப்புடி இப்படிலாம் யோசிக்க முடியுது???

சரி நடுவரே... இப்போ தான் தூங்கி எழுந்தேன்... என் அருமை தோழியின் பட்டிமன்ற இழையை காண ஓடி வந்துட்டேன். இப்போதைக்கு அணியை சொல்லிபோடுறேன்...

கணவர் மனைவி நண்பர்களாகலாம்... ஆனால் நண்பர்கள் காதலர்களாக கூடாது. :) நட்புக்குன்னு ஒரு உணர்வு இருக்கு... அதன் உள்ளே காதல் வந்தால்... நட்ப்புக்கு மறியாதை போச்சு!!!

வாரேன் வாரேன்.... இன்னும் கொஞ்சம் நேரத்தில் சாப்பிட்டு தெம்பா வாரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புது நடுவருக்கு மனமார்ந்த வரவேற்புகள் :) மாலை மரியாதையை அன்போட ஏற்றுக் கொள்ளுங்கள்.. :) [அப்பாடா பட்டி ஆரம்பத்தி்லேயே மாலை போட்டு ஐஸ் வைத்தச்சு ;)]

தலைப்பு சற்றே விவகாரமான தலைப்புதான். ஆனால் எந்த அணியைத் தேர்ந்தெடுப்பது என்றுதான் இன்னும் பிடிபடவில்லை.. சற்றே பொறுத்து அணியைத் தேர்வு செய்து பின் வருகிறேன்..

அன்பு நடுவருக்கு காலை வணக்கங்கள்.....
பட்டி நல்முறையில் செல்லவும்,நல்ல தீர்ப்புக்கும் முன்கூட்டியே வாழ்த்துகிறேன்........
"நண்பர்கள் நண்பர்களாக இருப்பதே நலம்" இத்தலைப்பின் கீழே எனது வாதங்களை கொடுக்கவுள்ளேன்.இப்போதைக்கு போய்ட்டு மீண்டும் வாரேன்............:-)

இனிய காலை வணக்கம். பட்டியில் இன்று நல்ல தலைப்பு , நட்பு என்பது காதலாக மாறுவதில் தவறில்லை. ஆனால் காதல் நட்பாக மாறுவதுதான் தவறு .
என்பதே எனது வாதம்.
மீண்டும் வருவேன்.

நட்புடன்
குணா

புது முக நடுவருக்கு, முத்தான வணக்கங்கள். வனியின் பிறந்தநாளை ஒட்டி, எங்க எல்லாருக்கும் திறமையான நடுவர் கிடைச்சு இருக்கீங்க.
உங்களை நாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்..... என்னோட தலைப்போட வந்ததில் எனக்கு தனி சந்தோசமே....கொஞ்சம் மக்கார் பண்ற தலைப்பு, எனக்கே எந்த பக்கம் போறதுன்னு கொஞ்சம் யோசனை....

இருந்தாலும், நண்பர்கள் காதலர்களாக மாறலாம்ன்ன்னு பேச முடிவு பண்ணி இருக்கேன். விரைவில் வாதங்களுடன் வருகிறேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நாட்டாமை

பட்டியில் உங்களை பார்த்ததில் பரமானந்தம்.
சந்தேகமே இல்லாமல் நண்பர்கள் காதலர்களாக மாறலாம்..
வாதத்தோடு காலத்திற்கு வருகிறேன்
:)

நண்பராக பழகி பார்க்காமல் , காதலில் விழுவது கண்டதும் காதல் ஆகும்.அப்பறம் குணம் தெரிந்து விலகுவது காதல் ஆகாது..
நல்ல நண்பராக பழகும் போது, இருவரிடமும் உள்ள நல்லது கேட்டது தெரியும்.
நாம் காதலர்களாக மாற போவதில்லை என நினைத்து அவர்கள் பழக ஆரம்பிக்கும் போது தான். உண்மையாக நடந்துக் கொள்வார்கள்.
இருவரும் நன்கு புரிந்துக் கொள்வார்கள். அந்த உறவு பிடித்து போகவே வாழ்வில் இருவரும் இணைய நினைக்கறார்கள்.

நண்பர்கள் இல்லாமல் நேரிடையாக காதலர்கள் ஆவதால், தன்னிடம் உள்ள குறையை முதலில் மறைக்க தோன்றும் இருவருக்கும். எல்லாவழிகளிலும் எப்படியாவது ஒருவருக்கொருவர் கவரந்துக் கொள்ளவே நினைப்பார்கள். ஒரு யதார்த்தம் இருக்காது..

ஆனால் நண்பனாய் இருந்தால், அவனின் பாசிடிவ் நெகடிவ் இரண்டுமே உண்மையாகவே, போலியில்லாமல் தெரியவரும்..ஏனெனில் அந்த எண்ணத்தில் அவர்கள் உறவை தொடர்ந்து இருக்கமாட்டார்கள். . ஆனால் எல்லா காதலில் இது இருக்காது என சொல்ல முடியாது.பல இடங்களில் இல்லாமல் போகும்.

ஒரு நண்பனுக்கு தானே அவன் தோழி,நண்பன் பற்றி எல்லாமே தெரியும்.எனவே நபராக இருந்து காதலர் ஆவது சிறந்ததே.

காதலர்கள் தான் நண்பர்களா மாறினா.. அபத்தம்..
நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறும் போது திருமண வாழ்க்கை ஆனந்தம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு நடுவருக்கு வணக்கமுங்கோ :)

திருமணத்திற்கு பின் கணவன்,மனைவி ந்டுவில் ..காதல் காதலாவே
இருக்கட்டும்,,,கூடவே நட்பும் கை கோர்க்கட்டும் நல்லதுதான்.அத விட்டுடலாங்க..

நாங்க சொல்ல வருவது திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ,பெண் நடுவில் இருக்கும் நட்பு காதலாக மாறுவதில் தவறொன்றுமில்லைங்கோ…

இப்ப நண்பர்கள் இல்லாத ஆணும்,பெண்ணும் கண்டதும் காதல்அப்படின்னு எடுத்துகிட்டா அங்க ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்பட்டு அந்த ஈர்ப்பை தக்கவைக்க ..தன் பாசிட்டிவ்ஸ் மட்டுமே காட்டுவாங்க நெகட்டிவ்ஸ் ஒளிந்துகொள்ளும்

இதே ஒரு ஆணும் பெண்ணும் படிக்கும்போதோ,வேலை பார்க்கும்போதோ

சூழ்நிலையினால் நண்பர்களா இருக்காங்கன்னா அவங்க யாரும் நாளைக்கு

கண்டிப்பா காதல் பண்ணியே ஆகணும்ன்ற கட்டாயத்தோட பழகறதில்ல..

அதனால தன் பாசிட்டிவ்ட்,நெகட்டிவ்ஸ்ன்னு எல்லாம் பகிர்ந்துக்கறதால நல்ல

புரிந்துகொள்ளல் இருக்கும்.

ஒரு தருணத்தில்இந்தநட்புபிடிச்சிருக்குஆனா .ஆண்,பெண்ணா இருக்கறதால

கடைசிவரை இந்த நட்பை பிடிச்சிக்கிட்டே இருக்கமுடியாது..சூழ்நிலை

இடம்கொடுக்காது…ன்னு தெரிய வரும்போது இவளைவிட/இவனைவிட புதிதாய்

ஒருவர் வாழ்வில் வந்து நம்மை புரிந்துகொள்ள முடியுமா? என்ற சந்தேகம்

வரும்போது..அது காதலாய் மாறுது.

இயல்பா பழகி கடைசியில காதலில் முடியறப்ப ஒளிவு,மறைவு

இருப்பதில்லை,ஒருவருக்கொருவர் மேலான நம்பிக்கையும் தெளிவும்

காதலின் எனர்ஜியாய் இருப்பதால் இதன் முடிவு சுகமே…

கண்டதும் காதலில் நட்பான பகிர்தலுக்கு நேரம் ஒதுக்கமுடியாமல் உணர்ச்சி

பூர்வமான மயக்கத்திலேயே ஓடிவிடும்..ஆனால் நட்பு பகிர்தல்

முழுமையடையும்போது..முடிவிலே…முடிக்கமுடியாமல் அது காதலாய்

மாறும்போது அங்கே புரிதல் மட்டுமே எனர்ஜியாய் இருக்கும்..

காதலுக்கும் ,நட்புக்கும் நடுவில் சின்ன வித்யாசம்தாங்க….

நட்பு- இன்டெலக்சுவல்

காதல்-எமோஷனல்

நட்பின் பின் வரும் காதல் –இன்டெலக்சுவல்+எமோஷனல்

காதல் தோல்வி ஆகி நட்பில் முடிந்தால் அது பிரிக்க முடியாத வலிங்க..:(

ஆனால் நட்பு பிரிய முடியாமல் காதலில் முடிந்தால் பிரிக்க முடியாத

பிரியம்..:)

எல்லா நண்பர்களுக்குள்ளும் காதல் பூப்பதில்லை..அப்படி ஒருவேளை

பூத்துவிட்டால் அது நட்பினை உரமாய் வைச்சுதான் பூக்குது….

அதனாலென்ன பூக்கட்டுமேங்க…

அத கிள்ளி எறிஞ்சுட்டு எப்பவோ பூக்கபோகும்/பொசுக்கபோகும்

இன்னொரு பூவுக்காக எதுக்குங்க காத்திருக்கணும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இனிய காலை வணக்கம் ஜென்னி வினோ அவர்களே!

// "நல்ல நண்பன் நல்ல வாழ்க்கை துணையாகலாம்"// ரைம்மிங்கா நல்லயிருக்கே!

இதை தாங்க நான் கேட்க்கிறேன். யாரவது எனக்கு வந்து இப்படி புரியும்படி சொல்லுங்க. சும்மாவா சொன்னாங்க "துடிக்கிற காதல் தும்மலை போன்றது....எப்பவும் வரலாம்....எவர் கண்டார் என்று....." வாங்க வந்து விளக்கி புரிய வைங்க பார்ப்போம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பரிசு என்ன வனி பெரிய பரிசு.....உங்களுக்காக பந்தியே காத்திடிருக்கு. வாங்க வாங்க நல்ல கவனிப்போம்!

தோழி பட்டி எப்படி ஆரம்பித்திருக்காங்கன்னு பார்க்க வந்தீங்களா இல்லை கம்பி நீட்டிட்டாங்களானு....சரி சரி ஜோக்ஸ் அபார்ட்.

காதலுக்கு மரியாதை கேள்விபட்டிருக்கேன்.....பாத்திருக்கேன்....."நட்புக்கு மரியாதை" யா நல்லாயிருக்கே....எங்கே இன்னமும் விளக்கி சொல்லுங்க படிப்போம்.

பிறந்த நாள் கொண்டாட்டம் வேற....விருந்தெல்லாம் தடபுடலா இருக்கும்....சாப்பிட்டு தூங்கிடாம ஒழுங்க வந்து பதிவு போடுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்