கத்தரிக்காய் துவட்டல்

தேதி: June 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

கத்தரிக்காய் - அரைக் கிலோ
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
வறுத்து பொடிக்க (கொஸ்து பொடி):
வரமிளகாய் - 4
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
மல்லி விதை (தனியா) - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு


 

கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். வறுத்து பொடிக்க வேண்டிய கொஸ்து பொடியை ரெடியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
பின்னர் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டி 3 நிமிடம் மூடி வைத்திருக்கவும்.
பின் கொஸ்து பொடி தூவி கிளறி விடவும்.
சுவையான கத்தரிக்காய் துவட்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம். கொஸ்து பொடிக்கு பதில் இட்லி மிளகாய் பொடி, மல்லித்தூள் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Manjula akka... Enaku kathirikkai romba pidikum. kandippa indha thuvattal seidhuttu epdi vandhuchunu solren akka.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்துக்கள்!!! ஈஸீ குறிப்பு! கத்தரிக்காய் வாங்கினதும் செய்யவேண்டியதுதான்!!

மஞ்சு
அடடா..
சுடு சாதத்திற்கு பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்.
ரசத்துக்கும் ஏற்றது.எனக்கு ரொம்ப பிடித்தமான காய்.
அவசியம் செய்துட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர். இம்முறை பார்ட்டிக்கு இந்த வகை தான் :) செய்துட்டு சொல்றேன். நல்லா இருக்கு பொடியெல்லாம் போட்டு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம ஊர் பக்குவம் நல்ல தெரியுது... எங்க வீட்டில் செய்யும் அதே முறை...இனி தொடர்ந்து குறிப்பு தரனும் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு மஞ்சுளா,

கத்தரிக்காயை வெறும் உப்பு, மிளகாய்த்தூள் மட்டும் சேர்த்து வதக்கி, செய்ததுண்டு. நீங்க சொல்லியிருப்பது போல பொடி சேர்த்து, செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

kathirikai rompa pidikum eanaku neenga soenatha nan senju pakaren akka

thavarugalai manika therinjavan kadavul

நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நன்றி

பதிவிட்ட அன்பு தோழிகள் அனைவருக்கும் நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு சுவையான கத்தரிக்காய் துவட்டல் பார்க்கவே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சுளா மேடம், உங்கள் கத்தரிக்காய் துவட்டல் இன்று செய்தேன்... சூப்பர்ங்க.. ரொம்ப சுலபமாகவும், சுவையாகவும் இருக்கிறது... என் கணவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது.. மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மஞ்சு, இன்று பூண்டு சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக இதை தான் செய்தேன். நார்மலா எல்லா பொரியல், வறுவலுக்கும் வெங்காயம், தக்காளி இல்லாம பண்ணவே மாட்டேன். இன்னைக்கு தான் முதல்முறையா நீங்க சொன்ன மாதிரி எந்த அக்சசரீசும் இல்லாம செய்தேன். பொடி போட்டு செய்தது ஒரு தனி டேஸ்ட் தான் போங்க. என் பொண்ணு அதை சிக்கன் ப்ரைன்னு சொல்லி சொல்லி சாப்ட்டா. ;)) ருசியான குறிப்புக்கு தேங்க்ஸ் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் மஞ்சுளா அக்கா உங்கள் கத்தரிக்காய் துவட்டல் இன்று செய்தேன் எலுமிச்சை சாதத்திற்கு. மிகவும் சுவையாக இருந்தது என் கணவர் விரும்பி சாப்பிட்டார் மிக்க நன்றி

Hi Julie Ramesh good morg have a nice day