அக்ரலிக் அன்னப்பறவை

தேதி: June 6, 2012

5
Average: 5 (8 votes)

 

அக்ரலிக் கலர்ஸ் - மஞ்சள், ஆரஞ்சு, நீலம் மற்றும் வெள்ளைநிறங்கள்
பெயிண்டிங் ப்ரஷ் - மூன்று சைசில்
கார்ட் போர்டு
கலர் மிக்சர் ப்ளேட்
கார்பன் ஷீட்

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வெவ்வேறு அளவுகளில் மூன்று ப்ரஷ்கள் எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள்நிற அக்ரிலிக் கலரை ப்ரஷில் தொட்டு கார்ட் போர்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவமாக வரைந்துக் கொள்ளவும். இந்த பெயிண்ட் அடித்து 30 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை காயவிடவும்.
மஞ்சள் நிறத்தை சுற்றி ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் செய்யவும். மஞ்சள்நிறமும், ஆரஞ்சு நிறமும் இணையும் இடத்தில் ப்ரஷில் தண்ணீர் தொட்டு ஒரு முறை அடிக்கவும். இவ்வாறு பண்ணும் போது இரு கலரும் கலந்ததுப்போல் தெரியும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த படத்தை வரைய வேண்டுமோ அதை வைத்து, அதனடியில் கார்பன் சீட் வைத்து ட்ரேஸ் எடுக்கவும். நன்றாக வரைய வருபவர்கள், அப்படியே வரையலாம்.
முதலில், பச்சை கலரை எந்த எந்த இடத்திற்கு தேவையோ அங்கு அடித்து, 45 நிமிடம் காயவிடவும்.
நன்கு காய்ந்த பின்னர் ப்ளூ கலரில் பெயிண்ட் செய்யவும்.
இரண்டு கலரும் நன்கு காய்ந்த உடன், வெள்ளைநிற பெயிண்டால் அவுட்லைன் தர வேண்டும். இதை செய்யும் போது, பொறுமையாக வெள்ளைநிறம் வெளி பகுதியில் படாதவாறு வரையவும். நன்கு காய்ந்த பின்னர் பிரேம் பண்ணி விடலாம். இது ஈஸியாக எல்லோரும் வரையக்கூடிய பெயிண்டிங்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுகி... வந்துட்டுது வந்துட்டுது... அன்னப்பறவை அழகா வந்துட்டுது :) ரொம்ப சூப்பர். ஸ்டெப் ஸ்டெப்பா அது உறுவான விதம் பார்க்க இன்னும் ரொம்ப அழகா இருக்கு. கலக்கலா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி

வாழ்த்துகள். செமையா இருக்கு. படங்களும்,விளக்கமும் தெளிவா இருக்கு.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஆஹா கொள்ளை அழகு அன்னப்பறவை அட்டகாசமா இருக்கு எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல அவ்வளவு அழகு சுகந்தி அருமை அருமை அருமை. ரொம்ப பொறுமையா செய்யனுமோ

Hai suganthi... I am tamilmani..
I am Graphic Designer... ( I finished in Multimedia)...
Any Online Job iruntha sollunga.. pls....

சுப்பர்ப் சுகி. ரொம்ப நேர்த்தியா பண்ணி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

சுகி.

சான்சே இல்லை.அருமையா இருக்கு அன்னம்..
நான் நீங்கன்னு எதிர்பார்க்கவில்லை.
அழகோ அழகு ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ், 'அக்ரலிக் அன்னப்பறவை' அசத்தலா இருக்கு சுகி! ரொம்ப ரொம்ப அழகா செய்திருக்கிங்க... லவ்லி வொர்க்! :) கண்டிப்பா என் பொண்ணுகிட்ட காட்டறேன், பெயிண்டிங் எல்லாம் ரொம்ப ரசிப்பா.
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சுகி!

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பரா இருக்கு உங்க அன்னம் .... சிம்பிள் ஆ சூப்பரா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் .....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

பைண்டிங் வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி..

வனி - ரொம்ப நாளா எதிர்பார்த்தோம், எப்படியோ வந்துடுச்சு :-)
உங்கள அளவு வரவே முடியாது, வாழ்த்துக்கு தேங்க்ஸ் வனி

மஞ்சுளா - எப்படி இருக்கீங்க?நலமா? இதை எவளோ நாளா அனுப்ப இருந்தேன், எப்படியோ இப்போ அனுப்பினேன், வாழ்த்துக்கு மிக்க நன்றி

உமா - அடடே ரொம்ப பிடுச்சு இருக்கா? அப்படியே ஒன்னு கொரியர் பண்ணிடறேன். உங்க பாராட்டுலையே சந்தோசம் தெரியுது. ரொம்ப சந்தோசம். ரொம்ப பொறுமை எல்லாம் வேண்டாம், கலர் காய்வதற்கு தான் லேட் ஆகும். '

இமா - வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன்!! பாராட்டுக்கு மிக்க நன்றி

ரம்ஸ் - இது தான் அறுசுவைக்கு அனுப்பும் முதல் கிராப்ட்... இனி நிறையா அனுப்ப ட்ரை பண்றேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி

சுஸ்ரீ - இதுக்கு "அக்ரலிக் அன்னப்பறவை" பேருக்கு காரணம் வனி தான். என்ன பேரு தரதுன்னு யோசுச்சுட்டே இருந்தேன், சிந்தனை ராணி சரியான நேரத்துல இந்த ரைமிங் பேரு தந்து கலக்கிட்டாங்க. கண்டிப்பா பொண்ணு கிட்ட காட்டுங்க. முடிந்தா குட்டியா வரைய வைங்க....

சங்கீதா - நலமா? உங்க வாழ்த்துக்கு நன்றி..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாவ்... உங்க பெய்ண்டிங் ரொம்ப அழகா இருக்கு. இனி யாருக்காவது ஏதாவது பரிசு குடுக்க வேண்டுமானால் உங்களுக்கு பிரச்சனையே இல்லை. உங்கள் கைவண்ணத்திலேயே அழகா உருவாக்கி குடுத்திரலாம். அவ்ளோ பியூட்டி உங்க அக்ராளிக் அன்னப்பறவை.

இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் பா.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு சுகந்தி,

சூப்பர், சூப்பர், சூப்பர்!!

அழகாக செய்திருக்கீங்க, ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கங்களும் அருமை!

மனம் நிறைந்த பாராட்டுக்கள், சுகந்தி!!

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய படைப்புகள் எதிர்பார்க்கிறோம்!

அன்புடன்

சீதாலஷ்மி

சுகந்தி....
சேம் பின்ச்... இதே போல நானும் வரைந்து என் தங்கச்சிக்கு பரிசு அளித்துள்ளேன்.... இதே கலர் காம்பினேசன் தான் ஆனா லைட்டா கோல்டில் டச்சப் செய்து ஸ்டோன் எல்லாம் ஒட்டினேன்... உங்களுதும் ரொம்ப நல்லா இருக்கு ஈஸியாவும் இருக்கு மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்..........

பிரேமா - வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க, இதுவரை என் கை வண்ணத்தை தான் பரிசா தந்துட்டு இருக்கேன், இனியும் அதையே தொடர ஆசை படறேன்..

சீதாம்மா - வாழ்த்துக்கு மிக்க நன்றி...உங்க விருப்பம் போலே இன்னும் நிறையா அனுப்பறேன்....

ப்ரியா - வாவ் நீங்களும் பண்ணுவீங்களா? கண்டிப்பா அறுசுவைக்கு அனுப்புங்க..நாங்க காத்து இருக்கோம்...வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***