ஹெல்தி அல்வா

தேதி: June 7, 2012

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பப்பாளி-1
ஆரஞ்சு பழம்-3
சர்க்கரை-1 கப்
நெய்-2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய நட்ஸ்-1/2 கப்
ஏலக்காய்த்தூள்-1 டீஸ்பூன்


 

முதலில் பப்பாளியை தோல் ,கொட்டை நீக்கி ப்ளண்டரில் அடிக்கவும்
ஆரஞ்சு பழத்திலிருந்து 1 கப் அளவுக்கு ஜுஸ் எடுக்கவும்
சர்க்கரையை பொடி செய்யவும்
தோல் நீக்கிய பாதாம்,பிஸ்தாவை பொடியாக நறுக்கவும்.
ஏலக்காயை வறுத்து பொடிக்கவும்
முதலில் பப்பாளிக்கலவையை பச்சை வாசனை போகுமாறு சிறிது நெய் விட்டு மைக்ரோ ஹையில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்…
பிறகு ஜுஸ் சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடம் வைக்கவும்
நடுநடுவே கிளறவும்
அதனுடன் சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள்
பதம் வரும்வரை வைத்து எடுக்கவும்


இதில் பப்பாளியும் ஆரஞ்சும் சேர்த்திருப்பதால் வைட்டமின் ஏ மற்றூம் சி நிறைந்த இனிப்பு.நெய்யின் அளவை குறைத்தாலும் நன்றாகவே இருக்கும்..சர்க்கரையின் அளவை பழங்களின் இனிப்புக்கேற்ப கூட்டியோ ,குறைத்தோ செய்யலாம்.ஓவனின் வகையை பொறுத்தும்,செய்யும் அளவை பொறுத்தும் நேரம் மாறுபடும்.
அடுப்பிலும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

அல்வா சூப்பர் :) இத இத இதத்தான் நான் எதிர் பார்த்தேன். பார்ட்டியில் கலக்கிடுவோம். நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி மேம்,

இவை இரண்டும் எப்பொழும் வீட்டில் இருக்கும் பழங்கள். செய்து பார்க்க ஆசையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இல்லை. இந்த அல்வா செய்யா வேறு ஏதேனும் ஆப்சன் உண்டா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வனி,மிக்க நன்றி...சீக்கிரம் நீங்க செஞ்சுட்டா படத்தோடு போடுங்கோ :)

ப்ரேமா,

அடுப்பிலேயே செய்யலாங்க...எனக்கு கிளறும் பொறுமை குறைவு...அதான் ஓவன்ல பண்ணினேன்...நெய் அதிகம் பயன்படுத்த அவசியமில்லை..ஓவனில்ல..
மத்தபடி மற்ற அல்வா செய்யறாப்பல மிதமான தீயிலே அடுப்பிலேயே நீங்க தாராளமா செய்யலாம்.

நிகிலா,ஆமாங்க இது டேஸ்டியா இருக்கும் .ஒரு சமையல் போட்டிக்காக நான் பண்ணினேன்..முயற்சி பண்ணி பாருங்க..நன்றீ

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி
ஹெல்தி அல்வா ரொம்ப ஈஸி அல்வாவும் தான்.ம் ம் டேஸ்டியும் தான்.குழந்தைகளே செய்து விடலாம்.