பேப்பர் அன்னப்பறவை

தேதி: June 9, 2012

5
Average: 4.1 (23 votes)

காகிதங்களை http://www.arusuvai.com/tamil/node/15022 உள்ளது போல் மடித்து கொள்ளவும். அதில் குறிப்பிட்டுள்ள படி ஒரு A4 பேப்பருக்கு 32 செய்தாலும் சரி. இங்கே நான் ஒரு பேப்பருக்கு 16 மட்டுமே செய்திருக்கிறேன்.

 

கலர் அல்லது வெள்ளை மடிக்கப்பட்ட காகிதங்கள் - 202 / 317

 

பேப்பர் பூ ஜாடி குறிப்பில் படம் 9 மற்றும் 10ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு வரிசைக்கு 18 என்ற கணக்கில் சேர்க்க ஆரம்பிக்கவும். மொத்தம் 8 வரிகள் தேவை.
இப்போது அதை இரண்டு பாகமாக சரியாக பிரித்து கொண்டு இரண்டு பக்கமும் 6 காகிதங்கள் சேர்க்கவும்.
இனி 6ன் மேல் 5, 5ன் மேல் 4, என 1 வரை சேர்க்கவும். இப்போது இப்படி கோபுரமாக கிடைக்கும்.
இதே போல் இரண்டு பக்கமும் சேர்த்தால் பறவையின் சிறகு பகுதி தயார்.
இனி நடுவில் உள்ள பகுதியில் கழுத்தை சேர்க்க வேண்டும். 10 காகிதங்களை நீள வாட்டில் சேர்த்தால் கழுத்து தயார்.
வால் பகுதிக்கு படத்தில் உள்ளது போல் 3ன் மேல் 2, 2ன் மேல் 1 என சேர்த்து தயார் செய்யவும்.
இதை பின் பகுதியில் உள்ள காகிதத்தோடு இணைத்தால் வால் பகுதியும் தயார்.
இப்போது முழு பறவையும் தயார். இது 18 மட்டுமே பயன்படுத்தி இருப்பதால் பார்க்க சிறிதாக தெரியும். இதே பறவையை ஒவ்வொரு வரிசையிலும் 28 என மாற்றினால் உருவம் மாறுபடும்.
இது 28 ஆக மாற்றப்பட்ட பின் உள் பகுதி. முன்பை விட நல்ல இடைவெளி இருக்கும். சிறகுகளுக்கு இடையே இடைவெளி கிடைத்து அழகு சேரும்.
சிறகு பகுதியும் கூடுதலாக சேர்த்து நல்ல உயரமும் கிடைக்கும்.
விரும்பினால் கழுத்து பகுதிக்கு சேர்த்தது போலவே காகிதங்கள் சேர்த்து ஒரு வளைவு செய்து கீழே கூடு போல் வைக்கலாம். ஒரே வரிசையோ, இரண்டு வரிசையோ உங்கள் விருப்பம் போல் முயற்சிக்கலாம்.
அழகான காகித பறவை தயார். இதுவே நான் முயற்சி செய்த முதல் Origami வேலைப்பாடு. அதனால் 32 என்ற அளவுக்கு சிறிய துண்டுகளாக செய்யாமல் 16 வைத்து முயற்சி செய்திருக்கிறேன். இணைக்கும் முறை வடிவம் எதிலும் வேறு பாடு தெரியவில்லை. இது முதன் முறையாக முயற்சிக்க விரும்புபவர்களுக்கு சுலபமானதாக இருக்கும். ஏன் எனில் பேப்பர் நறுக்கி, மடித்து, சேர்க்க என எல்லாம் சேர்ந்தே ஒரே நாளில் முடிந்தது. மிக எளிமையாக செய்து விடலாம்.
இந்த பறவையை ஒவ்வொரு வரிசையிலும் 30 என மாற்றி செய்தது. அன்னப்பறவையின் கழுத்து, மூக்குக்கு இரண்டு சேர்த்து 20 முக்கோணங்கள் வேண்டும்.
கழுத்து பகுதிக்கு மட்டும் இன்னும் சில காகிதங்களை இணைத்து, முயற்சி செய்து பார்த்த வெள்ளை அன்னம் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு வனிதா,

வெள்ளை அன்னம் உள்ளத்தை
கொள்ளை கொள்கிறதே!

தலை திருப்பிப் பார்க்கும் அன்னம்
அலை ஆடும் நீல வண்ணம்
கவர்ந்திடும அனைவரின் எண்ணம்

உங்களுடைய க்ராஃப்ட் வொர்க் என்னை கவிதை எழுத வச்சிடுச்சு பாத்தீங்களா:)

அன்புடன்

சீதாலஷ்மி

வனி அக்கா முதல் படைப்பே இவளோ அசத்தலா இருக்கே இத எனக்கு கிப்டா குடுதுடுங்களேன் !!!! இன்னும் அனுப்புங்க இது மாதிரி நிறைய பட் என்னால செய்ய முடியுமான்னு தான் தெரியல ட்ரை பண்ணி பார்கிறேன் by Elaya.G

அடடா அடடே அடடட்டடடேஏஏஏஏ அன்னப்பறவை.. :D..

அன்னப்பறவை வாரம்.......
வனிக்கா.... முதலில் நான் ரேனுகா அவர்களின் குறிப்பு என்று தான் நினைத்தேன்... பிறகு கமென்ட்ஸில் பார்த்தால் வனி என்று இருந்தது... ஆச்சர்யம்.... கண் பார்த்தால் கை செய்யும் என்பார்களே அது இது தானோ.... அழகோ அழகு........... இனி பேப்பரில் வரும் ஜாலங்களுக்காக வெயிட்டிங்.... ப்ரசன்டேஷன்ல வனி டச் அருமை...
அக்ரலிக்ல, பேப்பர்ல இனி எதுல பா அன்னப்பறவை வரப்போகுது... நான் அன்னப்பறவை வரைந்து அனுப்பிய ராசி போல............

வனி

அழகான அன்னம்..
வெண்மையான அன்னம்..
பார்க்கவே கலக்கலா இருக்கு
வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) அடுத்த வாரம் தான் வரும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

சீதாலஷ்மி... மிக்க நன்றி. அன்னப்பறவையை விட உங்க கவிதை அழகு. :) ஐ லைக் இட்.

இளையா.. மிக்க நன்றி. நீங்க எப்போ என்னை பார்க்க மாலே வரீங்களோ அப்போ இது உங்களுக்கு கிஃப்டா கொடுத்துடுவேன். :) இளையாக்கு முடியாதது எதாவது இருக்கா??? முடியும்.. ரொம்ப சுலபமா தான் இருக்கு, ட்ரை பண்ணுங்க.

சாந்தினி... மிக்க நன்றி. :) ட்ரை பண்ணலாம் தானே??

பிரியா... மிக்க நன்றி. ஆமாம் அன்னமா வருது வருசையா. :)

ரம்யா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி அழகா செய்துட்டீங்களே,ஈஸியா தானே இருந்தது,பேப்பர் மடிக்க அலுப்பு படாமல் இருந்தால் எல்லாருமே செய்யலாம்.நானும் முதன் முதலாக ஒரு பேப்பரை 16 பீஸ் போட்டு தான் செய்தேன்,அப்ப யோசிச்சேன் என்னடா இத்தனை பேப்பர் தீருதுன்னு,ஆனால் இப்ப கலர் கலரா நிறையா வாங்கி வைச்சு இருக்கேன்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வாவ் வனி... அன்னப்பறவை மிகவும் அழகாக உள்ளது, ஆல் இன் ஆல் என்ற பேரு உங்களுக்கே பொருந்தும். எப்படி நீங்க மட்டும் எல்லாத்திலும் அசத்துறீங்க, அது என்ன ரகசியம்னு எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்களேன்.

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ரேணுகா... மிக்க நன்றி. எனக்கு இந்த வேலையை முதலில் அறிமுகப்படுத்தியது இமா. எங்கோ அவங்க சொல்லி இருந்ததை படிச்சேன்... அப்போ origami என்ற வார்த்தை மட்டுமே தெரியும். போன முறை உங்க குறிப்பு வந்ததும் இவரிடம் காட்டினேன்... ரொம்ப கஷ்டம்னு சொன்னேன்... அன்றே பேப்பரை வாங்கி கொடுத்து விளக்கம் கொடுத்தார்... இதில் பிரபலமான ஃபோல்டிங் அன்னப்பறவை என்று சொன்னதும் அவர் தான். உன்னால் முடியும், நீ செய், நான் ஹெல்ப் பண்றேன்னு. ஒவ்வொரு ஷேப் கொடுத்தப்பவும் அதுக்கு ஃபீட் பேக் வரும், மீண்டும் மாற்றினேன். அதான் இவ்வளவு அழகா செய்ய முடிஞ்சது.

பிரேமா... மிக்க நன்றி. மேலே சொன்ன விளக்கம் தான் உங்களுக்கும் பதில் :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கும் ஆரிகாமியில் ஈடுப்பாடா? என் வீட்டிலும்.....என் தம்பிக்கு இது தான் ஹாபி. வீடு பூராவுமே இந்த மாதிரி தான் ஏதாவது ஒன்னு புதுசு புதுசா மொளச்சிக்கிட்டே இருக்கும். நீங்க செய்ததை பார்த்து எனக்கும் ஆசை வந்துட்டுது. அதுலேயும் நீங்க சீதலக்ஷ்மியை கவிதை எழுத வெச்சீங்க பாருங்க அங்கே திரும்பி பார்க்குது உங்களின் அன்னம். க்யூட் அண்ட் நீட் வொர்க். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி அதிகம் இதில் அண்ணப்பறவை தான் பார்க்க முடியும்,நம் கற்பனையில் இன்னும் புதியதாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலும்,உங்க அவர் பரவாயில்லை பீட் பேக் தருகிறார்.என்னவரோ எது கான்பித்தாலும் சூப்பர் என்று மட்டுமே சொல்லுவார்,நான் வேற எதாவவது சொல்லுங்களேன் என்று கிண்டல் பன்னுவேன்..
முக்கியமான விசயம் வனி,இதில் முக்கோனங்களை சேர்க்கும் போது இரண்டு தடவைக்கு மேலே கலைக்க வேணாம்,பேப்பர் லூசாக ஆயிடும்.ஸ்டாரங்காக நிக்காது,

லாவன்யா எங்க வீட்டிலும் அப்படிதான் எதாவது முளைக்கும் இடமே இல்லை வைப்பதற்க்கு, வீடு முழுக்க திரும்பும் பக்கம் எல்லாம் கிராப்ட் வொர்க் தான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

முக்கோனங்களை நான் இதுவரை 10 முறையாவது கலைச்சு சேர்த்திருப்பேன்... நம்ம அன்னப்பறவை ஸ்ட்ராங்கா இருக்கார் :) முக்கோனம் நான் உங்கள் முறையில் மடிப்பதில்லை... நான் மடிக்கும் விதம் வேறு. அதனால் கண்டிப்பா லூசாகும் பேச்சுக்கே இடமில்லை. அடுத்த குறிப்பில் காட்டுறேன் எப்படி மடிச்சேன்னு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈடுபாடு உண்டாக்கியதே இவர் தான்... என்னால் முடியாதுன்னு சொன்னேன்னு நீ செய்தா தான் உண்டுன்னு உட்கார வெச்சுட்டார். நீங்களும் செய்து அனுப்புங்க... உங்களோட ஆரிகமி வேலைக்காக நானும் வெயிட்டிங் ;) கண்டிப்பா லாவியோடது ஸ்பெஷலா தான் இருக்கும். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் வனி, அன்னப்பறவை ரொம்ப அழகா இருக்கு! :)
எவ்வளவு அழகா செய்து இருக்கிங்க, அதிலும் பலவித அளவுகளுக்கு தந்திருக்கும் வேரியேஷன்ஸ் சூப்பர்!

உங்களுக்கு ஆரிகாமி ஈடுபாடு வந்த விதம் நைஸ்! ஆரிகாமியில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கோ இல்லையோ, என் ம‌க‌ளுக்கு இருக்கு... :) சென்ற விடுமுறையின்போது, கிட்ஸ் ஆரிகாமி செட்கூட ஒண்ணு வாங்கினோம். இப்ப‌, போன வீக்கென்ட் ரேணுவோட ஒரு குறிப்பை பார்த்து, பேப்பர் மடிக்க ஆரம்பித்து விட்டாள்.. :) வெள்ளை பேப்பரில் 94 மடித்திருக்கிறாள், இப்ப கலர் பேப்பருக்காக வெய்ட்டிங்! (கடைக்கு போக டைம் இல்லாமல் அப்படியே போய்ட்டிருக்கு. :( இன்னும் என்ன‌ செய்ய‌ற‌துன்னு ஒரு முடிவுக்கு வ‌ர‌லை, எதாவ‌து சிம்பிளான‌தில் இருந்து ஆர‌ம்பிச்சா ந‌ல்லதுன்னு பார்த்திட்டு இருக்கோம்.

ம்ம்... அப்புறம், நேற்று இரவு இந்த குறிப்பை காண்பித்தேன். ரொம்ப‌வும் லைக் ப‌ண்ணி பார்த்தாள். பாராட்டுக்கள் வனி!

**

சீதால‌ஷ்மிமா,
இதை நான் சொல்லியே ஆக‌னும். உங்க‌ க‌விதை, அத்த‌னை அழ‌கு! :)

வனியின் அன்னத்துடன் சேர்த்து, உங்க‌ க‌விதையையும் ரொம்ப‌ ர‌சிச்சேன்.

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. கிட்ஸ்குன்னு இல்லங்க, நாம செய்யவே இது போல் ஆரிகமி கிட் ரெடிமேடா கிடைக்குது :) பேப்பர் எல்லாம் மடிச்சு, உள்ள இன்ஸ்டர்க்‌ஷனோட வரும். அதை வாங்கினா 1 மணி நேரத்தில் மேட்டர் ஓவர். ஹிஹிஹிஹீ. சென்னையில் இருக்கான்னு தெரியல, ஆனா பல வெளிநாடுகளில் கிடைக்குது. உங்க மகள் என்ன செய்யனும்னு ஒரு ஐடியா தானே... இருங்க... அவ என் செல்ல குட்டி ஆச்சே... உங்களுக்கு மெயிலில் அனுப்பி விடறேன் தகவல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழ..கா இருக்கு வனி.

நானும் முதல் ட்ரை பண்ணினது அன்னம்தான்.
ஆனா... ;)) இங்க கொஞ்சம் முன்னாடி கண்டதை இப்போ காணோம். அதனால கருத்துச் சொல்லல. ;)) சுருக்கமா சொன்னா... அது நான் இல்லைன்னு நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி. நீங்க ஏன் அன்னம் அனுப்பல??? :( அனுப்பிருந்தா நானும் பாத்திருப்பேன்ல.

//ஆனா... ;)) இங்க கொஞ்சம் முன்னாடி கண்டதை இப்போ காணோம். அதனால கருத்துச் சொல்லல. ;)) சுருக்கமா சொன்னா... அது நான் இல்லைன்னு நினைக்கிறேன்.// - எனக்கு சுத்தம புரியல... என்ன சொல்றீங்கன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நீங்க ஏன் அன்னம் அனுப்பல?// அது ரொம்ப காலம் முன்னால ட்ரை பண்ணினது வனி. அறுசுவைக்குன்னு பண்ணல. அதனால ஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டோ எல்லாம் எடுக்கல. எங்கயோ ஒரு பாக்ஸ்ல இருக்கு. கண்ணுல படுறப்ப நிச்சயம் ஃபோட்டோ எடுத்து மெய்ல் பண்றேன்.

‍- இமா க்றிஸ்

அவசியம் மெயில் பண்ணுங்க... பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன் :) இமா வேலையை அடிச்சுக்க முடியுமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகு அன்னம்! பட்டு மேலயா உட்கார்ந்திருக்கு?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனி,
அழகிய அன்னம்..
ரொம்ப பொறுமை உங்களுக்கு...
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

ஹலோ வனிதா,
வெற்றிகரமா swan செஞ்சு முடிச்சாச்சு :) ஆனால் என்னுடைய final bird எப்படி இருக்கு என்பது நாளைக்கு facebook கமெண்ட்ஸ் பார்த்தால் தான் தெரியும் :)

நல்லவேளை எங்க அம்மா பக்கத்தில் இல்லை... இல்லை என்றால் என்ன இது பேப்பர் வெட்டி விளையாடுறேன்னு செல்லம் கொஞ்சி இருப்பாங்க :)

ஒரு சந்தேகம்.. எங்கே பார் go green ன்னு சொல்றாங்க... ஆனால் origamiக்கு சாதாரண பேப்பர் / a4 ஷீட் தான் உபயோகப் படுத்தனுமா? இல்லை வேற ஏதாவது ஸ்பெஷல் பேப்பர் இருக்கா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிக்கா அன்னம் அழகோ அழகு....ரொம்ப நல்லா இருக்கு....

இப்ப எனக்கு கொஞ்சம் டைம் இல்லாததால ஒருத்தர் குறிப்புக்கு பதிவு போட்டு இன்னொருத்தருக்கு போடாம இருந்தா நல்லாருக்காதுன்னு எந்த குறிப்புக்கும் பதிவு போடுறது இல்ல...ஆனால் இதை பார்த்த பிறகு பதிவு போட மட்டும் இல்லாம செய்து பார்க்கவும் தோணுது....ப்ரீ டைம் கிடைத்தால் கண்டிப்பா செய்து பார்க்க போறேன்....

சத்தியமா இவளோ பொறுமை என்னால முடியாது. அழகோ அழகு, வேலைப்பாடு திருத்தமா வந்து இருக்கு. டார்க் கலர் ல பண்ணி இருந்தால் கூடுதல் அழகு தான். நம்ம ஊருன்னா நாம எதிர்பார்க்கும் கலர் பேப்பர் கிடைக்கும், அங்கே கஷ்ட்டம் தான். பிரமாதம் பிரமாதம் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி. ஆமாங்க பட்டு மேல தான் உட்கார்ந்திருக்கார் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி... செய்தே முடிச்சுட்டீங்களா??? அடடா... எனக்கு பார்க்கனும் போல ஆசையா இருக்கு :) ஃபேஸ்புக்’ல தேடி பார்க்கறேன் உங்களை... ஆனா எனக்கு தான் ஃபேஸ்புக் ஐடி இல்ல ;) ஆரிகமி பேப்பர் பயன்படுத்தனும்னு ஒன்னும் இல்ல... வீணா போற பழைய பேப்பரில் கூட தான் பண்ணலாம். எந்த ரீசைக்கில் பேப்பல வேணும்னாலும் பண்ணலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அதான் ரொம்ப நாள் ஆகுதா உங்களை பார்த்து??? ம்ம்... எப்படியே அன்னப்பறவை உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் மகிழ்ச்சி. அவசியம் செய்து பாருங்க. சுலபம் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,

//உங்க மகள் என்ன செய்யனும்னு ஒரு ஐடியா தானே... இருங்க... அவ என் செல்ல குட்டி ஆச்சே... உங்களுக்கு மெயிலில் அனுப்பி விடறேன் தகவல். :)
//
தட்ஸ் சோ ஸ்வீட்... இப்பதான் பார்த்து, பதில் போட்டேன். :) ரொம்ப நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. இங்க இந்த பேப்பரை தேட நான் ரொம்ப அவஸ்தை பட வேண்டி இருக்கு ;) நினைச்சதெல்லாம் கிடைக்காது இங்க... தீவுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்த்துட்டேன் உங்க மெயில் :) இங்க பிசியா இருந்ததால் அங்க பதில் போடாம இருக்கு. அவசியம் செய்து பார்த்து போட்டோவும் வரனும் அறுசுவையில்னு சொல்லுங்க :) அப்போ செல்ல குட்டி செய்தா உங்களை கூப்பிட்டு ஸ்டெப் விடாம கரக்ட்டா போட்டோ எடுக்க சொல்வா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது தான் பேஸ்புக்குக்கு நோன்னு சொல்லி ஒரு பட்டிமன்றமே நடந்திருக்கே... இன்னைக்கு தான் தீர்ப்பை படிச்சேன் :) அதனால ஆச்சர்ய பட ஒன்னும் இல்லை...:) நீங்க என்னுடைய அன்ன பறவைய பார்க்கலாம் தான்.... ஆனால் அப்புறம் உங்களுக்கு origami மேல ஆசை இருக்குமான்னு தான் தெரியலை :) சும்மா சொன்னேன்... என்னுடைய மேடம் (என்னோட மகள்) ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க... அவங்க டீச்சர்ஸ்க்கு வேற இதே போல செஞ்சு தரனுமாம்...

எப்படி பார்த்தாலும் பாஸ் தான் :) தேங்க்யூ வனிதா டீச்சர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஓ... குட்டி மேடம் பார்த்து அழகா இருக்குன்னு சொல்லிட்டாங்களா... அப்போ சரி :) பாஸுன்னு நானும் ஒத்துக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
நீங்க புதுசா சேர்த்த கடைசி படத்தில இருக்கிற swanக்கு, கழுத்து பகுதிக்கு எத்தனை papers use செய்தீங்க?

எனக்கு அந்த question mark shape வர மாட்டேங்குது :)

நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லவும். நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

20 பீஸ் இருக்கும் கழுத்தில். வளைக்க வருதா?? இல்லன்னா அடுத்த பக்கமா வளைச்சு பாருங்க... மாத்தி வளைத்திருக்கலாம். கரக்ட்டா வரும் :) நீங்க SSN கல்லூரியில் படிச்சீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்
வனிதா உங்களின் அன்னபர்வை ஐ பார்த்து இன்ஸ்பிரே ஆகி நானும் செய்தேன் மிக அருமை என்று என் அவர் பாராட்டினார் மிக்க நன்றி

தங்களின் இந்த முயரிசியை தொடுருங்கள்.whatever appreciation that i receive all the credit goes to u. u deserve it.

மிக்க நன்றி. நீங்க செய்து பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஐடியா யார் வேணும்னா தரலாம்... ஆனா அதை கச்சிதமா செய்வது உங்க கையில் தானே இருக்கு. அதனால் வாழ்த்துக்கள் உங்களுக்கே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

(o_o)

நான் 27 பேப்பர்ஸ் வரை ட்ரை செய்து பார்த்தேன்.. ரெண்டு பக்கமும் ட்ரை பண்ணி பார்த்தேன்... நான் ஒரு பேப்பர்ல இருந்து 32 pieces எடுத்து யூஸ் செய்ததால இன்னும் ஒரு 13 பேப்பர்ஸ் சேர்த்து பார்க்கிறேன் :)

நன்றி..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கழுத்துக்கு நீங்க சின்னதா செய்ததால் நெருக்கமா வந்திருக்கும். அதான் வளையல. இட்ஸ் ஓக்கே... இன்னும் கொஞ்சம் சேருங்க, வந்துடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba azhaga irrukku.idhai kandipa seithu partpen.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா அன்னபறவை செய்து முடித்து விட்டேன். ரொம்ப நல்லா வந்தது. நான் சாதாரண கலர் பேப்பர்ல செய்தேன்.எல்லார்கிட்டயும் காமிச்சி பாராட்டு வாங்கியாச்சி.ரொம்ப நன்றி

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி :) எந்த பேப்பரில் செய்தா என்ன... ஃபைனல் அவுட் புட் சூப்பரா வந்துடுச்சு தானே... அது போதும். மிக்க மகிழ்ச்சி கவிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nallama vani?ungala craft work senji pathen supera iruku...but enna ennala ordinary sheet than pa seiya mudijathu... enga origami sheet kidakala dear...white annam next try panna poren....but vani unngaloda rose than enaku varave matangathu... eruthalam kandipa vedama try panni senjitu solren pa peacock ku origami sheet vangi than try pannanum..... next craft enna panitu irukanga?

செய்துட்டீங்களா??? ரொம்ப மகிழ்ச்சி சத்யா. சாதாரண பேப்பரும் அழகு தானே. மெதுவா கிடைக்கும் போது ஆரிகமி பேப்பரில் ட்ரை பண்ணுங்க. :) ரோஸை விடாதீங்க... நிச்சயம் வரும். ஆல் தி பெஸ்ட். செய்துட்டு சொல்லுங்க சத்யா. இப்போதைக்கு எதுவும் பண்ணல சத்யா, கொஞ்சம் பிசியா இருக்கு இப்போ. :) நன்றி சத்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய், வனிதா
உங்கள் அன்னபறவை நல்லா இருக்கு உங்கள் மெஹந்தி டிசைனும் பிடிக்கும் நான் நிறைய தடவை போட்டு பார்திருக்கின்றேன்.
எனக்கும் அன்னபறவை செய்ய ஆசையாக இருக்கு, ஆர்காமி பேப்பர் தாம்பரதில் கிடைக்கவில்லை சென்னையில் எங்கு கிடைக்கும்,
தெரிந்தால் சொல்லுங்கள். உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன்.

சென்னையில் எங்கே கிடைக்கும்’னு எனக்கு தெரியலங்க. க்ராஃப்ட் பொருட்கள் எல்லாம் RS Shopping செண்டர் என அடையாரில் கிடைக்கும். அங்க விரும்பினா கேட்டு பாருங்க. இல்லன்னா ஸ்டேஷனரி ஷாப்பில் கேளுங்க. கிடைக்கும். தாமதனான பதிலுக்கு மன்னிக்கவும். நான் இப்ப தான் பார்க்கிறேன். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா