வயிற்று போக்கு

என் மகளுக்கு 9 மாதம் ஆகிறது.தண்ணீரை போல வயிற்றோட்டமாக 20 நாட்களாக உள்ளது.டாக்டர் ஆலோசனை படி உணவும் அறவே கொடுப்பதை நிறுத்தி விட்டேன்.அரிசி கஞ்சி மட்டும் செய்து கொடுக்கிறேன். தயவு செய்து ஏதாவது நிவாரணத்திற்கான உடன் வழியை கூறுவீர்களா சகோதரிகளே.

தோழி,வறுத்த அரிசி பொடியில் கஞ்சி செய்து கொடுத்தாலே நின்று விடும்,பிரட் வெந்நீரில் நனைத்து கொடுத்தாலும் நிக்கும்,சில குழந்தைக்கு பல் வளரும் நேரத்தில் வயிற்று போக்கு ஏற்படலாம்.குழந்தைக்கு நீர் சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும் ,பார்த்து கொள்ளுங்கள்,சீக்கிரம் சரியாகிவிடும் கவலைபடாதீர்கள்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ஆரோ ரூட் மாவை தண்ணிர்யில் காய்ச்சி கொடுங்க நிற்கும்..ஆப்பில் வேகவைத்து கொஞ்சம் கொடுத்து பார்க்கலாம்..வெறும் ப்ரெட் பன் கொடுக்கலாம்.தேனை நாக்கில் தடவி விடலாம்.

ஓமம் வேகவிட்டு அதில் தேன் விட்டு கொடுக்கலாம்

பதிலளித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி

கொய்யா இல்லை 3 இடிச்சி சாறு எடுத்து ஒரு துளி உப்பு சேர்த்து குடுக்கலாம்.
வசம்பு இழைத்து ஒரு பாலாடை குடுக்கலாம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்