அன்பு தோழிகள் அனைவர்க்கும் சௌமியன் வணக்கங்கள் .உங்கள் பிரார்த்தனை மற்றும் ஆலோசனைகள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாது .எனது நன்றிகள் மீண்டும் அனைவர்க்கும் .எனக்கு ஒரு டவுட் எங்கள் பாப்பா கடந்த சில நாட்கள் ஆக தொடர்ந்து அழுகிறாள் .தூக்கம் குறைவாக உள்ளது.அவள் பிறந்து ஒரு மாதம் பதினைந்து நாட்கள் முடிந்து விட்டது.மேலும் அவளது எடை 3.5 கிலோ இருக்கிறாள் ? இது சரியான எடையா ? இன்றும் அழுகை தொடர் ந்தாள் மருத்துவமனை செல்ல சொல்லலி உள்ளேன் .எனது மனைவி மற்றும் பாப்பா ஊரில் உள்ளார்கள்.தோழிகள் தங்களது இது குறித்த தகவல்களை மற்றும் ஆலோசனைகளை சொல்லவும் . என்றும் அன்புடன் சௌமியன்
sowmiyan
உங்கள் குழந்தை பிறந்த போது என்ன எடை? மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போது என்ன எடை? ஏனெனில் கண்டிப்பாக பிறந்த போது இருந்த எடை அடுத்த ஒரு வாரத்தில் சற்று குறையும். அதன் பின் ஒரு நாளைக்கு 20 முதல் 25 கிராம் வரை கூடும். உங்கள் குழந்தையின் அப்போதைய எடையை அதை வைத்தே நீங்க சரியாக கூடி இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். அழுகை... வயிற்றில் ஏதும் பிரெச்சனையா இருக்கலாம்... போதுமான உணவு இல்லாமல் இருக்கலாம்... டாக்டரை பார்ப்பதே நல்லது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குழந்தை வயிற்றுவலியால் அழ
குழந்தை வயிற்றுவலியால் அழ வாய்ப்பு உள்ளது.அழும் போது குழந்தையை நமது தோளில் போட்டு முதுகை லேசாக கீழிருந்து மேலாக தடவி விடுங்கள் குழந்தையின் வயிறு அழுத்தப்படுவதால் வயிற்றி வலி குரையும் அழுகை நிற்கும் சில வாரங்கலில் இது சரியாகும்
அழுகை
கவலை படாதீங்க சார்.சில குழந்தைகளுக்கு இப்படி அழுகை இருக்கும்..ஒரு மூனு நாலு மாசம் போல் சரியாகிடும்..அவங்க சொன்ன மாதிரி வயிற்று வலியா இருக்கலாம் காலை மடக்கி மடக்கி அழுதால் வயிற்று வலியா இருக்கலாம்..பெட்டில் உக்காந்து குழந்தையை தோளில் போடும்போது இன்னும் கொஞ்சம் தூக்கி குழந்தையின் வயிறு நம் தோளில் அழுத்தி இருப்பது போல வச்சு பாருங்க ஆசுவாசமாக இருக்கும்.அம்மா கிட்ட நல்ல ஜீரகத் தண்ணி குடிச்சு பாக்க சொல்லுங்க..புதினா இலை,இஞ்சி அடிச்சு ஜூஸ் எடுத்து தேன் கலந்து குடிக்க சொல்லுங்க குழந்தைக்கு கேக்கலாம்.
குழந்தையின் அழுகை
என் குழந்தையும் முதல் 3 மாசம் இப்படி அழுதிட்டே தான் இருந்தா, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாச்சும் அழுவா, அவளை சமாதான படுத்த நாங்கள் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...
1) குழந்தைக்கு உரம் விழுந்தாலும் அழுதுக்கொண்டே தான் இருக்கும். காதை தொடும்போது ரொம்ப அழுதாள் உரம் விழுந்ததாக அர்த்தம், உங்கள் வீட்டு பெரியவர்களிடம் சொல்லி உரம் எடுக்கலாம்.
2) சில குழந்தைகளுக்கு readymade cradle லில் தூங்க பிடிக்காது சோ சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைக்கலாம்.
3) தாய்பால் குடும்க்கும்போது தாய் என்ன சாப்பிடறாங்களோ அது அப்படியே குழந்தைக்கு செல்லும் நு சொல்லுவாங்க... சாப்பாட்டு விசயத்தில் டாக்டர் ஆலோசனை படி தவிர்க்க வேண்டியதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் முக்கியமாக மாம்பழம், பலாபழம், பப்பாளி போன்ற சூடு உணவுகளை தவிர்க்கவும். நிறைய தண்ணீர் குடிக்க சொல்லுங்கள்.
4) குழந்தைக்கு தினமும் காலை மாலை கிரேப் வாட்டர் குடுக்கலாம்.
5) காலையில் குழந்தைக்கு ஆயில் மசாஜ் குடுத்து குளிக்க வைக்கவும், இரவு தூங்க வைக்கும் முன் உடம்பு முழுவதும் சுடு நீரில் நனைத்த துணியால் துடைத்து பவுடர் போட்டு தூங்க வைக்கலாம்.
6) இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கணு தெரியலை. சில காத்து கருப்பு கூட குழந்தைகளை பயமுருத்துமாம், உங்க வீட்டு பெரியவர்களிடம் கேட்டுபாருங்கள் அதற்க்கு ஏதும் சிம்பிளா பூஜை செய்வாங்க.
மற்றும் நம்ம தோழீஸ் சொன்ன மாதிரி பசியும், வயிறு வலியும் கூட காரணமா இருக்கலாம். ஒரு முறை டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
ப்ரேமா
ப்ரேமா என்னங்க அது உரம் அதை எப்படி எடுப்பாங்க
sowmiyan sir....don't woory..........
hai sowmiyan sir.......i am maha from kuwait
uram eadukkureathu peariyavagaluku than thearium thavangattaiyalea azuththi kuzhanthaiyoda facelea theaibagga.......uram yarukku nallea eadukkea therium nu akkam pakkeathulea keattu athukeapparama eadugga.....
uram eadukkuravagalukkea thearium kuzhanthaiku uram vizhunthu irukkea illeayanu.......uram eaduththea piragu nallea pal kudikkum kuzhanthai.nalleavum thungum........
kuzhanthai yodea kallea oru bloch colour kayir katti vidugga kanthizhti vizhathu then,nalleathu.........
தளிகா
உரம் விழுவது என்பது கழுத்து நிக்காத பிள்ளைகளுக்கு அதிகம் வரும் பிரெச்சனை. தூக்க தெரியாதவங்க தூக்கும் போது பிள்ளைகளுக்கு எங்காவது பிடிச்சுக்கும்... சுலுக்கு போல. கழுத்து நிக்காத கை பிள்ளைக்கு தூக்கும் பொஷிஷன் சரி இல்லைன்னா, பால் குடுக்கும் பொஷிஷன் சரி இல்லன்னா, புது ஆட்கள் யாரும் தூக்கினா, சரியான பொஷிஷனில் தூங்கலன்னா கழுத்தில் அதிகமா விழும். உரம் விழுந்தா குழந்தை கைல கால்ல நிக்காம அழும்.
உரம் எடுக்க பல வழிகள் இருக்கு. சுலபமா கிராமத்தில் பண்ணுற வழி... ஒரு வேஷ்டியை விரிச்சு இரண்டு பக்கமும் இரண்டு பேர் இரண்டு கையால் பிடிச்சுகிட்டு அதில் குழந்தையை போட்டு உருட்டுவாங்க. இப்படி உருட்டி எடுக்கும் போதே உரம் போய் குழந்தை சிரிக்கும். இது நான் அனுபவத்தில் பார்த்திருக்கேன். என் பிள்ளைகளுக்கு எடுத்ததும் உண்டு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனி
அட்ட.இப்படியெல்லாம் இருப்பது கேள்விபட்டதே இல்லை..பெரியவங்க வைத்தியம் சிலது ஆச்சரியமா இருக்கும்...நன்றி வனி
ஆம் தளிகா, வனி சொல்வது உரம்
ஆம் தளிகா, வனி சொல்வது உரம் எடுக்க ஒரு சுலபமான முறை. மேலும் ஒரு முறை உரம் விழுந்தாள் அடிக்கடி விழுந்திட்டே இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் நாங்கள் இதுவரை வனி சொன்ன முறையில் செய்தது இல்லை. எங்கள் பாப்பாவை குளிக்க வைக்க ஒரு வயதான அம்மாவை வச்சிருந்தோம், அவங்க தான் நாட்டு மருந்து குடுப்பது முதல் உரம் எடுப்பது வரை எல்லாம் செய்வாங்க...
இதுவும் அவங்க சொன்னது...
1) பெண் குழந்தைகளுக்கு முக்கியமாக அரனாகயிறு அல்லது கொடி நிச்சயம் போட வேண்டும். ஏனெனில் அது குழந்தையின் கர்பப்பையை கீழிறகாமல் தாங்கி பிடிக்க உதவுமாம்.
2) குழந்தையை எப்பவுமே பேட்டில் படுக்க வைக்காமல் சிறிது நேரம் பாயில் படுக்க வைக்க வேண்டுமாம். அது உருண்டு உருண்டு விளையாடும்போது தலை நல்ல ஷேப்பில் அழகா வருமாம்.
3) குழந்தையை தலைக்கு குளிக்க வைத்த பின் சாம்பிராணி போடுவது சளி பிடிக்காமல் இருக்க உதவுமாம்.
4) தினமும் காலையில் குழந்தையின் நாக்கில் தனை நம் விரலில் தொட்டு 3 முறை தடவ தடவ விரைவில் பேச்சு வருமாம்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
சௌமியன்
சௌமியன், தங்கள் மனைவிக்கு சுக பிரசவமா? அல்லது சிசேரியனா?.. சிசேரியனாக இருந்தால் குறைந்தது ஆறு மாதங்களாவது இரவில் இப்படித்தான் அழும், (நார்மலாக இருந்தால் சில குழந்தைகளுக்கும் இப்படி இருக்கும்), போகப்போக சரியாகி விடும், என் பெண் சிசேரியன்.. மாலை 7 மணியானதும் துவங்கும் அழுகை விடியல் வரை அழுதுகிட்டே இருப்பா.. நாங்களும் அடிக்கடி டாக்டர் கிட்டே கூட்டிப்போவோம்.. ஆனா எந்த முன்னேற்றமும் இல்லை.. அப்புரம் கடைசியா ஒரு டாக்டர் தான் சிசேரியனா இருந்தா இப்படித்தான் அழும், தானாவே சரியாய்டும்னு சொன்னார்.. அதே போல் ஆறு மாசத்துக்கு அப்புரம் சரியாய்டுச்சி.. பகலிலும் தொடர்ந்து அழுதுகிட்டு இருந்தால் தோழிகள் சொன்னது பொல் உரம் விழுந்திருக்கலாம்.. அதுவும் இல்லை என்றால் டாக்டரை பார்ப்பது நல்லது. நீங்கள் பகலிலும் சரியாக தூங்குவது இல்லை என கூறியுள்ளீர்கள், சரியான தூக்கமின்மைக்கு காறணம் வெயிலாகவும் இருக்கலாம், அதுவும் இல்லையெனில் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்