பட்டிமன்றம் 67: பணம் எதற்காக? ஆடம்பரத்திற்காகவா? அமைதிக்காகவா?

அன்பு பட்டிமன்ற மக்களுக்கு என் முதல் வணக்கம். வழக்கம் போல இம்முறையும் பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் எனக்கு... ;)

”பணம் சம்பாரிப்பது எதற்காக??? ஆடம்பரத்திற்காகவா? அமைதிக்காகவா?”

இது தான் இந்த வார தலைப்பு :) தலைப்பை தந்த தோழி ஜெயலஷ்மிக்கு நன்றிகள் பல.

தலைப்பே விளக்கமா இருக்குறதால விளக்கம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். மனிதன் ஓடி ஓடி சம்பாதிக்கிறான்... இப்போ பெண்களும் ஓடுறோம்.. ஏன் இந்த ஓட்டம்?? இப்படி ஓயாமல் ஓடி சம்பாதிப்பது எதற்கு என்பதே இன்றைய தலைப்பு.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க உங்க வாதங்களை :)

பட்டிமன்ற வீர சிங்கங்கள் எல்லாம் வாங்க... தலைப்பை தந்தாச்சு... சண்டையை ஆரம்பிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பணம் சம்பாதிப்பது அமைதிக்கே என்னும் வாதமே எனது கொள்கைங்க, பலர் ஆடம்பரத்திற்காக பணம் சம்பாதித்து செலவழிக்கின்றனர். எதிர் வாதங்கள் வரும் போது மீண்டும் வருகிறேன்.

நட்புடன்
குணா

நடுவருக்கு வணக்கம்!! நல்ல தலைப்பு தந்த தோழி ஜெயலஷ்மிக்கு நன்றி!!
நடுவரே!! எந்த காலத்திலும் மனிதன் பணம் சம்பாதிக்க நாயாய்,பேயாய் ஓடுவது ஆடம்பரத்திற்குதான்!!
தனக்காகவும், தன் தேவைகளுக்காகவும், மன அமைதிக்காகவும் ஓடாய் தேய்ந்து உழைக்கும் அடித்தட்டு மக்களைத் தவிர இங்கு எல்லோருமே வீண் பகட்டுக்காகதான் சம்பாதிக்கிறோம்!!
ஒரு மனிதனின் அமைதி என்பது, அவன் தேவைகள் பூர்த்தியடையும் போது கிடைத்து விடுகிறது. ஆனால் தேவைகளுக்கு ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயிக்க மனிதனின் மனம் தயாராக இல்லை. ஏனென்றால் மற்றவர்களைக் காட்டிலும், தான் உயர்ந்தவனாகவும், பிறரின் பார்வைக்கு தான் புதுமையாவும், வித்தியாசமாயும் தெரிந்து சமுதாயத்தை கவர வேண்டும் என்பதே நோக்கம்!!
''பணம் பத்தும் செய்யும்'', பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்'' என்னும் பழமொழியெல்லாம் எதற்காக சொல்லப்பட்டது? பணம் படைத்தவனே இங்கு வல்லவன், நல்லவன் என்பதற்காகதான். மனிதனின் மனம் எப்போதும் புகழ்ச்சிக்கு அடிமைதான். இந்த சமுதாயம் நம்மை தூக்கி சிகரத்தில் வைத்து கொண்டாட வேண்டுமானால் ஆடம்பரமான வாழ்க்கை முறைதான் ஒரே வழி!!
ஆகவே நடுவரே!! சம்பாதிப்பது ஆடம்பரத்திற்குதான்!!

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

இதிலென்ன சந்தேகம்.பணம் சம்பாதிப்பது ஆடம்பரத்திற்காகவே.அப்புறம் வந்து வெவரமா சொல்லுரேன்

அருமையான தலைப்பை தந்த தோழி ஜெயலஷ்மிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தலைமை சிம்மாசனத்தில் ஜம்முனு வீற்றிருக்கும் நம் நடுவர் அவர்களுக்கும், பட்டியில் கலக்கவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் மற்றும் பார்வையாளராக மட்டுமே இருக்கும் நம் அறுசுவை தோழிகளுக்கும் என் முதற்க்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடுவரே உங்கள் தலைமையில் நான் வாதாடும் முதல் பட்டி இதுவே.

பணம் சம்பாரிப்பது ஆடம்பரத்திர்க்காகவே என்ற அணியில் வாதாட வந்துள்ளேன்.

இன்றைய உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பணம் நிறைய சம்பாதிக்கவே ஆசை. ஏன்?

இன்று பைக் இல்லாத வீடே பார்க்க முடியாது. நம்ம ஊரு மாருதிய தூக்கி சாப்பிட்டு இந்த பிஎம்டபிள்யு, போர்ட், ஹுண்டாய், ஆடி நு பல வெளிநாட்டு கம்பனிகள் அதிக லாபம் ஈட்ட காரணம் என்ன. நம்ம மக்களின் அடம்பரமே. சில பேர் லோன் போட்டு கார் வாங்கி 10 வருஷம் லோன் கட்டுறாங்க, லோன் முடியதுக்குள்ள அந்த காரே பழசா போய்டும். சைக்கிளில் போறவனை விட பைக்கில், காரில் போகிரவனுக்கே மரியாதை. சோ பைக் வாங்கவோ கார் வாங்கவோ பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உண்டாகுது.

கல்யாணத்துக்கு போனாலும் நம்ம கிட்ட இல்லைனாலும் அடுத்தவங்க கிட்ட இரவல் வாங்கியாச்சும் நகை போட்டுட்டு போயி ஆகணும். அப்பதானே மரியாதை கிடைக்குது. சரி அதுக்கு ஏதோ நாலு நகை நட்டு வாங்கினா போதாததோ. அப்பறம் என்ன தான் மார்கெட் இறக்கத்தில் போனாலும் நகை கடைகளில் மட்டும் கூட்டம் குறையவே மாட்டேங்குதே.
"ஏங்க இந்த நெக்லஸ் ரொம்ப பழைய மாடலாம் எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க இன்னும் கூட கொஞ்சம் பணம் போட்டு புது மாடல் நெக்லஸ் வாங்கலாமே" இது தான் இந்த காலத்து மனைவிகளின் முக்கியமான எதிர்பார்ப்பா இருக்கு. இது எல்லாம் ஆடம்பரம் தான். நான் கூட இதே போல் அறுசுவையில் ஒரு கதை படிச்சிருக்கேன். சோ பலவித புது மடல்களில் நகைகள் வாங்க பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உண்டாகுது.

சொந்த வீடு கட்டணும்னு எல்லார் மனத்திலும் ஒரு ஆசை இருக்கு. ஏன் அதை ஒரு சின்ன குடிசையாக கட்ட கூடாதோ, பிரமாண்டமான மாடிவீடு தான் கட்டுறோம். ஏன் ஆடம்பரமே. சோ இங்கும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உண்டாகுது.

அப்பறம் நடுவரே, இந்த தி நகர் ஏரியா உள்ள நுழையவே முடியலை. ஏன்? மானத்தை மறைக்க உருவாக்கிய ஆடைகள் இன்றோ ஒரு அடம்பரத்தில் உச்சியில்ல இருக்கு. ஒரு சுடிதார் ரூபாய் 3000 - 10000 வரை எடுக்கறாங்க, கேட்டா அது பார்டி வேறாம். இதை எல்லாம் ஆடம்பரம்னு தானே சொல்லியாகனும். சோ வித வித ஆடைகள் வாங்க அதிக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உண்டாகுது.

இரவு உணவு பூரி உருளைக்கிழங்கு செய்யணும், அப்பறம் வரேன் நடுவரே... (அழுவக்கூடாது... இதோ நடுவருக்கு ஒரு பூரி செட் பார்சல்)

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நடுவரே!! இன்று ஆடம்பரம் இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா? ''எங்கும் ஆடம்பரம்; எதிலும் ஆடம்பரம்''னு மாறிட்டோம். எந்த பொருள் வாங்குறோம்ங்குறது முக்கியமில்ல, அதை எவ்ளோ விலை கொடுத்து வாங்குறோம்னு தான் முக்கியமா இருக்கு. ஒரு கடைக்கு போய், ஒரு பொருளோட விலையை திரும்ப கேட்டுப் பாருங்க, அந்த கடைக்காரன் ஒரு மாதிரியா பார்ப்பான். இந்த அவமானத்தை தவிர்க்க வேண்டியாவது, என்னாலும் முடியும்னு சொல்லாம சொல்ல, சொல்ற விலையை கொடுத்து வாங்குறோம். இப்படிதான் ஆடம்பரம் ஆரம்பமாகுது.

சில வருடங்களுக்கு முன் ''ஆடம்பரம்'' என்று சொல்லப்பட்ட எல்லாமே இன்று ''அத்தியாவசியம்'' ஆகிவிட்டது. ஊரோடு ஒத்து வாழனும்னா, பக்கத்து வீட்டில், உறவு வட்டத்தில் இருக்கும் எல்லாமும், நமக்கும் தேவையாகிறது. அப்படியில்லாமல் ''நான் இப்படித்தான்'' என்று நேர்மையாக, பிடிவாதமாக இருந்தால் சமுதாயத்தால் உதாசீனப்படுத்தப்படுவோம். ஸோ!! நம்மை இங்கு நிலைப்படுத்திக் கொள்ள ''ஆடம்பரம்'' அவசியமாகிறது.

''வரதட்சணை'' பற்றி பட்டிமன்றம் வைத்தால், அது ஒழிக்கப்பட வேண்டும் என்று நாமே பக்கம் பக்கமாக பேசுவோம். ஆனால் நம் பெண்ணுக்கு திருமணம் என்று வரும் போது, அவளின் சந்தோஷத்திற்கென்று செய்வதைக் காட்டிலும், மாப்பிள்ளை வீட்டில் நம் கௌரவத்துக்காகவும், அடுத்தவரின் பார்வை பகட்டுக்காக 50பவுன், 2கிலோ வெள்ளி சாமான், ஏசி, ஓவன் etc, etc..... செய்தோம் என்று சொல்வதைதான் விரும்புகிறோம். பெண்குழந்தை பிறந்த உடனேயே, இந்த பெருமையை அடைவதை நோக்கியே பயணிக்கிறோம்.

அழகான, வசதி குறைந்த ஒரு பெண், கன்னங்கரேல்னு கருப்பா சொத்துள்ள ஒரு பெண். இதில் இரண்டாவது ரகத்தைதான் இன்று எல்லோரும் விரும்புறாங்க. நம் அறிவு இதை சரியில்லை என்று சொன்னாலும், மனம் ஏற்காது. இந்த ஆடம்பரத்தை ஒருவித பயம், குணப்படுத்தவே முடியாத மனநோய் என்று கூட சொல்லலாம்.

ஊரில் இருப்பதிலேயே காஸ்ட்லியான பள்ளியில் பிள்ளைகளுக்கு ஸீட் கிடைக்கனும். எதுக்கு? ஃபாரின் யுனிவர்சிடியில் பையன் படிக்கனும். எதுக்கு? இதெல்லாம் நடந்தால்தான் அவன் மாதம் 2லட்சம் சம்பாதிப்பானாம். இது எதுக்கு? அப்போதான் பெரிய இடத்துல பெண் பார்க்க முடியுமாம். எதுக்கு? எல்லாம் ஆடம்பர வாழ்க்கைக்குதானே!!

''உழவர் சந்தை''யில் காய்கறி கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. ஆனா அதுக்கு காலையிலேயே அரக்கபரக்க ஓடனும். அங்க கூட்டத்தில் பேரம் பேசி சண்டை போட்டு வாங்கனும். சுத்தமும் இருக்காது.
இப்படி காய்கறி வாங்குற பக்கத்து வீட்டு அக்காவை, ஒருநாள் ஏசி போட்ட வெஜிடபுள் ஷாப்புக்கு கூட்டி போய் பாருங்க, ஒரே இடத்தில் அழகா அடுக்கி வெச்ச எல்லா காய்கறி, பழங்களும், எந்த நேரமும் புத்தம் புதுசா வாங்கலாம் என்கிற சாதகமான வசதியும், முக்கியமா டென்ஷனே இல்லாம பர்சேஸ் செய்யலாம் என்கிற அட்வான்டேஜும், கூடவே இதை வெளியில் சொன்னால் பெருமை கூடும் போது, பணம் சற்று கூடுதலா இருந்தாலும் அது அவங்களை கவரவே செய்யும். ''ருசி கண்ட பூனை'' போல அவங்க மீண்டும், மீண்டும் அங்கதான் போவாங்க.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

நடுவரே.....நல்ல தலைப்புங்கோ...

பணம் சம்பாதிப்பது அமைதிக்குத்தாங்கோ.....

என் அணிக்கு சீட்டு போடத்தாங்க இந்த பதிவு...

விரிவான வாதங்களுடன் பிறகு வருகிறேன்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களின் தலைமையில் மீண்டும் பட்டியில் வாதாடுவது பரம சந்தோஷம். உங்களின் வாதங்களை கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்.

எக்கலாத்திலும் மதிப்பில் குறையாத ஒரு செல்வதை பற்றி ஒரு தலைப்பை தந்த தோழி ஜெயலட்சுமிக்கு நன்றிகள்.

இதுல என்னங்க சந்தேகம் பணம் சமாதிப்பது அமைதிக்காக தான். நீங்க அதிகப்படியான பணம் என்று சொல்லலியே? பணம் சம்பாதிப்பது என்று மட்டும் தானே சொல்லியிருக்கீங்க.

இப்போ இந்த பட்டியே எடுத்துக்கோங்க.....

பணமே இல்லை வீட்டில் கரண்ட் பில் கட்டலை (அட கட்டினாலும் கரண்ட் வரலைன்னு எல்லாம் அரசியல் பேசப்படாது) ,கரண்ட் பில்லே கட்டலை அப்போ எங்கிருந்து நெட்டுக்கு பணம் கட்ட.....அப்போ என்னாகும் அறுசுவையாது சீரியலாவது ஒன்னும் கிடையாது. பணம் இப்போதைக்குரிய காலகட்டத்தில் ஆடம்பரம் கிடையாது அவசியமானது.

என் மாகளுடன் மாலுக்கு சென்றால் நாங்கள் ஒரு பக்கம் ஷாபிங் செய்வோம், அவள் இன்னொரு பக்கம் செய்வாள். கடைசியில் அவள் எடுப்பதை அப்படியே அவளுக்கு தெரியாமல் எங்கையாவது விட்டு விட்டு தான் பில் போடவே போவோம். அவளை அப்படியே ஏமாற்றிக் கொண்டே இருந்தோம். வீட்டிற்கு வந்து கேட்டால் அங்கயே மறந்து விட்டு விட்டோம் என்று சொல்லி வந்தோம். சில நாட்கள் சென்று பில் போட தானும் போகணும் என்று அடம் செய்தாள் அதையும் சமாதானம் செய்தோம். பிறகு ஒரு நாள் அவளுக்கு புரிய வைப்போம் என்று இதெல்லாம் வாங்க பணம் வேண்டும் எங்கே இருக்கிறது என்றோம் அதற்க்கு அவள் அப்பாவின் வாலேட்டில் என்றாள். இது தான் இன்றைய நிலை. இன்றைய நிலையில் எதுவுமே அனாவிசியம் கிடையாது.

வாதங்களுடன் வருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நம்மோட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாத்தான் அமைதி கிடைக்கும்…

அந்த அமைதியை பணம் கொடுப்பதால்தான் அத சம்பாதிக்கிறோம்..

அதுக்காக எல்லாருமே குடிசை வீட்டில கூழ குடிச்சிட்டு வாழமுடியாது..

அப்படி வாழறதுக்கு அதிகம் முயற்சி பண்ணி சம்பாதிக்கணும்னு அவசியமில்ல…

எதுக்கு சிரமமின்னு அப்படியே சும்மா சோம்பேறியா இருக்கவேண்டியதுதான்..

ஐடில் மைண்ட் ஈஸ் தெ டெவில்ஸ் வொர்க் ஷாப்பின்னு சொல்றாங்க….அப்புறம் அங்க அமைதி காணாம போயிடும்

திரமையாலும்,உழைப்பாலும் மேலும் மேலும் சம்பாதிப்பவர்கள் தன் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்துக்கு மட்டுமல்ல,சமுதாயத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு வேலை கொடுத்து அமைதிய கொடுக்கறாங்க அதுக்குதான் சம்பாதிக்கிறாங்க

மேலோட்டமா பார்த்தா,தன் மனைவிக்கு பிடிச்ச பட்டுபுடவை,நகை,நட்டு,இத்யாதி ,பிள்ளைகள் ஆசைப்படுவது எல்லாம் வாங்கி கொடுக்க சம்பாதிக்கற மாதிரி தெரியும்…

ஆனா அப்படி வாங்கி கொடுப்பது மூலமாவது தனக்கு நச்சரிப்பு தொல்லை இல்லாம அவங்களால அமைதி கிடைக்குமின்னுதாங்க

எல்லாரும் ஏசி ஷாப்பில போயி வெஜிடபிள் வாங்கறதுன்னா எதுக்குங்க உழவர்சந்தையில கூட்டம் நெரியுது…?

நல்ல படிப்பு, நல்ல வேலை…..இதெல்லாம் வாழ்க்கை கனவுகள்…இலட்சியங்கள்…..இதன் மூலமா சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்குது..,வாழ்க்கை அவசியங்களுக்கான அவஸ்தை போராட்டம் சரியாகுது.அமைதி கிடைக்குதுன்னுதான்

ஒரு சமீபத்து டிவி ஷோவில ஒரு மீன்விற்கும் ஏழை விதவை,தன் பொண்ண நல்லா படிக்கவச்சு முன்னுக்கு கொண்டுவர மிகமிக கஷ்டப்பட்டு
வளர்த்திருக்காங்க..அவங்க என்ன மாத்ரியே என் பொண்ணும் எளிமையா மீன் வித்துகிட்டு இருக்கட்டுமின்னு நினைக்காம அதிகம் சம்பாரிச்சது எதுக்கு?

ஒரு நல்ல படிப்பறிவு தனக்கில்ல நிறைய கஷ்டப்பட்டு அமைதியில்லாம வாழ்ந்தாச்சு..தன் பொண்ணாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்,நம்மளமாதிரி கஷ்டப்பட்டுடக்கூடாது..அமைதியான வாழ்க்கைகிடைக்கணுமின்னுதான்…நிறைய முடிஞ்சமட்டும் சம்பாதிச்சாங்க…

அடிமட்டத்துல இருந்து தேவைகளுக்காய் போராடி போராடி இன்னும் இன்னும் மக்கள் சம்பாதிக்க விரும்புவது…கஷ்டமில்லா அமைதியான வாழ்க்கைக்குதாங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இரு அணிக்கு ஆள் வந்தாச்சா... இதோ வரேன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்