வாரத்திற்கு 3 முட்டைகள்

என் 8 மாத பெண் குழந்தைக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் கொடுக்கிறேன், இது சரியா? தோழிகளே

நீங்க வெள்ளை கருவும் கொடுகிறீர்களா?வேகவைத்த முட்டைதானே,

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ஒரு வயது வரை வெள்ளைகரு கொடுப்பது நல்லதில்லை என்று சொல்வார்கள்.மஞ்சள் கருவில் லேசாக உப்பு,மிளகு தூள் போட்டு கொடுத்தால் ஜீரண பிரச்னை இருக்காது.
நான் என் குழந்தைக்கு ஒன்பதாவது மாசத்தில் தினமும் கொடுத்தேன் ஒரு பிரச்னையும் இல்லை ,ஆனால் அவளுக்கு ஒரு மாசத்தில் போரடிச்சிட்டு ,அப்புறம் சாப்பிடலை.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சில நாட்கள் வேக வைத்து மஞ்சள் கரு மட்டும் மிளகு, சீரகத்தூள் சேர்த்து கொடுப்பேன், சில நாட்கள் 1/2 boil கொடுப்பேன். பதில் தந்த இருவருக்கும் நன்றி.

நான் ஒரே ஆளுதான்பா,பதிவு தான் ரெண்டு தடவை போட்டேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

முட்டை நல்லது தான, என் பாப்பாக்கு முடி வளர்ச்சி ரொம்ப கம்மியா இருக்கு பா> இதுக்கு ஏதும் டிப்ஸ் சொல்லுங்க ப்ளிஸ்.

கௌரி குழந்தைக்கு பேபி ஆயிலை விட,தலையில் தேங்காய் எண்ணெயை தினமும் தடவினால் முடி நல்லா வளரும்...
என் பையனுக்கும் முடி கம்மியா தான் இருந்தது தலையில்,நான் பேராசூட்(parachute coconut oil) தேங்காய் எண்ணெய் தான் தடவுரேன் இப்ப.. டிரை பன்னி பாருங்கபா...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்