என் தோழி செய்தது சரியா

என் தோழி செய்தது சரியா
அறுசுவை தோழிகளே வணக்கம், என் தோழி செய்தது சரியா தவறா நு உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்!!!
அவள் 3 வருடமாக கல்லூரியில் கூட படிக்கும் ஒரு பையனை காதலித்தாள், இரவரும் நன்றாக தான் பழகினார்கள், எங்கயும் வெளியில் சென்று ஊர் சுற்ற மாட்டனர், இருவரு செல் போனில் மட்டுமே அதிகம் பேசுவர், கடைசி வருடம் படிக்கும்போது தான் எங்காவது வெளியில் சென்று வருவர், ஆனால் இந்த 3 வருடங்களில் அவள் தான் காதலையும் காதலனையும் நினைத்து சந்தோஷ பட்ட நாட்களை விட அழுத நாட்கள் தான் அதிகம், ஏனென்றால் அந்த பையன் எதுகெடுத்தாலும் சண்டை போடுவான், கூட படிக்கும் ஆண் நண்பர்களிடம் பேசினால் சந்தேக பட்டு பேசுவான், வீடு விசேஷங்களுக்கு அவள் சேலை அணிந்தால் அவனுக்கு பிடிக்காது, அதுக்கும் சண்டை வரும், வகுப்பு ஆசிரியரிடம் பேசினால் கூட சண்டை தான் . அவள் எதாவது பொருள் கீழே விழுந்தால் குனிந்து எடுத்தால் அதற்கும் அந்த பையன் சண்டை போடுவான் நீ எதுக்காக குனியர? குனியும்போது உன்னை மற்ற பசங்க தப்ப பாப்பாங்க, அதுக்கு தானா குனியர நு கேட்டு சண்டை போடுவான், இப்படி சண்டையில் காதல் போயிட்டு இருந்தது, 3 வருடமும் ஓடி விட்டது, கல்லுரி இறுதிநாள் farewell பார்ட்டிக்கு என் வகுப்பு தோழிகள் அனைவரும் சேர்ந்து சேலை எடுத்து கொண்டாடலாம் நு முடிவு பணினோம், நீ கல்லூரி க்கு எதுக்காக சேலை உடுத்தி வந்தாய், நீ எனக்கு மட்டும் மனைவியாக இருந்தால் என்னிடம் மட்டும் தான் சேலை கட்டி காட்டனும் நீ என்ன ஊருக்கே மனைவியான்னு நடு ரோட்டில் வைத்து கேட்டு அவளை அழ வைத்தான், மேலும் அன்று இரவு போன் செய்து நீ வெறும் உடம்புக்காக மட்டும் என்னிடம் பழகுவது என்றால் என்னிடம் சொல்லிவிடு என்று அசிங்க அசிங்கமாக பேசி உள்ளான் குடிபோதையில்..., மேலும் அவளை நீ ஒரு விலை மாதர் என்றும் திட்டி உள்ளான்..., பிறகு 1 வாரத்தில் சமாதானம் ஆகி விட்டனர், அப்படி தவறாக பேசினதுக்கு அவனே அவன் கைகளில் ரத்த காயங்களை ஏற்படுத்தி தோழியிடம் மன்னிப்பும் கேட்டான். பிறகு தோழிக்கு வீட்டில் மாப்பிளை பார்க்க ஆரம்பித்தனர், வழக்கம் போல பிரச்சனைகள், இவள் வீட்டில் சொல்லிவிட்டாள் அவனைத்தான் மணப்பேன் என்று., தோழியின் அப்பா அவனுக்கு போன் செய்து பேசிய போது நான் உங்கள் மகளை விரும்ப வில்லை அவள் தான் என்னை விரும்பினாள், என்று கூறியுள்ளான்..., கடைசியில் அவனிடன் இவள் கேட்டதற்கு அப்படியெல்லாம் சொன்னால் தான் நம்ம கல்யாணம் நடக்கும் நு சொன்னான், அதனால் இவள் மனம் உடைந்து, பிறகு வீட்டில் சில பிரச்சன்னைக்கு பிறகு காதலனை தூக்கி எறிந்துவிட்டு வீட்டில் சொன்ன மாப்பிளையை கல்யாணம் செய்து விட்டாள்..., இப்பொழுது யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் என் தோழி மட்டும் நான் தவறு செய்து விட்டேன்னா???? என்று கேட்டு பொழம்புகிறாள்..., எங்களுடைய மற்ற தோழிகளும் அவளுடன் பேசுவது இல்லை அவள் பணத்திற்காக மாறி விட்டாள் என்று அவளை ஒதுக்கி விட்டனர், அவளை கேட்டால் சந்தேகப்படும் ஒரு மனிதரிடம் எவ்ளோ நாள் நான் கஷ்டபடுவது என்று காரணம் கூறுகிறாள்...,
தோழிகளே அவள் செய்தது சரியா? இல்லை பெற்றோரை எதிர்த்து காதல் திருமண செய்து இருக்கவேண்டுமா? உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்

என்னங்க இது இப்போ இந்த பீலிங்க்ஸ் ரொம்ப தேவை தானா..அசிங்கமான ஆள்னு சொல்றீங்க அப்றம் என்ன கில்ட்டி வேண்டிஇருக்கு

நம்பிக்கையும் மரியாதையும் இல்லாத எந்த உறவையும் நாம் விரும்பினாலும் தொடர முடியாது. இந்த மாதிரி ஆளுங்களை கடைசி வரை கட்டி இழுத்துட்டு வர முடியாது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யும் அளவுக்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இப்போ அமைஞ்ச வாழ்க்கைய உண்மையா, நேர்மையா வாழ சொல்லுங்க. இனியும் அவர நினைச்சு feel பண்றது அவங்க தலைல அவங்களே கொல்லி வச்சிக்கிற மாதிரி.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஜெயஸ்ரீ உங்கள் தோழி செய்தது தவறு இல்லை. உங்கள் தோழியின் காதலன் உண்மையாக காதலித்தது போல் தெரியவில்லை. சந்தேகம், மனதை காயபடுத்தும் வார்த்தைகளை சொல்பவரிடம் வாழ முடியாது. பெற்றோரை எதிர்த்து இப்படி ஒருவனை கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ முடியாது. என் திருமணமும் காதல் திருமணம் தான். உனண்மையான தோழிகள் என்றால் எல்லா சமயத்திலும் துணையாக நிற்க வேண்டும். மனதை புரிந்து கொள்ளாமல் பேசுபவர்களை நினைத்து கவலைபட்டுக் கொண்டிருந்தால் காலம் முழுவது கவலை பட்டு கொண்டே இருக்க வேண்டும். அதனால் எதை நிணைத்தும் கவலை படாமல் திருமண வாழ்வில் சந்தோஷமாக கணவருடன் வாழ சொல்லுங்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

அறுசுவையில் புதிதாய் இணைந்திருக்கும் உங்களுக்கு வணக்கம். தங்களின் இடுகை தோழி செய்தது சரியா? என்பதை படித்தேன் .
உங்கள் தோழி செய்தது மிகவும் சரி. ஏனெனில் மூன்று வருடம் ஒரே கல்லூரியில் படித்தும் அடிக்கடி சந்தேகப்படும் காதலனை திருமணம் செய்திருந்தால் உங்கள் தோழியின் வாழ்க்கை முழுவதும் நரகமாக கழிக்க வேண்டியிருக்கும் .
ஆனால் உங்கள் தோழி தைரியமாய் பெற்றோர் பார்த்து திருமணம் செய்த மாப்பிள்ளையை மணந்ததால் பிரச்சினை இல்லை .
இதில் குற்ற உணர்வு படவேண்டியது இல்லை . கடந்த கால நினைவுகளை மறந்து நிகழ்கால வாழ்க்கையை சந்தோசமாய் கழிக்க சொல்லுங்கள். உங்கள் தோழிகளிடமும் தெளிவாக விளக்கி உங்கள் தோழியிடம் பேச சொல்லுங்கள். பெண்ணை மதிக்க தெரியாத ஆண் மனிதனாகவே இருக்க முடியாது. உங்கள் தோழி செய்தது மிகவும் சரி :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்