பேப்பர் ஃப்ளவர்ஸ் - 2

தேதி: June 13, 2012

5
Average: 4.3 (23 votes)

 

ஆரிகாமி பேப்பர்
க்ளு

 

தேவையான பொருளை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு முழு பூ செய்ய 5 பேப்பர்கள் வேண்டும்.
பேப்பரை கீழிருந்து மேலாக மடிக்கவும்.
இப்பொழுது முக்கோண வடிவம் கிடைக்கும். இடப்பக்கம் மற்றும் வலப்பக்கம் இருக்கும் முனைகளை மேல் நோக்கி மடிக்கவும்.
மடித்தவற்றை விரித்து " V " வடிவம் வருவது போல் அமைக்கவும்.
இரு பக்கமும் இதே போல் செய்யவும். முதல் பேப்பரில் இருப்பது போல இருக்க வேண்டும். சரியாக மடித்துவிட்டு பின் பக்கம் திருப்பி பார்த்தால், கீழிருக்கும் பேப்பர் போல் இருக்க வேண்டும்.
மேலே நீட்டி கொண்டு இருக்கும் சிறிய முக்கோணங்களை வெள்ளை நிறம் தெரிவது போல் வெளி பக்கம் மடிக்கவும்.
இரு பக்கமும் இருக்கும் "V" வடிவத்தை பாதியாக மடிக்கவும்.
இரு பக்கமும் க்ளு தடவி ஒட்டி விடவும். இது ஒரு பூவின் ஒரு இதழ். 5 இதழ் செய்யவும்.
5 இதழ்களையும் க்ளு தடவி ஒன்றோடு ஒன்று இணைத்து ஒட்டவும். இது 5 இதழ் கொண்ட பூ தயார்.
மேற்சொன்ன முறையில் நான்கு இதழ் கொண்ட பூவாக செய்தது.
மூன்று இதழ்கள் கொண்டு செய்த பூ இது. இந்த பூக்களை விரும்பிய நிறத்தில் செய்து வைக்கவும். இதை வீட்டை அலங்கரிக்க பல விதங்களில் பயன்படுத்தலாம். அதை அடுத்த குறிப்பில் பார்க்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழ..கா இருக்கு எல்லாப் பூக்களும். விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஆரிகாமி வாரமா என்ன? நல்லா இருக்குங்க. பூக்கள் ரொம்ப நேர்த்தியா பண்ணி இருக்கீங்க. இன்னும் பல வகைகள் எதிர்பார்க்கிறோம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பூக்கள் ரொம்பவே அழகு, அதுவும் கருப்பு பேக்க்ரவுண்டில் பளிச்சென நீளம், சிவப்பு, மஞ்சள் என்று பார்க்க மனமோ மயங்குது...

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க. கலர்ஸ் அழகு. இது நான் ஏற்கனவே செய்து வெச்சிருக்கேன் :) 5 இதழ்கள் உள்லவை செய்து ஒன்றாக சேர்த்து ஒட்டி பந்து போல் செய்திருகேன். ஹேங் பண்ணி வெச்சிருக்கேன் வீட்டில். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்///// athanaala thaan neraya aangal velaikkaga velinattukku aodi poidarangalaa..

அன்பு ரேணுகா,

வழக்கம் போலவே கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கள், வண்ணங்களும் அருமை.

நாமும் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.

பாராட்டுக்கள், ரேணுகா

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரொம்ப ஈஸியாவும் இருக்கு வாழ்த்துக்கள் ரேணுகா எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் ப்ளூ தான் அதில் பார்த்ததும் ரொம்ப சூப்பர்ப்பா இருக்கு

எதையும் எதிர்த்து போராடும் மனிதர்களுக்காக நான் போட்ட வாசகம், ஓடி ஒளிந்துக்கொள்ளும் கோழைகளுக்காக அல்ல...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாவ்... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரேணு.
லவ்லி கலர்ஸ் & ஃபோட்டோஸும் அருமையா வந்திருக்கு!!
வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

குசுடமா ஃப்ளவர்ஸ் ரொம்பவே அழகா இருக்கு. எப்படியெல்லாம் அலங்கரிக்க போறீங்க என்ற குறிப்பை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கேன் :) வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக நேர்த்தியான அழகான பூக்கள் வாழ்த்துகள் கண்டிப்பா இது போல பூக்கள் செஞ்சி எங்க வீட்டையும் அழகா மாத்திக்குறோம் நன்றி ரேணுகா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு

பூ கண்ணை பறிக்குது.. கலர்ஸ் அருமை..
தொடர்ந்து கலக்குங்க .வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரேணுகா,
இந்த பேப்பர் ஃப்ளவர்ஸ் செய்வது இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப தெளிவா steps கொடுத்திருக்கீங்க... மிக்க நன்றி!

நானும் என் மகளும் வீடு முழக்க ஒரே கலர் கலராக பூக்கள் செய்து வைத்திருக்கிறோம்:) ஆரிகாமி பேப்பர் இல்லை, கலர் பேப்பரில் தான் செய்தோம்.

உங்களுடைய அடுத்த பகுதியை பார்த்து தான் இந்த் பூக்களை என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும் :) விரைவில் அடுத்த பகுதியை publish செய்யவும்...

நன்றி.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரொம்ப அழகா சிம்பிளா சூப்பரா இருக்கு.. முயற்சிக்கிறேன்.. :)