கவிதாவை வாழ்த்த வாங்க :)

100வது குறிப்பை கொடுத்திருக்கும் அன்பு கவிதாவை வாழ்த்த வாங்க :)

100 குறிப்பு கொடுப்பது சாதாரணம் இல்லை... :) முத்தான 100 குறிப்புகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் பல 100 சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிதா

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அறுசுவைல பொடிகள் குறிப்புன்ன அது பெரும்பாலும் கவிதா குறிப்பு தான், மனமார்ந்த வாழ்த்துக்கள். கொஞ்ச நாள் கேப் வந்துடுச்சுன்னு நினைக்கறேன், இனி தொடர்ந்த எங்களுக்கு குறிப்பு தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு கவிதா,

அருமை, அருமை, அத்தனையும் புதுமை.

நூறு குறிப்புகளையும் படங்கள் இணைந்த குறிப்பாகக் கொடுத்து அசத்தியிருக்கீங்க.

இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து எங்களை எல்லாம் அசத்தணும். தங்க நட்சத்திரங்கள் பல வாங்கி, ஜொலிக்கணும், என்று வாழ்த்துகிறோம்!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கவிதா

அன்புடன்

சீதாலஷ்மி

கவிதா வாழ்த்துக்கள். 100 இன்னும் பன்மடங்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கவிதா

ஒரு நூறு மட்டுமில்லாமல் இன்னும் பல நூறு குறிப்புகள் குடுக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Congratulation to you .regards.g.gomathi.

வாழ்த்துக்கள் கவிதா... தொடரட்டும் இந்த பணி.

Kalai

வாழ்த்துக்கள் கவிதா...

சைவமா ஏதாவது பார்ட்டிக்கு சமைக்கனும்னா உங்க குறிப்புகளைத்தான் தேடுவேன்..பல குறிப்புகளை செய்து பார்த்துள்ளேன்..அனைத்துமே செய்ய சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும்..thanks for the nice recipes.....

மேலும் பல நூறு குறிப்பு தர வாழ்த்துக்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

என்னுடைய இத்தனை குறிப்புகளையும் பொறுமையாக சரிபார்த்து,திருத்தி வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,அறுசுவை குழுவினர்க்கும் முதல் நன்றிகள்.

என்னுடைய குறிப்புகளை பார்வையிட்ட,பதிவிட்ட,செய்து பார்த்த,பாராட்டிய,ஊக்குவித்த அத்தனை அறுசுவை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்..

இழையை துவக்கி,வாழ்த்துக்களை பகிர்ந்த வனிக்கு ரொம்ப,ரொம்ப நன்றி..

பாத்திமா,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

சுகி,
அறுசுவையில் இல்லாத பொடிகளா?நான் தந்தது ரொம்ப கொஞ்சம் தான் அதுக்கே ராணியா?(பொடி வைத்து காமெடி பண்ணலியே!!)
கண்டிப்பாக வரேன்..
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

சீதாம்மா,
பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி..

உமா,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி .

பிரேமா,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

கோமதி,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

கலா,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

ராஜி,
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி..
வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்