நான் வெளியூரில் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு துணைக்கு பெரியவர்கள் யாருமில்லை நான் இங்கேயே குழந்தைப் பெற்று எடுக்க வேண்டிய சுழ்நிலை இது என்னுடைய முதல் ப்ரசவம் எனக்கு பயமாக உள்ளது எனக்கு யாராவது தைரியம் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தைய எப்படி பார்த்துக்கொள்வது என்பது கூட எனக்கு தெரியாது, குழந்தைய தூக்க தெரியாது, குளிக்க வைப்பது எப்படி என்று எதுவும் தெரியாது.. எனக்கு உதவுங்கள் please
உமா கணேசன்
எல்லாரும் எல்லாத்தையும் கத்துகிட்டே பொறக்குறது இல்லை. andha andha நேரம் வரும்போது நாமளா கத்துக்க வேண்டியது தான். உங்களை போல் தான் நானும் இப்போ நானும் ஒரு குழந்தை பெற்று அவளுக்கும் 2 ஆகிடுச்சு. தையிரமா இருங்க, எதுனா சந்தேகம்னால் உடனே வலைத்தளம் இருக்கு... பி ஹேப்பி
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
Hi uma
Kavala padathinga enakkum veli naattil than 2 pillaigal piranthadhu nanum en kanavanum mattum than ellathayum samalithom periyavanga illamale.thayriyama irunga baby ya thooka kulika vaika hospital ye solli tharuvanga.apti illana idhukku class irukku neenga ankey poituvantha kulapam theerum.baby class pathi doctor kita kelunga.
தைரியமா இருங்க.
பயபடதீங்க. தைரியம் ரொம்ப முக்கியம். மருதுவமனையிலெயெ நர்ஸ் பேசிக் சொல்ல்லி தருவாங்க. இப்பொ எத்தனை மாதம்? தனியா இருப்பதால் நிங்க முதலில் உங்கலை கவனியுங்கல். சின்ன மாற்றம் எர்பட்டலும் மருதுவரை அனுகவும். நான் ஒரு வெப்சைட் பெயர் தரென் அதுல மெம்பர் ஆகிடுங்க. அது கண்டிப்பா உதவும். ஓவ்வோரு மாதமும் என்ன ஆக்டிவிடிஸ்னு மெஇயில் பண்ணி சொல்வாங்க. http://www.babycentre.co.uk/
Dreams Come True..
all the best sister
i pray for u
எனக்கு தைரியம் சொன்ன அத்தனை
எனக்கு தைரியம் சொன்ன அத்தனை தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சுபன்யா நீங்கள் கொடுத்த வலைதளத்தில் இப்பொதே பதிவு செய்கிரேன். நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆலொசனைகள் எனக்கு மிகவும் ஆறுதலாக் இருக்கிறது. ஒரு சந்தேகம் குழந்தை பிறந்தவுடன் உரை விழும் என்பார்கலே அப்படி ஏதாவது என்றால் டாக்டரிடம் கொண்டுபோவதா இல்லை நாமே ஏதாவது செய்யாலாமா. டெலிவரிக்காக ஹாஸ்பிடல் போகும்போது என்னென்ன தயாராக எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள் பிறந்த குழந்தைக்கு என்னென்ன தேவைப்படும் எவையெல்லாம் முன்னெற்ப்பாடொடு வாங்கி வைக்க வேண்டும் என்று உதவுங்கள் தோழிகளே. என்னிடம் புடவையில்லை அவசியம் புடவை வாங்க வேண்டும (குழந்தைய உலர்த்த) ஆரம்பதிலெ குழந்தைய தொட்டிலில் இடலாமா. என் கணவருக்கு ஒன்றும் தெரியாது எங்களுக்கு உதவுங்கள் இப்பொழுதே ஒவ்வொன்றாக வாங்கி வைத்தால் சுலபமாக இருக்கும். மேலும் நிரைய சந்தேகம் உள்ளது இதை பற்றி ஏற்கனவே பேசி இருந்தால் உங்களுக்கு தெரிந்த தகவலை தாருங்கள் (Forum number) please.
Uma
நீங்க எந்த ஊருன்னு தெரியல..குழந்தைகளுக்கான பொருள் கிடைக்கும் கடைக்கு போனால் நேப்பி துணிகள் கிடைக்கும் ..அது நல்ல பருத்தியில் மென்மையா இருக்கும்..அதில் எதாவது அடையாளம் வச்சுட்டு குழந்தையை உலர்த்த பயன்படுத்தலாம்.மற்றதை பத்தி நீங்க கவலையே படாதீங்க..கணவரின் அன்பு மட்டும் இருந்தால் போதும் தாராளமா தனியா இருந்து குழந்தையை பாத்துக்கலாம்..இப்பொவே உஉரை விழுவது பத்தியெல்லாம் எதுக்கு யோசிக்கறீங்க..எதுவுமே வராதுன்னு யோசிங்களேன்..எனக்கு ரெண்டு குழந்தைகள் ஆனால் இப்போ தான் உரை விழுதுன்னு ஒண்ணு இருக்குன்னே தெரியும்..வெளிநாட்டில் மருத்துவமனைகளில் டாக்டர்/னர்ஸ் எல்லாமே சொல்லி தருவாங்க..எதெது எடுக்கனும்னும் சொல்லுவாங்க.குழந்தையை தொட்டியில போடுவதும் Pஒடாத்ததும் உங்க இஷ்டம்..போடாமல் பழக்கினால் ஈசி எந்த வீட்டுக்கு போனாலும் கட்டிலில் தூங்கும்..
எனக்கு ஒண்ணுமே தெரியாது ஒண்ணுமே தெரியாதுன்னு நீங்களே சொல்லிக்காதீங்க அந்த மனோபாவம் அவ்வளவு நல்லதில்லை அப்போ தான் உதவிக்கு யாருமில்லைன்னு ஏக்கம் வரும்..எதுவா இருந்தாலும் சமாளிப்பேன்னு உங்களுக்குள் சொல்லிகிட்டே இருங்க..யார் துணை இருந்தாலும் எந்த அம்மாக்களுக்கும் எல்லாமே முதல்லயே தெரியாது போக போக தான் குழந்தையை சரியா தூக்க கூட வரும்..
தனிப்பட்ட அபிப்ராயம் பிறந்த குழந்தையை போறவங்க வற்றவங்க கைல எல்லாம் எடுத்து கொடுப்பது குழந்தைக்கு உடம்பு வலி எடுக்கும்..அது பாட்டுக்கு தூங்கிட்டும் முழிச்சுட்டும் இருந்தா ரொம்ப கஷ்டப்படுத்தாம மென்மையா குளிக்க வெச்சா எந்த வலியும் அழுகையும் குழந்தைக்கு இருக்காது
Thanks thalika
ரொம்ப நன்றி தாளிக்கா உங்களுடைய குழந்தை வளர்ப்பு இழையெல்லாம் நா படிச்சிருக்கேன். நீங்க எனக்கு ஆலோசனை கொடுத்தது ஒரு புது தெம்பு கிடைச்சமாதிரி இருக்கு. எனக்கு ஒன்னும் தெரியலானாலும் உங்கள மாதிரி அனுபவசாலிங்க கிட்ட கேட்டு தெரிந்சுக்கலாம்னு கேட்டேன். என் கணவருடைய அன்பு முழுமையா இருக்கு. அவருக்கு என்ன நல்ல பார்த்துக்கனும்னு ஆசை எனக்கு அவ்வளவ சமைக்க கூட தெரியாது, அவருக்கும் தெரியாது இருந்தாலும் அவர் தான் இப்ப சமைச்சு கொடுக்கிறார் எனக்கு கீரை சாப்பிடாவே பிடிக்காது கண்டிப்பா கீரை சேர்த்துக்க் வேணுமா அப்புறம் இங்க நிரைய காஷயத்த பத்தியெல்லாம் பேசி இருக்காங்கா கண்டிப்ப இத எல்லா கற்பிணிகளும் எடுத்துக்கனுமா நிறைய சந்தேகம் வந்துகிட்டே இருக்கு எனக்கு. இத படிக்கும் போது உங்களுக்கு எவ்வளவு கோவம் வரும்னு புரியுது ப்லிஸ் கோவபடாதிங்க pa. இத பத்தி ஏற்கனவே யாராவது பேசி இருந்தால் அந்த லிங்க (link) கொடுத்திங்கனா எனக்கு உதவியா இருக்கும்.
anbu tholi uma
payapathinga ungaluku ipa yethani mathm nadakirathu
Dont worry
நீங்க எதையும் கவலை படாதீங்க உடம்புக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கணும் நல்லதில்லையா விட்டுடணும்..நான் நூடில்ஸ் சாப்பிடலாமா நான் கொககோலா குடிக்கலாமான்னு கேட்டா தான் கோபம் வரும்;)..சத்தான ஆகரமா சாப்பிடுங்க கீரை நல்லது தானே சாப்பிடுங்க.கஷாயம் லேஹியம் எல்லாம் தேவையே இல்லை இப்போ..பிரசவமான பின்னும் சத்தான் ஆஅகரமா சாப்பிடுங்க போதும்.ஆனா இன்னும் கவணமா சாப்பிடணும் அப்போ..வாயுவுள்ள எதாவது சாப்பிட்டா கூடவே இஞ்சி துருவி தேன் கலந்து சாப்பிடலாம் இல்ல புதினா ஜூஸ் குடிக்கலாம் குழந்தைக்கு வாயு தொல்லை கொடுக்காது..உங்களுக்கு பழங்கள் சீக்கிரம் சளி பிடிக்கும்னா கொஞ்ச நாளைக்கு பாத்து சாப்பிடலாம் இப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை.வீணா மனசை குழப்பிக்காதீங்க
Thanks thalika, I need ur blessing for my baby
உங்க பதிலுக்கு மிக்க நன்றி.உங்க உதவியா எண்ணிக்கும் மறக்க மாட்டேன். எனக்கு பழம் சாப்பிட்டா சளி பிடிக்காது அதனால நான் நிறைய பழம் சேர்த்துக்கிறேன். இங்கு எனக்காக தைரியம் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவருடைய அன்பும் , ஆசிர்வாதமும் என் குழந்தைக்கு எப்பொதும் வேண்டும்.