துவரம்பருப்பு அடை

தேதி: June 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (8 votes)

 

பச்சரிசி - 150 கிராம்
துவரம் பருப்பு - 150 கிராம்
வெல்லம் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு – 1 சிட்டிகை


 

அரிசியையும், துவரம் பருப்பையும் சம அளவில் எடுத்து கழுவி வைக்கவும்.
முதலில் கழுவி வைத்த அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு இட்லி மாவு பதத்தில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டாம்.
இதனுடன் தேவையான அளவு இடித்த வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மாவை சிறிது மொத்தமாக அடை போல் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும். பின் திருப்பி போட்டு வேக விடவும்.
இதோ ஹெல்தியான துவரம் பருப்பு வெல்ல அடை தயார். மாலை நேரத்திற்கு ஏற்ற இனிப்பு வகை இது.

இந்த துவரம் பருப்பு வெல்ல அடை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். உப்பு சிறிது சேர்ப்பது இனிப்பின் சுவையை கூட்டுவதற்காக மற்றும் இனிப்பு போதவில்லையெனில் சர்க்கரை கூட சிறிது சேர்த்து கொள்ளலாம். முக்கியமாக இனிப்பு சேர்ப்பதால் அடிப்பிடிக்கும், லாவகமாக எடுத்து திருப்பி போடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரேமா

ஹெல்தியா குறிப்பு.
அவசியம் முடியும் போது செய்து பார்க்கிறேன்.. ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிப்பு அடையா?? பண்ணியது இல்லைங்க. கண்டிப்பா பண்ணி பாக்கறேன்.
கடைசி படம் சூப்பர், மீன் எல்லாம் ஓடுது...மேலும் பல குறிப்பு தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர் படங்கள் ரொம்ப அழகு ,எனக்கு இனிப்பு ஆடை ரொம்ப பிடிக்கும்,ஞாபகபடுதிடீங்க நேரம் வரும்போது செஞ்சுட்டு சொல்றேன் .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

பிரேமா ரொம்ப ஈசியான ஒரு குறிப்புங்க, கடைசி படத்துல பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு மீன்லாம் ஓடுது மிட்டாயா அது? நன்றி பிரேமா வாழ்த்துக்கள்.

அன்பு பிரேமா,

துவரம்பருப்பு ப்ரோட்டீன், வெல்லம் இரும்பு சத்து என்று சத்தான சுவையான குறிப்பாகக் கொடுத்திருக்கீங்க, பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

துவரம் பருப்புல சாம்பார் , பாயாசம் பண்ணி இருக்கேன் இப்போ அடை சொல்லி இருக்கிங்க ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் மாலை நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி நன்றி பிரேமா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

துவரம்பருப்பில் கார அடை தான் தெரியும்... இனிப்பு அடை... யம்மி :) அவசியம் செய்துடுறேன். அந்த மீன் குட்டிலாம் அழகா இருக்கு... மிட்டாய் தானே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை டிபன் அடைதான் செய்தேன். சூப்பரா வந்தது. சுவை நன்றாக,செய்ய சுலபமாக இருந்தது! குறிப்புக்கு மிக்க நன்றி! இனி அடிக்கடி அடைதான் போங்க.....!!!

பிரேமா
ரொம்ப எளிமையான குறிப்பு .மாலையில் செய்ய வசதியானது

பிரேமா,
நல்ல இரும்பு சத்துள்ள அடை
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் டீமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தாமதமான பதிவிற்கு மன்னிச்சிடுங்க தோழிகளே.

ரம்யா : முதலாவதா வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி பா. அவசியம் செய்து பாருங்க.

சுகி : வாழ்த்துக்களுக்கு ரொம்ப தாங்க்ஸ் பா. கண்டிப்பா செய்து பாருங்க.

பாத்திமா : உங்களை போல் எனக்கும் இனிப்பு அடை ரொம்பவே விருப்பம். நிச்சயம் செய்து பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

உமாகுணா : வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க. அமாங்க அது என் பொண்ணுக்கு வாங்கின மிட்டாய் தான், ப்ரெசென்ட் பண்ண வேற வழி தெரியாமல் மீன் முட்டைகளை வைக்க வேண்டியதாகிடுச்சு.

சீத்தாமா : நீங்கள் சொன்னது போல இந்த குறிப்பு சத்தானதாகையால் வாரத்தில் 2 முறையாவது செய்திடுவேன். இங்க இருக்கும் குட்டீஸ்களுக்கு இது ரொம்ப விருப்பம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

தனா : துவரம் பருப்புல சாம்பார் ஒகே, பாயாசம் வேற இருக்கா அது எப்படி நு எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுத்திடுங்கோ. மிக்க நன்றி தனா.

வனி : ஆமாம் பா. அந்த மீன் குட்டி எல்லாம் மிட்டாய் தான். என் பொண்ணுக்கிட இங்க ப்ரெசென்ட் பண்னின அடையை நீட்டினதும் அடையை விட்டுட்டு மீன்களை மட்டும் தூக்கிகிடுச்சு. ஹி ஹி ஹி நீங்களும் அவசியம் செய்து பாருங்க.

சுபதியாகு : உங்கள் பெயரை சரியா எழுதி இருக்கீனான்னு தெரியலை, தவறாய் இருந்தால் மனிக்கவும். செய்து பார்த்திட்டு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி பா.

நிகிலா : ஆமாங்க நான் சில நேரம் போர் அடிச்சா காலை ப்ரியக்பாச்டாவும் இதையே வச்சிடுவேன். பதிவிற்கு நன்றி. நானும் ரொம்ப நாளா சொல்லனும்னே இருந்தேன். உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு.

கவிதா : முக்கியமா பெண்களுக்கு இரும்பு சத்து ரொம்பவே அவசியம். வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பா.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இப்ப தான் உங்க அடை செய்து சாப்பிட்டு வரேன். குட்டீஸ்கும் பிடிச்சுது, எனக்கும் பிடிச்சுது. சுவையான அடைக்கு நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்திட்டு பதிவிட்டமைக்கு நன்றிகள் வனி...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

super