மால்வானி சிக்கன் மசாலா

தேதி: June 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு
தேங்காய் பால் - அரை கப்
அரைக்க:
தேங்காய் - கால் கப்
கொத்தமல்லி இலை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
தாளிக்க:
சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - சிறுத் துண்டு
லவங்கம் - 4
கறுப்பு மற்றும் பச்சை ஏலக்காய் - தலா 2
பிரியாணி இலை -சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

அரைக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
பாத்திரத்தில் எண்னெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் சிக்கன் துண்டுகள் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் கரம் மசாலா தூவி பிரட்டி மூடி வேக விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.
சுவையான மால்வானி சிக்கன் ஹிர்வா மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் பதிவு போட்டு கிட்டத்தட்ட வருஷமே இருக்கும், எப்படியோ இன்னைக்கு புடுச்சுட்டேன்

சிக்கன் ல வித்தியாசமா பண்ணி காட்டி இருக்கீங்க. பேரு அழகா இருக்கு. காரம் கம்மியா இருக்கும் போல?

மார்வாடி பொண்ணுக மாதிரி, மால்வானி சிக்கன் மசாலா.. கலக்குங்க :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி
மாலேல இருக்க வனி பண்ணின சிக்கன் மால்வனி சிக்கன் :)
உங்களின் கற்பனையை நான் திருடிட்டேன் சீலா :)
பார்க்கவே அழகா இருக்கு. லேக் பீஸ் நம்ம கையில் கிடைத்தால் அரச்சு தள்ளிடுவோம்ல.
வாழ்த்துகள். செய்து பார்த்து சொல்றேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன்லேயே வெரைடின்னாலே வனின்னு ஆயிடுச்சு ?ம்ம் கலக்குங்க .நீங்க சமைக்காத எதாவது ஒரு ஊர் ஐடம் இருக்கான்னு தேடனும் போலே.எளிமையான குறிப்பு

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

பல பார்ட்டி நடத்துறதால எங்களுக்கு தான் கொண்டாட்டம். பாருங்க இப்படி வகை வகையான குறிப்பு வருது. எனக்கும் இந்த மாதிரி பல ஊர் நாடு உணவை சமைக்கவும் பிடிக்கும் சாப்பிடவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் வனி.

என் குறிப்போ ஒரு நிமிஷம் குழம்பினேன்.....இருந்தாலும் பவுல் காட்டி கொடுத்து விட்டது. யாருப்பா அது கற்பனையை திருடினது?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சுகி... முதல் ஆளா வந்து பதிவிட்டீருக்கீங்க :) மிக்க நன்றி. காரம் குறைவு தான். சுலபமா சமைக்க கூடியது.. அதனால் பார்ட்டீஸ்ல சமைக்க ஈஸியா சுவையா இருக்கும்.

ரம்யா... இது மாலவானி சிக்கன்... வனி சிக்கன் இல்ல ;) மிக்க நன்றி. //உங்களின் கற்பனையை நான் திருடிட்டேன் சீலா :)// - ஒன்னும் புரியல. செய்து பாருங்க, நிச்சயம் பிடிக்கும்.

ஃபாத்திமா... மிக்க நன்றி. இன்னும் நிறைய இருக்கு... நிறைய ஏற்கனவே அனுப்பியும் இருக்கேன்... வரும் வருசையா. மிக்க நன்றி. :) //சிக்கன்லேயே வெரைடின்னாலே வனின்னு ஆயிடுச்சு // - ஏங்க... லாவி கூட தான் ஏகப்பட்ட சிக்கன் குறிப்பு கொடுக்கறாங்க :)

லாவி... நம்ம இருவரும் இந்த விஷயத்தில் ஒன்னு தான்... :) ரசனை ஒன்னு. //என் குறிப்போ ஒரு நிமிஷம் குழம்பினே// - ஹஹஹ... ஆமாம், பேரை பெருசா இருக்குன்னு சுருக்கிட்டாங்க. கீழ கடைசியில் தான் இருக்கு முழு பேரு. ;) //யாருப்பா அது கற்பனையை திருடினது?// - உங்களூக்கு புரிஞ்சுதா??? எனக்கு தான் புரியல போல ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
மல்லி தழை சேர்த்து கிரீனிஷா பண்ணி இருக்கீங்க தக்காளி இல்லை.டேஸ்ட்டும் வித்தியாசமா இருக்கும்னு நினைக்கரேன்

மிக்க நன்றி. சுவை நம்ம வழக்கமான சிக்கனை விட வித்தியாசமா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
எளிமையான சிக்கன் குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று Choya chunks வைத்து முயற்சி செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.
Thanks Vanitha.

இப்ப என்னால் சாப்பிட முடியற அசைவம் சிக்கன் தான், அதில் வித விதமா ரக ரகமா குடுத்து அசத்துறீங்க... படங்கள் அழகா இருக்கு...

வாழ்த்துக்கள் பா.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சோயா சன்க் பயன்படுத்தினீங்களா??? வாவ்... நானும் ட்ரை பண்ணி பார்க்குறேன். எனக்கு இந்த சோயா சன்க்ல நிறைய வகை எல்லாம் தெரியாது. செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. நான் சிக்கன் தான் அதிகம் விரும்புவேன் ;) அதான் சிக்கனாவே குறிப்பும் வருது. அதை விட்டா மீன். மட்டன் எப்பவாது தான். முட்டை பிடிக்காது. அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு சந்தேகம், நீங்க எல்லாருமே பிரியாணிக்கு மிளகாய் தூள் தான் உபயோகிக்கரிங்க. ஆனால் நான் செய்யும்போது பிரியாணி மசாலா உபயோகிப்பேன், இல்லைனால் டேஸ்ட் நல்ல வர மாட்டேங்குதே.. ஏன்?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வனி இன்னிக்கு டின்னர்க்கு மால்வானி சிக்கன் மசாலா செய்தேன். சூப்பர் டேஸ்ட். சப்பாத்தியோடு சாப்பிட்டோம். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நன்றி வனி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் கலவை தூள் தான் அதிகம் பயன்படுத்துவேன். அது நல்ல வாசமும் தரும்னு. வெறும் மிளகாய் தூள் சேர்த்தா கொஞ்சமா பிரியாணி மசாலாவும் சேர்ப்பேன். ஆனா பிரியாணி மசாலா இல்லாமலே பிரியாணிக்கு வாசம் தரவும் சுவை கூட்டவும் முடியும் பிரேமா. நிறைய வெங்காயம், கரம் மசாலா, வதக்கும் போதெல்லாம் மூடியே வைத்து சமைப்பது, கறி வேக வைத்த நீரை பிரியாணியில் சேர்த்து சமைப்பது, தம் போடுவது என பிரியாணிக்கு வாசம் சேர்க்கும், சுவை சேர்க்கும் விஷயம் நிறைய இருக்கு. அதெல்லாம் முறையா பண்ணா நிச்சயம் மனமான சுவையான பிரியாணி பிரியாணி மசாலா இல்லாமலே கிடைக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா