தேதி: June 16, 2012
ஐஸ்க்ரீம் ஸ்டிக்
பெவிக்கால்
ஃபேப்பரிக் பெயிண்ட்
கிலிட்டர்ஸ்
அட்டை
தடிமனான குண்டூசி/சிறிய ஆணி - 3
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு சதுரவடிவ அட்டையில் வரிசையாக ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டி காய விடவும்.

இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளின் முனைகளை இணைத்து "V" தலைகீழாக இருப்பது போல் ஒட்டி, அதனை அட்டையின் பின்பக்கம் வைத்து ஒட்டவும்.

நடுவில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை குறுக்கே வைத்து ஒட்டவும். மேலும், கீழும் ஒவ்வொரு ஐஸ்க்ரீம் குச்சியை வைத்து ஒட்டவும்.

"V" வடிவம் தகைகீழாக இருக்கும்படி மீண்டும் இரு ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டி, அதன் முன்பக்கத்தை ஐஸ்க்ரீம் குச்சியால் நிரப்பவும்.

இதை அட்டையில் ஒட்டிய ஐஸ்க்ரீம் குச்சியின் முன்பக்கத்தில் ஒட்டி நன்கு காய விடவும். மேற்கூரையில் ப்ரவுன் நிற பெயிண்டை அடிக்கவும். உள்ளே க்ரீம்நிற பெயிண்டை நிரப்பவும்.

மேற்கூரைக்கு அடியில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியின் இருமுனைகளை வெட்டி விட்டு ஒட்டவும். அதில் ரோஸ்நிற பெயிண்ட் செய்யவும்.

குறுக்கே ஒட்டி வைத்துள்ள ஐஸ்க்ரீம் குச்சியில் மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் செய்யவும். அடியிலும் ரோஸ் நிறத்தில் பெயிண்ட் செய்யவும். இடதுப்பகுதியில் விருப்பமான வாசகங்களை எழுதிக் கொள்ளவும்.

வலதுப்பகுதியில் பூவும், இலையும் சேர்ந்து இருப்பது போல் வரையவும். குண்டூசி/ஆணி சொருக போகும் இடத்தை சுற்றி கிலிட்டர்ஸால் டிசைன் செய்யவும். மேற்கூரையில் நடுவில் கிலிட்டர்ஸால் விரும்பியப்படி அலங்கரிக்கவும்.

பிறகு கீழே க்ளிட்டர்ஸ் வரைந்த அந்த இடத்தில் சிறிது தடிமனாக உள்ள குண்டூசியை அடித்து வைக்கவும்.

ஐஸ்க்ரீம் ஸ்டிக்கில் செய்த கீ ஹோல்டர் தயார்.

Comments
:)
All is well...
அழகான , பயனுள்ள குறிப்பு..
வாழ்த்துக்கள்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
டீம்
சூப்பரோ சூப்பர் :) அழகு அழகு... அதென்ன “All is well” ?? யார் அங்க விஜய் ரசிகர் மனறம் வெச்சிருக்கீங்க ;) ரொம்ப சுலபமா செய்ய கூடிய பயனுள்ள வேலை :) ஐ லைக் இட். டீம் டீம் தான்... யூனிக் வேலைப்பாடுகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஐஸ்கிரீம் ஸ்டிக் கீ ஹோல்டர்
அன்பு டீம்,
எப்பவும் போல, அழகான வேலைப்பாடு!
அதுவும் அந்த ஆல் இஸ் வெல் - அது ரொம்பப் பிடிச்சிருக்கு
பாராட்டுக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
டீம்.. ;)
ஆஹா! சூப்பரா இருக்கு. ம்.. All is well. ;)
- இமா க்றிஸ்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் கீ ஹோல்டர்
ரொம்ப அழகாகவும் எளிமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்!!!!!
romba easya irukku
romba easya irukku