கல்யாணமாம் கல்யாணம்

அன்பு உள்ளங்களே,

ரொம்ப ரொம்ப நாளாகிடுச்சு, நான் புது இழை தொடங்கி!

நிறையப் பேசணும்னு ஆசையா இருக்கு, என்ன பேசறதுன்னு யோசிச்சேன். பேசப் பேச சலிக்காத டாபிக் ஷாப்பிங்தானே!

அது, அதுவேதான் இப்ப நம்ம டாபிக். ஆனா, ஷாப்பிங்னு பொதுவா இல்லாம, கல்யாண ஷாப்பிங் பத்தி சொல்லுங்க.

உங்களுடைய சொந்த அனுபவங்கள், நண்பர்கள் உறவினர்களின் வீட்டு அனுபவங்கள், எல்லாம் சொல்லலாம்.

நெத்திச்சுட்டியில் ஆரம்பிச்சு கால் மெட்டி வரைக்கும் ஜுவல்லரி ஷாப்பிங்

மெஹந்தியில் தொடங்கி ஸ்டிக்கர் பொட்டு வரைக்கும் அலங்கார ஷாப்பிங்

ப்ளவுஸ் தைத்த அனுபவம் முதல் முகூர்த்தப் பட்டு, அப்புறம் உறவினர்களுக்கு வாங்கிய ட்ரஸ் ஷாப்பிங்

கல்யாணப் பத்திரிக்கை டிசைனிங், கொரியர் டிஸ்ட்ரிபியூஷன்,

கல்யாண சமையல் சாதம் - ஸ்வீட் முதல் வாட்டர் பாட்டில் வரை, உப்பு முதல் பாயசம் வரை - எல்லாம் சொல்லுங்க.

முக்கியமா - சொதப்பல், பல்பு வாங்குதல், மற்றும் சக்ஸஸ் ஃபார்முலா வரை சொல்லிடுங்க.

மொத்தத்துல இந்த இழை படிச்சா - எந்தக் கவலையும் இல்லாம, கல்யாணத்தை செய்துடலாம்னு இருக்கணும்.

ரெடி - ஸ்டார்ட் ம்யூசிக்!

நானே ஆரம்பிக்கிறேன்!

இப்ப சின்னதா பதிவு போடறேன். அப்புறம் ஞாபகம் வர வர, வந்து சொல்றேன்.

கால் மெட்டி - இதை சில வீடுகளில் கல்யாணத்தன்னிக்குதான் போடுவாங்க. சில பேர் 2-3 நாளைக்கு முன்னால போட்டுடுவாங்க. கல்யாணத்தன்னிக்குப் போடணும்னா, லேசாக நெகிழ்த்தி விட்டு, ரெடியா வச்சுக்குங்க. ஈசியாப் போட்டுடலாம். அப்புறமா ஃபிட் ஆக்கிக்கலாம்.

தலை அலங்காரம் - பின் பக்கம் அடர்த்தியாக பூ ஜடை வச்சிருக்கறப்ப - செயின் சில சமயம் கழுத்துல போட வராம ரொம்ப சிரமம் ஆகிடும். அதனால ஜடை அலங்காரம் என்னன்னு பாத்துகிட்டு, செயின்ல கனெக்ட் பண்ணியிருக்கும் வளையத்தை எடுத்துட்டு, கொஞ்சம் மஞ்சள் கயிறு சேர்த்து, லெங்தியாக வச்சுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா நல்ல டாபிக்! சிலபல வருஷங்களுக்கு முன்னாடியே இது மாதிரி எல்லாம் டிப்ஸ் கொடுத்திருந்தா எங்களுக்கும் வசதியா இருந்திருக்கும் :)

கல்யாணப் பெண்ணுக்கு செருப்பு பாய்ன்டட் ஹீல்ஸ் இல்லாமலும் முடிஞ்சா ஹீல்ஸே இல்லாமலும் காலுக்கு வசதியா இருக்கற மாதிரி வாங்குவது நல்லது. ரிசப்ஷன் போது நீண்ட நேரம் நிற்க வேண்டி வரும். ஹீல்ஸ் அதிகம் உள்ள செருப்பா இருந்தா கால் வலி முதுகு வலி எல்லாமே சேர்ந்து தொல்லை கொடுக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாலஷ்மி.. ஷாப்பிங்னா வனி இல்லாமலா??? ;) வருவோம்ல.

பத்திரிக்கை டிசைன் பண்றது சாதாரணமில்லை. என் கல்யாணத்தில் நான் ஆபீஸில் கொடுக்க பத்திரிக்கை அடிச்சேன். அப்பா கிட்ட சொல்லி இல்லங்க, நானே கடையை தேடி பேரீஸ் கார்னர் போய் அடிச்சேன். எப்பவும் ஒரே இடத்தில் முடிவு பண்ணிடுறது என் வழக்கம்... அப்பவும் அதை தான் பண்ணேன் :) ஆனா நான் பண்ண தப்பு... பத்திரிக்கை ஆர்டர் கொடுத்தா கையில் வர எவ்வளவு நாளாகும்னு தெரியாம போச்சு... சொல்வாங்க... 1 வீக்னு... ஆனா அதுக்கு மேல இழுப்பாங்க. சாதாரண மேட்டர் தான்... ஆனா 1000 தப்பு பண்ணுவாங்க. இதனால் ஏகப்பட்ட கார்ட் கடைசி நேரத்தில் பலருக்கும் அனுப்பாம வீட்டில் இருக்கு இன்னும் :)

1. அங்க போனா உங்களூக்கு நிறைய மாடல் கார்ட் இருக்கும். முதல்ல என்ன மாடல்னு சூஸ் பண்ணுங்க.

2. அதில் என்ன உருவம் இருக்கனும், என்ன படம் வரனும், என்ன ஃபாண்ட் ஸ்டைல் வேணும், என்ன கலர்ல டெக்ஸ்ட் இருக்கனும், என்ன கலர்ல கார்ட் இருக்கனும் எல்லாம் நாம சூஸ் பண்ணலாம்.

3. ப்ளெயின் கார்ட், டபிள் ஃபோல்ட், ட்ரிப்பில் ஃபோல்ட், டிசைனர் கார்ட்ஸ், வழக்கமான ட்ரெடிஷனல் பத்திரிக்கை... இப்படி கார்டில் வகைகள் நிறைய இருக்கு.

4. கண்டண்ட் தமிழ், இங்க்லிஷ் எல்லாம் அவங்க ஒரு புக் வெச்சிருப்பாங்க. அதிலிருந்து சூஸ் பண்ணலாம், மாற்றங்களும் சொல்லலாம். நம்ம சொந்த டெக்ஸ்ட்டும் கொடுக்கலாம்.

5. எதுவா இருந்தாலும் அன்று ஒரு பேப்பரில் ப்ரூஃப் கொடுப்பாங்க. அடுத்த 2 நாளில் ஒரு கார்ட் வரும்... போய் பார்த்து ப்ரூஃப் கரக்ட் பண்ணி கொடுத்தா அடுத்த 10 நாளில் கார்ட்ஸ் வந்துடும்.

6. ப்ளெயின் கார்ட்ஸ் விட எம்போஸ்டுலாம் போட்டா கொஞ்சம் விலை அதிகம். டிசைனர் கேட்கவே வேணாம் :)

7. ஒரு கார்டோட விலை சராசரியா சென்னை போல இடத்தில் 3 ரூபாயில் இருந்து ஆரம்பிக்குது. ஒரு கார்ட் 100 ரூபாய்க்கு கூட போடலாம். அதை விட அதிகமா இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை :)

8. இதெல்லாம் பண்னும் முன்... யார் யாருக்கு கார்ட்?? யாருக்கு என்ன டைப்பாஃப் கார்ட்? எந்த மாடல் கார்ட் எத்தானி அடிக்கனும்னு வீட்டில் ஒரு 1 நாள் செலவு பண்ணி யோசிச்சு ஒரு பேப்பரில் குறிச்சு வைங்க. அது நிச்சயம் தேவை இல்லாத செலவு, கார்ட் வீணாகுறது, கார்ட் பத்தாம போறது போன்ற விஷயங்களை தவிற்கும்.

9. யார் யாருக்கு ஆன்லைனில் கார்ட் அனுப்ப போறோம்னு முடிவு பண்ணிக்கங்க. அதுக்கு ஒரு சாஃப்ட் காப்பியும் ஸ்கேன் பண்ணி ரெடி பண்ணிக்கங்க.

10. முடிஞ வரை பத்திரிக்கையை சிம்பிளா அழகா போடுங்க... என்ன இருந்தாலும் அன்னைக்கு பார்த்துட்டு தூக்கி போட போற விஷயம்... ஏகப்பட்ட செலவு வீண் தானே.

11. தேவை இல்லாத தகவல் எல்லாம் பத்திர்க்கையில் தவிற்க பாருங்க. அதுவே உங்க கார்டை நீட்டா ஸ்டைலா காட்டும்.

12. எந்த எந்த பத்திர்க்கை எந்த ஊர் போகனுமோ அதுக்கு ஏத்த மாதிரி தனி தனியா எடுத்து வைங்க.

13. ஒரே ஊருக்கு போகும் பத்திரிக்கை எல்லாம் ஒன்னா எடுத்து வெச்சா சரியா ரீச் ஆகும்படி ஒன்னா போஸ்ட் பண்ணலாம்... மிஸ் ஆகாம இருக்கும்.

14. எந்த ஊருக்கு போக எவ்வளவு நாளாகும் என்பதை சரியா ப்ளான் பண்ணுங்க. முடிஞ்ச வரை குறைந்தது கல்யாணத்துக்கு 10 நாள் முன்னாடி பத்திரிக்கை கிடைச்சுடும் படி அனுப்புங்க. வரவங்களுக்கு லீவ் ப்ளான் பண்ண, டிக்கட் புக் பண்ண நேரம் வேணும் இல்லையா.

15. ஆன்லைனில் அனுப்ப ப்ளான் பண்ணா அவங்க எப்பவும் ரெகுலரா செக் பண்ற மெயில இடி தெரிஞ்சு அனுப்புங்க. அவங்க அதை உங்க கல்யாணம் முடிஞ்சு பார்க்குற மாதிரி ஓப்பன் பண்ணாத மெயிலுக்கு அனுப்பிட்டு வரலன்னு சொல்ல புடாதில்லை.

16. எல்லாத்துக்கும் மேல... நேரில் போய் கொடுக்க வேண்டிய பத்திர்க்கய் ரொம்ப முக்கியம். அவங்களை தனியா லிஸ்ட் போடுங்க. எந்த எந்த ஊர் போகனும், யார் யாருக்குன்னு சரியா ப்ளான் பண்ணி ஒரு முறை கிளம்பினா வழியில் உள்ள எல்லா ஊரும் முடிக்கும்படி ட்ரிப்பை சரியா ப்ளான் பண்ணி அவங்க வீட்டில் இருப்பாங்களா என்பதையும் தொலைப்பேசியில் கன்ஃபர்ம் பண்ணி கிளம்புங்க.

பத்திரிக்கை மேட்டர் முடிச்சனா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்யாணமாம் கல்யாணம் ரொம்ப நல்ல டாபிக்.

முக்கியமா மணப்பெண் கட்டும் சேலைகளை தனியே பிரித்து, அதற்கு மேட்சிங் ப்ளவுஸ், வளையல், தோடு, நெக்லஸ், இத்யாதிகளை தனித்தனியே ziplock bagகளில் போட்டு வைத்தால் அவசரத்தில் கிளம்பும்போது பதட்டப்படாமல் இருக்கலாம். தங்க நகையாக இருந்தால் அதன் பெட்டியின் மேல் stickerல் எழுதி ஒட்டினால் makeup செய்யும் யாருக்கும் வசதியாக இருக்கும்.

வாழ்க வளமுடன்

சீதாலஷ்மி
நல்ல சுவாரஸ்யமான இழை.படிக்க interest ஆ பதிவுகள் வரும்னு நினைக்கறேன்.
வனி நீங்க கார்ட்ஸ் செலக்ட் பண்ணியாச்சா?ஓ.கே.
நான் டிஸ்ரிபியூட் பண்ணுறேன்.
1. யார் யாருக்கெல்லாம் கார்டு கொடுக்கனும்னு முதல்ல ஒரு நோட்டுல லிஸ்ட் போட்டு வச்சுகனும்.
2. ஊர் வாரியா அதை பிரிச்சி எழுதினா வசதியா இருக்கும்
3. கார்டு கொடுக்கு கொடுக்க டிக் பண்ணிகிட்டே வாங்க.அப்பதான் எதுவும் விட்டு போகாது.
4. நேரில் அழைக்க வேண்டியவங்களை நேரில் போய் கூப்பிடுங்க.
5. ட்ரைனில் டிக்கெட் எடுக்க வேண்டிய உறவுக்காரங்களுக்கு பத்திரிகை அடிக்கும் முன்னேயே டேட் ஃபிக்ஸ் பண்ணுனதும் ஃபோன்ல தகவல் சொல்லிட்டீங்கன்னா அவங்க டிக்கட் எடுக்க வசதியா இருக்கும்.எங்க அப்பா இப்படிதான் சொல்லுவாங்க.
எல்லோருக்கும் விட்டு போகாம கொடுத்தாச்சா?
6. உங்க ப்ரண்ட்ஸ்க்கு தனியா க்யூட்டா பத்திரிகை ரெடி பண்ணீட்டீங்களா?
சரி இப்போ இவ்வளவு தான்.
மீதி நாளைக்கு.

கல்யாணம்
அப்புறம் மண்டபம் நல்ல வசதியா மெயின் இடத்தில் வருவதா செலக்ட் பண்ணுங்க.கார் பார்க்கிங் பெருசா இருக்கட்டும்.
மேடை அலங்காரம்
சிம்பிளாவும்,அழகாவும் ஸ்டேஜ் டெகரேஷன் இருக்கட்டும் ரொம்ப க்ராண்ட் லுக் வேண்டாம்.அது மணமக்களை எடுப்பா காட்டனும்.
எனவே மணமக்கள் க்ராண்ட் ஆவும் ஸ்டேஜ் சிம்பிளாவும் இருக்கட்டும்.
பூமாலை
முகூர்த்த புடவைக்கு மேட்ச்சாக பூமாலை ரெடி பன்ணுங்கள் அது போட்டோவுக்கு எடுப்பாக வரும்.
உதாரணமாக பிங்க் கலர் புடவைக்கு நல்ல டார்க் கலர் ரோஜா மாலை .
மெரூன் கலர் புடவை என்றால் வெள்ளை கலர் சம்பங்கி மாலை.
இஅப்படி பார்த்து பார்த்து ஜமாயுங்க

தேன்க்ஸ் நிகிலா... அடுத்து எதை பத்தி பேசன்னு யோசிச்சேன்... நீங்க ஹுவங்கினதே சொல்றேன்... மண்டபத்தில் எனக்கு கொஞ்சம் வித்தியாசமான ஐடியாஸ்... பிடிக்குதா பாருங்க :)

1. மண்டபம் உங்கள் தேவைக்கு பாருங்க. எவ்வளவு பேர் வருவாங்கன்னு ஒரு கணக்கிருக்குமே... அதுக்கு ஏற்ற மாதிரி பார்க்கலாம். கல்யாணம் பண்றது பெண் வீடா இருந்தா ஓரளவு பெண் வீட்டுக்கு அருகில் பாருங்க... எதாவது எடுக்கனும், அவசரம்னா வீடு வர வசதியா இருக்கும்.

2. எத்தனை பேர் அதாவது மாப்பிள்ளை வீட்டு நெறுங்கிய சொந்தம், நம் வீட்டு நெறுங்கிய சொந்தம் காலையில் சாஸ்திரங்கள் செய்ய அருகில் இருக்கனுமோ, அவங்க எல்லாரும் மணடபத்திலேயே தங்கி இருந்தா நல்லது. அதுக்கு இட வசதி இருக்கா பார்த்து தேர்வு செய்யுங்க.

3. மண்டபம் எந்த அளவு சேஃப்ன்னு பாருங்க. நகை நட்டோட போய் தங்க போறீங்களே.

4. மற்ற உறவுகளுக்கு, நட்புக்கு தங்க இடம் வசதி நீங்க செய்து கொடுப்பதானால் அதுக்கு மண்டபம் பக்கம் இடம் இருக்கா பாருங்க.

5. வருபவர் கார் வசதி உள்ளவங்க அதிகமா இல்லையான்னு உங்களூக்கு ஒரு ஐடியா இருக்கும்... அதுக்கு ஏற்றபடி போதுமான கார் பார்க்கிங் உள்ள மண்டபம் பார்ப்பது அவசியம்.

6. மண்டப அலங்காரத்துக்கு ஒரிஜினல் பூக்கள் பயன்படுத்தினால் செலவும் அதிகம், கூடவே அலர்ஜி ஆக வாஇப்பிருக்கு. சிலருக்கு அந்த வாசத்துக்கு தலை வலியே வரும். அதனால் ஆர்டிஃபிஷியல் பூக்கள் பயன்படுத்துவது நல்லது.

7. எப்போதும் நம் ஆடைக்கு காண்ட்ராஸ்ட்டா பின்னாடி அலங்காரம் இருப்பது நல்லது. அப்ப தான் நாம பளிச்சுன்னு இருப்போம்.

8. நம்ம ஆடை நிறத்தில் மேடையின் பார்டர் வருவது போல் அலங்கரித்தால் இன்னும் நல்லா இருக்கும்.

9. வரும் பரிசுகளை வாங்கி வைக்க, உதவ யாரும் நண்பர்கள் அருகில் இருப்பது அவசியம்.

10. பூ மாலையும் போட்டுக்குறவங்களுக்கு அலர்ஜி இல்லாததா பார்த்து தேர்வு செய்யுங்க. பூக்கள் கலர் செய்யாததா பாருங்க... இல்லன்னா கல்யாண ஆடைகள் சாயம் பிடிக்கும்.

11. போடும் புடவைக்கு ஏற்றபடி நகை தேர்வு செய்யுங்க (கவரிங் போடுவதாக இருந்தால்).

12. மண்டபத்தில் உள்ள எல்லா அரையும் ஏசி, பாத்ரூம் என எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கான்னு பார்த்து புக் பண்ணுங்க, இல்லன்னா முதல்லயே அதெல்லாம் சரி பண்ணி கொடுக்க சொல்லி கேட்டுடுங்க.

13. சாப்பாடு பரிமாறும் ஹால் அளவு பாருங்க. கை கழுவ எல்லாம் வசதி இருக்கா என்றும் பாருங்க. கிச்சன் நீட்டா இருக்கான்னு கவனிங்க.

மீண்டும் வரேன்... இப்போ பிசி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா நல்ல ஒரு இழை ஆரம்பிச்சு இருக்கீங்க, ரொம்ப ரொம்ப தேவையானது இது. வனிதா ரொம்ப அழகா கோர்வையா சொல்லிட்டு வரீங்க ரொம்ப ஆர்வமா படிச்சுட்டு இருக்கேன். எனக்கு தெரிந்த சில விஷயங்கள் கல்யாணம் என்றாலே அலமலப்பு தான் அதில் நகை பணம் காணாமல் போக நிறைய வாய்ப்பிருக்கு அதனால் வீட்டின் பெரியவங்க இருவரோ ஒருவரிடமோ தேவையான நகைகளையும் பணத்தையும் ஒரு பேக்கில் போட்டு அவர் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தேவையான நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம், நீங்கள் மற்ற வேலைகளை செய்யலாம் எப்படி இருந்தாலும் பெரியவங்க ஓடியாடி வேலை செய்ய இயலாது அதனால் இப்படி செய்யலாம். பொருளும் பாதுகாப்பாக இருக்கும், நீங்களும் மற்ற வேலைகளில் கவனத்தை செலுத்தலாம்.
மொத்த பொறுப்புகளையும் ஒருவரே போட்டு குழப்பிக்காமல் நம் நெருங்கிய சொந்தங்களிடம் சில பொறுப்புகளை பிரித்துக் கொடுத்து விட்டு நீங்கள் பெண்/மாப்பிள்ளை வீட்டினரயோ மற்ற விருந்தினரையோ கவனிக்கலாம். அப்பப்போ எல்லாம் சரியாக நடக்குதான்னு கேட்டுக் கொள்ளலாம். டென்ஷன் குறையும்.

கல்யாணமாலை
அப்புறம் வனி நீங்க சொல்ல சொல்ல எங்க ஊரிலே நான் மண்டபம் செலக்ட் பண்ணிட்டேன்.
அடுத்து நீங்க கொடுத்த மேடை பேக்ரவுண்ட் ஐடியா சூப்பர் வனி
மெரூம் கலர்ல புடவை கட்டி பேக்ரவுண்டும் அதே கலர்ல இருந்தா எடிபடாது.காண்ட்ராஸ்ட் ஆதான் இருக்கணும்.

அறுசுவை விருந்து
1. சாப்பாடு சூப்பரா இருக்கரது ரொம்ப அவசியம்.
2. முதல்ல டைனிங் ஹால் நீட்டா இருக்கனும்.
3. ஸ்வீட்ல தொடங்கி எல்லா ஐட்டமும் டேஸ்டா இருப்பது முக்கியம்
4. வாட்டர் பாட்டில் அவசிய தேவை.
5. நம்ம அழைப்பை ஏற்று வந்தவங்க வயிராற சாப்பிட்டு மணமக்களை மனதாற வாழ்த்தனும்.
6. சைவம்,அசைவம் ரெண்டும் தனிதனியே இருக்கணும்.
7. ஈவ்னிங் ரிசப்ஷனா இருந்தா பஃபே கூட பொருத்தமா இருக்கும்.அது அவரவர் வசதிய பொறுத்தது.
8. குழந்தைகட்கு தனியே பாப்கார்ன்,ஐஸ்கிரீம்,பஞ்சு மிட்டாய் எல்லாம் ஏற்பாடும் பண்ணலாம்.
சரி மீதிய சொல்ல எல்லோரும் வாங்க

அருமையான இழை..படிக்கும்போதே ஒரு கல்யாணத்தில் கலந்துவிட்ட சந்தோஷம்.
எனக்கு தெரிஞ்சது பொண்ணும் மாப்பிள்ளை வீட்டுகாரங்க ஒண்ணா துணிகளை எடுத்தால் பொருத்தமா மேச்சிங்கா எடுக்கலாம்..
நிறைய கல்யாணங்களில் கல்யாணத்தன்னைக்கு பொண்ணு அடையாளம் தெரியாத அளவு மேகப் பண்ணி வச்சிருப்பாங்க.முன்னயே நல்ல விசாரிச்சு கச்சிதமா அதிகமா எடுத்தடிக்காம செய்றவங்களை பார்த்து தெரிஞ்சிட்டு மேகப் ஆட்களை சூஸ் பண்ணினால் போதும்..
நிறைய கல்யாணங்களில் சொதப்புவது பிறகு நடக்கும் சடங்குகள்..அதற்கான பொருட்களை முன்னயே தீர்மானித்து எடுத்து வந்து மண்டபத்தில் வைக்கலாம்..உதாரணத்திற்கு எங்கள் வீட்டு திருமனங்களுக்கு பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பால் பழம் ஊட்டுவார்கள் இப்போ அது மாதுளம்பழம், ஃப்ரூட்சாலட் ஆகிவிட்டது..அல்லது கேக் வெட்டுவார்கள்..இப்படியான சடங்குகளின்போது தான் ஒண்ணு வெட்ட கத்தி இருக்காது,இல்ல ஸ்பூன் இருக்காது, இல்ல பரிமாற பவுள் இருக்காது இல்ல பொண்ணு கைல ஆனால் துடைக்க வைப்ஸ் இருக்காது..இதையெல்லாம் முன்னயே யோசிச்சு ஒரே கவரில் போட்டு வெச்சுடலாம்
கல்யாண வீட்டு வாண்டுகளுக்கெல்லாம் ஒண்ணு சேர்த்து அழகா சில்க் துணியில் முழுநீள கவுணும் ஆண்குழந்தைகளுக்கு கான்ட்ரேஸ்டா குர்தாவும் தைக்கலாம்..அல்லது பட்டுபாவாடை கூட ஒரே மாதிரி தைக்கலாம்..அழகழகா இருக்கும்
மருதாணி எப்படுமே அரக்க பரக்க போடாமல் இரண்டு நாள் முன்னே இரவு முடிச்சுடலாம்..
பியூட்டி பார்லரில் ஆளை கூப்பிடாமல் தானே செய்வது என்றால் முன்னயே எல்லாம் யோசிச்சு வைக்க வேண்டியது அவசியம்..செருப்பு போட்ட பின் தான் சேலை கட்ட வேண்டும்.அதிகளவு செலவு செய்து பார்லரில் ஆளை கூப்பிட முடியாதவர்கள் தேவைக்கான அவரவர் கலருக்கு தகுந்த மேகப் சாதனங்களை வாங்கி வைத்துக் கொண்டால் நிறைய் காசு மிச்சம்..கச்சிதமா சேலை கட்டி கொடுக்கும் ஒரு உறுப்பினரிடம் குடும்பத்தில் முன்னயே சொல்லி வைத்து விடலாம்.
மன்டபத்துக்கு போகும்போதும் கல்யாணம் முடிந்து திரும்பும்போதும் எத்ட்னனை பேர் எந்தெந்த காரில் எந்தெந்த சீட்டில் உக்காரலாம் என்றும் தீர்மானித்து ஒரு பேபரில் நோட் பண்ணி வைத்துக் கொண்டால் தேவையில்லாமல் நீ ஏறு நான் ஏறு என்று அங்கு டிஸ்கஸ் பண்ண தேவையில்லை.அதற்கேற்ப கார் அல்லது மற்றவை ஏற்பாடு செய்யலாம்
நல்ல பேசக் கூடிய ஒருவர் குடும்பத்தில் இருந்தால் அவரிடம் மைக் கொடுத்து குடும்பத்தில் வரும் ஒவ்வொருவரையும் யார் என்ன முறையில் சொந்தம் என்று வரிசையாக அறிமுகப்படுத்தலாம் இதையும் முன்னயே தீர்மானித்து வைக்கலாம்..இதனால் மற்றவர்களுக்கும் யார் யார் என்று தெரியும் வந்தவர்களை ஒருவரையும் விடாமல் வரிசையாக புகைப்படமும் எடுக்கலாம்

மேலும் சில பதிவுகள்