கீரைக்கு ஜே

கீரை சகல சத்துகளும் நிறைந்தது.
நாம் கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ஒரு நோயும் நம்மை அண்டாது
எங்க பாட்டி," பொன்னு பொடிய தூர போட்டாலும் கீரை பொடியை தூரப் போடக் கூடாது"----அப்படீன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.
கீரையில உள்ள சத்து பற்றியும் அதை சமையலில் சேர்க்கும் விதம் பற்றியும் தோழிகள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே.
அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

முதல்ல நானெ ஆரம்பிக்கிறேன்.
1. கீரையில நிறைய வெரைட்டி இருக்கு.அதனால விதவிதமா சமைத்து அசத்தலாம்.
2.கீரையில இரும்புசத்து நிறைய இருக்கிறது.
3. முடி கொட்டுதா? கீரை சாப்பிடுங்க.கண்டிப்பா சரியாயிடும்.
4. வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி. சூட்டை தணிக்கும்.
சுகர் பேஷ்ண்டுக்கு ரொம்ப நல்லது.
5. மணத்தக்காளி கீரை வயிற்று புண்ணை ஆற்றும்.
அல்சருக்கு ஏற்றது.
6. வல்லாரை நினைவுசக்தியை பெருக்கும்.
7. முருங்கை கீரை தாது விருத்திக்கு நல்லது.
8. பொன்னாங்கண்ணி தேகம் பொன் போல் ஆகும்.
கண்ணுக்கு ஒளியை தரும்
9. அரைக்கீரை எல்லா நோயாளிகளும் சாப்பிடலாம் அனைவரும் தினமும் உண்ணலாம்.
10. கறிவேப்பிலை கர்பபையை பாதுகாக்கும்.
கூந்தலை நரையில் இருந்து பாதுகாக்கும்.
இன்னும் நிறைய கீரை வகைகள் உள்ளன.

நாம் தினமும் உண்ணும் உணவில் ஆறு சுவைகளும் இருந்தால் தான் அது ரத்தமாக மாறும்.இல்லாவிட்டால் வேஸ்டாகிவிடுமாம்.சத்துகள் உடலில் சேராது.
அதிலே கசப்பு சுவையுள்ள உணவு லிஸ்டில் கீரை உள்ளது.
நாம் தினமும் இனிப்பு,காரம்,உப்பு,புளிப்பு,சேர்க்கிரோம்.தோழிகளே கசப்பு, துவர்ப்பு சாப்பிடுகிறோமா? சிந்தியுங்கள்.
கசப்பு சுவையுள்ள உணவுகளில் முக்கியமானது கீரை ஆகும்.
எனவே கீரையை தினமும் உணவில் சேர்த்து நீங்கள் நல்ல கார்குழலுடன் ஆரொக்கியமாக இருங்கள்.

இன்னும் கீரை சமையல் பற்றி கருத்து கூற தோழிகளே வாங்க.

Nikila... Nalla payanulla izhai pa... Innum thozhigal vandhu sollattum... Nan ellathayum padichu therinjukiren... Yaravadhu pulichakeerai(Gongura) la ulla saththukkal, payangal therinja sollungalen...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கீரையில் நிறைய வகை செய்யலாம்.

1. பொரியல்
2. தண்டு கூட்டு
3. மசியல்
4. பருப்பு கிரை
5. கீரை சாதம்
6. கீரை சேர்த்து சாலட்
7. ஸ்பினாச் கீரை சேர்த்து உருளை
8. ஸ்பினாச் கீரை சேர்த்து சிக்கன்
9. ஸ்பினாச் கீரை சேர்த்து பன்னீர்
10. முருங்கை கீரையில் தோசை
11. முருங்கை கீரையில் இட்லி
12. முடக்கற்றான் கீரை ரசம்
13. முடக்கற்றான் கீரை துவையல்
14. ஸ்பினாச் பஜ்ஜி
15. கீரை பக்கோடா

இன்னும் நிறைய இருக்குங்க :) கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கூட கீரை தாங்க... அதை தினமும் சேர்த்தாலே உடலுக்கு நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்தி
கீரையை அடை மாவில் சேர்க்கலாம்
சப்பத்தி மாவில் வெதயக்கீரையை போட்டு செய்யலாம்.
மணத்தக்காளி கீரையை பொரியல் பண்ணிட்டு அந்த குச்சியை வேஸ்ட் பண்ணாம சூப் வைக்கலாம்.
இன்னும் டிப்ஸ் சொல்ல வாங்கபா

வனி ஆனாலும் நீங்க ரொம்ப ஃபாஸ்ட். வனி கொஞ்சம் ஈசியா கீரைய சேத்துக்கற மாதிரி டிப்ஸ் கொடுங்களேன்

முன்பே இப்படி ஒரு இழை இருந்தது இருந்தாலும் கீரையாச்சே அலுக்காது...எனக்கும் கீரை ரொம்ம்ம்ப பிடிக்கும்.முருங்கை கீரை ,அகத்திக் கீரை ரொம்ப பிடிக்கும்..கோவக்காயின் கீரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சும்மா சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து தேங்காய் எண்ணையில் வதக்கி கீரை செய்வது தான் எனக்கு எப்பவுமே விருப்பம்.மசியலும் ரொம்ப இஷ்டம்.சுடு சாதத்துடம் மசியல் ஆஹா அருமையா இருக்கும்
கீரையும் பிடிக்கும் என்பதற்காக ஒரே வேளையில் நிறைய சாப்பிடக் கூடாது எஙிறார்கள்..ஆனால் தினமும் கொஞ்சம் கீரையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.வயிறு இதமாக இருக்கும்
இந்த ஊர் வந்தபின் நம்ம்ப ஊரில் கிடைக்கும் தண்ணி பசலைக் கீரை காங்கோங் என்ற பெயரில் கிடைக்கிறது..
எந்த கீரையா இருக்கட்டும் அது புதுசா இருக்கும்போதே செய்தால் சுவையே வேற.அவஙவங்க வீட்டில் நட்டு வளர்த்தால் அத முழுசுவையையும் அனுபவிக்கலாம்.
இப்போதைய குழந்தைகள் அவ்வளவா கீரையெல்லாம் விரும்புவதில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம்..தயிரும் கீரையும் கூடாது என்பார்கள்..ஆனால் சாதமும்,தயிரும் கீரையும் சேர்த்து சாப்பிட்டால் செம்மையாக இருக்கும்.பருப்பு சேர்த்த கீரையும் ரொம்ப இஷ்டம்.
சுக்குட்டிக் கீரையெல்லாம் சாப்பிட்டு வருஷங்களாச்சு ஆனால் அதன் சுவை நாவில் இருக்கு..ஊருக்கு போனதும் முதல் நாள் கீரை சாப்பிட தொடங்குவேன் திரும்ப வரும் நாள் வரை தினம் கீரை தான் ஆசை தீர
கீரை சேர்த்த வடையும்,முருங்கை கீரை சேர்த்த அடையும் ஆஹா அருமையா இருக்கும்

palak keerai is the best.

vijaya

palak keerai is the best.

vijaya

தளிகா
முருங்கை கீரை சேர்த்த அடை .ம்.ம்.எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

மணத்தக்காளி கீரை , சிறுகீரை எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனால் அது இங்கே கிடைப்பது இல்லை ஊருக்கு போனால் தான் சாப்பிடனும்
முருங்ககீரை அடை ரொம்ப புடிக்கும்
இப்போ இருக்கிற பசங்களுக்கு கீரை குடுப்பது கஷ்டம் சாப்பிடுவதே இல்லை பழக்க படுத்தனும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்