Urgent Plz Help me for my 3 month baby

என் 3 மாதம் குழந்தைக்கு 15 நாட்களாக
வயிற்றுப் போக்கு, டாக்டரிடம் காட்டியும் நிற்கவில்லை. பால் குடித்தவுடன் சேமிக்காமல் போகிறது. ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மேல் போகிறால் Plz help me sisters.

UNGAL KULANTHAIKU MUTHALIL THEYVAI ENERGY.
SO, KULANTHAIKU WATER LA SALT AND SUGAR KALANTHU KUDUNGA ( ORU PAALADAIKU ORU THULI SALT AND SUGAR KALANTHU KUDUTHUKITEA VAANGA. 3 HOURS ONE TIME KUDUNGA)
NEXT:
JATHIKAAI VAANGI ATHAI BOILED PANNANUM.
NALLA VENTHATHUM 3 DAYS ATHAI KUZHAITHU PEPPER SIZE URUTI KUDUNGA.

all is made up of love.

1.குழந்தைக்கு நீங்கள் ஃபீட் பன்னுவதாக இருந்தால்,காபி டீ எதையுமே சூடாக சாப்பிடவேண்டாம்..ஆர வைத்து சாப்பிடவும்..

2.தேன் கொஞ்சம் எடுத்து குழந்தை நாக்கில் 3 சொட்டு தடவுங்கள்...

3.மாவு பால் தருவதாக இருந்தாலும் சூடாக தர வேண்டாம்..நல்லா ஆரவைத்து தரவும்

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

உங்கல் குழந்தைக்கு முதலில் தேவை எனர்ஜி.

1) தண்ணீர் உப்பு மற்றும் சக்கரை ஒரு துளீ போட்டு கலக்கி ஒரு பாலாடை 2 அல்லது 3 மணி நேரதுக்கு ஒரு முறை கொடுக்கவும்.

2) நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய் வாங்கி வேக வைத்து அதை மஞ்சள் குழைப்பதுபோல் சிரிது தண்ணீரில் குழைத்து ஒரு மிளகு அளவு எடுத்து குழந்தை நாக்கில் 2 நாள் தடவுங்கள் குழந்தை நலம் பெறும்.

3) சிகப்பு ஒத்த செம்பருத்தி நெய் விட்டு வருத்து தேன் கலந்து சிரிது தரவும்

all is made up of love.

உங்கள் குழந்தைக்கு பால் "Allergy" இருக்கலாம். Doctorகிட்ட கெட்டு "LactoNil" அல்லது Lactose இல்லத உணவு முயர்சி செய்யவும்.

நிங்கள் feed பண்ணுவதகா இருந்தால் பால் தயிர் சாப்பிடாமல் இருந்து பாருங்கள்

மிகவும் சிறு குழந்தைக்கு பழக்கம் இல்லை என்றால் நாட்டு மருந்து இப்பொதைக்கு தவிர்கவும்

சில குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது அதை லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று சொல்லுவார்கள். அதாவது பாலில் உள்ள சர்க்கரை தான் லாக்டோஸ். அதை சேமிக்க வைக்க லாக்டாஸ் சுரக்கும் . அந்த சுரப்பு கம்மியானால் லாக்டோசை சேமிக்க முடியாது. இது மிகவும் அரிதாக தான் வரும்.

குழந்தைக்கு
நுரை நுரையாக வெளியே போகிறதா?
அதிகளவில் வாய்வு வெளியாகிறதா?
வெளியே போகும் போது அவ்வபோது இரத்தம் வருதா?
சதா சர்வ காலமும் அழுதுக் கொண்டே இருக்கிறதா?
எடை கூடவில்லையா?
வாந்தி
முகத்தில் பரு போன்று உள்ளதா
இதில் உள்ளவாறு இருந்தால் தான் பால் அலேர்ஜி என்று பொருள். ஒருவேளை உங்களின் குழந்தைக்கு பாலினால் அலேர்ஜி என்று நீங்கள் சந்தேகப்பட்டால் ஒரு இரண்டு வாரம் நீங்கள் பால், தயிர், வெண்ணை, (பால் சார்ந்த பொருட்களை) தவிர்த்து பாருங்கள்.

சில நேரங்களில் குழந்தைக்கு அதிகளவில் பால் புகட்டினாலும் இப்படி தான் நிக்காமல் வெளியே போய்க் கொண்டே இருக்கும். அதே போல் அதிகளவில் சிறுநீரும் கழித்துக் கொண்டே இருக்கும். ஒரு பக்கம் நன்றாக குடிக்க வைத்த பின்னரே அடுத்த பக்கம் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்தால் வேறு ஒரு மருத்துவரை கண்டிப்பாக பார்க்கவும். எப்படியே விடாதீர்கள். குழந்தைக்கு நல்லதல்ல.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Thanks for all for your rly. என் குழந்தைக்கு சளி tonic கொடுததில் இருந்துதான் வயிற்றுபோக்கு போச்சு, ஆனா அந்த tonic நிப்பாட்டி 10 days ஆனதுக்கு அப்பறமும் நிக்கல. அதான் உன்ககிட்ட suggestion கேட்டேன். Plz athukku etha mathiri solunka.

15 நாலா உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்றால் கண்டிப்பா குழந்தை மருத்துவரை பாருங்க. அவங்க ஒரு sachet போல குடுப்பாங்க அதில் குறிப்பிட்டிருக்கும்படி நீரில் கலந்து குடுங்க. அது உங்கள் குழந்தையின் நீர் சத்தை மெயின்டெயின் பண்ண உதவும். ஒரு முறை டாக்டரிடம் காட்டி சரி ஆகவில்லை எனில் மறுமுறை காட்டுங்க அவங்க வேற மருந்து எழுதி குடுப்பாங்க. சிறு குழந்தை என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்