வெண் புள்ளி நோய்

அன்புள்ள தோழிகளே

வெண் புள்ளி நோய் பற்றி உங்களுக்கு தெரிந்ததை தயவுசெய்து சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

i also having white mark near my mouth what can we do?anybody know how to clear that plz help me

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அன்பு அனுகோபி

எவ்வளவு காலமாக இருக்கிறது? நீங்கள் அதற்கு ஏதேனும் சிகிச்சை எடுக்கிறீர்களா?

அன்பு தோழிகளே
எனது தங்கைக்கு 4 வருடங்களாக இருக்கின்றது. பல சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லை. மிகுந்த மன உளைச்சலுடன் இருக்கிறாள். அவளுடைய கணவர் ஆறுதலளித்தும் பயனில்லை. எங்கள் குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளோம். இதற்கு எதேனும் தீர்வு இருக்கின்றதா. இதைப் பற்றி எந்த தகவல் இருந்தாலும் தோழிகள் கூறவும்.

அன்புடன்
ஜெயா

உங்களுக்கு தெரிந்து யாருக்காவது இந்த நோய் தீர்ந்து இருக்கிறதா? Please சொல்லுங்கள்

அன்புடன்
ஜெயா

ஜெயா உங்கள் கேள்வியை படித்துவிட்டு பதில் சொல்லாமல் போக முடியவில்லை.
முற்றிலும் குணமடையவில்லை என்ராலும் என் கணவரின் பாட்டிக்கு ஓரளவிற்கு அது கட்டுபாட்டில் உள்ளது. மேலும் பரவாமல் தடுக்கலாம். நாம் உணவு சாப்பிடும்
முறையையும் மாற்ற வேண்டும்
.
அதிகயளவில் பழங்கள் எடுத்து கொள்ள சொல்லுங்க.இட்லி தோசையை மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்க.பிரெஷ் யாக தயார் செய்த உணவை நன்றாக மென்று சாப்பிட சொல்லுங்க. நீங்க கூகிள் அனடோமிக் தேரபி என்று டைப் செய்து பாருங்க. பாஸ்கர் என்பவர் சொல்லிருக்கும் முறையை பின்பற்றிபாருங்க.

முதலில் அவர்களை கவலை படாமல் இருக்க சொல்லுங்க.நல்லதே நடக்கும்.

இந்த இழையில் இப்பொழுது ஒரு பதிலை பார்த்தேன். அதை படிப்பதற்குள் மின்சாரம் cut ஆகி விட்டது. மின்சாரம் வந்தவுடன் என் தங்கைக்கு ஒரு மருந்து கிடைத்துவிட்டது என்று ஆவலுடன் அதை தேடினேன். ஆனால் அதை காணவில்லை. என்ன செய்ய. மிகவும் சோர்ந்து போனேன்.

ஜெயா

மேலும் சில பதிவுகள்