வனிதா

ஹலோ வனிதா ,எப்படி இருக்கிங்க?எனக்கு கம்பியூட்டர் சயின்ஸ்(B.Sc)வீட்டில் இருந்படி படிக்கனும்னு ஆசை.வீட்டில் இருந்து படிக்க கஸ்டமாக இருக்குமா?இல்லை காலேஜ் போய் தான் படிக்கனுமா?என் குழந்தைகள் இரண்டுபேரும் ஸ்கூல் போக ஆரம்பிச்சாசு.இனி எனக்கு படிக்க நேரம் கிடைக்கும்(B.Sc)கம்பியூட்டர் சயின்ஸ் எடுத்து படி என்று என் கணவர் சொல்கிறார்.என்னால் வீட்டி இருந்து படிக்க முடியுமா?ஏதாவது சந்தேகம்னா என்ன பன்றது?கண்டிப்பா காலேஜ் போய் தான் படிக்க முடியுமா?கஸ்டமான சப்ஜெட்டா இது?இது கொண்டு எனக்கு எதுவும் தெரியாது.ப்ளிஸ்ஸ் உதவுங்கள் வனிதா.
நான் மேக்ஸ் நல்லா பன்னுவேன்.கம்பியூட்டர் சயின்ஸ் வீட்டில் இருந்து படிக்க முடியுமா?இல்லை வீட்டில் இருந்து B.Sc(MATHS) படிக்கலாமா?இரண்டில் எது படிக்கலாம் வீட்டில் இருந்தபடியே?இதற்கு முன்னாடி நான் சொல்லவிரும்பினேன்--8 -ல் இதேகேள்வியை கேட்டு இருந்தேன்.நீங்க பார்க்கவில்லை போல இருக்கு.அதனால் தனி இழை ஓப்பன் பன்னி கேட்கிறேன்.
எனக்கு படிக்கனும் போல இருக்கு.ஆனா இந்த இரண்டு சப்ஜெட்டில் எது படிக்கன்னு தெரிய்வில்லை
மற்ற தோழிகளுக்கும் பதில் தெரிந்தால் சொல்லுங்க பிளிஸ்ஸ்ஸ்ஸ்.

வனிதான்னு இப்போ 3 பேர் இருக்கோம்... என்னையா கேட்டீங்க?? சொல்ல விரும்பினேன்ல கேட்டத சொன்னதால, என்னையா இருக்குமோன்னு ஒரு யோசனை... உங்க கேள்வியை நான் கவனிக்கலங்க. அதான் பதில் போட்டிருக்க மாட்டேன். சாரி.

நீங்க கணக்கு நல்லா வரும்னா அதில் இண்ட்ரஸ்ட்டும் இருந்தா அதை எடுத்து படிங்க. அது தான் வீட்டில் இருந்தபடி படிக்கவும் தோதானது. குழப்பம் இல்லாம பிடிச்ச சப்ஜ்க்ட் எடுத்துடுங்க, படிக்க அர்வமும் இருந்தா தான் வீட்டில் இருந்து படிக்க முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க தலைப்பை மாற்றினால் மற்ற தோழிகளும் பதில் சொல்லுவார்கள்.

முதலில் படிக்க வேண்டும் என்று உங்களின் எண்ணத்திற்கு சல்யூட் செய்கிறேன். பிள்ளைகளை வைத்துக் கொண்டு படிக்கவேண்டும் என்ற உங்களின் எண்ணம் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு என்ன படிக்க பிடிக்கிறது என்று பாருங்கள். இப்பொழுது எந்த ஒரு துறையையும் தொலைதூர கல்வியில் பயில இயலும். உங்களுக்கு எதில் நாட்டம் அதிகமே அதையே தொடரவும். எனக்கு தெரிந்த தோழி தொலை தூர கல்வியில் கணிதம் படித்து வீட்டிலே டுயுஷன் சொல்லி கொடுத்து சம்பாதிக்கிறாள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் மனோரஞ்சிதா,
பொதுவாய் distance educationல் படிக்கும் போது தினமும் கல்லூரி செல்ல வேண்டி இருக்காவிட்டாலும், அவ்வபோது, உங்களுடைய study center போக வேண்டி இருக்கும். சில கஷ்டமான தலைப்புகளையும், மாணவர்களின் சந்தேகங்களையும் போக்க contact classம் வைப்பார்கள். ஆனால் அது கட்டாயம் அல்ல.
ஆனால் distance education எனும் போதே, நம்முடைய முயற்சி + interest தான் முக்கியம் :)

B Sc கம்பியூட்டர் சயின்ஸ் கஷ்டமா சுலபமா என்பது உங்களின் interest + knowledgeஐ பொறுத்தது. இப்போதெல்லாம், B Scல் பல programming language (C,C++,JAVA,VB etc) கவர் செய்கிறார்கள்.இதை எல்லாம் அவர்கள் கொடுத்த course material வைத்து உங்களால் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும், உங்களுக்கு ஓரளவு basics தெரியும் என்றால், உங்கள் வீட்டில் கணினி இருந்தால், நீங்களே அதை எல்லாம் நேராக முயற்சி செய்து பார்க்கலாம்.

B Sc Maths பற்றி எனக்கு அவ்வளவு ஐடியா இல்லை... Sorry :(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மனோரஞ்தம் அவர்களுக்கு,
நான் B.Sc(CS) படித்தமாணவி என்னக்கு தொரிந்தவரை B.Sc(Maths) ஐ விட எனது துறை சிறந்தது .கணிதம் 12 வகுப்புவரை உள்ளது வேறு தற்பொது இருப்பது வேறு.நீங்கள் பல்கழைகழகதை அனுகவும் .....பிழைக்கு மன்னிக்கவும்.......

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்