கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லி இலை, புதினா ஆகியவை ஃப்ரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும்..தோழிகளே தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்...
கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லி இலை, புதினா ஆகியவை ஃப்ரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும்..தோழிகளே தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்...
fresh aaka irukka
மல்லி-அடிக்காம்புகளை நீக்கி கருப்பான இலைகளை நீக்கவும். ஈரமில்லாமல் அதேபோல் வைத்தால் பல நாட்கபுதினாவும் அப்படியே மிளகாய் காம்பு நீக்கவேண்டும். இஞ்சி தோல் சீவி கழுவி ஈரம் போக துடைக்கவும் க.வேப்பிலை இலைகளை மட்டும் ஆய்ந்துகொள்ளவும் இவை அனைத்தயும் தனிதனி பிளாஸ்டிக் அடைப்பான்களில் வைக்கவும் போனஸ் கேரட் தோல் சீவீ பசுமையாக இருக்கும்
parami
ரொம்ப நன்றி parami.. மிளகாய் காம்பு எடுத்து வச்சிப்பார்க்குரேன்..உங்க டிப்ஸ்க்கு ரொம்ப நன்றி...க.வேப்பிலை இலைகள் மட்டும் தனியாதான் எடுத்து வைக்கிரேன்..அதுவும் பிளாஸ்டிக் பாக்ஸ் ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வச்சாலும் 2,3 நாள்ல கெட்டு போய்டுதுபா..
அன்புடன்,
zaina.
ஃப்ரெஷ் ஆக இருக்க
கறிவேப்பிலையை தண்ணீரில் கழுவி சுத்தமான துணி மீது பரப்பி உலர வைக்கவும். ஈரம் காய்ந்ததும் இலைகளை மட்டும் உருவி எடுக்கவும். ஏர் டைட் பாக்ஸில் கீழே ஒரு கிச்சன் டிஷ்யூ போட்டு கறிவேப்பிலை போட்டு மேலே மீண்டும் கிச்சன் டிஷ்யூ போட்டு மூடி வைத்தால் ஒருமாதம் வரை பசுமை மாறாமல் இருக்கும். நான் இப்படித்தான் வைத்திருக்கிறேன். தினமும் சமையலுக்கு தேவையான அளவு மட்டும் எடுத்து விட்டு மீண்டும் உடனே ஃப்ரிஜில் வைத்து விட வேண்டும்.
மல்லிக்கீரையை வேர் பகுதியை வெட்டி, கருப்பு இலைகளை நீக்கி விட்டு அப்படியே துணியில் பரப்பி உலர விடவும். நன்றாக ஈரம் உலர்ந்ததும் கறிவேப்பிலைக்கு செய்தது போலவே மேலேயும் கீழேயும் டிஷ்யூ போட்டு ஏர் டைட் பாக்ஸில் வைத்தால் இரண்டு வாரம் வரை பசுமையாக இருக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை டிஷ்யூவை மாற்றி விட்டால் மேலும் ஒருவாரம் இருக்கும்.
புதினாவையும் ஈரம் போக உலர வைத்து இலைகளை மட்டும் டிஷ்யூவில் சுற்றிவைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
புதினாவையும் மல்லிக்கீரையயும் மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கும் முன் கழுவக் கூடாது. சமையலுக்கு தேவையான அளவு எடுத்து கழுவி பயன் படுத்தலாம்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒரு பாக்சில் கீழே டிஷ்யூ போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் இருந்து எடுகும் போது பச்சை மிளகாய் மீது நீர்த்துளிகள் இருந்தால் எடுத்து வெளியே உலர வைத்து விட்டு பாக்சையும் துடைத்து மீண்டும் வைத்தால் பசுமை மாறாமல் இருக்கும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய் சாய்னா
எப்படி இருக்கீங்க..பேசி ரொம்ப நாள் ஆச்சு..
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
கறிவேப்பிலையை வாங்கி தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் போக துடைத்து ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு மூடி பிரிட்ஜ்-ல் வைத்தால் பத்து நாள் வரை பசுமையாகவே இருக்கும்.
பூண்டு வாங்கி அப்படியே வீட்டிற்குள் காற்றாட ஒரு கூடையில் போட்டு வைத்தால் பல மாதங்களுக்கு அப்படியே இருக்கும். (பூண்டு தோலை உரிக்காமல் வைக்கவும்.)
இஞ்சியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ப்ரீசரில் வைத்து கொண்டால் அப்பப்போ தேவைக்கு யூஸ் பண்ணலாம்.(யூஸ் பண்ணும்போது தண்ணீரில் கழுவி தோல் நீக்கி கிரேட்டர்-ஆல் துருவவும்.)
(மல்லி இலை, புதினா இலை பற்றி எனக்கு தெரியலை. மற்ற தோழிகள் வந்து சொல்லும் போது நானும் தெரிந்து கொள்கிறேன்.)
"எல்லாம் நன்மைக்கே"
zaina
கறிவேப்பிலையில் ஈரம் இருக்ககூடாது. சில்வர் சம்படத்தில் பேப்பர் போட்டு வைத்தால் குறைந்தது 15 நாள்கள் அப்படியே இருக்கும் .பூண்டு உதிர்த்து பரப்பி வைத்தால் பல நாள்கெடாது.
kavisiva, packya, parami
கவிசிவா ரொம்ப நன்றி ..உங்க டிப்ஸ் எல்லாம் நான் செய்து பார்க்கிரேன்..தாமதாமான பதிவிற்க்கு மன்னிக்கவும்..
பாக்யா.. ஆமாப்பா உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க.. உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா...
பரமி.. உங்க பதிவிற்க்கும் நன்றி தோழி..
அன்புடன்
zaina
அன்புடன்,
zaina.