ஸ்வீட் எடு கொண்டாடு :)

அறுசுவையில் எல்லாத்தையும் பேசி விட்டோம். கல்யாண ஷாப்பிங்கில் ஆரம்பித்து குழந்தை குறும்புகள் வரை ஏன் அதற்க்கு மேலும். ஆனால் அறுசுவையில் இது வரை இந்த ஒரு விஷயத்தை பத்தி பேசியிருக்கோமா என்று தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் மறுமுறை அசை போட்டு பார்ப்போம். நம் வாழ்க்கையில் நடந்த நடக்கிற நிகழ்வுகளை அசைப்போட்டு பார்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஏற்ப்படும் மறக்கமுடியாத நிகழ்ச்சி தான் தாய்மை. நீங்கள் கருவுற்றதை உங்கள் கணவரிடம் எப்படி சொன்னீர்கள் என்று ஆரம்பித்து கொண்டாட்டம், கவனிப்பு என்று உங்களின் கார்ப காலத்தை பத்தி பேசலாம் வாங்க. தாய்மையை எதிர்ப்பார்த்திருக்கும் தோழிகளும் இதை எப்படி சொல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றும் வந்து சொல்லவும்.

ஏன் இப்படி ஒரு இழை என்று தானே யோசிக்கிறீங்க? நேத்து ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் அந்த பெண் தன் கணவனிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். அது நினைவலைகளை பின்னோக்கி கொண்டு சென்றதால் தான் இந்த இழை.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அந்த விளம்பரத்தை தான் தினமும் பார்க்கிறோமே!!!........ நீங்க எப்படி சொன்னீங்கன்னு முதல்ல சொல்லுங்க....... என் கதை கொஞ்சம் வித்தியாசமானது......... முதல் கர்பத்தை எனக்கு என் கணவர் தான் சொன்னார். பிறகு வந்து விளக்கமா சொல்றேன்......... நேரமிருந்தா பார்க்கலாம். ஏன்னா பசங்களுக்கு உடல்நிலை சரியில்லை ஊருக்கு போயிட்டுவந்ததும் அதனால இப்போ கொஞ்சம் பிசி. எனக்கும் இது நினைவிற்கு வரும் எப்பவும் அந்த விளம்பரம் பார்க்கும் பொழுது!!!

எங்க வீட்டில் கேபிளுக்கு தடை போட்டிருக்கேன்.....சோ நோ டிவி....அப்படியே பார்க்கணும் என்றால் ஆன்லைன் தான். அதான் லேட். அதானே ஒரு கேள்வி கேட்டா அதற்க்கு ஒழுங்க பதில் இல்லை....எதிர் கேள்வி. நான் சொல்வேன். கண்டிப்பாக சொல்லுவேன். நான் முதலிலே சொல்லிவிட்டால் நீங்க இந்த கேள்வி கேட்க கூட இங்கு வந்திருப்பீங்களா? அப்படியே படித்து விட்டு ஓடியிருப்பீங்க. சரியா.....

// முதல் கர்பத்தை எனக்கு என் கணவர் தான் சொன்னார்// இது நல்லாயிருக்கே.......வாங்க வாங்க வந்து விளக்கமா சொல்லுங்க.....காத்திருக்கோம்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

என்னது என்னது இந்த இழையில் நீங்களா அப்படின்னு நீங்க அங்க அலறுவது எனக்கு இங்கே கேக்குது:)

இந்தத் தலைப்பைப் பார்த்ததும், சில காமெடியான விஷயங்கள் நினைவுக்கு வந்தது, அதை சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.

அப்பல்லாம் பொழுதன்னிக்கும் பெண்களுக்கு இதான் வேலை, கையில் ஒண்ணு, இடுப்பில் ஒண்ணு, வயித்தில் ஒண்ணு - இந்த ரேஞ்சில்தான் எல்லோர் வீட்டிலும் இருக்கும்.

ஆனா, அஞ்சு மாசம் வரைக்கும் சொல்லவே மாட்டாங்களே, அதுக்காக அக்கம்பக்கத்துல இருக்கற பெருசுங்க(எல்லாம் சொந்த பந்தங்கதான்) விட்டுவாங்களா என்ன?

கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்திருக்கறதப் பார்த்தே, ஊகம் பண்ணிடுவாங்க, எத்தனை நாளாச்சுன்னு முகத்துக்கு நேர கேப்பாங்க. இந்தப் பொண்ணு என்ன பண்ணும், பக்கத்துல உக்காந்திருக்கும் மாமியார் முகத்தைப் பார்க்கும்:) பதில் சொல்றதுக்கு பயப்படும்.

மாமியாரும் அம்மாவும் விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டாங்களே, தவிர அவஙக்ளும் அக்கம்பக்கம் பேச்சைக் குறைப்பாங்க. பேசினால், சொல்ல வேண்டி வந்துடுமாம் :)

மத்தவங்க சும்மா இருப்பாங்களா, கூடிக் கூடிப் பேசுவாங்க. ‘கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும், நாம என்ன கண்ணு வச்சிடப் போறோமாக்கும், நம்ம வீட்டுல எப்பப் பாத்தாலும் தொட்டில் ஆடின மணியமாத்தான் இருக்கு, ஏதோ கேப்போமேன்னு ஒரு வார்த்தை கேட்டதுக்கு பதிலைக் காணோம், இருக்கட்டும், இருக்கட்டும், அஞ்சு மாசமானா, வயிறு முன்னால வந்து, இதோ இதோ இருக்கேன் இருக்கேனு சொல்லுமே, அப்ப, கை மருந்து கொடுக்கவும், கருப்பு சேலை எடுக்கவும், நம்மையெல்லாம் கூப்பிட்டுத்தானே ஆகணும்’ என்று வக்கணை பேசுவாங்க.

வேடிக்கை என்னன்னா - இவங்க வீட்டுலயும் யாராவது மாசமானா, இதே போலத்தான் அஞ்சு மாசம் வரைக்கும் (திருஷ்டி பட்டுடக் கூடாதேன்னு) இவங்களும் மூடி மூடி மறைப்பாங்க :)

ஒரே தமாசுதான் போங்க :)

அன்புடன்

சீதாலஷ்மி

நிஜமாவே சீதாலக்ஷ்மி சொன்னது காமெடி யா இருக்கு. இப்படி எல்லாம் பேசுவாங்கலனு தோணுது

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நிஜமாவே சீத்தாம்மா நீங்க சொன்னது ஆச்சர்யமாகவும் காமெடியாகவும் இருக்கு..இப்படி எல்லாமா பேசுவாங்க..

அன்புடன்,
zaina.

லாவண்யா, நானும் ரெண்டு நாளா யோசிக்கிறேன்... எனக்கு ஞாபகமே வர மாட்டேங்குது :(

என் கணவர் அன்று கோயம்பத்தூரில் இருந்தார் என்பது நினைவு இருக்கிறது... அம்மாவுடன் கிளினிக் சென்றேன் என்பதும் நினைவில் இருக்கிறது... நான் கிளினிக் சென்றது பிப்ரவரி 14 என்பதும் நினைவில் இருக்கிறது... கன்பார்ம் ஆன உடன் அவருக்கு போன் செய்ததும் நினைவு இருக்கிறது... என்ன சொன்னேன் என்று தான் நினைவில் வர மாட்டேங்குது.... selective amnesiaவாக இருக்குமோ :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

pops வந்து என்னனு சொல்லுங்க இப்படி பாதில விட்டிட்டு போன எப்படி ? ஓகே என் கதைய கேளுங்க நான் என் கல்யாணம் முடிந்ததும் one month கத்தார் வந்துட்டோம். எனக்கு பிப் 24 2008 ல marriage ஆய்டுச்சு. apr month செக் பண்ணி பார்த்த conform நு வந்தது ஓகே நாங்களும் சந்தோஷ பட்டோம் ஆனா 10 days miscarriage ஆய்டுச்சு எல்லறோம் போன் லையே ஆறுதல் சொன்னாங்க. DR கிட்ட போன பொது எப்ப என்ன அவசரம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு 6 months ஆகட்டும் அப்றம் பேபி ட்ரை பண்ணுங்கனு நு சொன்னாங்க நாங்களும் ஒ.கே நு ஒரு 6 months விட்டாச்சு ஆனா அதுக்கு அப்பறம் ஒவ்ரு மாதமும் இல்லைன்னும் அழுகைய வரும் என் husband ஒன்னும் இல்ல பார்த்துக்கலாம் நு சொல்லுவாரு. one year ஆய்டுச்சுன்னு இந்திய வந்தோம். அங்க போனதும் முதல ஒரு dr கிட்ட appointment வாங்குனோம் . அவங்க ஒரு 15 days கழிச்சு தான் டைம் குடுத்தாங்க. என் husband வீடு சென்னை ல என் வீடு சாத்தூர் ல எங்க அம்மா என்ன பண்ணங்க பொண்ண ஒரு வருஷம் கழிச்சு பார்த்த சந்தோஷ்டுல ஒரு பெரிய டூர் பிளான் போட்டாச்சு நானு என் husband எங்க அம்மா அப்பா என் அக்கா அண்ணா எல்லாரும் ராமேஸ்வரம் போனோம் எங்க அண்ணா அப்ப ramnad ல ஒரு ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருந்தான் அவனுக்கு ஆளு தெரியும் நு எங்க எல்லாரையும் boat வச்சு நடு கடலு வரைக்கும் போய் மீனு புடிக்கிறது எல்லாம் பார்த்தாச்சு அப்றம் ராமேஸ்வரம் கோவில்கு போய்ட்டு அப்படியே தனுஸ்கோடி யும் போய்ட்டு அப்புறம் அங்க இங்க நு ஒரு one week நல்லா சுத்தியாச்சு சென்னை வந்து dr கிட்ட போனோம் அவங்க முதல கொஞ்சம் கேட்டாங்க அப்ப தான் ஒரு 2 days நாள் தள்ளி போய் இருந்தது ஓகே டெஸ்ட் எடுக்கலாம் நு சொன்னாங்க நானும் என் husband யும் நல்லா ஊரு சுத்தியாச்சு எங்கனு ? ஓகே பார்க்கலாம்.. டெஸ்ட் ஏடுத்தோம்.எனக்கு positive நு பார்த்ததும் அப்டியே கண்ணு ல தண்ணீ ரூம் விட்டு வெளிய வந்ததும் என் husband என் face பார்த்ததும் கண்டுபுடி டறு அவரு கண்ணுலயும் தண்ணி வந்துருச்சு நான் எஅதுவும் சொல்லமல என் husband என் face பார்த்து புரிஞ்சிகிட்டது அப்ப அப்ப நினைத்து பார்த்து சந்தோஷ்படுவான்.

எங்கள் ப்ளாஷ் பேக் முற்றிலும் வித்தியாசமானது.

திருமணம் முடிந்ததும் ஓராண்டுகள் வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தோம். எங்கள் திருமணம் ஏப்ரல் 30 அன்று. ஜூன் 10 அன்று தான் நான் முதன் முதலாக வெளி நாட்டில் (சிங்கப்பூர்) கால் பதித்தேன், மனதில் அளவிட முடியா மகிழ்ச்சி, அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆவல். அதன்படியே எல்லா இடத்தையும் சுற்றினோம்.

ஒரு வாரம் பின்பு இந்தோனேசியா விஜயம், சொல்ல வேண்டுமா சந்தோஷத்தை, இருப்பினும் அடுத்து இரண்டு நாட்களில் எனக்கு கடும் ஜுரம். எங்கள் கம்பெனி அக்கமடேசனில் உள்ள மருத்துவர் என்னை செக் பண்ணி விட்டு நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Pregnancy Test Strip கொண்டு சோதித்து பார்ப்போம் நு சொன்னார்.

மறுநாள் அதன் படியே சோதித்து பார்க்கையில் நெகடிவ் ரிசல்ட் தான் வர வேண்டுமென்று நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால் கடைசியில் பாசிடிவ் என்று வந்து விட்டது. என் கணவருக்கும் எனக்கும் இதில் பாதி மகிழ்ச்சி, பாதி ஏமாற்றமே.

பின் அந்த கருவை கலைக்க மருத்துவரிடம் சென்றோம், அப்பொழுது அது ஒரு உயிர் என்று எங்களுக்கு தோன்ற வில்லை. அனால் scanning screen இல் எங்களுக்கு கான்பித்தபோழுது ஒரு புள்ளி போன்று துடிப்பது தெரிந்தது. அது தான் என் குழந்தையின் இதயம். அதை பார்த்ததும் எங்கள் இருவரின் விழியோரத்திலும் கண்ணீர் எட்டி பார்த்தது. அப்பொழுது முடிவு செய்தோம் நிச்சயம் அவளை பெற்றெடுக்க வேண்டுமென்று.

இன்று என் மகளுக்கு 2 1/2 வயது. ஆனால் இன்றும் நாங்கள் செய்யவிருந்த முட்டாள் தனத்தை நினைத்து பலமுறை வருந்தி இருக்கிறோம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

pls ignore this

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்